தெலுங்கு சினிமாவையே ஒரு கலக்கு கலக்கிய படம் ஆர்யா. அல்லு அர்ஜூனில் மார்கெட்டையே மாற்றியமைத்த படம், தமிழ் இயக்குனர் சுகுமார் என்பவர் இயக்கிய படம். இதன் பிறகு அதே இயக்குனர் ஆர்யா-2 என்று படமெடுத்து அதுவும் ஹிட். இப்படி பல பாஸிட்டிவ் விஷயஙகளை கொண்ட படத்தை இவ்வளவு லேட்டாய் தமிழில் ரிமேக்கியிருக்கிறார்கள்.
ஸ்ரேயாவை கட்டாயப்படுத்தி காதலிக்க வைத்திருக்கும் காதலன், அவனை தான் நிஜமாகவே காதலிக்கிறோமா என்று கேள்வியோடு இருக்கும் ஸ்ரேயா, ஸ்ரேயாவும், எம்பி பையனும், காதலிக்கிறார்கள் என்று தெரிந்தும் ஸ்ரேயாவை காதலிக்கும் தனுஷ். இதில் யார் காதல் ஜெயிக்கிறது என்பதை மிக இண்ட்ரஸ்டான ட்விஸ்ட் அண்ட் டர்ன்களுடன் அளித்திருக்கிறார்கள். ஸ்ரேயாவின் கொலுசை கன்யாகுமரி கடலில் குதித்தெடுக்க போனவன் யார் என்று தெரியாமல், ராத்திரிகளில் திடுக், திடுக் என எழுத்திருக்கும் காட்சியிலேயே ஸ்ரேயாவின் குழப்பமான சாப்ட் நேச்சர் பெண் என்பதை விளக்கிவிடுவதால் அதன் பின்பு வரும் காட்சிகளில் எம்பி பையன் தற்கொலை செய்யப் போகிறேன் என்று மிரட்டி காதலை பெறும் காட்சியில் அவருக்கு இருக்கும் காதலின் மேல் உள்ள சந்தேகம் நமக்கும் ஓட, அந்நேரத்தில் தனுஷ் உள்ளே புகுந்து அடாவடியாய் “ஐ லவ் யூ” சொன்னதும் சும்மா ஜிவ் என்று ஏறுகிறது. அதன் பிறகு காதலர்களூக்குள் நடக்கும் “நம்பிக்கை” விளையாட்டும், அதற்கான லாஜிக்கான காட்சிகளும், இம்ப்ரசிவான டயலாக்குள் நிச்சயம் இளைஞர்களை கவரத்தான் செய்கிறது என்பதற்கான சாட்சி தியேட்டரில் வரும் கைதட்டல்கள் தான்.
எம்பி பையனுக்கும், தனுஷுக்கும் நடக்கும் ஸ்ரேயாவுக்கான ஆட்டங்கள் வெரி இண்ட்ரஸ்டிஙான ஒன்று. காமெடி என்கிற பெயரில் ஸ்ரீநாத் விவேக், சந்தானம் எல்லாரையும் இமிடேட் செய்கிறார். இவரை காலேஜ் ஸ்டூடண்ட்லேர்ந்து யாராவது ப்ரோமோஷன் கொடுங்களேன் முடியல.
தனுஷின் நடிப்பை தெலுங்கு அல்லு அர்ஜுனுடன் கம்பேர் செய்தால் ஆரம்ப காட்சிகளில் இருக்கும் அவரின் துள்ளல் கொஞ்சம் தனுஷிடம் குறைவுதான் என்றாலும், க்ளைமாக்ஸ் காட்சிகளில் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி நம்மையும் கலங்க வைக்கிறார். ஸ்ரேயாவை தனுஷுடன் பார்த்தால் கொஞ்சம் வயசு தெரிகிறது. தனியே பார்த்தால் ம்ஹும்… அவரும் அவருடய இடுப்பும், அந்த இறுக்கமான டீ சர்ட்களும், அந்த உடுக்கை இடுப்பும், அடடா.. நடிக்க பெரிய வேலையில்லாவிட்டாலும் கொடுத்த வேலையை பூர்த்தி செய்திருக்கிறார்.
எம்பி பையனாக வரும் நடிகருக்கு ஏற்கனவே அவர் காமெடி பீஸ் கேரக்டராக இருப்பதால் பெரிதாய் சொல்வதற்கில்லை. ராதாரவி, சங்கராபரணம் ராஜலஷ்மி, என்று எல்லோரும் பாத்திரத்திக்கு என்ன தேவையோ அதை செய்திருக்கிறார்கள்.
பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு துல்லியம். அதிலும் ஸ்ரேயாவின் க்ளோசப் காட்சிகளிலும், கிராமத்தில் தனுஷுடன் அவர் கழிக்கும் நாட்களுகளில் வரும் “யாரோ என் நெஞ்சில்” பாடல்களில் லொகேஷனும், மாண்டேஜ் காட்சிகளிலும் தெரியும் ஒரு குதூகலமும், நிறைவும், குளுமையும், சூப்பர்ப்..
தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் நிச்சயம் ரெண்டு பாடல்கள் ஹிட். ”யாரோ என் நெஞ்சில்” பாடலும், பீல் மை லவ் பாடலும் ஹிட் ரகம். மற்றபடி ஆர்.ஆர். கூட தெலுங்கில் செய்த ட்ராக்கையே உபயோகப்படுத்தியிருக்கிறார்கள்.
கதை திரைக்கதை சுகுமார். இண்டெலிஜெண்டான திரைக்கதையினால் தெலுங்கு சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் பெர்பக்ஷனிஷ்ட். வழக்கமாய் ரீமேகிடும் போது அப்படியே அச்சு அசலாய் எடுத்துவிட்டு திரைக்கதை என்று தங்கள் பெயரை போட்டுக் கொள்ளும் டைரக்டர்கள் மத்தியில் சுகுமாரின் உழைப்பிற்கு மதிப்பளித்த ஜவஹர் கே.மித்ரனுக்கு பாராட்டுக்கள். ஏற்கனவே சக்தி சிதம்பரம் இந்த படத்தின் திரைக்கதையில் வரும் முக்கிய காட்சிகளை இங்கிலீஷ்காரன் படத்தில் யாரையும் கேட்காமல் உல்டா பண்ணிவிட்டார். அதனால் அதை பார்த்தவர்கள் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்றோ, டைரக்டர் சக்தி சிதம்பரத்திடமிருந்து காட்சிகளை திருடிவிட்டார் என்றோ காமெடி செய்ய வேண்டாம். படத்தில் மைனஸே இரண்டாவது பாதியில் கிராமத்திலிருந்து ஆரம்பிக்கும் தொய்வே.. அதன் பிறகு நீடிக்கும் க்ளைமாக்ஸ் ஜவ்வும் தான் தெலுங்கில் இருந்த அதே குறையை கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் சரி செய்திருக்கலாம் இதிலும் அதே ஜவ்வு கொஞ்சம் எரிச்சலையத்தான் செய்கிறது. மற்றபடி ஒரிஜினலில் இருக்கும் வசனங்களை கிட்டத்தட்ட டிரான்ஸுலேட் செய்திருக்கிறார் இயக்குனர் அதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஜவஹர் இன்னொரு ராஜாவாக உருவாகிறார். வாழ்த்துக்கள்.
குட்டி - A Feel Good Entertainer
தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..
Comments
கிட்டத்தட்ட அதே மாதிரியான தராசு உங்களிடமும் இருக்கிறது.அதனால்தான் உங்கள் திரை விமர்சனம் பேசப்படுகிறது.
உங்களுடைய ரசனை கெட்டுவிட்டது. ஸ்ரேயாவிடம் எல்லாம் செயற்கை.
//அவரும் அவருடய இடுப்பும், அந்த இறுக்கமான டீ சர்ட்களும், அந்த உடுக்கை இடுப்பும், அடடா.. //
அதெல்லாம் real இல்லை. எல்லாம் pad மற்றும் விபூதி பொட்டலம். மேலே கீழே மற்றும் முன்னே பின்னே எதுவும் உண்மை இல்லை. எல்லாம் பொய்.
உங்கள் விமர்சனத்திற்காக கண்டிப்பாக படத்தை அண்ட் ஸ்ரேயாவை ஒரு முறை பார்த்துவிடுகிறேன்.
போதுமா ஸ்ரேயா (செயற்கை) மன்ற தலைவரே.
Regards ,
பாலா.
படத்தின் PR கொஞ்சம் வெயிட்டாக இல்லையோ என்று தோன்றுகிறது. படத்தின் டிரைலர் கூட வந்த மாதிரி தெரியவில்லை. இது படத்தின் ரிசல்டை பாதிக்கும் (சற்றே) என்றே தோன்றுகிறது.
படத்தின் PR கொஞ்சம் வெயிட்டாக இல்லையோ என்று தோன்றுகிறது. படத்தின் டிரைலர் கூட வந்த மாதிரி தெரியவில்லை. இது படத்தின் ரிசல்டை பாதிக்கும் (சற்றே) என்றே தோன்றுகிறது.
இருந்தாலும் ஷ்ரியாவுக்காக ஒருமுறை....
நன்றீ...
போர்க்களம் எப்படி இருக்கு அண்ணா?
இதுதான் கேபிள்.நல்லா சொல்லியிருக்கிறீங்க.
டிஸ்கி:
நீங்களும் இந்த வருஷம் படம் இயக்கசொல்ல நாங்க போடுறோம் பாருங்க விமர்சனம்.....:)
தலா, அந்த சாகரின் குரல்.. ஸப்பா.. தேவிக்கு உடன்பிறப்பு என்பதால் இனியும் வாய்ப்பு தருவதை நிறுத்த வேண்டும். அத போய் ஹிட்ன்னு வேற சொல்றீங்க.. :(((
அதான் சித்தப்பு சொல்லிட்டாரே நான் வேற சொல்லனமாக்கும்... ஸ்ரேயா ஆண்டிய உங்களுக்கு பிடிக்கும்போல?
