இசையெனும் “ராஜ” வெள்ளம் –4
இளையராஜா – மணிரத்னம் தளபதி கமல், ராஜா, மணிக்கு எப்படி ஒரு நாயகனோ, அது போல ரஜினி, ராஜா, மணிக்கு இந்த படம. படம் முழுவதும் மணியும், ராஜாவும் ஒரு சாம்ராஜயத்தையே விரவியிருப்பார்கள். படத்தின் முதல் காட்சியிலேயே ராஜா வேலையை ஆரம்பித்திருப்பார். சில்ஹவுட்டிலிருந்து வெளியே வரும் ரயிலின் சத்தத்துடன், கூடவே அதற்கீடான புல்லாங்குழல் இசையை ரயில் கூவல் போல, ஆரம்பித்து ஒரு அழுத்தமான ஆரம்பத்தை, ஆரம்பித்து வைப்பார். சின்ன தாய் இவள் பாட்டு மூலமாய், அதே போல் ரஜினியின் அறிமுக காட்சியான சண்டை காட்சி, அந்த காட்சியில் ரஜினி போடும் சண்டையின் உக்கிரத்தைவிட, ராஜாவின் ஆக்ரோஷமான பிண்ணனி இசை ரஜினியின் கேரக்டரை உச்சத்துக்கு கொண்டு போய் விடும். ஆங்கில படத்துக்கு ஈடான இசை இந்த காட்சியில் இருக்கும். இன்னொரு காட்சி மம்மூட்டியும், ரஜினியும் ஒரு பாலத்தில் நேருக்கு நேர் பார்த்து கொள்வார்கள், அப்போது சண்டைக் காட்சியில் பயன்படுத்திய அதே பிண்ணனி இசையை பயன்படுத்தியிருப்பார். ரஜினியின் வீர்யத்தை காட்ட எப்படி சண்டைகாட்சியில் அந்த இசை பயன்பட்டதோ, மம்முட்டி ஒரு அமைதியான, ஆனால் ஆழுத்தமான ஆள், என்பதை அவர் ...