Thottal Thodarum

Feb 10, 2014

கொத்து பரோட்டா -10/02/14 - பால்யகால சகி, புலிவால், நடுநிசிக் கதைகள், கேட்டால் கிடைக்கும், பீனிக்ஸ் மால்

 • 80 லட்சம் ஹிட்ஸுகளை அளித்து தொடர்ந்து ஆதரவளித்துவரும், நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்களுக்கு நன்றிகேபிள் சங்கர்
நடுநிசிக் கதைகள்-7
நைட் ஷோ முடித்துவிட்டு, சிஜடி நகர் வழியாய் வந்து கொண்டிருந்த போது வழக்கம் போல போலீஸ் மறித்தார். “எங்கிருந்து வர்றீங்க?” என்று கேட்டுவிட்டு அசுவரஸ்யமாய் எதிர் திசை தெருவில் தெரிந்த நடமாட்டத்தை நோட்டம் விட்டார்.

”படம் பார்த்துட்டு வர்றேன் சார்.”

“டிக்கெட் இருக்கா?”

“இல்லை”

“அதெப்படி டிக்கெட் இல்லாம?”

“நெட் புக்கிங் சார்”

”அப்படின்னா..” என்று கேட்டுவிட்டு எங்கே தனக்கு தெரியவில்லை என்று காட்டிவிட்டால் மரியாதை குறைவாய் போய்விடுமோ என்ற அச்சத்தில் “நெட்  ஓகே..ஓகே”.. சரி.. என்ன படம்?” எனக்கு எரிச்சலாய் இருந்தது. நான் பார்த்துவிட்டு வந்த இந்திப்படத்தின் பேரை சொன்னால் இவருக்கு தெரியுமா? எந்த ஷோ எந்த தியேட்டரில் ஓடுகிறது என்று தெரியுமா? 

“இந்தி படம் சார்.”

”என்ன படம்?”

“சார்.. சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க.. நடு ராத்திரி பனியில நீங்க இப்படி விசாரிக்கிறது நல்ல விஷயம்தான். அதுக்காக படம் பேரெல்லாம் கேட்டு விசாரிக்கிறது ரொம்பவே ஓவர் சார்.. பேப்பர்ஸ் பாருங்க, லைசென்ஸ் கேளுங்க, சரி.. “

“அதிகாரிங்க விசாரிக்க சொல்லியிருக்காங்க சார். படம் பேர் சொல்லுங்க..”

நான் சிரித்தபடி “ தே இஷ்கியா”

அவர் முகத்தில் தெரிந்த ரியாக்‌ஷனை வார்த்தையால் வர்ணிக்க முடியாது. அனுபவிக்கணும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@


