Thottal Thodarum

Jul 7, 2010

கடையடைப்பு

bandh-more-630 ரெண்டு நாள் முன்பு விலைவாசி ஏற்றத்தை எதிர்த்து நாடு முழுவதும் கடையடைப்பு அறிவித்திருந்தது. தமிழ் நாட்டில் பெரியதாய் என்ன சின்னதாய் கூட எந்தவிதமான சலசலப்பும் இல்லாமல் புஸ்ஸென போனது கடையடைப்பு. ஒரு வேளை அரசு ஆதரவுடன் நடந்திருந்தால் நிச்சயம் இந்த கடையடைப்பு மாபெரும் வெற்றியாக்கப்பட்டிருக்கும். ஆனால் ஆளும் காங்கிரஸ் அரசை எதிர்த்து விரைவில் தேர்தலை சந்திக்கப் போகும் நேரத்தில் பகைத்துக் கொள்ள மனமில்லாமல் தி.மு.க அரசு அமைதி காத்திருக்கிறது.

சரி… இவர்கள் தான் அரசியல் ஆதாயம் இருக்கிறது என்று வைத்துக் கொண்டோமானால். ப.ம.க வோ… எதுக்கு ஆதரிக்கணும்.. அப்புறம் பின்னாடி சீட்டும், பையனுக்கு ராஜ்ய சபா எம்.பியும், மந்திரி பதவியும் போயிருமோன்னு, எங்க போய் முட்டிகிட்டா பித்தம் தெளியும்னு தெரியாம வாய மூடிட்டு உட்காந்துட்டாங்க. இந்த லட்சணத்துல 2011ல இவங்க ஆட்சின்னு நாலு வருஷம் முன்னாடி அறிக்கை வேற.

ஆ..ஊன்னா மைனாரிட்டி திமுக அரசுன்னு சொல்லிட்டிருக்கிற அதிமுக தலைமை எந்தவிதமான பெரிய எழுச்சியையும் ஏற்படுத்தாம வாயை மூடிட்டு எதுக்கோ காத்திட்டிருக்கிற மாதிரி போயிருச்சு. அது சரி ஒருவேளை கூட்டம் கூட்டி வேலை செய்ய கட்சியில ஒரு தலைவராவது இருந்தாத்தானே..  இல்லே ஒரு வேளை எப்படியும் வரப் போற எலக்‌ஷன்ல வேலைக்காவாதுன்னு பணிக்கர் சொல்லிட்டாரோ என்னவோ பொறவு எதுக்கு வீணா போராட்டம் அது இதுன்னு அடக்கி வாசிட்டாங்க போலருக்கு.
bandh-more-pics அப்புறம் இருக்கவே இருக்கு மத்த ஜாதி அல்லக்கை கட்சிகள் எல்லாருக்கும் ஏதோ ஒரு வகையில் இந்த ஆட்சியில் வெந்தது வேகாதது கிடைத்துக் கொண்டிருப்பதால் எதுக்கு அதை இழப்பானேன் என்று உட்கார்ந்துவிட்டன.
பாவம் பி.ஜே.பி மட்டும் ஆங்காங்கே மைக் செட், மேடையமைத்தவர்கள் காவலர்கள் மற்றும் வந்த தலைவர்களின் கார் டிரைவர்கள் என்று மொத்தம் பத்து பேரை வைத்துக் கொண்டு தனியே மைக் வைத்து பேசிக் கொண்டிருந்தார்கள். எப்படியாவது செல்ப் எடுத்துவிட மாட்டோமா என்கிற ஒரு ஆசையில். அவங்களுக்கே தெரியும் அவங்க லடசணம் தமிழ்நாட்டுல என்னன்னு..

இந்த பத்திரிக்கைகாரர்கள் இவங்களுக்கு வேற பிரச்சனை, ஒரு பத்திரிக்கைக்கு அரசு விளம்பரஙக்ள் போயிருமேங்கிற கவலை.. இன்னொரு பத்திரிக்கைக்கு எற்கனவே பட்ட அடி ஜாஸ்தி, அப்புறம் எதுக்கு தேவையில்லாம அதை பத்தி எழுதி மக்கள் கிட்ட ஏதாவது எழுச்சி வந்திட்டா, நமக்கு வீழ்ச்சி வந்திருமோன்னு மையமா.. இன்று பந்த்.னு போட்டுட்டு, தமிழ் நாட்டில் எந்த பாதிப்பும் இல்லைன்னு அடுத்த நாள் போட்டோ போட்டுட்டு போயிட்டாங்க.

