Thottal Thodarum

Jan 5, 2010

புத்தக சந்தையும்.. இன்ன பிற கதைகளும்

DSC00568 DSC00564
புத்தக கண்காட்சி சந்தை 30ஆம் தேதி ஆரம்பித்தது. இரண்டு நாட்களாய் போகணும், போகணும் என்று கிளம்பி போக முடியவில்லை. கடைசியாய் மூன்றாம் தேதி பிக்ஸ் செய்து நான், தண்டோரா, அகநாழிகை என மூன்று பேராய் கிளம்பினோம். என் பைக்கை தண்டோராவின் ஆபீஸில் போட்டு விட்டு வாசுவின் காரில் சென்றடைந்தோம்.

பெரிதாய் கூட்டமில்லை. ஆனால் தண்டோரா நேற்றை விட கூட்டம் என்றார். இருக்கலாம் எனக்கு முன்னால் ரெண்டு நாள் அங்கே போயிருந்தார். உள்ளே சென்று கண்காட்சியை சுற்றி பார்க்கலாம் என்று கிளம்ப எத்தனிக்கையில் வாசு நேராக அவருடைய புத்தகம் விற்கும் கடைக்கு போய் பார்க்கலாம் என்று நேராய் போக போகிற வழியில் கிழக்கை தாண்டிய போது பாராவும், பாலபாரதியும் கிழக்கு பின்னால் உள்ள வழியில் தரையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். வாய்யா உட்காரு.. என்றழைத்த பா.ராவிடம் இதோ ஒரு ரவுண்ட் அடித்து விட்டு வருகிறேன் என்று சொன்னதன் பின்விளைவு பின்னால் தெரிந்தது.
DSC00544 DSC00545
அண்ணன் தண்டோராவின் கவிதை ஒன்றை பதிவர் மாதவராஜ் அவரது கவிதை தொகுப்பில் வெளியிட்டிருக்க, அதை தேடி வம்சி பதிப்பகத்துக்கு போய் வாங்கி தன் கவிதை வந்திருக்கிறதா என்று பார்த்துவிட்டு, ”நாலு வரி போயிருச்சு” என்றார் ஒரு கவிஞரின் ஆதங்கத்துடன்… நானும் ஒரு புத்தகம் வாங்கலாம் என்று புத்தகத்தை திறந்து படித்தால் என் எண்டர் கவிதைகள் தரத்திற்கு கொஞ்சம் கூட ஈடு இல்லாமல் இருந்ததால் வைத்து விட்டு வந்துவிட்டேன்.( நமக்கு பிரியவில்லை..)
DSC00547 DSC00548

நேராக அங்கிருந்து இடது பக்கம் திரும்பினால் நம்ம சாருவும், நர்சிமும் நின்றிருக்க, நேராய் அங்கே போய் நானும் கலக்க, சாருவும், நானும், நர்சிமும் பேசி கொண்டிருக்கையில் அப்துலலா வர, அப்படியே நான், தண்டோரா, வாசு, அத்திரி, வெண்பூ என்று ஒரு ஜமா சேர்ந்தது. வாசுவும் நானும் சாருவிடம் ஒரு சந்தேகம் என்று கேட்டோம். “ அது எப்படி நீங்களும் ஜெயமோகனும் ஒவ்வொரு வருஷம் டிசம்பர், ஜனவரியில் மட்டும் சண்டை போட்டு கொள்கிறீர்கள்? ஏதாவது உள்குத்து, மார்கெட்டிங் இருக்கிறதா..? என்று கேட்டதும் சிரித்தபடி.. அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்றார். எஸ்.ராவிடம் கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அட்லீஸ்ட் இந்த கடையிலாவது ஒரு புத்தகம் வாங்கலாம் என்று கடைக்குள் போக, அப்துல்லா சில புத்தகங்களை செலக்ட் செய்ய, நான் வா.மு. கோமுவின் ‘சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்” என்கிற நாவலை மட்டும் வாங்கி வெளியே வர, அதற்குள் வாசு, சாரு, நான், அப்துல்லா, தண்டோரா, வெண்பூ, அத்திரி எலலோரும் ”ரவுண்ட்” அடிக்க கிளம்ப, புத்தக கண்காட்சிக்கு போய்விட்டு ஒரே ஒரு ஸ்டாலை மட்டும் பார்த்துவிட்டு வந்த ஆட்கள் நாங்களாய்தான் இருப்போம்.

