Thottal Thodarum

Jul 16, 2010

கேட்டால் கிடைக்கும்

dominos_pizza_profile_profile
நம் வாழ்க்கையில் பல நேரங்களில், நாம் தெரிந்தே பலரை நம் பாக்கெட்டுக்குள் கைவிட்டு பணம் எடுத்துக் கொள்வதை  அனுமதித்துக் கொண்டிருக்கிறோம். அது ஒரு ரூபாயாகவோ, நாலணாவாகவோ சில சமயம் நம் வாழ்க்கையாகவோ கூட இருக்கலாம்.

சமீபத்தில் நானும் என் மகன்களும் பிட்ஸா சாப்பிடுவதற்கு டொமினோ பிஸ்ஸாவுக்கு போனோம். எங்களது ஆர்டருக்கு மொத்தமாய் 303.71 பைசா வரிகளோடு வர, அதை 303.75க்கு முழு இலக்கமாய் மாற்றி, பில் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர் கேட்டதோ 304 ரூபாய். நானும் அது தான் விலையோ என்று பில்லை பார்க்காமல் 304 ரூபாயை கொடுத்தேன். பின்னர் பில்லை பார்த்த போது ஏற்கனவே நான்கு பைசா ரவுண்ட் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இருபத்தியைந்து பைசாவை எடுத்துக் கொள்கிறார்களே என்று சுர்ரென கோவம் வந்தது.

“என்ன சார்.. அதிகமா வாங்கியிருக்கீங்க..?”

”சேஞ்ச் இல்லை சார்..”

“நீங்க மாத்தி வச்சிருக்க வேண்டியதுதானே..?”

“நாலனாதானே சார்..”

“சார்.. உங்களுக்கு ஒரு நாலணா.. அது போல ஐம்பது பேரோட நாலணா சேர்ந்தா எவ்வளவு ஆகும் தெரியுமா..?”

சிறிது நேரம் ஏதும் பேசாமல் அமைதியாய் இருந்துவிட்டு.. “நாலணாதானே சார்.. ஒரு ரூபாயா தர்றேன் வாங்கிக்கங்க.” என்றான் ஒரு விதமான ஏளனத்தோடு. எதோ நமக்கு அவன் பிச்சை போடுவதை போல,  நான் கொஞ்சம் கூட வெட்கபடவில்லை. என்னிடமிருந்து என் பணத்தை மிகுதியாக பிடுங்க வெட்கப்படாத நீயும், உன் கம்பெனியுமிருப்பதையும் பார்க்கும் போது எனக்கெதுக்கு வெட்கம் என்று நினைத்துக் கொண்டேன்.

”தாராளமா கொடுங்க நான் வாங்கிப்பேன். ஒன்ணு நீங்க சேஞ்ச் வாங்கி வைக்கணும். அப்படியில்லைன்னா.. நீங்க ரவுண்ட் பண்ற அமெளண்ட குறைச்சு 303 ரூபாயா ரவுண்ட் பண்ணனும். உங்க காசு ஒரு ரூபா கூட விட மாட்டீங்க.. ஆனா எங்க காசுன்னா.. அது வெறும் நாலணா தானேன்னு கேட்குறீங்க?.”

அவர் ஏதும் பேசாமல் ஒரு ரூபாயை எடுத்துக் கொடுக்க, என் ஆர்டர் வருவதற்காக காத்திருந்தேன். பக்கத்தில் அவருடய ஆர்டருகாக நின்றிருந்த வயதானவர் “தம்பி.. எனக்கும் நீங்க எக்ஸ்ட்ராவா வாங்கியிருக்கீங்க..?” என்றார். அவரை பார்த்த இன்னும் சிலர்.. என்று ஒரு பத்து பேர் கூடிவிட்டார்கள். அத்துனை பேருக்கும் அவர் சில்லரை மிகுதியாக வாங்கியிருக்கிறார்.

