Thottal Thodarum

Jul 6, 2010

I Hate Luv Storys (2010)

I-Hate-Luv-Storys காதல் படஙக்ளையும், டெம்ப்ளேட் காதலர்களையும் பிடிக்காத ஜே, என்கிற ஒரு இளமை துள்ளும் இளைஞன்.  சினிமாவில் வருவது போலவே டெம்ப்ளேட் காதலை காதல் என்றும் கொண்டாடும் பெண்ணுக்கு இடையே நிஜமாய் காதல் வருவதுதான் கதை. அதை மிக சுவாரஸ்யமாக செய்திருக்கிறார்கள்.

தொடர்ந்து காதல் படஙக்ளையே கொடுத்து வெற்றிகரமான இயக்குனராக வலம் வரும், எமோஷனல், இயக்குனர் வீர் கபூரிடம் ஜே அஸிஸ்டெண்ட் டைரக்டராய் வேலை செய்கிறான்.உருகி, உருகி காதல் கதைகளை எடுப்பவரிடம் கொஞ்சம் கூட பிடிக்காமல் வேலை செய்யும் ஜெ, ஒரு காஸனோவா டைப் இளைஞன், பார்த்த மாத்திரத்தில் பப்பிலோ, தியேட்டரிலோ, பார்க்கும் இடத்தில் ஒருத்தியை கரெக்ட் செய்து “மேட்டர்’ முடித்துவிட்டு அடுத்த நாள் காலையில அவளை வீட்டிலிருந்து துரத்துபவன்.

சிம்ரன், க்யூட்டான, தன் சிறுவயது நண்பனையே காதலனாய் வரித்து, நொடிக்கு ஒரு ஐ லவ் யூ, கிப்ட்டுகள், பார்ட்டி, அவனுக்கு பிடித்ததை தனக்கு பிடித்ததாய் ஏற்றுக் கொண்டு அவனுக்காக உருகுவதாய் உருவகப்படுத்திக் கொண்டு காதல் என்பது ஒரு சந்தோஷ குல்பி என்பதாய் சினிமாத்தனமாய் ராஜ்ஜை காதலிப்பவள்.

ஜே, சிம்ரனை தியேட்டரில் பார்க்க, அவளை கரெக்ட் செய்ய முயற்சிக்க, அதன் பின்னால் அவளை அவர்களுடய படத்திற்கு ஆர்ட் டைரக்டராய் வருகிறாள். இயக்குனர் அவளுக்கு உதவியாய் ஜே வை பணிக்க, வேறு வழியில்லாமல், இருவரும் ஒன்று சேர்ந்து வேலை செய்ய வேண்டிய சூழ்நிலையில் கொஞ்சம், கொஞ்சமாய் அவர்களுக்குள் ஒரு நெருக்கம் ஏற்படுகிறது. அது என்ன விதமான கெமிஸ்ட்ரி என்பதை நீங்கள் திரையில் பார்த்தால் தான் புரியும்.

i hate1

படம் நெடுக தமிழ் படம் போல கரண்ஜோகரின் திரைப்படங்களையும், சூப்பர் ஹிட்டான காதல் படங்களையும், விட்டு கலாய்த்திருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல், வசனங்களிலும், அதைகாட்சிப் படுத்தும் போது அட்ட்காசம். முக்கியமாய் ஒரு காட்சியில் ஹீரோயின் இறந்துவிட்டதும், அவளை பார்த்து ஹீரோ வசனம் பேசி அவளை எழுப்பும் காட்சி, சூப்பர். தியேட்ட்ரில் சிம்ரனை பார்த்ததும், தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே படத்தின் கதாநாயகன் பெயர் போல உனக்கும் ராஜ் என்ற பெயரில்  ஒரு பாய்ப்ரெண்ட் இருக்கிறான் என்று சொல்லிவிடாதே என்பது போல படம் பூராவும் கிண்டலும், நக்கலுமாய் பல காட்சிகள். சாதாரணமாகவே எலியும், பூனையுமாய் இரண்டு கேரக்டர்கள் இருந்தால் சுவாரய்ஸயமாய் இருக்கும் இதில் இரண்டு கேரக்டர்களும் இதில் இரண்டு எண்ட் பாயிண்ட் ஆட்கள் காதலிக்க போகிறார்கள் என்றதும் இன்னும் இண்ட்ரஸ்டிங்