இந்த பெட்ரோல் விலையை இனிமே சப்ஸிடியில்லாமல் மார்கெட் நிலவரத்துக்கு ஏற்றார்ப் போல ஏற்றி, இறக்கிக் கொள்ளலாம் என்று கை கழுவிக் கொள்ள நினைக்கிறது அரசு, இதனால் யாருக்கு ஆதரவாக இருக்கிறது மக்களுக்காகவா? அல்லது முப்பது நாப்பது எம்பிக்களை வைத்துக் கொண்டு குட்டி ராஜ்ஜியம் நடத்தும் ரிலயன்ஸ் போன்ற கார்பரேட்டுகளுக்காகவா..?
 bandh-more-pics-630-2 இந்த வணிகர் சங்கங்களும் ஒரு அல்லக்கை அரசு ஆதரவு குழுக்களாய்த்தான் வலம் வருகிற்து. பொதுமக்களோடு நேரடியாய் தொடர்புடைபவர்கள் இவர்கள். இவர்கள் மக்களுக்காக கடையடைப்பு போராட்டம் நடத்தியிருந்தால் நிச்சயம் அரசு விழித்துக் கொண்டிருக்கும்.

எனக்கு என்ன ஆச்சர்யம்னா.. மத்தவங்களெல்லாம் அவங்க அவங்களுக்கு ஏதாவது மறைமுகமாகவோ, நேரடியாகவோ வருமானமும், ஆதாயமும் இருக்கு அதனால அமுக்கி வாசிக்கலாம். என்ன ஆச்சு நம்ம பொதுஜனத்துக்கு.?  விலைவாசி ஏற்றத்தால கண்ணு முழி பிதுங்கி என்ன செய்யறதுன்னு தெரியாம தவிச்சிட்டு இருக்கிறவங்க.. ஒவ்வொரு முறை பெட்ரோல், டீசல் விலையேறும் போது, ஏறுற விலைவாசி அதுவே ஒரு இரண்டு ரூபாய் குறையும் போது குறையவில்லையே? என்று யாரையும் கேட்பதில்லை. கேட்பது என்றால் யாரிடம்? அரசிடமா.? நீங்கள் அன்றாடம் வாங்கும்  கடைக்காரரிடம், ஆட்டோக்காரகளிடம் என்று உங்கள் எதிர்ப்பை ஒவ்வொருவரும் காட்டினால் நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கும். ஆனால் நம்மில் எத்தனை பேர் இம்மாதிரியான எதிர்ப்பை காட்டியிருக்கிறோம். டாஸ்மாக்கில் கடைக்காரர்கள் எம்.ஆர்.பியிலிருந்து அடிக்கும் கொள்ளையிலிருந்து பக்கத்து மளிகைகடைக்காரன் எக்ஸ்பயரி டேட் ஆனா பொருட்களை விற்பதையும், வாராவாரம் ஏறும் பருப்பு விலைகளையும்,  காய்கறி விலைகளையும், பார்த்து போய் கொண்டிருக்கிறோம்.

ஆனால் நமக்கெல்லாம் ஒரு நல்ல வாய்ப்பு வந்தது. ஒருமித்த குரலாக உணர்வாக, நம் எதிர்ப்பை, ஆதரவை காட்ட இந்த கடையடைப்பை பயன்படுத்தியிருக்கலாம்.  இந்த அரசியல் கட்சிகளை நம்பாமல்,எவ்வளவோ பொது நல இயக்கங்கள் இதை முன்னிறுத்தி போராட்டம் நடத்தியிருக்கலாம். ஒரே நேரத்தில் நாடு முழுவதும் விலை வாசி ஏற்றத்துகாக கடையடைப்பு தினம் அன்று, நம் எதிர்ப்பை காட்டியிருந்தால் அரசுக்கு உரைத்திருக்கும் அல்லவா?

