ஓ.டி.டி. எனும் மாயவன் -1
ஓ.டி.டி எனும் மாயவன். ஓடிடி எனும் வார்த்தையை பல வருடங்களுக்கு முன் டெக்னாலஜி ஆட்கள் பயன்படுத்தியதை பார்த்திருப்பீர்கள். கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் செட்டாப் பாக்ஸுகள் மூலம் ஒளிபரப்ப ஆரம்பித்த போது அந்த டெக்னாலஜியை ஓடிடி சாப்பிட்டுவிடும் என்று சொன்னவர்கள் உண்டு. ஓ.டி.டி என்றால் என்ன? ஓவர் த டாப் டெக்னாலஜி. கேபிள், டிவி, டிஷ் போன்றவற்றின் மூலம் மட்டுமல்லாமல் இணையம் மூலம் ஒளீபரப்பாகும் முறைதான். இதைப் பற்றி ஐந்து வருடங்களுக்கு முன்னால் நண்பர்களிடம் நன் சொல்லிக் கொண்டிருக்கும் போது, “ ஓ இண்டர்நெட் மூலமாகவா.. நம்ம ஊரில் இண்டர் நெட் ஸ்பீட் வந்து, அது ஸ்ட்ரீம் ஆகி… நடக்கிற கதையா சார்? இங்க 2ஜியே தத்தளிக்குது என்றார்கள். இல்லை நண்பர்களே இது நிச்சயம் மாறும், அதற்கான காலத்திற்கு நாம் தயாராகிறோமோ இல்லையோ டெக்னாலஜி தயாராக்கிவிடும் என்றேன். அது தான் இப்போது நடக்க ஆரம்பித்திருக்கிறது. ஜியோ எனும் இண்டர்நெட் சுதந்திரம் கிடைக்க ஆரம்பத்திலிருந்து, வாட்ஸப்புக்கு டேட்டா பத்தாமல் இருந்தவனெல்லாம் இருபத்திநாலும் மணி நேரம் ஆன்லைனில் இருக்க ஆரம்பித்திருக்க, போட்டிக் கம்பெனிகளும் வேறு வழியேயில்ல...