i hateluv

ஒரு கட்டத்தில் சிம்ரன் தனக்கு ராஜ் மேல் இருப்பது காதலில்லை ஜே மீதிருப்பதுதான் காதல் என்பதை உணர்ந்து அவனிடம் அவள் ப்ரோபோஸ் செய்ய, ஜே அவள் மீது தனக்கு காதல் இல்லை என்றும் அவளை ஒரு நண்பியாகத்தான் பார்க்கிறேன் என்று அவளை மறுதலிக்கிறான். அதன் பிறகு அவனுக்குள் ஏற்படும் காதல் அவனை என்ன பாடு படுத்துகிறது? துள்ளலும் கிண்டலுமாய் போன முதல் பாதியை பார்க்கும் போது இரண்டாம் பாதி வழக்கமான இம்மாதிரியான ஃபீல் குட் படங்களுக்கான ஜெனரில் விழுந்தாலும் ரசிக்க முடிகிறது.  அதுவும் க்ளைமாக்ஸில் வழக்கமான் காதல் கதை காட்சிகளை கிண்டல் செய்தவன் அதைப் போலவே தன் நிஜ வாழ்க்கையிலும் செய்யும் போது ரசிக்கத்தான் முடிகிறது. அதிலும் தியேட்டரில் அவன் கையில் பூங்கொத்தோடு உள்ளே நுழைந்து “சிம்ரன்” என்று இரண்டு கை விரித்து கத்த, அதே சிங்கில் திரையில் ஹீரோ “சிமரன்” என்று கை விரித்து கத்தும் காட்சி அட்டகாசம்.

இம்ரான் கானும், சோனம் கபூரும் க்யூட். சரியான காஸ்டிங். பல இடங்களில் இம்ரான் தன் பாடி லேங்குவேஜில் நிகழ்கால இளைஞர்களை கண் முன் நிறுத்துகிறார். சோனம் இன்னும் கொஞ்சம் போஷாக்கானால் நன்றாக இருக்குமோ..? ஆனால் அவரின் கண்கள் ஸோ.. அட்ராக்டிவ்.. பல எக்ஸ்ப்ரெஷன்களை அள்ளி கொட்டுகிறது.

i hateஎமோஷனல் இயக்குனர், குண்டு அஸிஸ்டெண்ட் டைரக்டர், இம்ரானால் ஏமாற்றப்பட்டு அவர்கள் காதலுக்கு உதவும் பெண்,  என்று குட்டி குட்டி கேரக்டர்கள் கூட இண்ட்ரஸ்டிங்.  க்யூட்டான் படத்திற்கு அயன்கா போஸின் ஒளிப்பதிவும், விஷால் சேகரின் இசையும் ஆப்ட். எழுதி இயக்கியிருப்பவர் புனீத் மல்ஹோத்ரா. முன்னால் கரண் ஜோஹர் உதவி இயக்குனர். ஒரு சின்ன லைனை வைத்து சுவைபட இயக்கியிருக்கிறார். வசனங்கள் இவருக்கு பெரிய உதவியாய் அமைந்திருக்கிறது. சோனம் கபூர் தன் காதல் ரிஜெக்ட் ஆனபிறகு மீண்டும் ராஜுடன் உறவை தொடர்வதும், ஜே தன் காதலை வெளிப்படுத்தும் போது சோனம் மறுப்பதும், சரியாக இருந்தாலும் மீண்டும் ஜே வை அவள் ஏற்றுக் கொள்ளும் போது கொஞ்சம் இடறுகிறது. இன்னும் அழுத்தமான காரணம் இருந்திருக்க வேண்டுமோ என்று..