புலிவால்
ஏனோ தெரியவில்லை மலையாளத்தில் பார்த்த போது இருந்த பதைபதைப்பு கொஞ்சம் கூட இல்லவேயில்லை. விறுவிறுப்பான திரைக்கதை, ப்ரசன்னாவின் சிறந்த நடிப்பு எல்லாம் இருந்தும் ஏனோ பஞ்ச் டயலாக் பேசிப் பழகும் சூரியினாலா, அல்லது மைண்ட் வாய்ஸில் பேசி வடிவேலுவின் ரிமேக்காக வளையவரும் தம்பி ராமையாவினாலா? இல்லை தேவையேயில்லாமல் வரும் பாடல் காட்சிகளாலா? என்று தெரியவில்லை. மலையாளம் அளவிற்கு மனதில் ஒட்டவேயில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மருத்துவமனைகளுக்கான மின் கட்டணம் மால்களுக்கு இடப்படும் கட்டண அளவில் இருப்பதால் அதை குறைக்க வேண்டி அரசிடம் கேட்கப் போவதாய் மருத்துவமனை வைத்திருப்பவர்கள் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. வேறு வேறு மாநிலங்களில் குறைத்திருப்பதாகவும், சில மாநிலங்களில் குறைப்பதற்கான அளவில் அரசு கவனம் கொண்டிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். மின் கட்டணத்தை குறைத்தால் பேஷண்டிடம் வாங்கும் கட்டணத்தில் அதே சதவிகிதம் குறைப்பார்கள் என்று சொல்லட்டும் அப்போது வேண்டுமானால் கன்சிடர் செய்யலாம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சும்மா கல்யாணம் பண்ணிப்பான்னு நம்பி கற்பை இழந்துட்டேன்னு இப்ப கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றான் அதனால கற்பழிப்பு  வழக்கு போடுங்கன்னு இனிமே கேட்க முடியாது. சமீபத்தில் 28 வயது பெண் ஒருத்தி தொடர்ந்திருந்த வழக்கில் ஹைகோர்ட் நீதிபதி அவரது தீர்ப்பில் 16, 17 வயது பெண் என்றால் கூட பரவாயில்லை. 28 வயது பெண்ணுக்கு சமூகத்தில் திருமணத்திற்கு முந்தைய உறவு தகாதது என்று தெரிந்தும், உடலுறவுக்கு சம்மத்திவிட்டு பின்பு அவர்களின் உறவில் பிரிவு ஏற்பட்டு விட்டு பிரிந்துவிட்டதினால் கற்பழிப்பு வழக்கு போடச் சொல்வது சரியல்ல என்றிருக்கிறார். வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு. இந்த கற்பழிப்பு வழக்கை வைத்துக் கொண்டு தில்லாலங்கடி செய்யும் பெண்களின் சதவிகிதம் அதிகம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தொட்டால் தொடரும் தொடர் படப்பிடிப்பு, மற்றும் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் காரணமாய் மகன்களுடன் வெளியே எங்கும் போக முடியவில்லை. நேற்று எங்காவது போயே தீர வேண்டுமென்று அடம்பிடித்தார்கள். எனவே ரொம்ப நாளாய் செல்ல நினைத்த பீனிக்ஸ் மாலுக்கு விசிட் அடித்தோம். சென்னையின் பெரிய மால்களில் இதுவும் ஒன்றாக இருக்குமென்று வெளியே இருந்து பார்க்கும் போதே தெரிந்தது. நல்ல விசாலமான கார் பார்க்கிங். வழக்கம் போல இரண்டு மணி நேரத்திற்கு 70 ரூபாய் என்று காலை, பகல், இரவு நேரக் கொள்ளை. எல்லாக் கடைகளிலும் வாங்குகிறார்களோ இல்லையோ கூட்டம் கூட்டமாய் மக்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். எங்கும் இளம் ஜோடிகள், ஓரமாய், கூட்டமாய், கூட்டத்தினிடையே ரகசியமாய் கண்களின் மூலமாய் செய்திகள் பரிமாறிக் கொண்டும், அலைந்து கொண்டிருந்தார்கள். பெரும்பாலானவர்களின் கையில் ஏதோ ஒர் தின்பண்டம் இருந்தது. தியேட்டர் ஒன்று இல்லாமல் இவ்வளவு கூட்டம் வரும் மால் இதுவாகத்தானிருக்கும் என்று நினைக்கிறேன். ஃபேம் நேஷனல் இருக்கும் மாலில் எல்லாம் எல்லா ப்ளோர்களையும் பேண்டலூன் மட்டுமே இருக்க, தியேட்டர் இல்லையென்றால் மால் காலிதான் என்கிற நிலமையில் இது ஆச்சர்யமாகவே இருந்தது. அது மட்டுமில்லாமல் வேளச்சேரிக்கு ஒர் மால் தேவையென்றும் பட்டது.  சத்யமின் லூக்ஸ் திரையரங்கம் இன்னும் திறக்கப்படாமலேயே இருக்கிறது. எப்போது திறப்பு விழா என்று கேட்ட போது வருகிற பிப்ரவரி 14 அல்லது 17 என்றார்கள். அநேகமாய் மாசாமாசம் இது போல் ஒர் டேட்டை சொல்லுவார்கள் என்று தோன்றியது. சும்மா சுத்தி பார்க்கப் போயே ரெண்டாயிரம் விழுங்கியது மால்.