நம்மில் பல பேருக்கு இந்த எண்ணம் இருக்கிறது. எவ்வளவோ செலவு செய்கிறோம். ஒரு நாலணா காசுக்கு போய் தகராறு செய்ய வேண்டுமா..? என்று.. இதை செய்வது தகராறு இல்லை.. உங்கள் உரிமை.. எவ்வளவோ இடங்களில் நம்மை தெரியாமல் ஏமாற்றுகிறார்கள். ஆனால் தெரிந்தே நம்மிடமிருந்து காசை எடுப்பவர்களை நாம் கண்டிக்காமல் விட்டால் அதை போல ஒரு சுரணை கெட்ட விஷயம் வேறேதுமிருப்பதாய் தெரியவில்லை.

இந்த மனோநிலைதான் நம் நாட்டை கொஞ்சம், கொஞ்சமாய் பலவீனப்படுத்தும் மனோநிலையாய் மாறி போகிறது. எதற்கும் நம் எதிர்ப்பை காட்டுவதில்லை. நமக்கெதுக்கு என்றிருப்பது, நான் ஒருத்தன்  கேட்டால் நடந்துடுமா? என்ற எண்ணங்கள். அரசியல்வாதிகள் ஊழல் செய்கிறார்கள் என்று அவர்களை குற்ற்அம் சாட்டுவது எந்தவிதத்தில் ஞாயம்?. நாம் ஒரு சிறு தவறு செய்தாலும் அதை பொது மக்கள் கேட்பார்கள் என்ற பயம் இருந்தால் தானே?. ஸோ.. நண்பர்களே.. Know Your Rights, Act Immediately….
கேபிள் சங்கர்
Post a Comment

82 comments:

Naadodigal said...

மனசிலே "எவனோ ஒருவன்" மாதவன்-ன்னு நினைப்போ..... :-)

Naadodigal said...

ஐ...மீ தி first

பிரபல பதிவர் said...

தல‌

நைட்டு வாக்கில அந்நியனா மாறி போட்டு தள்ளிடாதீங்க... புழல் சுவத்திலதான் எழுதிகிட்டு இருக்கனும்...

Cable சங்கர் said...

இல்லை என்னைப்போல எவனோ ஒருவன் மாதவன் கேரக்டரை வடிவமைச்சிருக்காங்கன்னு நினைப்பு..

சோழவர்மன் said...

அந்த நாலணாவ கேக்காமே இருந்திருக்கலாம்.

பாருங்க........இப்போ பதிவு போடுற அளவு மனஉளைச்சல் வந்தது தான் மிச்சம்.

KUTTI said...

SUPER...

MANO

Cable சங்கர் said...

எனக்கு ஏதும் மன உளைச்சல் இல்லை.. சோழவர்மன். பதிவு போட்டாவது ... சரி விடுங்க.. புரியரவங்களூக்கு புரியும்..

Unknown said...

ஐயா சோழவர்மா ஒருத்தன் உங்க காசு நூறு ரூவாய ஆட்டைய போட்டா சும்மா இருப்பீங்களா.. அது காலணா என்பது உங்களுக்கு தேவையற்றதாக இருக்கலாம் எங்களைப் பொறுத்தவரை அது கண் முன் நடக்கும் சுரண்டல்...

உங்களுக்கு எங்களை பத்தி சரியா தெரியலை...

ரமி said...

I like your attitude and i wanna be like this.

மரா said...

உங்க சின்னப்பையன விட்டு ஹோட்டல்ல ஒண்ணுக்கு விட்டுட்டு வர சொல்லவேண்டிதான?

ரமி said...

Daily, I am facing the bus conductors who are not ready give 50 paise. Is there any alternative?
Sometime i tendered exact fare. But most of time i missed.

Unknown said...

மயில் அண்ணே.. நீங்க சொல்றதை என் சின்னப் பையன் சரவணபவனில் செய்தான்...

தராசு said...

Well done Anna....

vasu balaji said...