ஒரு வேளை தமிழ்நாட்டில் மட்டும் விலைவாசி உயர்வு பாதிக்கவில்லையோ..? எல்லோரும் சுபிட்சமாக இருக்கிறோமோ..? நமக்காகத்தான் அரசே தவிர அவர்களுக்காக நாம் என்றில்லை. அப்படியிருக்க நம்மை ஆளும் உரிமையை கொடுத்த நமக்கு, அதே  அரசை தட்டிக் கொடுக்கவும், எதிர்ப்பை காட்டவும் உரிமையிருக்கத்தானே செய்கிறது. ஏன் அதை பயன் படுத்தாமல் வெறும் ஊமைகளாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்? ம்ஹாராஷ்ட்ராவில் ஆளும் ஆட்சியை எதிர்த்து பந்த் வெற்றிகரமாய் நடத்தியிருக்கிறார்கள்.? ஏன் இங்கு மட்டும் இப்படி? இலவச டிவிக்களும், டாஸ்மாக் சரக்குகளூம், மற்றும பல இலவசங்களூம் போதுமோ..?
கேபிள் சங்கர்
Post a Comment

40 comments:

CS. Mohan Kumar said...

தல ஒய் டென்ஷன்? நோ நோ.. பீ கூல்...

Unknown said...

வணக்கம் சார்.

தமிழக தலைநகரில் வேண்டுமானால் கடையடைப்பு நடைபெறாமல் இருக்கலாம். ஆனால் பல மாநில, மாவட்ட மக்கள் வாழும் திருப்பூரில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதே போல் 90 சதவீத பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்த்தன. சில அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.

பொதுமக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தவில்லை என்பது உண்மை.

ஆனால் மறைமுக எதிர்ப்பு எல்லோர் மனதிலும் இருக்கிறது. இது தேர்தல் காலமாகி இருந்தால் உடனடியாக விளைவை தெரிந்து கொள்ள ஏதுவாக இருந்திருக்கும்.

ஆட்சி மாறினாலும் நிலமைகள் சகஜமாக காலங்கள் பிடிக்கும் என்பதால் - நீங்கள் சொன்னதுபோல் சுரணை இல்லாமல் தான் இருக்க வேண்டியதாயிருக்கிறது.

ஜெயா டீவியில் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி.

பிரபல பதிவர் said...

தமிழன் என்ற முறையில் பலமுறை தலை குனிந்து இருக்கிறேன். (பொது தேர்த‌ல் முடிவு)
இந்த பந்த் அன்றும் அதே மனநிலைதான்.
சூடு சொரனையற்ற கூட்டத்தில் ஒருவனாக பிறந்ததில் வெட்கப்படுகிறேன்.
எப்படித்தான் பிச்சைக்காரர்களாக மாறுவதில் இத்தனை அக்கறை காட்டுகிறார்களோ!!!

மும்பை ஒரு சரியான உதாரணம் பந்த்ன் வெற்றிக்கு

தராசு said...

அண்ணே,

வணக்கம். இலவசங்களை நாடிப் போகும் நான் வாழும் வரைக்கும், ஓட்டுக்கு பணம் கிடைக்காதா என ஏங்கும் நான் உயிரோடு இருக்கும் வரைக்கும், இரண்டு ரூபாய் விலையேற்றத்தால் என்ன நஷ்டம் வரப் போகுது, என்னால சமாளிக்க முடியும் என நினைக்கும் நான் வாழும் வரைக்கும்,

எந்த கொம்பனாலும் எங்கள் தலைவர்களை அசைத்து விட முடியாது.

வாழ்க பணநாயகம், வளர்க பொறுப்பற்ற நாங்கள்.

Sukumar said...

மக்கள் பொங்கி எழுவதென்பது ரொம்ப கஷ்டம் தல. ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை ஏறுவதும் மக்கள் புலம்புவதும் பின் அதை மறப்பதும் என எல்லாம் வாடிக்கையாகி விட்டபடியால் அதோடு சேர்ந்து வாழ்ந்து பழக கற்றுக்கொண்டு விட்டோம். நீங்கள் சொன்னபடி பந்த்திற்கு ஆதரவு தெரிவித்த அம்மா கட்சியே சுத்தமாக ஆஃப் விட்டதுதான் காமெடி.