கிளம்புவதற்கு முன் எஸ்.ராவுடனும், சாருவிடனும் போட்டோ எடுத்துக் கொண்டு நாங்கள் கிளம்ப, ரவுண்டில் சாருவிடம் பேச ஆரம்பித்து மிக இன்ட்ரஸ்டாய் போனது அன்றைய மாலை. சாருவின் எழுத்தை பற்றியும் அவரின் ராஸலீலாவில் வரும் ஃபங்குலாவின் கேரக்டரை பற்றியும், ஹைதராபாத் முஸ்லிம் பெண்ணை பற்றியும் பேசிக் கொண்டே பொழுது ஏற, சாரு உடனடியாய் ஏர்போர்ட் போக வேண்டிய கட்டாயத்தால் நான், தண்டோரா, சாரு, வாசு மட்டும் கிளம்பி அவரை ஏர்போர்ட்டில் ட்ராப் செய்துவிட்டு நானும் தண்டோராவும் குரோம்பேட்டை நலாஸில் ஆப்பம், சாப்பிட்டு விட்டு, வண்ணத்து பூச்சியை பார்த்துவிட்டு அரசு பேருந்தில் கிளம்பினேன். கிளம்பி அஞ்சு நிமிஷத்தில் எல்லாம் நட்ட நடுவில் பஸ் பிரேக் டவுனாகி நிற்க கண்டக்டர் ரோடில் அடுத்து வரும் பஸ்ஸை எல்லாம் நிறுத்த முயற்சி செய்து ஏதும் நிற்காமல் ஆட்டோ பிடித்து வந்து சேர்ந்தேன். அன்றைய கண்காட்சி பர்சேஸ் சாந்தாமணி மட்டும் தான்.


DSC00550 DSC00551
சரி அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமையாதலாம் உள்ளே நுழையும் போதே கூட்டம் அம்மியது. கமல் வேறு பேச வந்திருந்தார். நிஜமாகவே நல்ல கூட்டம். நேரே உள்ளே நுழைந்ததும், வழியில் பதிவர் காவேரி கணேஷ் எதிர்பட, முதல் ஸ்டாலில் இருந்து சுற்றி வரலாம் என்று முடிவெடுத்தோம். பெரும்பாலான கடைகளில் பெரிதாய் ஏதும் கூட்டமில்லாவிட்டாலும், நடைபாதையில் கூட்டம் இடறிக் கொண்டுதானிருந்தது. கூல் டிரிங்க்ஸ் கடையிலும், சிறுவர் ப்த்தக கடைகளிலும் கொஞம் கூட்டம் இருந்தது. வந்த கூட்டத்தில் பெரும்பாலும், பீச்சுக்கு பதிலாக புத்தக கண்காட்சிக்கு போகலாம் என்று வந்திருந்த ஜோடிகள் அதிகம். புத்தக கடை எதையும் பார்க்காமல் ஒருவர் இடுப்பை ஒருவர் உரசிக் கொண்டு டிசம்பர் குளிருக்கு இதமாய் அணைத்துக் கொண்டு பராக்கு பார்த்த படி போக, அதில் ஒரு ஜோடியின் ஆண் எதிரே வந்த ஒரு பெண்ணின் அபரிமிதத்தை விழி விரிய பார்க்க, திடீரென உச்சஸ்தாயியில் ‘ஆ’வென கத்தினான்.
DSC00554 DSC00563

