Glitch – உயிர்தெழுதல்- web series review
Glitch – உயிர்தெழுதல் சினிமாவில் சொன்னால் நம்ப முடியாத சில கதைகளை சீரீஸில் சொன்னால் சுவாரஸ்யப்படுத்திவிட முடியும். அதிலும் குறிப்பாக அமானுஷ்ய கதைகள். அம்மாதிரியான கதைகளுக்கு பஞ்சமே இல்லாமல் இருக்குமிடம் வெப் சீரீஸ்கள். சமீபத்தில் பார்த்த நெட்ப்ளிக்ஸ் சீரிஸான “க்ளிட்ஜ்” கதை படு சுவாரஸ்யம். முதல் எபிசோடிலேயே நம்ம கட்டிப் போட ஆரம்பித்துவிட்டது. ஒரு சுடுகாடு. நடு ராத்திரி. கல்லரை ஒவ்வொன்றாய் விரிசல் கொண்டு பிளக்க ஆரம்பிக்கிறது. மெல்ல அதிலிருந்து நிர்வாணமான மனிதர்கள் வெளியே வருகிறார்கள். வந்தவர்கள் உடல் முழுவதும் மண் அப்பியிருக்க, ஒன்றும் புரியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் ஆளாளுக்கு மலங்க, மலங்க விழித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பார்த்த சிறுவன் ஒருவன் அதை படம் பிடிக்கிறான். போலீஸுக்கு தகவல் சொல்கிறான். அங்கு வரும் போலீஸ் இவர்கள் எல்லாரும் யார் என்ன என்று விசாரிக்க, அவர்களால் ஏதும் பதில் சொல்ல முடியவில்லை. அனைவருக்குமான முதல் உதவிகளை செய்ய அருகில் உள்ள லோக்கல் கவர்மெண்ட் ஆஸ்பிட்டலுக்கு அழைத்துச் செல்கிறான் போலீஸ் அதிகாரியான ஜார்ஜ். அனைவரையும் அழைத்துப் போய் ஆஸ்பிட்டலில் ச...