தனி காட்டு ராஜா said...

//நீங்கள் அன்றாடம் வாங்கும் கடைக்காரரிடம், ஆட்டோக்காரகளிடம் என்று உங்கள் எதிர்ப்பை ஒவ்வொருவரும் காட்டினால் நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கும்//

நீங்க எப்படி எதிர்ப்பை காட்டுனீங்க தல ?

vasu balaji said...

ப்ளாக்கர் கூட பின்னூட்டமெல்லாம் அடைப்பு செஞ்சு பங்கெடுத்துகிட்டது பாஸ். பாராட்டாம விட்டுட்டீங்களே:)

பிரபல பதிவர் said...

தல, மூத்த பதிவர் உங்களுக்கு விளக்கம் கொடுத்திருக்கார்
படிச்சு பாருங்க‌

http://thatstamil.oneindia.in/news/2010/07/07/admk-bjp-bandh-failed-tamil-nadu-karunanidhi.html

Vinodh S said...

Sir Naanum, neenga sonna maadhiri neraya kadaikaaranga adhuvum Coimbatore la odura auto karanga kitta ketu iruken.. ellarum sollura orae bathil velavaasi yeriduchu.. Nammala porutha varai cricket fieldingum seri vera endha prachanaya irundhaalum seri aduthavana kai kaaturadhe valakkama pochu.Ellarum vazhakama solluradhu "Nan oruthan thirundhi enna nadaka pogudhu" .I am desparate and disappointed. Edho unga blog konjam arudhala iruku

ஜோதிஜி said...

நீங்கள் இது போல் நிறைய எழுத வேண்டும்.

R-J-K said...

Sari thanney.. vela vasi eri pochunnu naama than bandh pannirukkanum.. yaarum velaikku pogama, auto busla yerama..!! ethana nalaikku pannuvom??? nadakkara kariyamilla.. veetla arasiyak katchigalukku bayanthu vena modangi kedappom.. namma ethirpa katrathukku panna porathillla..!

ஈரோடு கதிர் said...

இந்த இடுகைக்கு முதலில் வணக்கம்

VISA said...

நான் அன்றைக்கு இடுகை எழுதாமல் இருந்தேனோல்லியோ.....

Ravikumar Tirupur said...

வேலை நிறுத்தபோராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கே பிரதானமானது அதை கண்டுகொள்ளாமல் விட்ட உங்களை கண்டிக்கிறேன்!
ஆங்காங்கே போராட்டத்திற்கு எதிர்போராட்டம் செய்த தி.மு.கவினரை என்னவென்று சொல்லுகிறீர்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அதான் பிளாக்கர் பந்த் நடந்ததே. நாம வேற பிளாக்கர் வேறயா?

pichaikaaran said...

இது போன்ற விஷயங்களில் பெரும்பாலானோர் கருத்து சொல்வதில்... தைரியமாக உங்கள் கருத்தை சொன்னதற்கு நன்றி

Unknown said...

உங்களை அரசியலுக்கு அன்புடன் வரவேற்கிறேன்.. நிறைய எதிர்பார்க்கிறேன் ...

பா.ராஜாராம் said...

வணக்கம் கேபிள்ஜி!

//ப்ளாக்கர் கூட பின்னூட்டமெல்லாம் அடைப்பு செஞ்சு பங்கெடுத்துகிட்டது பாஸ். பாராட்டாம விட்டுட்டீங்களே:) //

:-))

A Simple Man said...

திரையரங்குகள், திரைப்பட,சின்னத்திரைப் படப்பிடிப்புகள் என்று எல்லாமே கலந்து கொண்டிக்கலாம். இன்னும் எத்தனையோ லாம் கள் சொல்லலாம். மொத்தத்தில் பொது ஜனங்களுக்கு ரோஷமே இல்லன்னுதான் சொல்லனும் :-(

A Simple Man said...
This comment has been removed by the author.
coferaja said...

capleji anga maduraila alageriya meeri 70%kadi adachi erunthathu

செ.சரவணக்குமார் said...

அருமையான இடுகை கேபிள்ஜி.

நண்பர்கள் சொன்னதுபோல நீங்கள் இதுபோன்ற பதிவுகளையும் நிறைய எழுத வேண்டும் என்று விரும்புகிறேன்.