ஒவ்வொரு பதிப்பகமாய் வளைய வருவோம் பின்னால் அதில் செலக்ட் செய்யும் புத்தகதை நோட் செய்து கொண்டு வாங்குவோம் என்று நினைத்து ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்க.. நக்கீரனில் தலைவன் சுஜாதாவின் நீதி கதைகள் என்று ஒன்றை பார்ததும், இது நம்ம கடையில இல்லியே என்று முதல் போணி செய்தேன். அங்கிருந்து கிளம்பி மெல்ல கிழக்கு பக்கம் வந்தபோது நல்ல கும்பல், கிழக்கின் எல்லா ஸ்டாலிலும் ஒரளவுக்கு,அதுவும் புத்தகம் வாங்கும் கும்பல் புத்தகங்களை ப்ரவுஸ் செய்து வாங்கிக் கொண்டிருந்தது. நான் பார்த்ததில் ராஜீவ் காந்தி கொலைவழக்கு பரபரப்பாக இருந்தது. இந்த புத்தகத்தை பற்றி ஏற்கனவெ நண்பர்க்ள் பேசியிருந்ததால் அதையும், என்னுடய கடையிலிருந்து ஒரு உயிர் நண்பன் சுஜாதாவின் ‘மீண்டும் ஜீனோ” லவட்டி கொண்டு போய்விட்டதால் இன்னொரு காப்பி வாங்கினேன். அப்படியே உயிர்மைக்கு போனால் வாசலிலேயே எஸ்.ரா வரவேற்றார். அவரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, புத்தகங்களை அலச, மீண்டும் கண்ணில் பட்டது தலைவனின் ‘கடவுள்களின் பள்ளத்தாக்கு” என்கிற கட்டுரை புத்தகம். நண்பர் காவேரி கணேஷ் எனக்கு அந்த புத்தகத்தை பரிசிட்டார். நன்றிண்ணே..

திரிசக்தியில் நண்பர் பதிவர் நிலா ரசிகனின் புத்தகம் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். திரிசக்தி கடைக்குள் நுழைவதற்கே ஏதோ சாமியாரின் மடத்துக்கு நுழைந்தது போல் ஒரு பெரிய உம்மாச்சி படத்தை வைத்திருந்தார்கள். விகடனில் காவேரி கணேஷ் எஸ்.ராவின் தேசாந்திரியை வாங்கி அவரிடம் கையெழுத்து வாங்கினார். கூட வந்திருந்த அவரின் நண்பரும் அதே புத்தகத்தை வாங்கியிருக்க, அதற்கு பதிலாய் அதே எஸ்.ராவின் துணையெழுத்தை வாங்கிக் கொள்கிறேன் மேற்கொண்டு ஆகும் பணத்தை கொடுக்கிறேன் என்று சொன்னாலும். அவர்கள் மறுத்துவிட்டார்கள். இத்தனைக்கும் கடையில் பெரிய கூட்டமில்லை. இம்முறை சுமார் நானூறுக்கும் மேற்பட்ட கடைகள் இருதாலும் பெரும்பால கடைகள் இரண்டு பக்கமும் ஓபன் நிலையில் இருக்கும் கடையாதலால் கடை குறைவு தான் என்று நினைக்கிறேன். நான் பார்த்த வரை ஓரளவுக்கு கல்லா கட்டிய கடைகள் பத்ரியின் கிழக்கும் அதன் மற்ற நிறுவனங்களும், உயிர்மை, விகடன், அப்புறம் காலச்சுவடில் தான். காலச்சுவட்டில் இரண்டு வாங்கினா ஒன்று ப்ரீ என்று வியாபாரம் செய்தார்கள். எல்லா புத்தகங்களும் ஆளூக்கொரு தலையணை செஸ் புத்தங்களை வெளியிட்டிருக்கிறார்கள் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் விலையில். கையில் ஏந்தி படித்தால் நிச்சயம் ஆர்னால்டின் ஆர்ம்ஸில் கால் பாகமாவது வ்ந்துவிடும் என்று தோன்றுகிறது.
DSC00562 DSC00543
இங்கிலீஷ் பேசிக் கொண்டு தமிழ் புத்தகம் தேடும் தகப்பனிடம் “வொய் டோண்ட் தே ஹேவ் இங்கிலிஷ் புக்ஸ்? “ என்று கேட்ட எட்டு வயது பெண். எத்தனை நேரம்தான் கடை கடையா அலைவீங்க? ஒரு நா என்னோட ஷாப்பிங்குக்கு அலைஞ்சிருக்கீங்களா..? என்று புலம்பும் இளம் மனைவி, “போனவருஷம் வாங்கினதையே இன்னும் படிக்கலை, தூசி படிஞ்சி கிடைக்கு இதுல இன்னமுமா? என்று அங்கலாய்க்கும் மிடில் ஏஜ் மனைவி. கோலபுக் கடைகளில் தீவிரமாய் புத்தகத்தை திறந்து பார்த்து புத்தகத்தில் இருக்கும் புள்ளிகளை மனதுக்குள் வெற்று வெளியில் காற்றில் புள்ளி வைத்து பழகும் பேரிளம் பெண், தமிழ் கம்ப்யூட்ட்ர் சாப்ட்வேர் விற்கும் கடைகளிலும், இங்கிலீஷில் அடித்தால் தமிழில் தெரிவதை ஏதோ குறக்களி வித்தை பார்ப்பது போல வேடிக்கை பார்க்கும் கூட்டம், ஜீன்ஸ் போட்டு தீவிர இலக்கியவாதிகளுடன் பேசிக் கொண்டிருக்கும் திருநங்கைகள், தடி தடியான புத்தகங்களை எடுத்து பார்த்துக் கொண்டே “என்னமா எழுதியிருக்கான் பாரு” என்று திருவிழாவில் தொலைந்த குழந்தையாய் விழிக்கும் காதலியிடம் பில்டப் செய்யும் காதலன், லீசி ஜூஸும், காப்பியுமாய் குடித்துவிட்டு பாத்ரூம் வழி தேடியலையும் கூட்டம், இரண்டு புத்தகம் வாங்கி பிளாஸ்டிக் பையில் போடும் போது அந்த மாதிரி கட்டை பை தர மாட்டீங்களா? என்று கேட்க சொன்ன மனைவியை அக்னியாய் எரிக்கும் கணவன், இந்த இடத்தை ஆசீர்வதிக்க வந்தவள் என்கிற பாடிலேங்குவேஜில் எங்கு பார்த்தாலும் தெரியும் அழகு பெண்கள், தங்கள் அழகை பற்றி அக்கரையில்லாத மிக அழகு பெண்கள், கருப்பாய், மாநிறமாய், குண்டாய், ஒல்லியாய், குட்டையாய், பெரும்பான்மை ஆண்கள் கூட்டத்தில் பச்சக் என்று ஒட்டிக்கொள்ளும்….. புத்தக கண்காட்சி வழக்கம் போல இருக்க, இன்னைக்கு திரும்பவும் போகணும்னு….