@@@@@@@@@@@@@@@@@@@
 கேட்டால் கிடைக்கும்
பாண்டலூனில் சட்டை வாங்கலாமென்று போயிந்தேன். சட்டை செலக்ட் செய்து விட்டு பில் போடும் போது பேக் எடுத்து வந்திருக்கீங்களா? இல்லாட்டி ப்ளாஸ்டிக் பேக் 5 ரூபா என்றாள் பில் பெண். அதில உங்க பேர் போடாம  இருக்குமா? என்றேன். இல்லைங்க இருக்கும். நான் விலை கொடுத்து வாங்கு பேக்குல எதுக்கு உங்க பேரு? சரி.. எனக்கு ப்ளாஸ்டிக் பேக் வேண்டாம். சாதாரண பேப்பர் பேக்குல இந்த ட்ரஸை வச்சி கொடுங்க நான் கார்ல வச்சிக்கிறேன் என்றேன். இல்லை சார்.. பேப்பர் பேக் இல்லை. மக்கள் ப்ளாஸ்டிக் பேக் யூஸ் பண்ணக்கூடாதுன்னு கவர்மெண்ட் போட்ட் ரூல் சார். கவர்மெண்ட் ரூல் போட்டது இத்தனை மைக்கிரானுக்கு கீழே ப்ளாஸ்டிக் பேக் யூஸ் பண்ணக்கூடாதுன்னும், அதையும் மீறி யூஸ் பண்ணா காசு கொடுத்து வாங்கினாத்தான் கொடுக்கணும்தான் சொல்லியிருக்கு. அதுல உங்க பேரை ப்ரிண்ட் பண்ணி ப்ரீயா விளம்பரம் கொடுக்கணும்னு சொல்லலை. அவங்க ப்ளாஸ்டிக் பேக்கைத்தான் தரக்கூடாதுன்னு சொல்லியிருக்கே தவிர, எங்களூக்கு எடுத்துட்டு போக எதையும் கொடுக்ககூடாதுன்னு சொல்லவேயில்லை என்றதும், அதெல்லாம் எனக்கு தெரியாது சார்.. நீங்க பீட் பேக்குல எழுதுங்க.. என்றாள் முகமெல்லாம் கலவரத்துடன் பில் பெண். அப்ப நீங்க எனக்கு பேப்பர் பேக் கூட தரமாட்டீங்க?  என்றவனைப் பார்த்து தலையாட்டியபடி பில் போட எத்தனிக்க, எனக்கு உங்க துணி வேண்டாம் என்று கிளம்பி வந்து கொண்டேயிருந்தேன். பின் பு அதே கதை தான் லைப் ஸ்டைலிலும். அவர்களிடமும் நோ என சொல்லி வந்துவிட்டேன். என்னுடன் வந்த என் பெரிய மகன் நான் என்ன கேட்டேன் என்று கேட்டான். சொன்னேன். நீ சொல்றது சரி தான்பா.. ஆனா எல்லாகடையிலேயும் இதையேத்தானே சொல்வாங்க.. அப்படித்தான் சொல்வாங்கடா.. ஆனா நம்ம காசு நாம கேட்க கேட்கத்தான் தர ஆரம்பிப்பாங்க.. அதனால கேட்கணும்.. கேட்டுப் பழகணும் என்றேன். அவன் புரிந்தது போல தலையாட்டினான்.
@@@@@@@@@@@@@@@@@@@
செவிக்கினிமை
சென்ற வாரம் தெகிடி ஆடியோ லாஞ்சுக்கு அழைத்திருந்தார் சி.வி.குமார். புதிய இசையமைப்பாளர் நிவாஸ் இசையமைப்பில் லைவாக மூன்று பாடல்களை மேடையில் பாடிக் காட்டினார்கள். மூன்று பாடல்களும் சிறப்பாக வந்திருந்தது. அதில் குறிப்பாக இந்தப் பாடல் “யார் எழுதியதோ” நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து நாட்களாகியும், மனதினுள் அலைபாய்ந்து கொண்டேயிருக்கிறது. மிக அருமையாய் பாடியிருக்கிறார் சூப்பர் சிங்கர் சத்யபிரகாஷ். குறிப்பாய் ஒர் ஹைபிட்ச் இடமிருக்கிறது. க்ளாஸ். ஆபேரியில் ஆரம்பித்து ஃப்யூஷனாய் கலந்து அடிக்கிறது கம்போசிங். நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும். தொட்டால் தொடரும் படத்தில் சத்யபிரகாஷ் ஒர் அருமையான மெலடி பாடியிருக்கிறார்.
@@@@@@@@@@@@@@@@@@@@
கேட்டால் கிடைக்கும்