Good

பித்தன் said...

weldone cable ji its our right but most of the time i move when i come across this type extracts becoz of the admosphere.

ponsiva said...

நல்ல பதிவு கேபிள் சார் ..
இதைப்போல் நான் நிறய இடங்களில் சண்டைபோட்டுள்ளேன்
Realince fresh, and kovai gowri shankar hotel அப்புறம் நிறைய பஸ் கண்டக்டர் என்று...
குறிப்பாக டாஸ்மாகில் குவாட்டருக்கு 2 ரூபாய் எக்ஸ்ட்ரா கேக்குறாங்க
அதும் சென்னைல மட்டும் தான் ..

அன்புடன்
பொன்.சிவா

கேரளாக்காரன் said...

பிச்சை கூட நாமளா விரும்பி தான் போடணும் நீங்க பன்ன்னுனது ரொம்ப ரொம்ப சரி

Paleo God said...

கார்பரேட் பலசரக்கு கடைகளில் 50 பைசா சில்லறைக்குப் பதிலாக சாக்லேட் தருகிறார்களே அதப்பத்தியும் எழுதனும் ஜி!!.

Anonymous said...

சரியான எதிர்வினை நண்பரே.... இதுபோல பல இடங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாமும் கண்டும் காணாமல் போவதால் அவர்கள் அட்வான்டேஜ் எடுத்துக்கொள்கின்றனர். நல்ல விழிப்புணர்வு பதிவு.

சோழவர்மன் said...

//ஐயா சோழவர்மா ஒருத்தன் உங்க காசு நூறு ரூவாய ஆட்டைய போட்டா சும்மா இருப்பீங்களா..//

அவனுடன் சண்டை போடும் நேரத்தில் என்னால் இருநூறு ரூபாய் சம்பாதிக்க முடியும் என்றால் சும்மா தான் இருப்பேன்.

சும்மா கப்பித்தனமா பேசிகிட்டு ........

சில்லறைத்தனமான பதிவு என்பது இதுதானோ ?

சோழவர்மன் said...

//எனக்கு ஏதும் மன உளைச்சல் இல்லை.. சோழவர்மன்.//

அய்யா,
சில பேர் பஸ்ல நாலணா சில்லற கொடுக்காம விட்டதுக்கு கூட கேஸ் போட்டு "மனஉளைச்சலுக்கு" ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு கேட்பார்களே, அது பத்தி நீங்க என்ன பீல் பண்ணுறீங்க ?

சோழவர்மன் said...

//சரியான எதிர்வினை நண்பரே....//

ஜால்ரா சத்தம் காதலி பிளக்குதே?

ஓ......இது தான் "எதிர்வினையா" ?

சோழவர்மன் said...

//நைட்டு வாக்கில அந்நியனா மாறி போட்டு தள்ளிடாதீங்க... புழல் சுவத்திலதான் எழுதிகிட்டு இருக்கனும்..//

அருமையான கமென்ட்.

ஜெஸ்ஸி ஹிட்லர் said...

மிஸ்டர் சோழவர்மன் இதனால்தானே அன்று மிஸ்டர் கேபிள் சங்கர் குறும்பட வாய்ப்பை நிராகரித்தார் என்பது புரிகிறதா? தன் காசைப் போட்டு உங்களுக்கு படம் எடுக்கும் நேரத்தில் வேறு எங்காவது தன் திறமையைக் காண்பிக்கலாமென்று...

--

அப்பொ 250 ரூபாய் யாராவது உங்களிடம் அடித்தால் உடனே பதிவெழுதுவீர்களா?? இல்லை எதாவது ஹோட்டலில் நீங்கள் ஒரே ஒரு காபி குடித்து 5 லட்ச ரூபாய் என்று பில் வந்தால் வீட்டை விற்று காசு கொடுத்துவிட்டு வருவீர்களா? எவ்வளவு ரூபாய் வரைக்கும் தாங்குவீர்கள் மிஸ்டர்??