Post a Comment

56 comments:

அன்பேசிவம் said...

ரொம்ப நன்றி தல

அன்பேசிவம் said...

//இரண்டு புத்தகம் வாங்கி பிளாஸ்டிக் பையில் போடும் போது அந்த மாதிரி கட்டை பை தர மாட்டீங்களா? என்று கேட்க சொன்ன மனைவியை அக்னியாய் எரிக்கும் கணவன், இந்த இடத்தை ஆசீர்வதிக்க வந்தவள் என்கிற பாடிலேங்குவேஜில் எங்கு பார்த்தாலும் தெரியும் அழகு பெண்கள்,//


எங்கடா நம்ம ஆள இன்னும்
காணோமேன்னு பார்த்தேன். அதான.....

இராஜ ப்ரியன் said...

நல்லது ...........

Paleo God said...

நான் போனப்ப ஒரு புக் வாங்கிட்டு காலன்டர் இல்லையான்னு ஒரு அம்மா கேட்டாங்க ::) கவர் கொடுத்ததே பெரிய விஷயங்க என்று நான் சொன்னதும் கல்லா சிரிச்சாரு... அந்தம்மா முறைச்சாங்க...:)) ஆமா எத்தன மணிக்கு ஜி போறீங்க ???

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல விவரிப்பு :)

மணிஜி said...

இது போல் போனோம்,வந்தோம், தின்னோம், குடித்தோம்னு அரை வேக்காடுத்தனமாய் எழுதபடுவதை பார்த்தால் எனக்கு பற்றிக் கொண்டு வருகிறது.பெரியார்,பவுத்தம்,பித்தம்,நாத்தம் இப்படி ஆக்கப்பூர்வமாக எழுத முயற்சி செய்யுங்கள் சங்கர்.இந்த தலைமுறை மட்டுமல்ல.. வருங்கால சந்ததியும் உங்கள் எழுத்தைதான் நம்பியிருக்கிறார்கள்.பெரியார் இல்லாத குறையை நீங்கள்தான் நிவர்த்தி செய்யவேண்டும்.அதற்காக நான்கு நாட்களுக்கு ஒரு முறை குளிக்காதீர்கள்.பசி எடுத்தால் மறந்தும் கூட கோயிலில் உண்டை கட்டி வாங்கி சாப்பிட வேண்டாம்.உன்னையெல்லாம் எப்படி ந.............. ஆக்கினாங்களோ?

