Posts

Showing posts with the label அடல்ட் கார்னர்

கொத்து பரோட்டா - 01/08/16

Image
என் ட்வீட்டிலிருந்து நள்ளிரவு பன்னிரண்டு மணி முதல் போன், ஈமெயில், பேஸ்புக், டிவிட்டர், நேரில் என கிடைத்த கேப்பில் எல்லாம் வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு என் சிரம் தாழ்ந்த அன்பு வணக்கங்கள். நன்றி. பாம்ப பிடிச் சா அரஸ்ட் பண்ணுவாங்களா என்ன? 350 பாம்புகளை பிடித்த பிடாரர்களை கைதாம்... ஜெயிலுக்கு போகணுங்கிறதுக்காக சும்மா நின்னுட்டு இருந்தவரை குத்தி கொன்னுருக்கான் ஒருத்தன். சாவு எப்படியெல்லாம் வருது பாருங்க மக்களே  குழந்தை திருமணத்தையும், ஜல்லிக்கட்டையும் இணைச்சு பேசியிருக்கிற நீதிபதிய நினைச்சா.. அவரு குறீயீட்டுல பேசுறவரோன்னு தோணுது @@@@@@@@@@@@@@@@@@@ யாருக்கு விருது கொடுத்தாலும் அதைப் பற்றி ஆளாளுக்கு மாற்றி மாற்றி ஆதரித்தும் எதிர்த்தும் கருத்து சொல்வது என்பது இணைய உலகின் வழக்கமாய் போய்விட்டது. அப்படியான ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாய் ஜாதிப்  பிரச்சனையாய் வேறு மாற்றிவிடப்படுகிறது. கடைசியில் தலித், ப்ராமணன், தேவன் என படித்தவர்கள் தான் ஜாதியை பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். கபாலிக்கு பிறகு தலித்தியம் பற்றி பேசுவது ஃபேஷனாகிவிட்டிருக்கிறது என்றே கூட சொல்ல ...

கொத்து பரோட்டா -25/07/16

டெ ல்லியில் 14 வயது தலித் பெண்ணை இரண்டாவது முறையாய் கடத்தி கற்பழித்திருக்கிறார்கள். அதில் அப்பெண் இறந்து போயிருக்கிறாள். இது வரை எந்த மீடியாவும் பெரிதாய் கூவியதாய் தெரியவில்லை. அதே போல கபாலி பட வெளியீட்டன்று முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு ஆலந்தூர் வழியாய் போய்க் கொண்டிருந்த போது உச்சா வர வேறு வழியில்லாமல் ரோட்டோரம் நின்று அடிக்கும் வேலையில் அங்கே ஏதோ ஒரு சத்தம் வர, என்னவென்று பார்த்த போது ஒரு பெண் தன்னை காப்பாற்றும் படி அலறியிருக்கிறார். உடனே அங்கே களத்தில் இறங்கிய போது அங்கே மூன்று வேற்று மாநில இளைஞர்கள் அப்பெண்ணின் உடைகளை களைய முயற்சித்துக் கொண்டிருக்க, தடுக்கப் போன இந்த இளைஞரை மூங்கில் கழி கொண்டு தாக்கியிருக்கிறார்கள். இந்த சந்தடியில் அப்பெண் அவர்களிடமிருந்து விலக, அங்கே பாஸ் செய்த ஆட்டோ ட்ரைவர் ஒருவர் துணைக்கு வர, மூவரும் தப்பியோடிவிட்டதாகவும், அவர்கள் அடித்த அடியினால் கிடைத்த காயத்தை பேஸ்புக்கில் போட்டு இதனால் தான்பெருமை கொள்வதாகவும் போட்டிருந்தார். அப்பெண் போலீஸ் கேஸெல்லாம் வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் போலீஸ் கம்ப்ளெயிண்ட் தரவில்லை என்றும் சொல்லியிருந்தார்...

