Thottal Thodarum

Feb 17, 2014

கொத்து பரோட்டா - 17/02/14- கதிர்வேலனின் காதல், The Wolf Of The Wall Street, பாலு மகேந்திரா, நாவல்கள், திரை விமர்சனம்

 • 80 லட்சம் ஹிட்ஸுகளை அளித்து தொடர்ந்து ஆதரவளித்துவரும், நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்களுக்கு நன்றி கேபிள் சங்கர்
தொட்டால் தொடரும் படத்தின் பாடல் காட்சிக்கான லொக்கேஷன் பார்க்க காரைக்குடி சென்றிருந்த நேரத்தில்தான் மொபைலில் செய்தி வந்தது. பாலுமகேந்திரா உடல் நலக்குறைவென. அச்செய்தி படித்த அரை மணி நேரத்தில் அவரின் மரணச் செய்தி வந்தது. தன் படைப்புகளின் மூலம் நம்மைக் கவர்ந்த ஒர் மாபெரும் கலைஞனின் இழப்பு அவரது ரசிகனாகிய எனக்கு கொஞ்சம் வருத்தத்தையே தந்தது. . பல விழாக்களில் அவர் கலந்து கொண்டு பேசும் போது நானும் விழாவின் ஆடியன்ஸாய் உட்கார்ந்து கேட்டிருக்கிறேன். சென்ற ஆண்டு ஒர் விழாவில் அவருடன் நான் மேடையில். பெருமையாய் இருந்தது. விழாவின் முடிவில் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். கிளம்பும் போது புத்தகங்கள் எல்லாம் எழுதியிருக்கேன்னு சொன்னீங்களே அதை கொடுங்க என்று கேட்டு பெற்றுக் கொண்டார். அதன் பின் நான் அவரை சந்திக்கவேயில்லை. அவரது கனவுப் பட்டறையில் பயிலும் மாணவர்களுக்கு சிறுகதைகளை படித்து அதன் சாரம்சத்தை எழுதும் பயிற்சிக்கு பல புத்தகங்களை படிக்க சொல்லி கொடுப்பாராம். அப்படி ஒரு கதையாய் நான் எழுதிய சிறுகதைகள் அடங்கிய புத்தகம் ஒன்றை கொடுத்து அதிலிருக்கும் கதையை  எழுதச் சொல்லியிருக்கிறார் என்று கேள்விப் பட்டதிலிருந்து பெரும் சந்தோஷம் என்னை ஆக்கிரமித்தது. என் அலுவலகத்திலிருந்து சில நூறு மீட்டர்களில் இருக்கும் அவரது அலுவலகத்தை நான் சென்று பார்த்ததேயில்லை.  பார்த்திருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது. 
@@@@@@@@@@@@@@@@@@