Funny!! Its not the amount what he is pointing its the attitude Dude.

சோழவர்மன் said...

// எதாவது ஹோட்டலில் நீங்கள் ஒரே ஒரு காபி குடித்து 5 லட்ச ரூபாய் என்று பில் வந்தால் வீட்டை விற்று காசு கொடுத்துவிட்டு வருவீர்களா? //

மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டுக்கிட்டு.

எவ்வளவு சொன்னாலும் உங்களுக்கு புரியப்போவதில்லை.

உங்கள மாதிரி ஆளுங்க "பாட்டா"வில் கூட அஞ்சு காசு திருப்பி கொடு என்று சண்டை போடுவீர்கள்.

சோழவர்மன் said...

//குறும்பட வாய்ப்பை நிராகரித்தார்//

வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று இருக்க வேண்டும்.

விக்னேஷ்வரி said...

ரொம்ப சரி.

sri said...

Yes shankar sir,you are correct, we should not allow these kind of stealing.. be it 25P or 25Rs... i have experienced this kind of things too.. now a day they are giving choclates instead of 50p.. very bad rt?.. In US they will return even one cent back to customer..

~srikanth

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

pizza தமிழ் உணவு கிடையாது. அதை சாப்பிட்டது உங்களது தப்பு. இப்படிக்கு சிவப்பு தமிழன்...

kanavu said...

hi cable sir. firt of all congrats to you for this posting. this creates atleast a reminder how we should be.
i too remember your earlier post regarding a bank loan experince same type. we shouldnot allow others to take nmoney from our pocket.

////
//சரியான எதிர்வினை நண்பரே....//

ஜால்ரா சத்தம் காதலி பிளக்குதே?

ஓ......இது தான் "எதிர்வினையா" ? ///

ஐயா சோழவர்மன் (பேரல்லாம் நல்லாத்தான் இருக்கு), உங்கள மாதிரி எல்லாரும் பொத்திக்கிட்டு போறதாலதான், கண்டவெல்லாம் இப்படி செய்ய ஆரம்பிச்சுட்டான். நம்மால செய்ய முடியாதத வேற யாராவது செஞ்சா, அத பாராட்டுறதுதான் எங்கள போல மனிதர்களோட இயல்பு. அதுக்கு பேரு ஜால்ரா அப்படீன்னா தாராளமா நீங்க அப்படியே சொல்லலாம். உங்களுக்கு வேணும்னா அந்த சில நிமிஷங்கள்ல 200 ரூபாய் சம்பாதிக்கமுடியும். ஆனா பாருங்க ராசா, நாங்கல்லாம் நாள் முழுக்க வெயில்ல மாடு மாதிரி வேல செஞ்சாலும் 50 ரூபாய் தர்றதுக்கு மூக்கால அழுவுறானுங்களே. நாங்க என்ன செய்ய. எங்களுக்கு அஞ்சு பைசா கூட பெரிசுதாங்க எசமான்.... (நீங்க பெரிய அம்பானி ஃபேமிலியா இருப்பீங்க போல...)

VISA said...

//அவனுடன் சண்டை போடும் நேரத்தில் என்னால் இருநூறு ரூபாய் சம்பாதிக்க முடியும் என்றால் சும்மா தான் இருப்பேன். //

அய்யோ சார்... "சும்மா" இருந்தால் பிறகு எப்படி ஐநூறு ரூபாய் சம்பாதிப்பது.

எனக்கு தெரிந்து ஊருக்கு ஒரு சோழ்வரம்பன் இருந்தால் போதும். அவருடைய Rate of Earning ஏற்ப நாம் உருவிக்கொண்டே இருந்தால் அவர் திருப்பி கேட்க மாட்டார். ஏனென்றால் திருப்பி கேட்கும் நேரத்தில் தான் அவர் அதை விட சம்பாதித்துவிடுவாரே.

What a concept yar....

VISA said...