கொத்து பரோட்டா - 16/05/16

Image
ஓட்டு போட்டு வந்தாயிற்று. எங்கள் தெரு பூத்தில் அவ்வளவாக கூட்டமில்லை. எதிர் வரும் நபர்களிடமெல்லாம் தீபாவளி ஸ்நானம் ஆயிருச்சான்னு அந்த காலத்துல கேட்டா மாதிரி ஓட்டுப் போட்டாச்சா? என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். நண்பரொருவர் சூசகமாய் ரெண்டுக்கோ, மூணுக்கோ ரெண்டுத்துல ஒண்ணைத்துக்குத்தான் செலக்ட் பண்ணணும் என்று அதிமுக, திமுகவின் வரிசையை சொல்லிவிட்டு சென்றார். யாரும் மொபைல் பேசவில்லை. விநாயகபுரம், பார்சன் நகர், ஹாஸ்பிட்டல் ரோடு ஏரியாக்களில் கொஞ்சம் கூட்டம். புதிதாய் ஓட்டுப் போடும் இளைஞர்களின் முகத்தில் ஆர்வம் அதிகமாய் இருந்தது.   இளைஞிகளுடன் வந்த அம்மாக்கள் “லீவு நாள்ல சீக்கிரம் எழுந்துருன்னா பதினோரு மணிக்கு எழுந்திருக்கிறவ இன்னைக்கு விடியற்காலையிலேயே எழுந்து மேக்கப் போட்டு ஓட்டு போட கிளம்பிட்டா.. எல்லாம் செல்பி எடுத்து போட்டு லைக் வாங்குறதுக்காக” என்றபடி போனார்கள். ஓட்டுப் போடும் இடம் தாண்டி வந்து புது ஓட்டர்கள் கூட்டமாய் விரல் உயர்த்தி க்ரூப் செல்பி எடுத்துக் கொண்டார்கள். பழைய ஓட்டர்கள் என்னத்த ஓட்டப் போடு, என்னத்த என்ற சலிப்போடு, வந்தாலும் தங்கள் ஜனநாயகக் கடமையை செவ்வனே செய்த திருப்த...

கொத்து பரோட்டா - 14/03/16

விகடன் ப்ளாக் என்ற ஒன்றை ஆரம்பித்திருக்கிறது. நான்கு பக்கங்கள் நாக்குத் தள்ள வலைப்பூக்கள் எழுதி வந்தவர்கள் எல்லாம், ட்வீட்டருக்கும், பேஸ்புக்கும் போய்விட, எழுத ஆளே இல்லாமல், திரட்ட வலைப்பூக்களே இல்லாமல் தமிழ் மணம் போன்ற திரட்டிகள் எல்லாம் காய்ந்து போயிருக்க, இத்தனை வருஷம் கழித்து விகடன் ப்ளாக் ஆரம்பித்திருப்பது ஏன் என்றே புரியவில்லை. விகடன் ப்ளாக் என்பது ஒரு திரட்டியைப் போல இருந்தால் கூட பிரச்சனையில்லை. இவர்களுக்கான கட்டுரையை நாம் அவர்களுக்கு மெயில் செய்து அவர்கள் செலக்ட் செய்த கட்டுரையை பின்பு வலையேற்றுவார்கள் என்பதும், அப்படி செலக்ட் ஆன கட்டுரை, படங்களை விகடன் வலைத்தளத்தில் வெளியிடுவதினாலும் பெருவாரியான மக்களுக்கு ரீச் ஆகும் என்றும், பிரதமர் எல்லாம் தமிழில் படித்து விருந்துக்கு கூப்பிட வாய்ப்பிருக்கிறது என்று பப்ளிக்குட்டி கொடுப்பதெல்லாம் செம்ம மொக்க ஐடியா. என்னைப் பொறுத்தவரை விகடன் ப்ளாக்க விட, சொந்த வலைப்பூ, பேஸ்புக், ட்வீட்டர் போன்றவற்றில் இயங்கும் சுதந்திரம் இதில் இருப்பதாய் தெரியவில்லை. அத்தோடு, இணையத்தை பொருத்தவரை தொடர்ந்து எழுதுகிறவர்கள் அவரவர் திறமைகளுக்கு ஏற்ப வளர்ந்து கொண...