பாபு said...

ஆப்பம் எப்படி இருந்துதுன்னு சொல்லவே இல்லையே?

பரிசல்காரன் said...

@ Cable

நேர்ல பார்த்த மாதிரி இருந்தது.

@ தண்டோரா

ம்ம்ம்...

shortfilmindia.com said...

/பெரியார்,பவுத்தம்,பித்தம்,நாத்தம் இப்படி ஆக்கப்பூர்வமாக எழுத முயற்சி செய்யுங்கள் சங்கர்.//

எல்லாம் சரி ஆக்கபூர்வம்னா என்ன?
கேபிள் ச்ஙகர்

shortfilmindia.com said...

/உன்னையெல்லாம் எப்படி ந.............. ஆக்கினாங்களோ?//

அது கேப்பில நற்குடின்னு தானே வரணும்..? வேற் மாதிரியாராவது படிச்சிரப்போறாங்க.:((

கேபிள் சங்கர்

ramtirupur said...

சங்கர் சார், உங்க எழுத்து நடை வசிகரம் செய்கிறது. நன்றி.

shortfilmindia.com said...

/) ஆமா எத்தன மணிக்கு ஜி போறீங்க ???
//

சாயங்காலம் ஆறு மணிக்கு

மரா said...

//பெரியார்,பவுத்தம்,பித்தம்,நாத்தம் இப்படி ஆக்கப்பூர்வமாக எழுத முயற்சி செய்யுங்கள்//

எங்கயோ பாத்த மாதிரி இருக்கு...விடுங்கண்ணே சுனாவேல்லாம் பெரிய மனுஷனாக்கிகிட்டு...

மணிப்பக்கம் said...

nice!

மணிஜி said...

நான் சொல்ல வந்தது நல்லவனாக்கினாங்களொன்னு..நீங்க என்ன நினைச்சிங்க? அப்புறம் ஆக்கப்பூர்வமான்னா...அதேதான்...அப்புறம் தனிப்பட்ட கொள்கையை பற்றி சொல்றேன். கேக்கறீங்களா?

கார்க்கிபவா said...

//ramtirupur said...
சங்கர் சார், உங்க எழுத்து நடை வசிகரம் செய்கிறது//

நீங்க திருப்பூரா பாஸ்?

Romeoboy said...

தல நான் நாளைக்கு போறேன் ..

சங்கர் said...

உங்க போட்டோ கொஞ்சம் தெளிவில்லாம போட்டுட்டேன்கிறதுக்காக, இப்படி என் பெயரை இருட்டடிப்பு செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்

மணிஜி said...

எங்கள் அண்ணன் கேபிளை ஆட்டவோ,அசைக்கவோ முடியாது.பொறையார் விட்டு சென்ற பணியை தொடரும் உங்கள் தொண்டு செறக்கட்டும்.

இப்படிக்கு
தரை டிக்கெட்

சங்கர் said...

@தண்டோரா ......

என்னங்க ஆச்சு ?

நர்சிம் said...

கலக்கல்..

கார்க்கி உன் உள்குத்து எனக்குப் புரிந்து விட்டது..வாழ்க. எனக்கும் அதே டவுட்டுதான்

அகநாழிகை said...

//வாசுவும் நானும் சாருவிடம் ஒரு சந்தேகம் என்று கேட்டோம்.//

ரொம்ப முக்கியம்.

கேபிள், நல்லா எழுதியிருக்கீங்க.

வாமுகோமு தலைப்பை சாந்தாமணின்னு மாத்துங்க. சிந்தாமணின்னு இருக்கு.

shortfilmindia.com said...

/கார்க்கி உன் உள்குத்து எனக்குப் புரிந்து விட்டது..வாழ்க. எனக்கும் அதே டவுட்டுதான்
//

நர்சிம் உங்க டவுட்டு பெயிலியர்.. இவ்ரு நிஜமாவே வேற ஒருத்தர்..:))
கேபிள் சங்கர்

Ganesan said...