//ஓ......இது தான் "எதிர்வினையா" ?//

இது செய்வினை,

இப்படி தொடர்ந்து அனாதையாவே வர்றீங்களே ஒரு புரோபைல் கிரியேட் பண்ணி உங்க திருமுகத்த காட்டுறது......?

NARI said...

//அய்யா,
சில பேர் பஸ்ல நாலணா சில்லற கொடுக்காம விட்டதுக்கு கூட கேஸ் போட்டு "மனஉளைச்சலுக்கு" ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு கேட்பார்களே, அது பத்தி நீங்க என்ன பீல் பண்ணுறீங்க ?
//

பணத்திமிர் பிடித்த கொளுத்த பன்றிகளுக்கு ஏழைகளின் வலி தெரியவா போகிறது சொல்லுங்கள்.

முத்து said...

சோழவர்மா நீ சுய நினைவோடு தான் கமெண்ட்ஸ் போடுறியா?

NARI said...

அவர் சுயநினைவோடு போடுகிறாரோ இல்லையோ "சுய இன்பத்திற்காக " சொல்கிறார்.

தருமி said...

//இப்போ பதிவு போடுற அளவு மனஉளைச்சல் வந்தது தான்//

இது மன உளச்சல் அல்ல. பேசாமல் வந்திருந்தால் மன உளச்சல். உருப்படியாக இப்படி ஏதாவது செய்தால் அது த்ருவது மன திருப்தி.

Vediyappan M said...

உங்க பதிவையும், அதுக்கு வந்த எல்லா பின்னூட்டத்தயும் படிச்சேன். நல்ல விசயம்தான். எல்லா இடத்தலயும் நடக்கிற ஒரு அநியாயம்தாம். சண்டபோட்டு கேட்டது சரியே. என்னா இந்த அரசு மதுபானக் கடைகளிலும் இதே மாதிரி கேட்டா நல்லாருக்கும். இங்கவாவது 5 காசு 10 காசு மேட்டர் 5 ரூபா 10 ரூபவெல்லாம் சர்வ சாதாரனம். புரட்சியை கொஞ்சம் விரிவுபடுத்துங்கள்.

Lebbai said...

மிக அருமை நண்பரே

சோழவர்மன் said...

//பணத்திமிர் பிடித்த கொளுத்த பன்றிகளுக்கு ஏழைகளின் வலி தெரியவா போகிறது//

பணத்துக்கும் பன்றிக்கும் என்னய்யா சம்மந்தம்? கொஞ்சம் மாத்தி யோசிங்க.

NARI said...

சம்மந்தம் இருக்கிறது தோழரே. பன்றிகளை பார்த்திருப்பீர்கள். அது எப்போதும் தலையை குனிந்Tஹபடி சாக்கடையையோ மலத்தையோ மேய்ந்தபடியே இருக்கும்.

பணத்திமிர் பிடித்து கொளுத்துவிட்டால் மனிதனும் பன்றியை போல் மந்த புத்தியால் எல்லா அநீதியையும் தலை தாழ்த்தி ஏற்றுக்கொண்டு பணத்தால் பொங்கி எழுதும் சிற்றின்ப மலத்தை பக் பக் பக் கென்று தேடியபடி அலைவான்.

சோழவர்மன் said...

// நாங்கல்லாம் நாள் முழுக்க வெயில்ல மாடு மாதிரி வேல செஞ்சாலும் 50 ரூபாய் தர்றதுக்கு மூக்கால அழுவுறானுங்களே//

அய்யா ஜூனியர் தருமி , எந்த காலத்தில் இருக்கிறீர்கள் ?

இப்போ எல்லாம் கவர்மெண்டே கிராமத்துல சும்மா திண்ணைய தேச்சு கிட்டு இருக்குற எல்லோருக்கும் தினமும் நூறு ரூபாய் சம்பளம் தருகிறது , ஒரு வேலையும் செய்யாமல் சும்மா கம்மா கரையில் போய் மம்பட்டி வச்சு நாலு கொத்து கொத்திட்டு வந்தா போதுமாம்.