ஒர் சந்தோஷ சமாச்சாரம்.  பீனிக்ஸ் மாலில் புட் கோர்டுக்கு பணம் கட்டி கார்டு வாங்கத் தேவையில்லை. நேரடியாய் கடைகளில் காசை கொடுத்து நமக்கு வேண்டியதை வாங்கிக் கொள்ளலாம்.  புட் கோர்ட் கொஞ்சம் கிஞ்சிடமாய் இருந்த்து. வழக்கம் போல தண்ணீர் வைக்கவில்லை. புட் கோர்ட் இன்சார்ஜிடம் கம்ப்ளெயிண்ட் பண்ணிவிட்டு வந்தேன். கடைக்காரர்களே தண்ணியில் அடிக்கும் கொள்ளையை பற்றி புலம்பிக் கொண்டுதானிருக்கிறார்கள். எல்லா ப்ளோரிலும், ரெஸ்ட் ரூம் விஸ்தாரமாய் இருக்கிறது. அதில் குழந்தைகளூக்கு, பெண்களுக்கு, ஆண்களுக்கு, ஊனமுற்றவர்களுக்கென்று ப்ரத்யோகமாய் கழிவறைகள் வைத்திருக்கிறார்கள். உடன் எல்லா இடத்திலும் குடிநீர் என்று ஒர் அறை வைத்திருக்கிறார்கள். ஆனால் அவை பூட்டப்பட்டு கிடக்கிறது. எல்லா ப்ளோரிலும் இதே நிலைதான்.
@@@@@@@@@@@@@@@@@@@
பால்ய கால சகி
வைக்கம் முகமது பஷீர் எழுதிய நாவலின் படமாக்கம் என்றார்கள். ஏற்கனவே ப்ரேம்நசீர், ஷீலா நடித்த வெளிவந்து அந்த காலத்திலேயே பெரிய ஹிட்டாம். இப்போது மம்மூட்டி, இஷா தல்வார். ஆரம்பம் என்னவோ, ரொம்ப நல்லாவே இருந்தது. ஆனால் போகப் போக ஒர் டிவி சீரியல் லெவலிலேயே காட்சிகள் சென்றதும், மிகவும் களைத்துப் போன மம்மூட்டியை பெரும் க்ளோசப்பில் பார்க்க கஷ்டமாய்த்தான் இருந்தது. சிறு பிராயத்து காட்சிகளில் இருந்த சுவாரஸ்யம்.. வளர்ந்த பிறகு பெரிதாய் காட்டப்படவும் இல்லை, அட்லீஸ்ட் சொல்லப்படவும் இல்லை. பின்னணியிசையும் ஒளிப்பதிவும் மட்டுமே கொஞ்சம் அசுவாசப்படுத்தும் விஷயம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
Even though @Prasanna_actor acted very well. pulivaal fall flat
 • சிதம்பரம் கோயிலுக்கு போட்டு, நடராஜரை தேடிட்டு பார்க்காம வந்தவன் நான் தான் போல..