கேபிள் சொல்றது சரிதான் பாஸ்.. நேர்ல பார்த்தவன் சொல்றேன். நம்புங்க..
@ கேபிள்
பாட்டு தெலுங்கு வாடை தாங்கல. எனக்கு அந்த ஐட்டம் சாங் மட்டும்தான் பிடிச்சிருக்கு.
@ punakku moottai
//கேபிள் சொல்றது சரிதான் பாஸ்.. நேர்ல பார்த்தவன் சொல்றேன். நம்புங்க..//
நேரில் பார்த்த நீங்கள் சொல்லியும் நம்பாமலா! நம்பிட்டேன் !!
ஸ்ரேயா ரசிகர் மன்றத்தில் ஒரு உறுப்பினரா என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள். நானும் நேரில் பார்க்கணும்.
கேபிள்,
விமர்சனம் எழுதவே படைக்கப்பட்டவர் போல் விமர்சனம் எழுதுகிறீர். மிக்க நன்று இந்த விமர்சனம். என்ன அப்பப்போ அடி சறுக்குகிறது. ஆணைக்கே சறுக்கும் பொது நமக்கென்ன?
Carry on Sankar !!!
பாலா.
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.. நான் விமர்சனம் செய்ய படைக்கப்பட்டவன் அல்ல.. அது மட்டுமில்லாமல் நான் ஆணையும் இல்லை.. சறுக்கவும் இல்லை. நான் ச்றுக்கியதாய் கருத்தும் என் விமர்சனத்தை படத்தின் டெக்னீஷியன்களே ஒத்து கொள்கிறார்கள். தலைவரே..
கேபிள்சங்கர்
You may decline to accept that you are an 'elephant' out of politeness.
You have digested cinema industry more than a common man like me. The way you present your article on 'Cinema viyabaram' will definitely qualify you as one of the 'Elephant'of the industry.
There may be people who would know more about the industry than you. But they do not have the quality to do the presentation as you do.
You have that talent. This quality could make you a good director.
All the best.
அலசப்பட்டிருக்கிறது
ஏ, பி, சி மூன்றுக்கும் பொதுவான பார்வை
விமர்சனம் என்ற பெயரில் மேதாவித்தனம் காட்டாமல் அடிப்படைத்தரமும்,
முதல் நாள் ரசிகனின் சார்பும் இல்லாமல் கசாப்பு கத்தியுடன் அணுகும் பிற்போக்கும் தவிர்த்து
தெளிவான மொழிதல் துறை தழுவி.
ஆமாம்
@துபாய் ராஜா
ஆமா.. அடுத்தது அதான்
@பா.ராஜாராம்
நன்றி தலைவரே
@ரோமியோ
ஆமாம்
@புண்ணாக்கு மூட்டை
அட இயற்கையா இருந்தா என்ன செயர்கையா இருந்தா என்ன..பாக்கும் போது சும்மா ஜிவ்வுனு இருக்கா..?
@நடராஜ்
முதலில் சன் பிக்சர்ஸ் வெளியிடுவதாய் இருந்ததது. திடீரென அவர்கள் கழண்டு விட்டதால் கொஞ்சம் சறுக்கல். பார்த்து கொண்டு இருக்கங்க் நிச்சயம் இது ஒரு டார்க் ஹர்ஸாக இருக்கும்
@நெகமம்
பாத்துருங்க
@தாராபுரத்தான்
அப்படியா.. ஓகே
@ரமேஷ் ரொம்ப நல்லவன்
நான் சுமார் அறுபது முறைகளுக்கு மேல் பார்த்தவன்
@அக்னிபார்வை
நிச்சயம் பாருங்க
@ரிஷபன்
என்னது டி.வி.டியா..?:((
@குரு
பாத்துருங்க
@ கார்க்கி
எனக்கு இந்த உள்குத்து தெரியாது.. ஏற்கனவே தெலுங்கில் கேட்ட் பாடல் ஆதனால் மிகவும் பிடித்திருந்தது. அது மட்டுமில்லாமல் தியேட்டரில் மக்கள் எழுந்து போகவில்லை
@அசோக்
ஓகே
@புலவன் புலிகேசி
நன்றி
@சஞ்சீவ்2527
நன்றி
@பரிசல்காரன்
யோவ் தெளிவா சொல்லுய்யா.. எதை நேர்ல பார்த்தே..?
@தராசு
நன்றி
@ஸ்ரீஷா
நன்றி
@பித்தன்
நன்றி
மிக்க நன்றி.. என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு
@ஸ்ரீ
ஆமாம் நிச்சயம் பாருங்கள்
@நேசமித்ரன்
மிகக் நன்றி தலைவரே
@திவ்யாஹரி
நன்றி..
@கனகு
நிச்சய்ம் பார்க்கலாம்
@குட்டி
ஓகே ரைட்டு குட்டி
எங்க ஊர்ல தியேட்டரே இல்லை... :(