Posts

Showing posts with the label மக்களை கொள்ளையடிக்கும் தியேட்டர்கள்/மால்கள்

மக்களை கொள்ளையடிக்கும் தியேட்டர்கள்/ மால்கள்-5

சத்யம் ப்ளஸ்கள் சென்னையில் வசிக்கும் முக்கால்வாசி ரசிகர்கள் மிகவும் விரும்பி படம் பார்க்கும் திரையரங்கு ஒன்று உண்டென்றால் அது சத்யம் தான்.காரணம் ரசிகர்களுக்கு அவர்கள் செய்து கொடுக்கும் வசதிகள். சரியான சீட்டுக்கள் கூட இல்லாத திரையரங்குகள் எல்லாம் நூறும் இரு நூறுமாய் வாங்கி கொண்டிருக்க, அருமையான சீட்டிங், லேட்டஸ்டான ஓளி,ஒலி, நல்ல ஏர்கண்டீஷன், ரசிகர்களுக்கு சரியான சர்வீஸ், புகார் செய்தால் அதன் மீது உடனடியான நடவடிக்கை என்று எல்லா விதத்திலும் பணம் கொடுப்பவர்களை மதித்து, அவர்களுக்கான சர்வீஸ் செய்வதாலும் இந்த தியேட்டர் மீது மதிப்பு எல்லோருக்கும். இந்த திரையரங்கு வளாகம் வந்த பிறகு தான் தமிழகத்தில் மல்ட்டிப்ளெக்ஸ் கலாச்சாரம் வேறூன்ற ஆரம்பித்தது. இந்த வளாகத்தைப் பற்றிச் சொல்லப் போனால் நிறைய ப்ளஸுகளைத்தான் சொல்ல வேண்டும். மழைக்காலங்களில் கார் பார்க்கிங்கிலிருந்து ரசிகர்களை அழைத்து வர பெரிய குடைகளுடன் ஆட்களை வைத்து தியேட்டர் வாசல் வரை அழைந்து வந்ததை நான் நிறைய முறை பார்த்திருக்கிறேன். பின்பு ஆன் லைன் புக்கிங். முதல் முதலில் மிக சுலபமான ஆன்லைன் புக்கிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியவர்கள் இவர்கள்...