Posts

Showing posts with the label பொது

உட்கார்ந்து யோசிப்பாய்ங்களோ..?

Image
பத்திரிக்கைத்துறை நண்பர் ஒருவர் அவரை சந்திக்க அழைத்திருந்தார். அவரை சந்திக்க டி.நகர் நோக்கி போய்க் கொண்டிருந்த போது போன் அடித்தது. நண்பர்தான் “சார்.. எங்க இருக்கீங்க?” “டி.நகர் பனகல் பார்க்கிட்ட இருக்கேன் நண்பரே” ”அப்ப 30 மினிட் வந்திருங்க..” என்றார் எனக்கு புரியவில்லை.. பனகல் பார்க்கிலிருந்து நடிகர் சங்கம் போவதற்கு எதற்கு அரை மணி நேரம்? என்று யோசித்தபடி, ‘நண்பா.. அதுக்கு எது அரை மணி நேரம்?” என்று கேட்டதும்.  ‘சரி ஓகே நீங்க நடிகர் சங்கம் வாங்க என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார். நான் நடிகர் சங்கம் போனதும் அதற்கு நேர் எதிரே ஒரு பெரிய போர்ட் வைத்திருந்தார்கள். 30 MINUTES என்று. அதன் வாசலில் நண்பர், பத்திரிக்கையாளர் பாலா நின்றிருந்தார். இப்போது புரிந்துவிட்டது அவரை இதைத்தான் சொல்லியிருக்கிறார் என்று. என்ன இடம்ணே இது? என்று கேட்டபடி உள்ளே போனேன். அங்கே அழைத்துச் சென்று மேலாளரை அறிமுகப்படுத்தினார். அவர் சொன்ன கான்செப்ட் செம இண்ட்ரெஸ்டிங். அது மட்டுமில்லாமல் யுனிக்காகவும் இருந்தது. பெரும்பாலான பகல் நேரங்களில் பிஸினெஸ் செய்யும் நண்பர்கள், மற்ற துறை நண்பர்கள் எங்காவத...

கல்வியா? செல்வமா? தெய்வமா?

எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு உடனே ஏற்படுவதில்லை. முக்கியமாய் மக்களுக்கு பயன்படும் விஷயஙக்ளுக்கான முடிவுகள் எப்போதும் உடனே நடந்துவிடுவதில்லை. ரேஷன் கடையில் ரேஷன் சாமான்கள் கிடைப்பதிலிருந்து, தினசரி மின்சார வெட்டு, டாஸ்மாக் எம்.ஆர்.பிக்கு மேல் வாங்கு கொள்ளை, விலைவாசி, அடிப்படை வசதிகள் என்று லிஸ்ட் போட்டுக் கொண்டே போனால் அது நீண்டு கொண்டேயிருக்கும். ஆனால் ரொம்ப நாளாய் மக்கள் தங்கள் மனதில் மட்டுமே பொங்கியெழுந்துக் கொண்டிருந்த விஷயம் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின், கல்விக் கட்டணம். அரசு அமைத்த கோவிந்தராஜன் கமிட்டி பரிந்துரைத்த தொகையை எல்லா மெட்டிரிகுலேஷன் பள்ளிகளும் எதிர்த்தது.  மீண்டும் அவர்கள் பரிந்துரை செய்த தொகையை ஏற்க முடியாது. அதை மீண்டும் நன்கு ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும் என்று எல்லா பள்ளிகளும் கோரிக்கை வைத்தனர். இதனால் பள்ளி முதலாளிகள். ஆம்.. முதலாளிகள் தான்.. கல்வியை வியாபாரமாய் நடத்தும் இவர்களை பின் எப்படி அழைப்பது?.. பெரும்பாலான பள்ளிகள் அரசின் பிரஷரின் காரணமாய்  தங்கள் அமெளண்ட்டை குறைத்தும் கொண்டது. சில பள்ளிகளோ.. இப்போது கட்டணத்தை கட்டுங்கள் நாங்கள் கேஸ் போட்டிரு...