நல்ல விவரிப்பு.

ஒரு ஜோடியின் ஆண் எதிரே வந்த ஒரு பெண்ணின் அபரிமிதத்தை விழி விரிய பார்க்க, திடீரென உச்சஸ்தாயியில் ‘ஆ’வென கத்தினான்.

காது பிடித்து திருகிருப்பங்க.........

மணிஜி said...

வாசு..என் பின்னூட்டங்களை பற்றி என்ன நினைக்கறீங்க?

அகநாழிகை said...

//உச்சஸ்தாயியில் ‘ஆ’வென கத்தினான்.//

இந்த சவுண்டு எதுக்கு...?

மணிஜி said...

வாசு..கேபிளை நம்பி பிரயோசனமில்லை. நீங்களாவது எதிர்கால தலைமுறையை காப்பாத்தறதுக்கு எதாவது செய்யுங்க...அட்லீஸ்ட் ஈரோட்டில் சாப்பிட்ட நாட்டுக்கோழிக்காகவாவது!!

சேவியர் said...

பார்க் பண்ணின காரை உருட்டிக் கொண்டு ஒரு வழியாய் ரோட்டை எட்டிப் பிடிப்பதற்குள் விஷ்ணு புரத்தையே வாசித்து முடிச்சிருக்கலாம்… ம்ம்…. நடந்தே போவோர்கள் பாக்கியவான்கள்…

மணிஜி said...

/ mayilravanan said...
//பெரியார்,பவுத்தம்,பித்தம்,நாத்தம் இப்படி ஆக்கப்பூர்வமாக எழுத முயற்சி செய்யுங்கள்//

எங்கயோ பாத்த மாதிரி இருக்கு...விடுங்கண்ணே சுனாவேல்லாம் பெரிய மனுஷனாக்கிகிட்டு//

நீங்க பார்ப்பனிஸ்டா?

Unknown said...

சென்னைல இல்லையேன்னு கவலையா இருக்கு

அகநாழிகை said...

//வாசு..கேபிளை நம்பி பிரயோசனமில்லை. நீங்களாவது எதிர்கால தலைமுறையை காப்பாத்தறதுக்கு எதாவது செய்யுங்க...அட்லீஸ்ட் ஈரோட்டில் சாப்பிட்ட நாட்டுக்கோழிக்காகவாவது!!//

நாட்டுக்கோழி ஆத்மா சாந்தியடைய ஒரு நிமிட மௌன அஞ்சலி.

நாடோடி said...

எங்களால் பார்க்க முடியததை நன்றாக வர்ணித்து உள்ளீர்கள்...... போய் வந்த திருப்தி..

பின்னோக்கி said...

அட ராமா ! தண்டோரா இங்கயும் வந்துட்டாரே.. எஸ்கேப் ஆகிக்கிறேன்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ம்ம்ம்ம்... கலக்குங்க.

பாலா said...

சங்கர்.. கொஞ்ச நாளா... முற்றுப்புள்ளி வைக்க மறந்துடுறீங்க.

படிக்கும்போதே மூச்சு வாங்குது. உங்களை மாதிரி.. யூத்து இல்லைங்க நாங்க.

கொஞ்சம் பார்த்து... எதுனா பண்ணுங்க சாமீஈஈஈ! :) :)

ஒருவேளை இலக்கியவாதி ஆகிட்டீங்களா???

ஆக்கப்பூர்வமா 18+ எதுனா எழுதுங்க.

ramtirupur said...

SHANKAR SIR, நான் திருப்பூர்தான்.

Ashok D said...

//வாசு..என் பின்னூட்டங்களை பற்றி என்ன நினைக்கறீங்க?//

கார்த்தாலயே கால் கிலோ உள்ள போயிடுச்சுன்னு நெனைக்கறோம்

Ashok D said...

//நாட்டுக்கோழி ஆத்மா சாந்தியடைய//

நாட்டுக்கோழி ஆத்மா எப்படி சாந்திய அடையும்.. ஒன்னும் புரியலயே

Ashok D said...

/கோலபுக் கடைகளில் தீவிரமாய் புத்தகத்தை திறந்து பார்த்து புத்தகத்தில் இருக்கும் புள்ளிகளை மனதுக்குள் வெற்று வெளியில் காற்றில் புள்ளி வைத்து பழகும்/
:)

பித்தன் said...

