பாபாவின் >>>>திருவிளையாடல்கள்....
இப்போது சமீப காலமாய் சென்னையில் ஓரு விஷயம் பரபரப்பாய் செய்யப்படுகிறது.. அதுவும் புட்டபர்த்தி சாய்பாபாவின் பெயரில்.. நீங்கள் நினைத்த காரியம் நடக்க வேண்டுமா? உடனடியாய் இந்த காரியத்தை செய்தால் நீங்கள் நினைத்த காரியம் ஈடேறும்.. என்று சொல்லபபட்டு தொடர் சங்கிலியாய் தொடர்கிறது.. ஓரு வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் இரண்டு டீஸ்ஸ்பூன் டீ தூளையும், இரண்டு டீஸ்பூன் சக்கரையையும் சேர்த்து கலக்கி, அதன் வாயை காற்று புகா வண்ணம்..துணியால் மூடி நம் மனதில் நினைக்கும் காரியத்தை பாபாவை நினைத்து வேண்டிக் கொண்டு, வியாழன் முதல் வியாழன் வரை பூஜை அறையில் வைத்து பூஜித்து விட்டு அடுத்த வியாழன் அன்று அதை பூஜை செய்து திறந்து பார்த்தால்.. அந்த தண்ணீரின் மேலே ஓரு ஏடு போல திக்காக ப்ரவுன் நிற ஓரு லேயர் பார்ம் ஆகியிருக்க, அப்படி அகியிருந்தால் அவர்கள் எதை நினைத்து வேண்டி கொண்டார்களோ.. அது நடந்துவிடும் என்கிறார்கள்.. அனால் இதற்கு அப்புறம் தான் இருக்கிறது விஷயம்.. அவர்களின் பாத்திரத்தில் பார்ம் ஆன லேயரில் நான்கில் ஓரு பகுதியை அந்த தண்ணீரிலேயே போட்டு அதே பாத்திரத்தில் மேலும், அதே டீ தூள் , அதே சக்கரை சேர்த்து.....