நீங்க என்னடான்னா அஞ்சுக்கும் பத்துக்கும் கணக்கு பாத்துகிட்டு ...

போங்க ...போய் உருப்படியா பொழைக்கிற வழிய பாருங்க.

Chezhian said...

Ha ha ha ... Naanga romba vevaram. We .. no cash ... only credit card... (appuram avanukku vatti azhuvuradhu vera kadhai)

Chezhian

சோழவர்மன் said...

// .. no cash ... only credit card... //

நல்ல கமென்ட்

சோழவர்மன் said...

//பணத்திமிர் பிடித்து கொளுத்துவிட்டால் மனிதனும் பன்றியை போல் மந்த புத்தியால் எல்லா அநீதியையும் தலை தாழ்த்தி ஏற்றுக்கொண்டு//

இது என்ன உங்க கண்டுபிடிப்பா ?

ஹி ஹீ ...

எல்லா ஏழைகளும் பணத்துக்கு அலையுற நாய்ங்க தான்னு என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார் (குறிப்பு : நான் சொல்லவில்லை , என் நண்பர் சொல்லுவார் . ஓகே )

Unknown said...

//எவ்வளவு சொன்னாலும் உங்களுக்கு புரியப்போவதில்லை.

உங்கள மாதிரி ஆளுங்க "பாட்டா"வில் கூட அஞ்சு காசு திருப்பி கொடு என்று சண்டை போடுவீர்கள்//

அஞ்சி பைசா ஒன்னியும் இல்லியா சேல வர்மா ?

அப்பால ஏன் அஞ்சி நிம்ஷம் உரசினதுக்கே கற்பு பூட்சுன்னு ஒப்பாரி ?னென்புக்கீதா நீ ஜோட்டால வாங்கி கட்டிகினது ?

காசுன்னா காசுதான்

அடங்கு வாத்யாரே

இதுங்க பேஸ்ரது சால்ரான்னா உனுக்கு அல்சரா? இல்லாங்காட்டி பொம்பளை நோயா ஏன் காண்டும் காஜும்

கேபிளு கத எயுதுனா செக்ஸ்னுறானுவ

ஏ சோக்கு போட்டா பொங்குதுங்க இன்னாவோ மானாட மயுலாட பேஷன் டிவிலாம் வந்துசினா டிவிய ஒட்சி போட்டுறா மேதிரி

வெமர்சனம் போட்டா அதிலயும் வவுத்தெரிசல்

தட்டி கெல்றான்னா அத்தையும் பீச்சாங்கையால சோரு துன்றா கனுக்கா பார்த்தியானா

இன்னாதான் பிரச்ன உனுக்கு ?

NARI said...

//எல்லா ஏழைகளும் பணத்துக்கு அலையுற நாய்ங்க தான்னு என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார்//

இதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

எல்லா பணக்காரர்களும் பன்றிகள் என்று என் எதிர் வீட்டு ரீட்டா சொல்கிறாள். இதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா?

Unknown said...

டேய் பிஸாத்து

நாயின்னு கூவாத அப்பால பீல் பண்ணிக்கினு அயுவ

வோனாம் மருவாதி கெட்ரும்

NARI said...

பணங்கொளுத்த பன்றியே
கொழுப்பெடுத்த குண்......

ஏழைகளை நாயென்று வர்ணித்த அழுகிய முட்டையே.
நிச்சயம் இந்த நாய்கள் கவ்வும் உன் கொட்ட.....

எண்ணங்கள் 13189034291840215795 said...

நல்ல விழிப்புணர்வு பதிவு...

தப்பை தட்டி கேட்பது ஒருவரை திருத்தவும் செய்கிற நல்ல விஷயம்...

-------------------

Blogger மயில்ராவணன் said...

உங்க சின்னப்பையன விட்டு ஹோட்டல்ல ஒண்ணுக்கு விட்டுட்டு வர சொல்லவேண்டிதான?