அத்திரி said...

தமிழகத்திலே ஒரு கிலோ அரிசி ஒரு ரூப்பாய்க்கு கிடைக்கிறது...மளிகை சாமான்கள் குறைந்த விலையில் ரேஷன் கடையில் கிடைக்கிறது..பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை.... இதெல்லாம் மற்ற மாநிலங்களுக்கு உதாரணம்.....விலைவாசி ஏற்றத்தால் தமிழகத்தில் மட்டும் பாதிப்பில்லை... இதெல்லாம் தெரியவில்லையா அம்மாவின் அடிவருடியான கேபிள் சங்கருக்கு....

அன்பு உடன்பிறப்புக்களே இவரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்..

இப்படிக்கு
தமிழக முதல்வர்

ஜோ/Joe said...

//ஜெயா டீவியில் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி.//

ஓஓஒகோ ..அதான் மேட்டரா! :)

Paleo God said...

பாரத் பந்த்தை முன்னிட்டு சிறப்பு திரைப்படங்கள் எதுவுமே போடலையேன்னு நானே கடுப்பாக் கிடக்கேன் நீங்க வேற!

--

ஜெயா டிவில வந்ததுக்கே இப்படியா?? :))

joe vimal said...

நீங்கள் இது போல அடிக்கடி எழுத வேண்டும் ,நானெல்லாம் தமிழனும் இல்லை இந்தியனும் இல்லை கடவுசீட்டில் மட்டுமே இருக்கும் வஸ்து அது

ராம்ஜி_யாஹூ said...

பந்த், கடை அடைப்பு எல்லாம் விடுங்க
வரப் போகும் சட்ட மன்ற தேர்தலின் பொழுது நம் வாக்குகளை என்ன விலைக்கு விற்கலாம்.(Rs.8000 per vote or 9000)

senthil velayuthan said...

தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்த, "பந்த்' போராட்டத்திற்கு ஆதரவில்லை. பஸ்கள் மீது கல்வீச்சுகள் நடந்து 200 பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதைத் தவிர, வேறு எந்த பாதிப்பும் இல்லை. தமிழகத்தில் என்னதான் அ.தி.மு.க., - பா.ஜ., போன்ற கட்சிகள் அணி வகுத்து நின்றாலும், விலைவாசி உயர்வு என்ற கோஷம், அதனால் ஏற்படும் பாதிப்பு, இந்தியாவில் மற்ற மாநிலங்களைப் போல தமிழ் மாநில மக்களைப் பாதிக்கவில்லை. அப்படி பாதிக்காத அளவிற்கு அவர்களைப் பாதுகாக்கும் கடமையை, இங்குள்ள நமது அரசு நிறைவேற்றி வருகிறது. அதனால் தான் பூதாகரமாக எதிர்பார்த்த பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியின் பந்த், வெற்றி பெறவில்லை.



இதைச் சொல்வதால் விலைவாசி உயர்வுக்கு வெண்சாமரம் வீசுபவர்கள் அல்ல நாம்.மற்ற மாநிலங்களைப் போல அல்லாமல் தமிழ் மாநிலத்தில் கிலோ அரிசி ஒரு ரூபாய் என்பதும், மானிய விலையில் மளிகைச் சாமான்களை பெற முடியும் என்பதும், பஸ் கட்டணம் உயர்வில்லை என்பதும், விலைவாசி உயர்வின் பாதிப்பை சாதாரண சாமன்ய மக்களிடமிருந்து அகற்றியிருப்பதை எண்ணி பார்த்தால் முழு உண்மையும் புலப்படும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.


this is news came in dinamalar e paper.
may be this is the reason, i think people r satisfied

Santhosh said...

தல,
உங்க கிட்ட இருந்து ஒரு நல்ல பதிவு.. பந்த் நடத்தினாங்க ஆனா அதனால என்ன பயன் சொல்லுங்க.. பந்துன்னு சொன்ன உடனே எல்லாரும் ஒக்காந்து டிவி பாக்க ஆரம்பிச்சிடறோம்.. இதுக்கு பந்த் அனுசரிக்காலமேயே இருக்கலாமே?

shortfilmindia.com said...

