Posts

Showing posts with the label samida

சாமிடா.. திரை விமர்சனம்

Image
சாமிடா.. பேப்பரில் வந்த விளம்பரங்களை பார்த்து, ஏதோ காசியில் முழுக்க, முழுக்க, எடுத்த படம் என்கிறார்களே.. வித்யாசமான கதை இருக்கும் என்று எதிர்பார்த்து போகும் ரசிக கண்மணிகளூக்கு ஓர் எச்சரிக்கை. இது சாதாரண ரவுடி கேங்வார் கதை. அதற்கு தேவையில்லாமல் காசி சாயம் பூசியிருக்கிறார்கள். படம் ஆரம்பத்தில் ஓரு மகா குண்டு அம்மா ஒருவரை சிறையிலிருந்து விடுதலை செய்கிறார்கள் வாரணாசி ஜெயிலிலிருந்து.. அங்கிருந்து ஆரம்பிக்கிறது ப்ளாஷ்பேக்.. 12 வயதான பெண், சிகப்புவிளக்கு ஏரியா, விபசாரம், நாயக்கருக்கு பதிலாய் முதலியாரின் பையன், எதிர் கும்பலின் சதி, அதனால் கணவன் மரணம், வழியில் தமிழ் சிறுவனை பார்த்து அவனை மகனாய் ஏற்று கொள்வது, அவன் வளர்ந்து வலது கரமாவது.. என்று ஏற்கனவே நாயகன் படத்தில் பார்த்த காட்சிகளை.. சுறுக்கி ஓரு ஓப்பனிங். அதற்கு அப்புறம் வழக்கமான ரவுடி, அவனின் காதல், ரவுடியிஸத்தை விட சொல்வது, என்று எல்லாமே வழக்கமாய். வித்யாசமாய் க்ளைமாக்ஸ் வைக்கிறேன் பேர்விழி என்று தேவையேயில்லாமல் செட் போட்ட மலைக் கோயிலிலிருந்து கதாநாயகி குதித்து தற்கொலை.. எதற்காக.. ? படத்தின் ஹீரோ அறிமுகம் செம்பி என்று போடுகிறார்கள்.. ஆனால...