Blogger கே.ஆர்.பி.செந்தில் said...

மயில் அண்ணே.. நீங்க சொல்றதை என் சின்னப் பையன் சரவணபவனில் செய்தான்...

----------------

:(((((((

இத்தகைய கீழ் தரமான எண்ணங்களை தவிருங்கள்...

ஒரு தவறுக்கு மற்றொரு தவறு சரியல்ல..

மேலும் அலுவலர் தவறுக்கு உரிமையாளர் எப்படி பொறுப்பாவார்...

யோசிங்க....யோசித்து பேசுங்க....இனியாவது நட்புகளே...

NARI said...

சோழவர்மா உனக்கு பேதி வருமா
வந்தால் உடனே போய்விடு
அடக்காதே

உன் நாற்றம் பன்றித்தோட்டம் தாண்டி வீசுகிறது.

NARI said...

//யோசிங்க....யோசித்து பேசுங்க....இனியாவது நட்புகளே...//

அம்மா தாயே உன் கால கொஞ்சம் கொடு.

Cable சங்கர் said...

சோழவர்மனுக்கு எவ்வளவு மன உளைச்சல் என் மேல் இருந்தால் இப்படி தொடர்ந்து என் பதிவில் வந்து எழுதிக் கொண்டிருப்பார்..:)

Cable சங்கர் said...

//இந்த அரசு மதுபானக் கடைகளிலும் இதே மாதிரி கேட்டா நல்லாருக்கும். இங்கவாவது 5 காசு 10 காசு மேட்டர் 5 ரூபா 10 ரூபவெல்லாம் சர்வ சாதாரனம். புரட்சியை கொஞ்சம் விரிவுபடுத்துங்கள்.//

ஏற்கனவே நான் விரிவு படுத்தி நாளாகிவிட்டது.. என்னை அழைத்துப் போங்கள். உங்களுக்கு எம்.ஆர்.பியில் கிடைக்கும்.. ஏற்கனவே இதைபற்றி எழுதியாகிவிட்டது.. :)

Cable சங்கர் said...

//வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று இருக்க வேண்டும்.//

சரி காமெடி..

GEETHA ACHAL said...

உண்மை தான் ..இது பிஸ்ஸா கடைகளில் மட்டும் அல்ல...நிறைய இடத்தில் இதே கதை தான்...அதிலும் நிறைய பஸ்ஸில் தான் இது நடக்கும்...

sriram said...

இதுக்கு ரெண்டு/ மூணு தீர்வு இருக்கு கேபிள்..
ஒண்ணு க்ரெடிட் கார்ட்ல பணம் செலுத்துவது. பர்ஸில் வெயிட் அதிகமாவது எனக்குப் பிடிக்காது (காயின்கள் அதிகம் வைத்துக் கொள்வது) அதனாலேயே எல்லாத்துக்கும் கார்ட்ல பே பண்ணுவேன். இதுல இன்னும் ரெண்டு உபயோகம் இருக்கு - மாசக் கடைசியில எவ்வளவு செலவு பண்ணியிருக்கோமுன்னு தெரியும் ரெண்டாவது 1 முதல் 1.5 % வரை Cash Back கிடைக்கும்.
ரெண்டாவது தீர்வு - அரசாங்கம் வரியை 5 % அல்லது 10% என்று முழுமையான நம்பரில் வைக்கணும். 6.25%ன்னு வச்சா இப்படித்தான் இருக்கும் (இந்தத் தீர்வு முழுமையானது அல்ல, பிரச்சனையை வெகுவாகக் குறைக்கும்).
மூணாவது - Rounding off to Nearest Rupee -50 பைசாவுக்குக் கீழே இருந்தால் (Ex.303.40Rs) சில்லறையை தள்ளுபடி செய்தும் 50 பைசாவுக்கு மேலே இருந்தால் சில காசுகள் அதிகமாகவும் (Rs 304) கடைக்காரர்கள் வாங்கலாம்.
Law of Average படி இது work ஆகும்.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பாலா said...