  • yaar ezhuthiyadho nice melody. superb rendering @dsathyaprakash @vijayvyoma @abineshaditiyaa 
   #Thegidi
   • @@@@@@@@@@@@@@@@@@@@

அடல்ட் கார்னர்
Q. What do women and police cars have in common? 
A. They both make a lot of noise to let you know they are coming.

 • கேபிள் சங்கர்


Post a Comment

10 comments:

நம்பள்கி said...

ஃபோனிக்ஸ் மாலுக்கு!
spelling phoenix என்று இருந்தால் ஃபீனிக்ஸ் என்று தமிழில் எழுதலாம்; உச்சரிப்ப்பும் அப்படியே!


k.rahman said...

போலீஸ் கேட்டு நீங்க cooperate பண்ணா தான் என்ன? நீங்க என்ன இந்திய பிரதமரா இல்ல தமிழக முதல்வரா ? அவங்க கேக்கறது நீங்க என்ன படம் பாத்தீங்கன்ர தெரிஞ்சுக்கற நோக்கத்துல இல்ல. தப்பு செய்யாத ஆளு தைரியமா பதில் சொல்லுவான். தப்பு செஞ்சவன் இல்ல எதையாவது மறைகறவன் உளற ஆரம்பிச்சுடுவான். இந்தி படம் தெரியாதவருன்ன அவரு முட்டாளா?

k.rahman said...


/என்றாள் முகமெல்லாம் கலவரத்துடன் பில் பெண்/
/எனக்கு உங்க துணி வேண்டாம் என்று கிளம்பி வந்து கொண்டேயிருந்தேன்./


இதனால் வந்த நஷ்டத்தை தாங்க முடியாமல் pantaloon கடை உரிமையாளர் கடையை மூடி விட்டு சந்நியாசம் போய் விட்டதாகவும், கலவரமான பெண் வேலையை விட்டு ஓடி விட்டதாகவும் அண்மையில் வந்த செய்திகள் தெரிவிகின்றன.

”தளிர் சுரேஷ்” said...

ப்ளாஸ்டிக் பைக்கு ஐந்து ரூபாய் கேட்ட கடைக்கார பெண்ணிடம் விவாதம் செய்து இருந்தாலும் நியாயம் இருந்தது! நாம் இப்படி கேட்க ஆரம்பித்தால் இப்படிப்பட்ட வியாபாரிகள் கொட்டம் அடங்கும்!

கலையன்பன் said...

//கேட்டுப் பழகணும் என்றேன்.//

நிச்சயம் சார்... கேட்டுத்தான் ஆகணும்! சரியாக் கேட்டீங்க...

'பரிவை' சே.குமார் said...

தொகுப்பாய் பல...
எல்லாம் சுவையாய்...

Aravind said...

“சார்.. சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க.. நடு ராத்திரி பனியில நீங்க இப்படி விசாரிக்கிறது நல்ல விஷயம்தான். அதுக்காக படம் பேரெல்லாம் கேட்டு விசாரிக்கிறது ரொம்பவே ஓவர் சார்.. பேப்பர்ஸ் பாருங்க, லைசென்ஸ் கேளுங்க, சரி..

I don't see anything wrong in asking the movie name....These are the Standard questions asked by them to find out the truth. What are you going to loose by answering the question.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்

வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - மூன்றாம் நாள்

Ivan Yaar said...

Hi Shankarji,

What is your comment on Kanimozhi, Jaffer Sait audio tape ?

I am expecting comments from DMK loyalists like you and Mr.Jackie Sekar

sarav said...

Cable did u bought the Shirts/trousers .... This is happening at all big shops Pantaloon or Life Style... even at Nilgiris ,Spencers.. but in textile shops they have to atleast put in Brown paper bags ... what shall we do for this ?