Dolly Kitty Aur Woh Chamakte Sitare - Hindi Film Review
Lipstick under my burka பட இயக்குனர் அலங்கிரிட்டாவின் அடுத்த படம். இந்தப்படமும் முந்தையை படம் போலவே போல்ட். டோலியும் கிட்டியும் ஒன்று விட்ட சகோதரிகள். டோலிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள். அதில் ஒரு குழந்தை பெண் தன்மையுடன் இருக்கிறான். டோலிக்கும், அவளது கணவனுக்குமிடையே செக்ஸ் என்கிற சம்பவம் ஒன்று நடந்து இரண்டு வருடத்துக்கு மேலாகிறது. காரணம் அவளின் ப்ரோசன் யோனியும், மனநிலையும். கிட்டி பிகாரிலிருந்து வரும் டோலியின் சகோதரி. டோலியின் கணவனின் அப்யூஸ் நடவடிக்கை காரணமாய் தனியாய் ஹாஸ்டல் பிடித்து வாழ ஆரம்பிக்கிறாள். அவளின் வாழ்க்கை, அவளின் வேலை ரொமான்ஸ் ஆப் செக்ஸ் டாக் வேலை, அதன் பின்னான காதல், அதனால் ஏற்படும் மன உளைச்சல் என இரண்டு பெண்களின் சமகால வாழ்க்கையை சொல்லியிருக்கிற படம் தான் இந்த டோலிகிட்டி அவுர் ஓ சமக்த்டே சித்தாரே. கொங்கனா சென் அத்தனை இயல்பான நடிப்பு. ஆரம்பக் காட்சியில் டோலியிடம் கிட்ட அவளின் கணவன் தன்னை தவறாக தொடுகிறான் என்று சொல்ல்லும் போது காட்டும் ரியாக்ஷனிலேயே நான் கொங்கனா செண்டா என்று கொடி ஏற்ற ஆரம்பித்துவிடுகிறார். அவருக்கும் கணவருக்குமிடையே இருக்கும் நெருக்கம், ...