Posts

Showing posts with the label Book Fair

பு.க-2

இன்றைக்கு பதிவர் நண்பர் நேசமித்ரனின் ”கார்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்” கவிதை தொகுப்பும், நண்பர் எழுத்தாளர், நடிகர், அஜயன் பாலாவின் புத்தகமும், மாலை ஆறு மணிக்கு உயிர்மையிலும், ஆழியிலும் முறையே வெளியானது. சரியாய் ஆறு மணிக்கு போக வேண்டிய நான் ஏழு மணிக்குத்தான் போனேன். அநியாய ட்ராபிக். “ழ”பதிப்பக கே.ஆர்.பி.செந்திலுக்கு போன் செய்தால் பெரும் இலக்கியவாதிகளோடு காண்டீனில் இருப்பதாக சொன்னார். நேற்றிருந்த கூட்டத்தில் கால் பங்குக்கூட இல்லை. காலார நடந்து ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கி புத்தகம் வாங்க சரியான தருணம். காண்டீனுக்கு சென்றால் கே.ஆர்.பி. ஷோபாசக்தி, சாரு, நம் சக இலக்கியவாதி உண்மைத்தமிழன், விந்தைமனிதனுடன் உட்கார்ந்திருந்தார். வழியில் லக்கி, அதிஷா, காமிக்ஸ் உலகம் விஷ்வா ஆகியோர் பணியாரத்துக்காக க்யூவில் நின்றிருக்க, நானும் கூட சேர்ந்து ஆட்டையை போட்டேன்.  ஷோபா சக்தியிடம் உ.த.. என்னைப் பற்றி சொன்னவுடன் கொத்துபரோட்டா எழுதுவாரே அவரா? என்று கேட்டார். எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. இலக்கியவாதிகளுக்கும் பரோட்டா பிடிக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய் விளங்கியது. நன்றி உ.த. பின்பு லக்க...

சினிமா வியாபாரம் புத்தக வெளீயீட்டு விழா வீடியோ

சினிமா வியாபாரம் புத்தக வெளியீட்டு விழாவின் வீடியோ தொகுப்பு. அப்போது முழுதாக கிடைக்க வில்லை. மொத்த வீடியோவின் தொகுப்பு. புத்தக கண்காட்சியில் சினிமா வியாபாரம் – F 13,14,15 , 176 ஸ்டால்களிலும் மற்றும் பல ஸ்டால்களிலும் கிடைக்கிறது. லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் – 176, திரிசக்தி ஆண்டாள் புக் செல்லர்ஸிலும், 448 ஸ்டாலிலும் கிடைக்கிறது. மீண்டும் ஒரு காதல் கதை – 176 ஆண்டாள் திரிசக்தி புக் செல்லர்ஸிலும், 448 ஸ்டாலிலும் கிடைக்கிறது. மீண்டும் ஒரு காதல் கதை புத்தகத்தை ஆன்லைனில் வாங்க  Sanswas Infotech Ac/No.007705010890 Ashok Nagar branch, ICICI bank, chennai என்கிற அக்கவுண்டுக்கு பணம் டிரான்ஸ்பர் செய்துவிட்டு மின்னஞ்சல் அனுப்பினால் உடனடியாய் அனுப்பி வைக்கப்படும். தமிழ் நாட்டில் எல்லா ஊர்களுக்கும் கொரியர்/ போஸ்டல் செலவு கிடையாது. மற்ற ஊர்களுக்கு புத்தக விலையுடன் ரூ.25 சேர்த்து ட்ரான்ஸ்பர் செய்யவும். கேபிள் சங்கர்

புத்தக சந்தையும்.. இன்ன பிற கதைகளும்

Image
புத்தக கண்காட்சி சந்தை 30ஆம் தேதி ஆரம்பித்தது. இரண்டு நாட்களாய் போகணும், போகணும் என்று கிளம்பி போக முடியவில்லை. கடைசியாய் மூன்றாம் தேதி பிக்ஸ் செய்து நான், தண்டோரா, அகநாழிகை என மூன்று பேராய் கிளம்பினோம். என் பைக்கை தண்டோராவின் ஆபீஸில் போட்டு விட்டு வாசுவின் காரில் சென்றடைந்தோம். பெரிதாய் கூட்டமில்லை. ஆனால் தண்டோரா நேற்றை விட கூட்டம் என்றார். இருக்கலாம் எனக்கு முன்னால் ரெண்டு நாள் அங்கே போயிருந்தார். உள்ளே சென்று கண்காட்சியை சுற்றி பார்க்கலாம் என்று கிளம்ப எத்தனிக்கையில் வாசு நேராக அவருடைய புத்தகம் விற்கும் கடைக்கு போய் பார்க்கலாம் என்று நேராய் போக போகிற வழியில் கிழக்கை தாண்டிய போது பாராவும், பாலபாரதியும் கிழக்கு பின்னால் உள்ள வழியில் தரையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். வாய்யா உட்காரு.. என்றழைத்த பா.ராவிடம் இதோ ஒரு ரவுண்ட் அடித்து விட்டு வருகிறேன் என்று சொன்னதன் பின்விளைவு பின்னால் தெரிந்தது. அண்ணன் தண்டோராவின் கவிதை ஒன்றை பதிவர் மாதவராஜ் அவரது கவிதை தொகுப்பில் வெளியிட்டிருக்க, அதை தேடி வம்சி பதிப்பகத்துக்கு போய் வாங்கி தன் கவிதை வந்திருக்கிறதா என்று பார்த்துவிட்டு, ...