கொத்து பரோட்டா -22/02/16

Image
தேர்தல் ஜுரம் ஆரம்பமாகிவிட்டது. ஆளும் அரசு கட்டங்கடைசியாய் 110 விதிகளின் படி அறிவிப்பாய் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்ன ஏற்கனவே கொடுத்த அறிவிப்புகளின் நிலை எல்லோருக்கும் தெரியுமாதலால் யாரும் அதை சட்டை செய்ததாய் தெரியவில்லை. எதிர்கட்சியாய் இருப்பவர்களோ அதையே திரும்பத் திரும்பச் சொல்லி மக்களை ஏற்றி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி சொல்வது ஒன்றும் தவறல்ல இவர்கள் ஆட்சிக்கு வந்து மீண்டும் அதே 110 விதியை பின்பற்றாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு ஆட்சியில் தொடர்ந்த நல்லதை மீண்டும் தொடர்ந்த பழக்கம் நம் தமிழ்நாட்டு அரசியலில் இருந்ததே கிடையாது.

கொத்து பரோட்டா - 15/02/16

திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டது. இணையமெங்கும் இனி தமிழீழம் கிடைக்காது. அது இது என்று ம.ந.கூ கூட்டம் ஒரு புறமும். முன்னாடி இப்படி பேசினியே இப்ப எங்க போய் மூஞ்சிய வச்சிப்ப? என்பது போன்ற ரீதியில் கேள்விகளாகவும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்னவோ இப்போது தான் தமிழ் அரசியலுக வரலாற்றில் முதல் முறையாய் போன கூட்டணியில் திட்டியவர்கள் ஒன்றாய் கூடி ஓட்டுக் கேட்க வருகிறார்ப் போல.. உதிர்ந்த ரோமம், என் அம்மாவுக்கு பொறக்கலை, துரோகத்தின் மொத்த வடிவம், என் குடும்பத்திலிருந்து யாராவது பதவிக்கு வந்தால் சாட்டைய எடுத்து அடியுங்கள் என்பது போன்ற வசனங்களையெல்லாம் கேட்டு, மறந்து ஓட்டுப் போட்டவர்கள் தான் நாம் என்பதையும் மறந்து கருத்து சொல்லிக் கொண்டேத்தானிருக்கிறோம். சமீபத்தில் ஒர் அதிமுக முக்கிய பிரமுகரிடமும், அவர்களின் பேரவை உறுப்பினருடனும் பேசிக் கொண்டிருந்தேன். அவர்களில் வெற்றி வாய்ப்பு எப்படியென? கூட்டணி தான் முடிவு செய்யும். ஏன்னா.. வெள்ளத்திற்கு முன்னாடி எங்களுக்கும் என்பது சதவிகிதம் என்றால் இப்போ ஐம்பதுக்கு ஐம்பது ஆகிவிட்டது என்று தோன்றுகிறது முக்கியமாய் திமுக+ காங்கிரஸ்+ தேமுதிக சேர்ந்தா...

கொத்து பரோட்டா - 23/11/15

ஏற்கனவே சென்னை மிதந்து இப்போதுதான் வடிய ஆரம்பித்திருக்கிறது. இப்போது திரும்பவும் அவ்வப்போது நாலு கிலோமீட்டருக்கு ஒரு இடத்தில் கொட்டித் தீர்க்கிறது. இதற்கிடையில் அங்க ஏரி உடைஞ்சிருச்சு, இங்க ரோடெல்லாம் வெள்ளம், செம்பரம்பாக்கத்தை மறுக்கா திறந்துட்டாங்கன்னு எல்லாம் வாட்ஸப்பில் புரளி பரப்பி வருகிறார்கள். நண்பர்களோடு வெள்ள நிவாரணப் பணிகள் பற்றி பேசிக் கொண்டிருந்த போது, தானே புயலில் செயல்பட்ட அளவில் பாதி செய்திருந்தால் கூட சென்னைக்கு விடிந்திருக்குமென்றார்கள். அதானே என தோன்றியது.