இது கதிர்வேலனின் காதல்
ஓகே.ஓகேவிற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் இரண்டாவது படம். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நேரத்தில் ஹாரிஸின் பாடல்கள் வெளியாகி, கிடைத்த ஹைஃபை குறைத்தது. இப்போது படம் ரிலீசாகிவிட்டது. குடும்ப செண்டிமெண்ட், மொக்கை காமெடி, லட்டாய் நயந்தாரா, பளிச் ஒளிப்பதிவு, என எல்லாத்தையும் கலந்து கட்டி கொடுக்க நினைத்து எதுவும் ஒழுங்காய் இல்லாமல் போனதுதான் மிச்சம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலையின் காரணமாய் கொஞ்சம் படிப்பதற்கு நேரம் கிடைக்கிறபடியால் புத்தக கண்காட்சியில் வாங்கிய நூல்களை படிக்க ஆரம்பித்தேன். ஏற்கனவே மணிரத்னத்தின் புத்தகத்தை முடித்துவிட்டேன். அடுத்தாய் ஆரம்பித்தது கர்ணனின் கவசம். இந்த வகை ஜெனர் என்றில்லாமல் சயின்ஸ்பிக்‌ஷன், பேண்டஸி, இதிகாசம், வரலாறு, பூகோலம், என சுற்றியடித்து போய்க் கொண்டிருந்த்து. ஹாரி பாட்டர், மம்மி, ஜிம்மி வகையரா படங்களில் வரும் எல்லாம் உச்சபட்ச காட்சிகளும் கதையில் வருகிறது. நூறு கேரக்டர்களின் பெயர் வருகிறது. இது நல்லாருக்கா? இல்லையா? என்று சொல்லக்கூட முடியவில்லை. அடுத்ததாய் விநாயகமுருகனின் ராஜீவ் காந்தி சாலை. சேத்தன் பகத் வகையராவாக இருக்கும் என்ற எண்ணத்தில் வாங்கியது. அங்கிட்டுமில்லாமல் இங்கிட்டுமில்லாமல் நாற்பது பக்கம் படிப்பதற்குள் முக்கி முனகி நிறுத்த வேண்டியதாகிவிட்டது. தற்போது படித்துக் கொண்டிருப்பது ரவி சுப்ரமணியத்தின் பேங்ஸ்டர் பார்ப்போம் இது எவ்வளவு தூரம் போகிறது என்று.
@@@@@@@@@@@@@@@@@@@@@
The Wolf Of The Wall Street
ஜோர்டன் பெல்போர்ட் எனும் ஷேர் மார்க்கெட் விற்பனனைப் பற்றிய படம். தன் பேச்சுத் திறமையால் எதையும் தன்னால் விற்க முடியும், என்று நம்பிய, நம்பியதை நிருபித்த இளைஞன் ஒருவனின் கதை. அத்திறமையை அதிக அளவில் பயன் படுத்தி கிடைத்த வெற்றியை அதீதமாய் அனுபவித்ததன் காரணாம் தரைக்கு வந்து மீண்டும் வெற்றி பெற்றவனின் கதை. 71 வயது மார்டின் ஸ்கார்சியின் இயக்கத்தில் வெளிவந்த படத்தை தியேட்டரில் பார்க்க டயம் வாய்க்காமல் டவுன்லோடிட்டு பார்த்தேன். அபாரம்.. அபாரம்.. இந்தியாவில் எடிட் செய்யப்பட்ட நான்கைந்து நிமிட நியூட் காட்சிகளுடன் சேர்த்துப் பார்த்தேன். வாழ்றாண்டா என்று சூது கவ்வுமில் விஜய் சேதுபதியைப் பார்த்து சிம்மா சொல்வாரே அப்படி நாம் பெல்போர்ட்டை பார்த்து சொல்லுவோம். அப்படி ஒர் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறான். லியனோர்டா டிகாப்ரியோவின் நடிப்பு அபாரம். நிறைய ஆர்ஜி, மற்றும் குருப் செக்ஸ் காட்சிகளும், முழு நிர்வாணக் காட்சிகளும் கொண்ட படம். ஆனால் அவை ஏதும் திணித்ததாய் தெரியாது. நிச்சயம் மிஸ் செய்யாமல் பார்த்து விடுங்கள் இப்படத்தை. உங்களுக்கு ஒர் வித்யாசமான அனுபவம் நிச்சயம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சமீபத்தில் சபரீஷ் எனும் என் உறவினன் தான் நடித்திருக்கும் படம் என்று ஒரு குறும்படத்தை காட்டினான். நன்றாகவேயிருந்தது.  