சென்னைல இல்லையேன்னு கவலையா இருக்கு

க.பாலாசி said...

கடைசி பத்தி........ம்ம்ம்....

பா.ராஜாராம் said...

:-))

Punnakku Moottai said...

/ mayilravanan said...
//பெரியார்,பவுத்தம்,பித்தம்,நாத்தம் இப்படி ஆக்கப்பூர்வமாக எழுத முயற்சி செய்யுங்கள்//

எங்கயோ பாத்த மாதிரி இருக்கு...விடுங்கண்ணே சுனாவேல்லாம் பெரிய மனுஷனாக்கிகிட்டு//

///நீங்க பார்ப்பனிஸ்டா?///

சும்மா இரும்மொய்! ஏற்கனவே பிராமணாளுக்கு போதாத காலம் போயிண்டுயிருக்கு! நீர் வேற!

காஞ்சிபுரம் பத்மநாபன், சென்னை குருஜி ஈஸ்வர ஸ்ரீ குமார் ன்னு மாட்டிண்டு உள்ள போய்கிட்டு இருக்கா! நேக்கு பக்குன்னு இருக்கு!

பிராமணாளுக்கு போதாத காலம். ஈஸ்வரா நீதாண்டா கேட்கணும் இவாளை!

இப்படிக்கு,

பாலா.

Punnakku Moottai said...

/ mayilravanan said...
//பெரியார்,பவுத்தம்,பித்தம்,நாத்தம் இப்படி ஆக்கப்பூர்வமாக எழுத முயற்சி செய்யுங்கள்//

எங்கயோ பாத்த மாதிரி இருக்கு...விடுங்கண்ணே சுனாவேல்லாம் பெரிய மனுஷனாக்கிகிட்டு//

///நீங்க பார்ப்பனிஸ்டா?///

சும்மா இரும்மொய்! ஏற்கனவே பிராமணாளுக்கு போதாத காலம் போயிண்டுயிருக்கு! நீர் வேற!

காஞ்சிபுரம் பத்மநாபன், சென்னை குருஜி ஈஸ்வர ஸ்ரீ குமார் ன்னு மாட்டிண்டு உள்ள போய்கிட்டு இருக்கா! நேக்கு பக்குன்னு இருக்கு!

பிராமணாளுக்கு போதாத காலம். ஈஸ்வரா நீதாண்டா கேட்கணும் இவாளை!

இப்படிக்கு,

பாலா.

Prathap Kumar S. said...

//நானும் ஒரு புத்தகம் வாங்கலாம் என்று புத்தகத்தை திறந்து படித்தால் என் எண்டர் கவிதைகள் தரத்திற்கு கொஞ்சம் கூட ஈடு இல்லாமல் இருந்ததால் வைத்து விட்டு வந்துவிட்டேன்.(//
.

அது.... அண்ணே கேபிளார் என்டர் கவிதைகள்னு ஒரு கவுஜைப்புத்தகம் ஏன்வெளியிடக்கூடாது.?

Unknown said...

எங்கே நம்ம வாமுகோமு தலைப்பு மாதிரியே வருதுன்னு

உள்ள வந்து பாத்தேன்.

அப்புறம் சாந்தாமணி எப்படி இருக்குது ? ,கொஞ்சம் சொல்லுங்க !.
(http://vaamukomu.blogspot.com/)

Ravikumar Tirupur said...

நன்றாக வர்ணித்து உள்ளீர்கள்...... போய் வந்த திருப்தி..

புலவன் புலிகேசி said...

நன்றி தல..முந்தாநாள் நானும் அங்கதான் இருந்தேன் போன் பன்ன மறந்துட்டேன்

Kumky said...

கடேசி பாரா மட்டும் ஓ.கே.

selventhiran said...

கேபிள், உங்களை மாதிரி எழுத்தாளர்களே ஒரு புத்தகத்தோட நிறுத்திக்கிட்டா எப்படி... நிறைய்ய வாங்கி அலமாரில வையுங்க... அப்பத்தான் உங்க வீட்டுக்கு வரும்போது லவட்ட முடியும்...

ஜெட்லி... said...

//இன்னைக்கு திரும்பவும் போகணும்னு….