கொத்து பரோட்டா -02/11/15

Image
வரி விலக்கு அளிக்கப்படும் தொகை பொது மக்களுக்கே அன்றி தயாரிப்பளர்கள், விநியோகஸ்தர்களுக்கு கிடையாது என்பதை கோர்ட் தெளிவாக சொல்லியிருப்பது வரவேற்க்க தக்க விஷயம். என்ன இதே போல சில மாதங்களுக்கு முன் கோர்ட் இதோ போன்ற தீர்ப்பை சொன்ன போது சென்னையில் தேவி திரையரங்கம் மட்டும் வரி விலக்கு பெற்ற திரைப்படங்களுக்கு வரியில்லாம டிக்கெட் விற்க, அதற்கு மற்ற திரையரங்க உரிமையாளர்களிடமிருந்தும், விநியோகஸ்தர்களிடமிருந்தும், எதிர்ப்பு வர, மீண்டும் 120 ரூபாய்க்கே விற்க ஆர்மபித்தார்கள். கோர்ட்டின் தீர்ப்பை செயல்படுத்துவதில் நம் அரசிற்கு இருக்கும் அக்கறை அந்த அளவுக்குத்தான்.  அரசே கவலைப்படாத போது எப்படி தொழில் செய்கிறவர்கள் கவலைப்படப் போகிறார்கள் மதிக்கப் போகிறார்கள்? பார்ப்போம் இதற்கு என்ன பதில் வருகிறதென்று. ஒரு வகையில் டாக்ஸ்ஃப்ரீ இல்லாமல் இருந்தால் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு ஒரு நான்கைந்து லட்சம் வெட்டிச் செலவு மிச்சம்.

கொத்து பரோட்டா -12/10/15

Image
நமக்கு  நாமே என ஸ்டாலின் ஊர் ஊராய் சுற்றுவதை ஆன்லைனில் ஓட்டு ஓட்டு என ஓட்டுகின்றனர். கூட்டத்தின் நடுவே புகுந்து செல்பி எடுத்தவரை விலகிச் செல் என்று சைகை செய்யும் போது கன்னத்தில் கை பட்டால் ஓட்டுகிறார்கள். எனக்கென்னவோ.. அவ்வளவு கூட்டத்திற்கு நடுவே சொல்லாமல் கொள்ளாமல் யார் வந்து போட்டோ எடுத்தாலும்  தள்ளுங்க எனும் போது கை பட்டால் அடிப்பது போலத்தான் தோன்றுமென தோன்றுகிறது. ஊர் பட்ட ஊழல் பண்ணி விட்டு, மக்களிடம் போய் கேட்க என்ன தகுதியிருக்கிறது என்று கேட்டீர்களானால், அதற்கு தகுதி நமக்கே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆதிமுகவில் முந்தைய ஆட்சியில் செய்யாத ஊழலா, இப்போது நடக்காததா? மாற்றி மாற்றி இவர்களையே தெரிந்தெடுத்தது நமது தவறு என்றே தான் தோன்றுகிறது. சரி. அதுக்கு பதிலாய் ப.ம.காவை செலக்ட் செய்யலாமென்றால். இருபது முப்பது வருடங்களுக்கு முன்னால் சின்ன பணக்காரர்களாய் இருந்தவர்களின் சொத்து இப்போது கணக்கிட்டால் அது எங்கேயோ போகிறது. அவ்வப்போது ஆட்சியில் ஓர சீட்டில் உட்கார்ந்ததுக்கே இப்படியென்றால். முக்கிய சீட்டில் உட்கார வைத்தால்?. சரி விஜயகாந்த், என யோசித்தால் பல சமயம் சிரிப்புத்தான் வ...