பச்சை வயல் கனவு

Image
தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும், விலைவாசி கண்ட மேனிக்கு ஏறிக் கொண்டேயிருக்கிறது. பணவீககமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்காக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதை பற்றி கேட்டீர்களானால் அதற்கு சரியான பதிலை மத்திய அரசிடமோ, மாநில அரசிடமோ இல்லை. பெட்ரோல் விலையுர்வை ரிலையன்ஸ் போன்ற கார்பரேட்டுகளின் ப்ரஷருக்கு தலைவணங்கி விட்டு, மாநில அரசுகள் வரிகளை குறைத்து மக்களுக்கு விலையை குறைக்கலாமே என்கிறது.  ஏன் அதையே மந்திய அரசு செய்யலாமே?. ஆனால் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி காரணம் சொல்கிறார்களே தவிர பிரச்சனைக்கான சொல்யூஷனை யாரும் தருவதாய் இல்லை. ஒரு முறை பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தினால் ஏறிய விலைவாசி மீண்டும் அது ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் குறைந்தால் குறைய வேண்டுமல்லவா.. ஆனால் குறைவதேயில்லை. அதனை மக்களும் கேட்பதில்லை. அரசும் கேட்பதில்லை. எதிர்கட்சி எழவும் எப்படியாவது மத்திய அரசு கட்சியின் பார்வையை தங்கள் பக்கம் திருப்புவதற்காக மெளனியாகவே இருந்து உறுத்தாமல் போராட்டம் நடத்துகிறேன் பேர்விழி என்று “போர்” ஆட்டம் ஆடுகிறது. தமிழ் நாட்டில் விளைகின்ற காய்கறிகள் எல்லாம் இப்போத...

கேட்டால் கிடைக்கும்

Image
நம் வாழ்க்கையில் பல நேரங்களில், நாம் தெரிந்தே பலரை நம் பாக்கெட்டுக்குள் கைவிட்டு பணம் எடுத்துக் கொள்வதை  அனுமதித்துக் கொண்டிருக்கிறோம். அது ஒரு ரூபாயாகவோ, நாலணாவாகவோ சில சமயம் நம் வாழ்க்கையாகவோ கூட இருக்கலாம். சமீபத்தில் நானும் என் மகன்களும் பிட்ஸா சாப்பிடுவதற்கு டொமினோ பிஸ்ஸாவுக்கு போனோம். எங்களது ஆர்டருக்கு மொத்தமாய் 303.71 பைசா வரிகளோடு வர, அதை 303.75க்கு முழு இலக்கமாய் மாற்றி, பில் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர் கேட்டதோ 304 ரூபாய். நானும் அது தான் விலையோ என்று பில்லை பார்க்காமல் 304 ரூபாயை கொடுத்தேன். பின்னர் பில்லை பார்த்த போது ஏற்கனவே நான்கு பைசா ரவுண்ட் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இருபத்தியைந்து பைசாவை எடுத்துக் கொள்கிறார்களே என்று சுர்ரென கோவம் வந்தது. “என்ன சார்.. அதிகமா வாங்கியிருக்கீங்க..?” ”சேஞ்ச் இல்லை சார்..” “நீங்க மாத்தி வச்சிருக்க வேண்டியதுதானே..?” “நாலனாதானே சார்..” “சார்.. உங்களுக்கு ஒரு நாலணா.. அது போல ஐம்பது பேரோட நாலணா சேர்ந்தா எவ்வளவு ஆகும் தெரியுமா..?” சிறிது நேரம் ஏதும் பேசாமல் அமைதியாய் இருந்துவிட்டு.. “நாலணாதானே சார்.. ஒரு ரூபாயா தர்றேன் ...

