சாப்பாட்டுக்கடை- ஹோட்டல் காமாட்சி
எனது படத்தில் நிறைய ஆக்ஷன் ப்ளாக்குகள் இருப்பதால் ரோடு பர்மீஷன் போன்றவைகளுக்காக இங்கே அலைவதை விட பாண்டியில் ஈஸியாய் கிடைக்குமென்பதால் பாண்டிக்கு லொக்கேஷன் ஹண்டிங் கிளம்பினோம். காலையில் கிளம்பிய வண்டி மதியம் சரியாய் ரெண்டு மணி வாக்கில் லொக்கேஷன் எல்லாம் பார்த்து முடிந்து பசிக்க ஆரம்பித்தது. உடன் வந்த லொக்கேஷன் மேனேஜர் ரவியிடம் நல்ல சாப்பாட்டுக்கடைக்கு கொண்டு போய் விடச் சொன்னேன். பாண்டிக்கு யார் வந்தாலும் நான் வெஜ் என்றால் அவர்களை இங்கே அழைத்து வந்து சாப்பாடு வாங்கிக் கொடுக்காமல் அனுப்ப மாட்டேன் என்று ஹோட்டல் காமாட்சிக்கு அழைத்துச் சென்றார்.