Posts

Showing posts with the label டெல்லி

கொத்து பரோட்டா - 31/12/12

Image
இந்த வருடத்தின் கடைசி கொ.பரோட்டா. டெல்லி பெண்ணின் மரணம் காரணமாய் மனம் முழுவதும் சோகம் அப்பியபடியே எழுத வேண்டியிருக்கிறது. அப்பெண்ணின் மரணத்தினால் எழுந்த சோகத்தை விட, தொடர்ந்து தமிழகத்தில் மட்டுமில்லாது இந்தியாவெங்கும் பெண்கள் மீது நடக்கும் பாலியல் வன்முறைகளைப் பற்றி தெரியவரும் போது மேலும் மனம் துன்பப்படுகிறது. இவ்வளவு எதிர்ப்பும், ஆதரவும் டெல்லி பெண்ணுக்காக மட்டுமில்லாமல் இம்மாதிரியான பாலியல் வன்முறையினால் பாதிக்கப்படும் எல்லா பெண்களுக்கு எதிராகவும் இருக்க வேண்டுமென மனம் விரும்புகிறது. எல்லா சமூக வலைத்தளங்களிலும், என்ன ரெண்டு நாள் அழுதுவிட்டு, ஸ்டேடஸ் போட்டு விட்டு கிரிக்கெட் மேட்ச் பார்க்க போய்விடுவீர்கள் என்று புலம்புகிறார்கள். சுனாமியில் குடும்பத்தையே பறிகொடுத்து அநாதையாய் இருப்பவர்கள் கூட சோகங்களைக் கடந்து அவர்தம் வாழ்கையை வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். குடும்பத்தை இழந்ததால், சாப்பிடாமலோ, சிரிக்காமலோ, காதலிக்காமலோ, கல்யாணம் செய்யாமலோ இல்லை. வாழ்க்கை அதன் பாட்டிற்கு ஓடும். ஓடித்தான் ஆகவேண்டும். எனவே இது பற்றி தினம் புலம்ப வேண்டும், ஸ்டேடஸ் போட வேண்டும் என்று நினைக்காமல் இனி வரு...

கொத்து பரோட்டா -24/12/12

Image
தலைநகர் டெல்லி கற்பழிப்பு  நகரமாகிக் கொண்டிருக்கிறது. மருத்துவ கல்லூரி மாணவி துர்நிகழ்வுக்கு பிறகும் இரண்டு கற்பழிப்புகள் நடந்தேறியிருக்கிறது. ஏற்கனவே இம்மாதிரியான கற்பழிப்புகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் அரசுக்கு எதிராய் போர்கொடி தூக்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு அரசு எந்தவிதமான உதவியும் செய்யவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். டெல்லி என்றில்லாமல் இந்தியாவெங்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சமீபத்தில் ஏழாம் வகுப்பு மாணவி புனிதாவை கற்பழித்து கொலை செய்திருக்கிறான் ஒரு 35 வயது வெறிபிடித்தவன். கடும் தண்டனை மட்டுமே இம்மாதிரியான கொடுமைகளை தடுக்கும்.  @@@@@@@@@@@@@@@@@@@@@@@