அவர்களின் டீம் யார் என்று எனக்கு தெரியாது. என் வாழ்த்துக்களை சொன்னேன். பிறகு அக்குறும்படம் யூடியூபில் வெளியாகி பாராட்டுக்கள் பெற்றதாக சொன்னான். சமீபத்தில் அப்படத்தை லயோலா காலேஜில் படிக்கும் மாணவன் ஒருவன் யூட்யூபிலிருந்து டவுன்லோட் செய்து தான் டைரக்ட் செய்ததாய் சொல்லி, ஒரு போட்டிக்கு அனுப்பி பரிசையும் வென்றிருக்கிறான். இது ஒரிஜினல் இயக்குனருக்கு தெரிந்து அவனை கண்டுபிடித்து கேட்டதற்கு தான் வறுமையில் இருப்பதாகவும் பணத்துக்காக இப்படி செய்துவிட்டதாகவும், சொல்லி பணத்தை வருகிற திங்கள் தருவதாய் சொன்னானாம். எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க.. இதுதான் அந்த குறும்படம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வருடம் ஆரம்பித்ததிலிருந்தே தமிழ் சினிமாவின் வசூல் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை. கோலி சோடாவைத் தவிர வேறெந்த படமும் வசூல் ரீதியாய் வெற்றி பெறவேயில்லை என்பது பெரும் சோகம். சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை, தொடர் பட வெளியீடுகள், சாட்டிலைட் ரைட்ஸை நம்பி படமெடுக்க வந்து ப்ரச்சனையில் விளம்பரம் கொடுக்ககூட முடியாத நிலையில் முழி பிதுங்கும் தயாரிப்பாளர். சின்ன தியேட்டர்கள் கட்ட அனுமதி கொடுத்தால் சின்ன படங்களுக்கு ஏதுவாக இருக்குமென ஒர் கருத்தை உலவ விட்டுக் கொண்டிருக்க, நிஜத்தில் இவையெல்லாவற்றைப் பற்றியும் எழுத நிறைய இருக்கிறது. சினிமா வியாபாரம் 2 விரைவில்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இம்முறை லொக்கேஷன் ஹண்டிங் ஷேத்ராடனமாய் அமைந்து. கோயில் ஒன்று தேவைபட்டதால் காரைக்குடி பக்கத்திலுள்ள கோயில்களை பார்க்க கிளம்பியிருந்தோம். ஐந்து மணி நேரத்தில் புதுக்கோட்டை, அங்கே அற்புதமான லஞ்ச்.அதைப் பற்றி தனியே சாப்பாட்டுக்கடை பதிவில். முடித்து , சின்ன கோவிலிருந்து பெரிய கோவில் வரை ரெண்டு நாட்கள் பார்த்துவிட்டு கோவிலூரில் உள்ள கொற்றவாளீஸ்வரன் கோயிலை தேர்ந்தெடுத்தோம். போகிற போக்கை பார்த்தால் என்.எச் முழுவதும் கும்பகோணம் டிகிரி காப்பி கடை வந்துவிடும் போல.. எங்கு பார்த்தாலும் டிகிரி காப்பித்தான். இரவு டிபன் நிச்சயம் திருப்பத்தூர் ராஜாக்கிளியில் தான் என்று முடிவெடுத்தது பலன் அளித்ததா? என்பது பற்றியும் தனியே ஒர் பதிவெழுதலாம். எங்கும் பசுமையே இல்லை. காய்ந்து போயிருந்தது ஊர். போகிற போக்கை பார்த்தால் விவசாயம் செய்ய ஆளில்லாமல் சோற்றுக்கு பதிலாய் மாத்திரை சாப்பிடும் நிலை என் காலத்திலேயே வந்துவிடும் போல தெரிகிறது. சுற்றுப்பட்டு ஊரில் உள்ளவர்கள் அத்துனை பேரின் வீட்டிலும் யாரேனும் ஒருவர் சிங்கப்பூரில் இருக்கிறார்கள். எல்லா ஊர் கோயில் ஊருணியிலும் தண்ணீர் சுத்தமாய் இல்லை. அநேகமாய் வருகிற வெய்யில் காலம் தமிழகத்திற்கு ப்ரச்சனையாய்த்தான் இருக்கும் என்று தெரிகிறது.  