கொத்து பரோட்டா - 05/10/15

Image
குற்றம் கடிதல் கலந்துரையாடல் படம் பார்த்ததிலிருந்து இயக்குனரை சந்தித்து பாராட்ட வேண்டுமென்று இருந்தேன். ஏன் அதை ஒரு கூட்டமாய் நடந்தக்கூடாது என்று யோசித்த போது வேடியப்பனும் உடனே நடத்தணும் என்றார். அந்த பரபரப்பில் ஏற்பாடானதுதான் இந்த கலந்துரையாடல் கூட்டம். வழக்கம் போல அறை கொள்ளாத கூட்டம்.  குற்றம் கடிதல் படத்தை எப்படி ஆரம்பித்தோம் என்பதில் ஆரம்பித்து படத்தைப் பற்றிய பல சுவாரஸ்ய கேள்விகளுக்கு வந்திருந்தவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் இயக்குனர் பிரம்மா. இயக்குனர் சசி, கேள்விகள் கேட்க ஆரம்பித்து வைத்தார். பின் நான் தொடர்ந்தேன். நாங்கள் அதிகம் பேசாதவர்கள் எங்களை பேசச் வைத்தது இக்கூட்டத்தின் உண்மையென்றார் பிரம்மா. வந்திருந்தவர்கள் அனைவரும் ஆளுக்கொரு விதமாய் பாராட்டி தள்ளினார்கள். விவாதித்தார்கள். பதில் பெற்றார்கள். மிகவும் சந்தோஷமாய் இருந்தது. இந்நிகழ்வை ஒருங்கிணைத்தது மூலம். நன்றி வேடியப்பன். நன்றி சசி சார். @@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கொத்து பரோட்டா -17/08/15

Image
10 எண்றதுக்குள்ளே சமீபத்தில் பார்த்த அட்டகாசமான டீசர். வாழ்த்துக்கள் விஜய் மில்டன். போன வாரம் ஆபீஸுல பாத்த போது கூட காட்டவேயில்லை .. இருக்கட்டும் இருக்கட்டும். @@@@@@@@@@@@@@@@@@

கொத்து பரோட்டா -08/06/15

மேகி நூடூல்ஸ் ப்ரச்சனை ஆரம்பித்து ஒருவிதத்தில் நல்லதே. மக்களிடம் விற்கும் பொருட்களின் குவாலிட்டி குறித்த கவனம் அதிகமாகும். ஆனால் அதே நேரத்தில் இத்தனை வருடமாய் இதை செய்ய வேண்டிய அரசு என்ன செய்து கொண்டிருந்தது? இதற்கு தரச் சான்றிதழ் கொடுத்த அரசு  அதிகாரிகளின் மேல் என்ன நடவடிக்கை? என்று கேட்டீர்களானால் அதற்கு பதிலில்லை.

கொத்து பரோட்டா- 27/04/15

Image
என்ன தவம் செய்தேன் பாப்தாவின் ஆரம்ப விழாவில்  முதல் முறையாய்  இயக்குனர் மகேந்திரனை சந்திக்கும் பாக்யத்தை பெற்றேன். நிறைய இயக்குனர்கள், நடிகர்களுடனேயான சந்திப்புகளுடனேயே இயங்குவதால் என்னால் நிறைய பேரைப் பார்த்து பிரம்மிக்க முடிவதோ, முயல்வதோ இல்லை. அவர்கள் மேலிருக்கும் மரியாதை என்பது தனி. ஆனால் இவர் மீது எனக்கு பிரம்மிப்பும், மரியாதையும் அதிகம். விழாவின் முடிவில் என்னை நான் அறிமுகப்படுத்திக் கொண்ட போது, “அஹா.. மிஸ்டர்.சங்கர். உங்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். உங்க புத்தகம் ஒன்று என்னிடம் இருக்கு. சாப்பாட்டுக்கடை இனி நாம அடிக்கடி சந்திப்போம்” என்று தன் நம்பரை கொடுத்துவிட்டு சென்றார். எனக்கு கால்கள் தரையில் நிற்கவில்லை என்பதுதான் உண்மை நிலை.

