Newyork – Hindi Film Review.
சமீபத்தில் இம்மாதிரியான ஒரு காத்திரமான கதையம்சம் உள்ள படத்தை ஹிந்தியில் பார்ககவில்லை. சிறந்த ஸ்கிரிப்ட், நல்ல இயல்பான நடிப்பு, உயர்ந்த புரொடக்ஷன் தரம் எல்லாம் சேர்ந்து ஒரு அருமையான படத்தை தந்திருக்கிறது யாஷ் ராஜ். அமெரிக்க 9/11 நிகழ்வுக்கு பிறகு அமெரிக்க உளவு பிரிவான F.B.I, சந்தேகம் என்கிற பெயரில் பல ஆயிரம் பேர்களை கைது செய்து டிடென்ஷ்ன் செண்டரில் வைத்து சித்திரவதை செய்ததையும், அதனால் மன உளைச்சலில் உழன்று திரியும் நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்க்ளின் எதிர்காலம் கேள்விக்குறியானது. ஓமர் ஸ்காலர்ஷிபில் நியூயார்க் யூனிவர்சிட்டியில் வந்த் சேருகிறான். அங்கே மாயாவையும், சாம் என்கிற சமீரை அமெரிக்க இந்தியனான அவனை சந்திக்கிறான். பார்த்தவுடன் மாயாவை ஒரு தலையாய் காதலிக்க ஆரம்பிக்கிறான். அவளிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறான். மாயா காதலிப்பது சாமை என்று தெரிய வருகிற் அன்று அமெரிக்க 9/11 நிகழ்வுகள் நடக்கிற்து. ஓமர் பிலடெல்பியா சென்றுவிடுகிறான். சில வருடங்கள் பிறகு நியூயார்க் வரும் ஓமரை F.B.I கைது செய்கிறது. அவன் நண்பன் சாமிற்கு இருக்கு தீவிரவாத தொடர்புகளை அண்டர்கவர் ஏஜெண்டாக இருந்து ...