//

புக் வாங்கவா??

ஷண்முகப்ரியன் said...

இங்கிலீஷ் பேசிக் கொண்டு தமிழ் புத்தகம் தேடும் தகப்பனிடம் “வொய் டோண்ட் தே ஹேவ் இங்கிலிஷ் புக்ஸ்? “ என்று கேட்ட எட்டு வயது பெண். எத்தனை நேரம்தான் கடை கடையா அலைவீங்க? ஒரு நா என்னோட ஷாப்பிங்குக்கு அலைஞ்சிருக்கீங்களா..? என்று புலம்பும் இளம் மனைவி, “போனவருஷம் வாங்கினதையே இன்னும் படிக்கலை, தூசி படிஞ்சி கிடைக்கு இதுல இன்னமுமா? என்று அங்கலாய்க்கும் மிடில் ஏஜ் மனைவி. கோலபுக் கடைகளில் தீவிரமாய் புத்தகத்தை திறந்து பார்த்து புத்தகத்தில் இருக்கும் புள்ளிகளை மனதுக்குள் வெற்று வெளியில் காற்றில் புள்ளி வைத்து பழகும் பேரிளம் பெண், தமிழ் கம்ப்யூட்ட்ர் சாப்ட்வேர் விற்கும் கடைகளிலும், இங்கிலீஷில் அடித்தால் தமிழில் தெரிவதை ஏதோ குறக்களி வித்தை பார்ப்பது போல வேடிக்கை பார்க்கும் கூட்டம், ஜீன்ஸ் போட்டு தீவிர இலக்கியவாதிகளுடன் பேசிக் கொண்டிருக்கும் திருநங்கைகள், தடி தடியான புத்தகங்களை எடுத்து பார்த்துக் கொண்டே “என்னமா எழுதியிருக்கான் பாரு” என்று திருவிழாவில் தொலைந்த குழந்தையாய் விழிக்கும் காதலியிடம் பில்டப் செய்யும் காதலன், லீசி ஜூஸும், காப்பியுமாய் குடித்துவிட்டு பாத்ரூம் வழி தேடியலையும் கூட்டம், இரண்டு புத்தகம் வாங்கி பிளாஸ்டிக் பையில் போடும் போது அந்த மாதிரி கட்டை பை தர மாட்டீங்களா? என்று கேட்க சொன்ன மனைவியை அக்னியாய் எரிக்கும் கணவன், இந்த இடத்தை ஆசீர்வதிக்க வந்தவள் என்கிற பாடிலேங்குவேஜில் எங்கு பார்த்தாலும் தெரியும் அழகு பெண்கள், தங்கள் அழகை பற்றி அக்கரையில்லாத மிக அழகு பெண்கள், கருப்பாய், மாநிறமாய், குண்டாய், ஒல்லியாய், குட்டையாய், பெரும்பான்மை ஆண்கள் கூட்டத்தில் பச்சக் என்று ஒட்டிக்கொள்ளும்….. புத்தக கண்காட்சி வழக்கம் போல இருக்க, இன்னைக்கு திரும்பவும் போகணும்னு…. //

இதற்கு மேல் எந்த நவீன இலக்கியத்தையும் நான் புத்தகக் கடையில்,மன்னிக்கவும் புததகக் கண்காட்சியில்{பெயரே அபத்தம்,விஷுவல்களே இல்லாத எண்ணங்களை,எப்படிக் கண்காட்சியாக வைக்க முடியும்?
புத்தகங்கள் என்ன கைவினைப் பொருட்களா என்ன?)

THERE IS A MALE CHAUVINISTIC SAYING THAT THE OLDEST PROFESSION IS PROSTITUTION.NO,
THE OLDEST PROFESSION IS SELLING,ANYTHING INCLUDING YOUR SOUL.

K.S.Muthubalakrishnan said...

SIR,

ஒருவேளை இலக்கியவாதி ஆகிட்டீங்களா???

ஆக்கப்பூர்வமா 18+ எதுனா எழுதுங்க.

யு.எஸ்.தமிழன் said...

கடைசி பாரா நன்றாக இருந்தது!

.:d:.

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்த்துக்கள்

Unknown said...

தல நேர்ல பார்த்த மாதிரி... இருந்தது... நன்றீ..