I HATE LUV STORYS – A FEEL GOOD LUV STORY

கேபிள் சங்கர்
Post a Comment

22 comments:

ஜெஸ்ஸி ஹிட்லர் said...

I hate luv stories even if it is feel GOOD.

sivakasi maappillai said...

I hate luv -
தலைப்பு காதலர்களை கஷ்டபடுத்துது தல.
ஒரு யூத்தான உங்ககிட்டேர்ந்து இப்படி ஒரு தலைப்பில் பதிவா???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

enakku hindi puriyaathe

அதி பிரதாபன் said...

நன்றி.

பெண்சிங்கம் படம் பார்த்தீர்களா?

senthilkumar said...

parkalam pola...!

Cable Sankar said...

test...

Cable Sankar said...

test..

Cable Sankar said...

hi

Cable Sankar said...

test

ஆதிமூலகிருஷ்ணன் said...

யோவ்.. போரும்யா.. இங்க அவனவன் தமிழ்படம் பார்க்கவே நேரமில்லாமல் இருக்கான். இதுல இவுரு ஒரு இந்திப்படம் உடமாட்டேங்குறாரு.!

அதி பிரதாபன் said...

ஆதி அண்ணே,
சேம் பிலட். :(

kothayam guru said...

me the first

D.R.Ashok said...

காதல்கொப்பளிக்கும் விமர்சனம், நன்று கேபிள் :)

Cable Sankar said...

test

Rishoban said...

I am first for the first time :)

ஆறுமுகம் முருகேசன் said...

ம்,நல்லா இருக்குங்க விமர்சனம்..

ஹாலிவுட் பாலா said...

என்னக் கொடுமையிது? பதிவுல 0 கமெண்ட்ன்னு காட்டுது. ஆனா கமெண்ட் போட வந்தா 10 இருக்கு.

ப்ளாகரில் புது கமெண்ட் அப்டேட் ஆகலைன்னு நினைக்கிறேன்.

எனக்கும் இதேதான் நடக்குது.

என்னோட போன பதிவு கமெண்ட்டெல்லாம் ரிலீஸ் ஆச்சா இல்லையா???

அய்யோ.....

சீனு said...

உங்க விமர்சனமே தனி தாங்க கேபிள்ஜி....அசத்தல்...
நானும் படம் பார்த்தேன்....எனக்கு பிடிச்சி இருந்தது...
நேரம் இருந்த இதையும் ஒரு பார்வை பாருங்க......
http://qatarseenu.blogspot.com/2010/07/i-hate-luv-storys.html

♥ ℛŐℳΣŐ ♥ said...

பார்த்துடுவோம் ...

Cable Sankar said...

@jessi hitler
:(

@சிவகாசி மாப்பிள்ளை
அதுல லவ் இருக்கே

@ரமேஷ் ரொம்ப் நல்லவன்
லவ்வுக்கு ஏது மொழி?

Cable Sankar said...

@அதிபிரதாபன்
ஏன் நான் நல்லருக்கிறது உனக்கு பிடிக்கலையா..?

@செந்தில்குமார்
ம்

@ஆதிமூலகிருஷ்ணன்
:)

@அதிபிரதாபன்
நீ பாக்க முடியலைன்னு சொல்றதுல ஒருஞாயமிருக்கு.. புது கல்யாணப் பையன்.. அவருக்கு எதுக்கு தோடு..?

@கோத்த்யம குரு
நன்றி

@அசோக்
நன்றி

@ரிஷோபன்
:)

2ஆறுமுகம் முருகேசன்
நன்றி

2ஹாலிவுட்பாலா
நேத்து போட்ட 90 கமெண்டுல 15தானிருக்கு.. போச்சே..போச்சே..

@சீனு
நன்றி.. நிச்சயம் பார்க்கிறேன்

@ரோமியோ
நன்றி நிச்சயம் பாருங்க..

Karthick Chidambaram said...

Nice review. But No Hindi movies.
It is tough to watch Hindi movies.