கடையடைப்பு

Image
ரெண்டு நாள் முன்பு விலைவாசி ஏற்றத்தை எதிர்த்து நாடு முழுவதும் கடையடைப்பு அறிவித்திருந்தது. தமிழ் நாட்டில் பெரியதாய் என்ன சின்னதாய் கூட எந்தவிதமான சலசலப்பும் இல்லாமல் புஸ்ஸென போனது கடையடைப்பு. ஒரு வேளை அரசு ஆதரவுடன் நடந்திருந்தால் நிச்சயம் இந்த கடையடைப்பு மாபெரும் வெற்றியாக்கப்பட்டிருக்கும். ஆனால் ஆளும் காங்கிரஸ் அரசை எதிர்த்து விரைவில் தேர்தலை சந்திக்கப் போகும் நேரத்தில் பகைத்துக் கொள்ள மனமில்லாமல் தி.மு.க அரசு அமைதி காத்திருக்கிறது. சரி… இவர்கள் தான் அரசியல் ஆதாயம் இருக்கிறது என்று வைத்துக் கொண்டோமானால். ப.ம.க வோ… எதுக்கு ஆதரிக்கணும்.. அப்புறம் பின்னாடி சீட்டும், பையனுக்கு ராஜ்ய சபா எம்.பியும், மந்திரி பதவியும் போயிருமோன்னு, எங்க போய் முட்டிகிட்டா பித்தம் தெளியும்னு தெரியாம வாய மூடிட்டு உட்காந்துட்டாங்க. இந்த லட்சணத்துல 2011ல இவங்க ஆட்சின்னு நாலு வருஷம் முன்னாடி அறிக்கை வேற. ஆ..ஊன்னா மைனாரிட்டி திமுக அரசுன்னு சொல்லிட்டிருக்கிற அதிமுக தலைமை எந்தவிதமான பெரிய எழுச்சியையும் ஏற்படுத்தாம வாயை மூடிட்டு எதுக்கோ காத்திட்டிருக்கிற மாதிரி போயிருச்சு. அது சரி ஒருவேளை கூட்டம் கூட்டி வேலை செய்ய ...

ரீவைண்ட்

இந்தியாவில் குறிப்பிட தகுந்த சிறந்த இயக்குனர்களில் பாசிலும் ஒருவர். பாசிலின் வருஷம்16, பொம்முகுட்டி அம்மாவுக்கு,பூவிழி வாசலிலே, போன்ற  படங்களினால் அவர் மேல் அபரிமிதமான காதல் இருந்த கால கட்டம். ஏனென்றால் அவரது படங்களில் இருக்கும் ஒவ்வொரு சின்ன கேரக்டரும் மக்களின் மனதில் நிற்கும் கேரக்டர்களாக வலம் வரும் கேரக்டர்களாக இருக்கும் என்பதால் நான் நடித்து கொண்டிருந்த காலத்தில் பாசில் “ஒரு நாள் ஒரு கனவு” படத்தை ஆரம்பித்தார். அப்போது அவரது அலுவலகம் அசோக்நகரில் போஸ்டல் காலனியில் இருந்தததாய் ஞாபகம். தொடர் முயற்சிக்கு பின்பு அவரை பார்க்க முடியாவிட்டாலும் ஒரு வழியாய் என் போட்டோவை அவர்கள் அலுவலகத்தில் சேர்த்துவிட்டேன். எனக்கு தெரிந்து பாசில் என்றில்லை எந்த மலையாள திரைப்பட இயக்குனர் தமிழில் படம் செய்தால் அதில் பிரதான கேரக்டர்களை தவிர மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள், ஏன் சில சமயம் வசனம் எழுதக் கூட மலையாள ஆட்கள் எழுதி பார்த்திருக்கிறேன். பாசிலின் படங்களில் பார்த்தால் அவரது கேமராமேன் அனந்த குட்டன்,  வசனகர்த்தா கோகுல கிருஷ்ணா மற்றும் படத்தில் வரும் பல கேரக்டர்கள் ஆர்டிஸ்ட் கேரளத்துகாரர்களாகவே இருந...

ஜில்லுனு காத்து . .. ஜன்னலை சாத்து.

ஒன்பது லட்ச ஹிட்ஸுகளையும், எழுநூற்றி சொச்ச பாலோயர்களையும் அளித்து மென்மேலும் என்னை ஊக்குவிக்கும் வாசகர்களுக்கும், சக பதிவர்களுக்கும் நன்றியும்.. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும்... சில மாதங்களுக்கு முன் சென்னை  உள்ள பெண்கள் கல்லூரியில் நடந்த கல்சுரல்ஸ் நிகழ்ச்சி ஒன்றுக்கு நடுவராய் கூப்பிட்டிருந்தார்கள். பம்மலில் நான் பாலிடெக்னிக் படிக்கும் போது,  ரயில்வே ஸ்டேஷனில் நின்றபடி, சைட் அடிப்பதற்காகவே பல்லாவரத்தில் இறங்காமல் அடுத்த ஸ்டேஷனில் இறங்கி எல்லோரையும் ”அனுப்பி” வைத்துவிட்டு அடுத்த ரயிலை பிடித்து அவசர அவசரமாய் காலேஜுக்கு போன நாட்கள் ஞாபகம் வந்தது. இப்போது அந்த காலேஜில் நடக்கும் விழாவுக்கு நடுவர். உள்ளே நுழைந்ததும் எங்கே பார்த்தாலும் பிஸியாய் மாணவிகள் அலைந்து கொண்டிருந்தார்கள். கல்சுரல்ஸ் என்பதால் மற்ற கல்லூரியிலிருந்து மாணவர்களும் வந்திருந்ததால், அவர்களுடன் சில மாணவிகள் மட்டும் தைரியமாய் பேசிக் கொண்டிருந்தார்கள். தாங்கள்  பேசிக் கொண்டிருப்பதை மற்ற பெண்கள் பார்க்கிறார்களா? என்று நோட்டம் விட்டபடி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்படி பேசும் போது அவர்களின் பாடி லேங்குவேஜ் ம...