கொத்து பரோட்டா - 09/03/15 -எனக்குள் ஒருவன்/பெஞ்ச் டாக்கீஸ்/ஜே.கே எனும் நண்பனின் கதை

பயணம் நேற்று மாலை நண்பர் முரளி சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தார். அவரை பார்ப்பதற்காக ஓலாவில் ஆட்டோ புக் செய்தேன். முதலில் வந்த ட்ரைவர் போன் செய்து தான் ஆலந்தூரில்  இருப்பதாகவும், உடனே வர முடியாது என்றார். பின்பு மீண்டும் ஆட்டோவே ட்ரை செய்த அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆட்டோ ஆஜர். மேற்கு சைதாப்பேட்டையிலிருந்து அம்பாமால் வரைக்குமான கட்டணம் 104 ரூபாய் சில்லறை. +10 ரூபாய். மீண்டும் இரவு பத்து மணிக்கு ஓலா ஆட்டோவே புக் செய்தேன். அம்பா மால் வாசலில் இருந்து மேற்கு சைதாப்பேட்டை. இம்முறை 110 ரூபாய் ஆனது +10 ரூபாய். ஆனால் மிக அருமையான கஸ்டமர் சர்வீஸ். இன்று பேப்பரில் ஆட்டோ சங்க ஆட்கள் நேற்று போராட்டம் செய்தார்களாம். ஓலாவில் 10 ரூபாய் அதிகமாய் பணம் வாங்குகிறார்களாம். அது சட்டத்திற்கு விரோதமாம். பெட்ரோல் விலையை குறைக்க வேண்டுமாம். நேற்று இரவு அம்பா மாலில் ஆட்டோ ஏறுவதற்கு முன்னால் ஆட்டோவை லொக்கேட் செய்ய அவருக்கு கால் செய்து கொண்டிருந்த போது பக்கத்தில் இருந்த ஆட்டோக்காரர் “எங்க சார் போகணும்?’ என்று கேட்டார். இப்பவாச்சும் திருந்தியிருக்காங்களா?ன்னு பார்க்கிறதுக்காக பக்கத்தில இருக்கிற நுங்கம்பாக்கம்...

கொத்து பரோட்டா - 09/02/15

Image
இன்று ஒரு தகவல் வழக்கமாய் ராத்திரியில் டி&டி செக் செய்து கொண்டிருந்த போலீஸார்கள், தற்போது மாலை ஆறு மணிக்கே தங்கள் சேவையை காட்ட ஆரம்பித்திருப்பது வசூல் வேட்டையை இரவில் குறைந்திருப்பதினால் என்பது உ.கை.நெ.கனி. பெரும்பாலும் இம்மாதிரியான இரவு நேர செக்கிங்கின் போது காரின் கதவை இறக்கி, “சார் எங்கிருந்து வர்றீங்க?”என்று கேட்பவர்களிடம் நான் சொல்லும் ஒரே பதில் “டெய்லி இந்த ரூட்டுல வர்றேன். செக்கிங் இருப்பீங்கன்னு தெரியாதா? சரக்கடிச்சா அதுக்கு வேற ரூட்டு  சார். அங்கெயெல்லாம் நீங்க ஆளு போட முடியாது. ஏன்னா துட்டு பேறாது” என்பேன். சிலர் சிரிப்பார். சிலர் கடுப்பார். “இதுல எவ்வளவு வந்துச்சுன்னா குடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாது?” என்று கேட்டதற்கு இது வரை யாரும் சரியான பதிலே சொன்னதில்லை. பெரும்பாலான பத்திரிக்கைகளும் அதை சொல்ல விழைவதில்லை. இன்று ஹிந்துவில் அதை விளக்கமாய் போட்டிருக்கிறார்கள். 30 சதவிகிதத்திற்கு மேல் ப்ரீத் அனைலைசர் காட்டியது என்றால் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமென்று. @@@@@@@@@@@@@@@@@

கொத்து பரோட்டா -10/11/14

Image
தொட்டால் தொடரும் தொட்டால் தொடரும் படத்தின் புதிய 30 செகண்ட் டீசர். விரைவில் படத்தின் வெளியீடு குறித்து அறிவிக்கப்படும். வரி விலக்கிற்காக காத்திருக்கிறோம்.உங்கள் கருத்துக்காக.. எங்களது புதிய டீசர் ####################################