@மோகன் குமார்
பின்ன என்னங்க.. ?

@சரவணன்
அப்படி சுரணை இல்லாமல் இருப்பதால் தான் நம்மை ஏறி மேய்க்கிறார்கள் என்பது என் எண்ணம்.

shortfilmindia.com said...

@சிவகாசி மாப்பிள்ளை
:(

@தராசு
நாங்களுக்கு வாழ்த்துக்கள்.

@சுகுமார் சுவாமிநாதன்
அவஙக் எங்க ஆதரவுதெரிவிச்சாங்க.. ?

@தனிகாட்டு ராஜா..
இதோ இந்த பதிவு கூட ஒரு வகையில் எதிர்ப்புத்தான். நான் எதிர்ப்பு காட்டும் விஷயமெல்லாம் என் நண்பர்களுக்கு தெரியும் இங்கே சொன்னால் சுயபுராணம் என்று பொலம்புவார்கள்.:)

shortfilmindia.com said...

@வானம்பாடிகள்
:)

@சிவகாசி மாப்பிள்ளை
அவருக்கு தெரியாத சால்ஜாப்பா..?

@வினோத்
நீங்களாவது அப்படி நினைக்காம.. உங்களுக்கு தப்புன்னு படுவதை, உங்களை ஏமாற்றுகிறான் என்று தெரிந்தால் நிச்சயம் குரல் கொடுங்க.. பதில் கிடைக்கும்..

shortfilmindia.com said...

@ஜோதிஜி
நிச்சயம்..

@மது
ஒரு நாள் ஒரு தெரு பூரா ஆட்டோ, ஏற மாட்டோம்னு அறிவிச்சிட்டு செஞ்சி பாருங்களேன். அதுக்கப்புறம் உங்களுக்கு கிடைக்கிற பீட் பேக்..

shortfilmindia.com said...

@ஈரோடு கதிர்
நன்றி

@விசா
அது என்னவோ சரிதான்

@ரவிகுமார் திருப்பூர்
இங்கே என்ன பெரிதாய் கிழித்தார்கள்.. ? ரவி..?

@ரமேஷ் ரொம்ப நல்லவன்
அது சரி

shortfilmindia.com said...

@பார்வையாளன்
நன்றி

@கே.ஆர்.பி.செந்தில்
ஓகே..ரைட்டு

@பா.ராஜாராம்
அட.. ரொமப நாள் ஆச்சு. வ்ருகைக்கு நன்றி

shortfilmindia.com said...

@சிம்பிள் மேன்
அவங்க எப்படி கலந்திப்பாங்க.. ஆட்சிய பகைச்சுக்க முடியாதில்லை..

@காபிராஜா
அப்படியா..?

@செ.சரவணக்குமார்
நன்றி நிச்சயம்

shortfilmindia.com said...

@அத்திரி..
நன்றி தமிழக முதல்வரே.. போன்ல பேசுறேன்..:)

@ஜோ..
:)

@ஷங்கர்
அடப்பாவிங்களா..நீயுமா..?:)

@ஜோவிமல்
நிச்சயம் .நன்றி

shortfilmindia.com said...

@ராம்ஜியாஹு
உங்க ஓட்டுசெல்லாதே.. வெளிநாட்டுல இல்லை இருக்கீங்க..?

@செந்தில்1426
தினமலரும். அப்பப்ப.. சொம்படிப்பாங்க..

2ச்ந்தோஷ்
அதுக்குத்தானே எல்லாருக்கு இலவச டீவி கொடுத்திருக்கிறது.

க.பாலாசி said...

இப்டி ஒரு சூடான மேட்டர் அதுவும் பொதுநலத்தோட உங்க பக்கத்துல எழுதுறது சந்தோஷமா இருக்கங்க... எனக்குத்தெரிஞ்சி ரொம்ப நாளாச்சுன்னு நினைக்கிறேன்... இந்தமாதிரி இடுகைகளை உங்களிடம் வாசித்து...

Thamira said...

அரசியல்ல கிரசியல்ல குதிக்க போறீங்களா கேபிள்.? ஏன் இந்த திடீர் எழுச்சி.. வாட்டர்பாக்கெட் விலையேத்திட்டாங்களா?