ரசிகர்கள் ”விரும்பும்” தமிழ் சினிமாவின் பத்து.

1. படம் வெளியாகுறதுக்கு முந்தி விகடன்ல, வித்யாசமான ஒரு தமிழ் சினிமாவ கொடுக்க முயற்சி செஞ்சிருக்கோம்னு அந்த டைரக்டர் சொல்வாரே அது பிடிக்கும் 2. படம் ரிலீஸாகி பத்து நாள்ல உலக தொலைகாட்சியில் முதல் முறையா சூப்பர் ஹிட் படம்னு வந்ததும், வேற பேட்டியில புரொடியூசர் சரியா சப்போர்ட் பண்ணலன்னு டைரக்டரும், டைரக்டர் சரியா சப்போர்ட் பண்ணலைன்னு புரொடியூசரும் பேட்டி கொடுப்பாங்களே அது பிடிக்கும் 3. மல்லாக்க படுத்து யோசிச்சாவது விஷாலுக்கோ, விஜய்க்கோ, ஒரு கேனத்தனமான ஓப்பனிங் சீனை பிடிச்சு அதை வச்சி பில்டப் செஞ்சி கால்ஷீட் வாங்கிட்டு,  படத்துல பாக்கயில காரி துப்புற மாதிரி வர்ற ஓப்பனிங் சீன் இருக்கு பாருங்க அது பிடிக்கும் 4. படத்தில விதவையோ, அல்லது கல்யாணமான பொண்ணை ஹீரோ லவ் பண்ணுறாருன்னா அவளோட புருஷன் ஃப்ர்ஸ்ட் நைட்டுக்கு, முந்தி ஆக்ஸிடெண்டுலேயோ, பாம்பு கடிச்சோ, இல்லாட்டி தும்மியாச்சும், இப்படி ஏதாச்சும் ஒரு காரணம் சொல்லி சாகடிச்சு, கதாநாயகி கற்பை, ஹீரோவுக்காக காப்பாத்திறீங்க பாருங்க அது ரொம்ப பிடிக்கும் 5. என்னதான் சொதப்பல் படம் எடுத்தாலும், இந்த சன் டிவி அவங்க படம் தான் ஊர் உலகத்தில நல்ல ஓடுற...

நோ - பார்க்கிங்

வண்டிய பார்க் பண்ணிட்டு பேங்குக்கு போயிட்டு வெளிய வந்து பார்த்தா உங்க வண்டிய காணோமா..? பதட்டபடாதீங்க.. உடனடியா அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு போய் பாருங்க அங்க உங்க வண்டியிருக்கும், அவ்வளவு சீக்கிரமா உங்க வண்டிய அவங்க கண்டு பிடிச்சிடுறாங்களான்னு நீங்க கேட்டா. நீங்க ரொம்பவே நல்லவருங்க..?.. ஆமா.. வண்டிய எடுத்துட்டு போனவனுக்குதானே.. அதை பத்தி தெரியும். ஆம் பூட்டின வண்டியை, ஆள் வைத்து தூக்கி போவது, நம் காவல் துறைதான். என்ன கொடுமை சார் இது. நகரின் முக்கியமான பகுதிகளில், அதுவும், பிரபலமான தெருக்களில் வணிக வளாகம், அல்லது அரசு அலுவலகமோ, இன்சூரன்ஸ் கம்பெனிகளோ.. யாருடய இடத்திலும் நம்முடய வண்டியை பார்க் செய்ய வசதியிருப்பதில்லை. அதிலும் முக்கியமாய் யாராவது மவுண்ட் ரோடு சிட்டி பேங்க் பார்க்கிங் நிலைமையை பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். காவல் துறை பார்க்கிங் ஏரியா என்று அறிவித்திருக்கிற இடங்களை விட நோ பார்க்கிங் அறிவித்திருக்கும் இடம் தான் அதிகம். அவசரத்தில் அதுவும் ஆபீஸ் போகும் நேரத்தில் பேங்க் வேலையாய் வருபவர்கள், பாங்கின் வாசலில் வண்டியை விட்டுவிட்டு போய் வந்து பார்த்தால்.. வண்டியை காணாமல்...