கொத்து பரோட்டா - 20/10/14

HALF GIRLFRIEND ஆயிரம் விமர்சனங்கள் சேத்தனின் எழுத்தின் மேல் இருந்தாலும், சுவாரஸ்ய,டெம்ப்ளேட் எழுத்துகள் என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், புதிய புத்தகம் வெளியான உடனேயே பிலிப் கார்ட்டில் டிஸ்கவுண்ட் விலையில் வாங்கி படித்துவிட்டேன். நம்மூர் விண்ணைத்தாண்டி வருவாயா, 7ஜி ரெயின்போ, வாரணம் ஆயிரம், என்பதுகளின் இந்தியப்படங்களின் தாங்கத்தோடு, செம்ம சினிமாட்டிங் டிவிஸ்டுகளை வைத்து எழுதியிருக்கிறார் இந்நாவலை. முன்பெல்லாம் அவரது நாவல்கள் எல்லாம் எழுதிய பின் சினிமாவாக்கப்பட்டது. இது எழுதும் போதே சினிமாவாக்க எழுதப்பட்டதாய் தெரிகிறது.  @@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கொத்து பரோட்டா -10/02/14 - பால்யகால சகி, புலிவால், நடுநிசிக் கதைகள், கேட்டால் கிடைக்கும், பீனிக்ஸ் மால்

Image
80 லட்சம் ஹிட்ஸுகளை அளித்து தொடர்ந்து ஆதரவளித்துவரும், நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்களுக்கு நன்றிகேபிள் சங்கர் நடுநிசிக் கதைகள்-7 நைட் ஷோ முடித்துவிட்டு, சிஜடி நகர் வழியாய் வந்து கொண்டிருந்த போது வழக்கம் போல போலீஸ் மறித்தார். “எங்கிருந்து வர்றீங்க?” என்று கேட்டுவிட்டு அசுவரஸ்யமாய் எதிர் திசை தெருவில் தெரிந்த நடமாட்டத்தை நோட்டம் விட்டார். ”படம் பார்த்துட்டு வர்றேன் சார்.” “டிக்கெட் இருக்கா?” “இல்லை” “அதெப்படி டிக்கெட் இல்லாம?” “நெட் புக்கிங் சார்” ”அப்படின்னா..” என்று கேட்டுவிட்டு எங்கே தனக்கு தெரியவில்லை என்று காட்டிவிட்டால் மரியாதை குறைவாய் போய்விடுமோ என்ற அச்சத்தில் “நெட்  ஓகே..ஓகே”.. சரி.. என்ன படம்?” எனக்கு எரிச்சலாய் இருந்தது. நான் பார்த்துவிட்டு வந்த இந்திப்படத்தின் பேரை சொன்னால் இவருக்கு தெரியுமா? எந்த ஷோ எந்த தியேட்டரில் ஓடுகிறது என்று தெரியுமா?  “இந்தி படம் சார்.” ”என்ன படம்?” “சார்.. சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க.. நடு ராத்திரி பனியில நீங்க இப்படி விசாரிக்கிறது நல்ல விஷயம்தான். அதுக்காக படம் பேரெல்லாம் கேட்டு விசார...

கொத்து பரோட்டா- 01/04/13

Image
மஹாராஷ்ட்ரிய எம்.எல்.ஏக்கள் இருவர் ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய வழக்கில் சரணடைந்து பின்பு ஜாமீனில் வெளி வந்திருக்கிறார்கள். ஓவர் ஸ்பீடில் போனதற்காக அந்த இன்ஸ்பெக்டர் தடுத்து கேஸ்போட்டு பைன் போட்டிருக்கிறார் அதனால் அவரை அடித்து துவைத்திருக்கிறார்கள் பட்டப் பகலில். இந்த ப்ரச்சனையை மீடியா கையிலெடுத்தப் பின் அவர்களிடம் பேட்டி எடுத்த டிவி நிருபர் கடுப்பாகிவிட்டார். “என்ன நீ அடிச்சியா? என்ற ரீதியில் நிருபர் கேட்ட கேள்வியையே மீண்டும் மீண்டும் பேசி குழப்பினார். அரசியல்வாதிகள் நினைத்தால் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை இம்மாதிரியான சமயங்களில் மீடியாக்கள் கையில் எடுத்துக் கொண்டு வெளிக் கொண்டு வருவதை நான் ஆதரிக்கிறேன். @@@@@@@@@@@@@@@@@@@@@