தங்கியிருந்த ஓட்டலுக்கு அருகில் திருமாவளவ கட்சிக்காரர்கள் மீட்டிங் போட்டிருந்தார்கள். நாலு லைனுக்கு ஒரு முறை அம்பேத்கர், எல்லா லைனிலும் தலைவரைப் பற்றியும் புகழ்வதற்கு முன் மேடையில், கீழே வீற்றிருக்கும் எல்லா கட்சி ஆட்களின் பேரையும் அவர்களே... என்று சொல்லி முடிப்பதற்குள் மீட்டிங் முடிந்துவிட்டது. நல்ல வேளை பத்து மணிக்கு மேல அனுமதியில்லையாம். நன்றி போலீஸ்கார் அவர்களே..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நேற்று ஏவிஎம்மில் நானாக நானில்லை என்ற குறும்படத்திற்கான அழைப்பு விடுத்திருந்தார் அதில் நாயகனாய் நடித்திருக்கும் ராகவ். ராகவ் ஒர் சிறந்த நடிகர். அதை அவரின் அறிமுக சீரியலான அலைகளில் நிருபித்துவிட்டார். பின்னர் நல்ல நடனம் ஆடக்கூடியவர் என்பதை ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதன் மூலம் நிருபித்தாயிற்று. ஒரிரு படங்களில் ஹீரோவாக தன்னை நிலை நிறுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார். நல்ல நடிகராய் இருந்தும் சரியான படங்களை தெரிவு செய்யாமல் போனதால் சோபிக்க முடியவில்லை. இக்குறும்படம் ராகவின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவதற்காக எழுதப்பட்டது போல தெரிகிறது. அந்த வகையில் அவருக்கு ஒர் ப்ளஸ் தான். டெக்னிக்கலாய் ஒளிப்பதிவு, இசை எல்லாம் நன்றாகவேயிருந்தது. கதையும், திரைகதையும்தான் அழுத்தமில்லாமல் இருந்தது. பாக்யராஜ், சித்ரா லஷ்மணன், எஸ்.எஸ். ஸ்டான்லி, ரவீந்தர் சந்திரசேகர், நடிகை, இயக்குனர் ரோஹிணி ஆகியோருடன் நானும். இரண்டாவது ஸ்கீரினிங் போது விஜய் சேதுபதி வந்திருந்தார். எப்போதும் போல குறும்பட இயக்குனர்களின் நம்பிக்கை நட்சத்திரமாய் அலங்கரித்தார். பார்த்து பதினைந்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் சிறிது நேரம் அளவளாவினோம். குறும்படம் எடுப்பவர்களுக்கு இப்போதைய ப்ரச்சனையே தற்கால சினிமாதான். பெரும்பாலான குறும்படங்கள் கமர்ஷியல் சினிமாவை ஒட்டியே இருக்கிறது. அதை மீறி நான்கைந்து குறும்படம் செய்த இயக்குனர்கள் திரைப்படம் எடுக்க வாய்ப்பு கிடைக்கும் போது பத்து நிமிட குறும்படத்தையே மீண்டும் ரெண்டு மணி நேர படமாக்க நினைக்கிறார்கள். அங்கே தான் சறுக்குகிறார்கள். பத்து நிமிட குறும்படத்தில் கடைசியில் வரும் ட்விஸ்ட் சுவாரஸ்யத்தை கொடுக்கும் ஆனால் அந்த ஒரு டிவிஸ்ட் மட்டுமே நம்பி திரைப்படமாக்கும் போது நம்பினால் கை கொடுக்காது. எனவே குறும்பட இயக்குனர்கள் திரைப்பட வாய்ப்பு வரும் போது நல்ல கதைகளை தெரிந்தெடுத்து பண்ணினால் இன்னும் நல்ல தரமான படங்கள் வர வாய்ப்பு அதிகமென்று தோன்றுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
பப்ளிக் ப்ளேஸுல இன்னைகு முத்தமிட அனுமதியில்லைனு போலீஸ் சொல்லியிருக்கு.. அப்ப நாளைக்கு உண்டா..
 • பின்னால் வலிக்குமென தெரிந்தே செய்வது காதலும், காமமும் ஹேப்பி வாலண்டைன்ஸ் டே

  ராஜாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்ததற்கான காரணம் தெரிஞ்சுருச்சு
  • நல்லாருக்குன்னு சிலாகிக்கிற படம் துட்டு பண்றது இல்லை. துட்டு பண்ற படம் சிலாகிக்கிற நிலையில இல்லை. #சினிமா
  • @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
  • அடல்ட் கார்னர்

  • How to satisfy a woman...... HOW 2 SATISFY A WOMAN;caress, excite,cuddle, fascinate, spoil, kiss, rub, tease, pamper,console, worship, respect & love.HOW 2 SATISFY A MAN; blow job

  • கேபிள் சங்கர்

Post a Comment

6 comments:

திருவாரூர் சரவணா said...

//////////சமீபத்தில் சபரீஷ் எனும் என் உறவினன் தான் நடித்திருக்கும் படம் என்று ஒரு குறும்படத்தை காட்டினான். நன்றாகவேயிருந்தது. அவர்களின் டீம் யார் என்று எனக்கு தெரியாது. என் வாழ்த்துக்களை சொன்னேன். பிறகு அக்குறும்படம் யூடியூபில் வெளியாகி பாராட்டுக்கள் பெற்றதாக சொன்னான். சமீபத்தில் அப்படத்தை லயோலா காலேஜில் படிக்கும் மாணவன் ஒருவன் யூட்யூபிலிருந்து டவுன்லோட் செய்து தான் டைரக்ட் செய்ததாய் சொல்லி, ஒரு போட்டிக்கு அனுப்பி பரிசையும் வென்றிருக்கிறான். இது ஒரிஜினல் இயக்குனருக்கு தெரிந்து அவனை கண்டுபிடித்து கேட்டதற்கு தான் வறுமையில் இருப்பதாகவும் பணத்துக்காக இப்படி செய்துவிட்டதாகவும், சொல்லி பணத்தை வருகிற திங்கள் தருவதாய் சொன்னானாம். எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க..//////////

2000வது ஆண்டின் இறுதியில் நான் எழுதி முதன் முதலில் கல்லூரி ஆண்டு மலரில் பிரசுரமான சிறுகதையை ஒரு பெண் தன்னுடையது என்று எழுதி காண்பித்து மாவட்ட அளவில் முதல் பரிசும் பெற்று விட்டார். அந்த பெண் 10ஆம் வகுப்பு மாணவி. சிறுகதைப்போட்டி நடந்தது அவள் படித்த பள்ளியில்.

இப்போ டெக்னாலஜி டெவலப்மெண்ட் ஆகுறததை விட மனிதனின் குறுக்கு புத்தி ரொம்ப்ப்ப்ப்...................பபபப ஃபாஸ்ட்.

”தளிர் சுரேஷ்” said...

குறும்படத்தையும் திருட ஆரம்பித்து விட்டார்களா? அடப்பாவமே! நல்லதொரு இயக்குனரை இழந்து விட்டது சினிமா. சிலர் அருகில் இருக்கும்போது சந்திக்க முடிவதில்லை! தொலைவில் சென்றவுடன் சந்திக்க ஆசை எழும்! இது மனித மனத்தின் இயல்பு! நல்ல பகிர்வு! நன்றி!

'பரிவை' சே.குமார் said...

கொத்துப் பரோட்டா அருமை..
தொட்டால் தொடரும் படத்துக்காக வெயிட்டிங்க் அண்ணா...

காரணம் ஆயிரம்™ said...

/இரவு டிபன் நிச்சயம் திருப்பத்தூர் ராஜாக்கிளியில் தான்/

இது எங்க ஊர்தான்.. சென்னை மாநகரில், ராஜாக்கிளி டேஸ்டில் ஏதேனும் ஓட்டல் இருக்காதா என ஏங்கியிருக்கிறேன்.. தங்களுக்கு தெரிந்தால் சொல்லவும்..

நன்றி,
அன்புடன்,
காரணம் ஆயிரம் கார்த்திகேயன்
http://kaaranam1000.blogspot.com

Unknown said...

என்னங்க ஷங்கர் இப்டி திருப்பத்தூர் ராஜாக்கிளி பத்தி சஸ்பென்ஸ் வச்சுட்டிங்களே.... நாங்கெல்லாம் ஸ்கூல் படிக்கும்போதே அங்க போய் சாப்புடுரதுக்காகவே காசு சேர்ப்போம்(நார்மல் லோயர் மிடில் கிளாஸ் ஹோட்டல் தான்)...
இப்பவும் அந்த பழைய சுவை இருக்கா?
புதுக்கோட்டை லஞ்ச் பாக்ஸ் ஓபன் பன்னும் முன்னாடியே திருப்பத்தூர் ராஜாக்கிளி பொட்டலத்த பிரிங்க பாஸ்!!!

Unknown said...

இளையராஜாவை போற போக்கில் கிண்டல் செய்பவர் நல்ல சினிமா டைரக்டராக இருக்க முடியாது என்பது என் அபிப்ராயம்!