வந்திட்டோமில்ல…

Image
ஒரு வாரமாய் உங்களுக்கெல்லாம் ஜாலியாய் இருந்திருக்கும், என்னுடய தொல்லையில்லாமல். எப்போதும் நல்லதே நடந்திட்டிருந்தா போரடிக்கும், அதனால நான் திரும்ப வந்திட்டேன். ஒரு திரைப்பட டிஸ்கஷனுக்காக என் நண்பர்கள் குழாமுடன் ஏதாவது வெளியூர் போகலாமென  முடிவெடுத்து, என் புரொடியூசரிடம் சொல்ல, அவர் கொடைக்கானலை சொன்னார் அடிக்கிற வெய்யிலுக்கு கொடைக்கானல் பேரை சொன்னாலே குளிருதுல்ல என்று குளீரடிக்க, கிளம்பினோம். புதன் இரவு. அற்புதமான பஸ் பயணம். போகிற வழியில், நர்சிம், முரளிகண்ணன், தண்டோரா, ரமேஷ் வைத்யா எலோரும் பேசினார்கள். அதிகாலை தேனியில் இறக்கி விட்டார்கள். அங்கே அருகே ஒரு ஓட்டலில் டபுள் ஏசி போட்ட ரூமில் போய் செட்டில் ஆனோம். காலையில் ஒரு ஒன்பது மணிக்கு ஒரு காரை அனுப்பி வைத்தார் தயாரிப்பாளர். “இன்று ஒரு லொக்கேஷனை பார்க்க போகிறோம்.” நாளை தான் கொடைக்கானல் என்றார். போகிற வழியில் செவ்வெளனி வாங்கி கொடுத்தார். அற்புதமான சுவை. இம்மாதிரியான சுவை இருபது ரூபாய் கொடுத்து சென்னையில் குடிக்கும் இளனியில் வந்ததில்லை. இளனி 5 ரூபாய். அந்த கடைக்காரர் அன்று தான் முதன் முதலில் வியாபாரத்தை ஆரம்பித்திருந்தார். ஒரு...

சந்தோஷம் பொங்குதே..

இன்றைய தினம் மிக சந்தோஷமாய் பிறந்திருக்கிறது.  நேற்று படுக்க போகும் போதிருந்த முதுகுவலி காலையில் லேசாக குறைந்ததினாலா?  காலையில் எல்லாம் நல்ல படியாய் நடந்ததினாலா?  ரொம்ப நாளாய் வர வேண்டிய பணம் திரும்ப வந்ததினாலா? இல்லை ஆஸ்கர் ரவிசந்திரன் நம்மளை புக் செய்யிற மாதிரி கனவு கண்டதாலா?  என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். காலையில் நம்ம பக்கத்தை திறந்து பார்த்ததும் நம்ம பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 150ஐ கடந்திருந்த்து. ஒரு வாரமாய் செஞ்சுரிக்கு முன் தடுமாறும் டெண்டுல்கர் போல 140க்கு அப்புறம் தடுமாறிக் கொண்டிருந்தது தடாலென்று 154 அகி விட்டது. அதுவும் என் சந்தோஷத்திற்கு காரணம். என்னை தொடர்பவர்களுக்கெல்லாம் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஏதோ நானும் எழுதுகிறேன் பேர்விழி என்று கடந்த எட்டு மாத காலமாய் தொடந்து எழுதிவருகிறேன்..( அப்படி என்ன எழுதி கிழிச்சிட்டேன்னு… என்பது போன்ற குரல்கள் கேட்கிறது) என்னையும் ஒரு மனுஷனாய் மதித்து தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் உங்களுக்கு என் நன்றி மீண்டும் உரித்தாகுக.. சந்தோஷம்னா நம்ம சந்தோஷம் மட்டும்தானா.? நம் நண்பர்களின் சந்தோஷம் கூட நம் ...