இத்தாலிய பாஸிஸ்ட் கேபிள் ஒழிக.

Thamira said...

சம்முக விழிப்புணர்வு டாபிக் ஒண்ணுதான் மிச்சமிருந்தது. அதையும் எழுத ஆரம்பிச்சிட்டிங்களா? ஹிஹி.. நல்லா பொங்கியிருக்கீங்க.!

(அப்புறம் கதைகள் உட்பட அனைத்து பெண்டிங் பதிவுகளும் படிச்சாச்சு. இது மொத்த பின்னூட்டம், கணக்கில் வரவு வைத்துக்கொள்ளவும்)

பாலா said...

ஸ்ரீராம் த சிதம்பரம் அஸிஸ்டண்ட்!!

பாலா said...

ஆமா.. இன்னும் நம்ம நாட்டுக்கு சிதம்பரம் தானே சீஃப் மினிஸ்டர்???

sriram said...

பாலா
மிரட்டவே முடியாத படி பின்னூட்டம் போட இவ்வளவு சீக்கிரம் கத்துக்கிட்டியே??
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பாலா said...

நல்லவேளை.. இன்னைக்காவது ரிப்ளை பண்ணினீங்களே. இல்லன்னா....

பாலா said...

//பாலா
மிரட்டவே முடியாத படி பின்னூட்டம் போட இவ்வளவு சீக்கிரம் கத்துக்கிட்டியே??//

இன்னிக்கு புது வீட்டுக்கு குடி போகனும். கொஞ்சம் பிஸி!!! :) :)

க ரா said...

ஹாலிவுட் பாலா said...

- இத்தாலிய பாஸிஸ்ட் கேபிள் ஒழிக.
- ஸ்ரீராம் த சிதம்பரம் அஸிஸ்டண்ட்!!
- ஆமா.. இன்னும் நம்ம நாட்டுக்கு சிதம்பரம் தானே சீஃப் மினிஸ்டர்???

எப்படி ஹா(ஜா)லி பாலி இது. சீரியஸ் பதிவுலயும் வந்து இந்த கும்மு கும்முறீங்க.

தருமி said...

கேபிள் தன் சமீபத்திய சிங்கைப் பயணத்தில் கண்டதை ஏன் இங்கு எழுதவில்லை என்பது கொஞ்சம் ஆச்சரியம். அந்த ஆச்சரியத்தோடு ...

சிங்கை டாக்ஸிகளில் ஓட்டுனரின் பக்கத்தில் சில்லறைக்காசுகள் நிறைய. அங்கே அவர்கள் கட்டாயம் சில்லறை கொடுத்தே ஆகணும்.நாம் அதை வாங்கியே ஆகணும். இதுதான் அங்கு சட்டமாம்.(அமெரிக்காவிலும் பைசா சுத்தமாக மீதி தருவதுதான் வழக்கமாமே?!)

நம்ம வழியே தனி வழி !!!

Sukumar said...

ஒரு நாலணாதானேன்னு இவங்க நெனைச்சதுனால சாப்பாட்டு கடைங்கிற டைட்டிலோட பாசிட்டிவா வந்திருக்க வேண்டிய இந்த கடை, சோஷியல் இஸ்யூவா நெகடிவ்வா வந்திடுச்சு... இனி ஜென்ரலா எங்கு இந்த கடையை பார்த்தாலும் இதுதான் ஞாபகத்துக்கு வரும்... கோடி கோடியா கொட்டி பாசிட்டிவ்வா ஊடகங்கள்ல விளம்பரம் பண்றதை விட இப்படி மக்களோட நாலாணா காசுக்கும் மரியாதை குடுக்க கத்துக்கிட்டா தன்னால விளம்பரம் வரும்...

Kamaraj said...

இந்த விஷயத்தில் 'சரவண பவன்' தான் ஸ்டார். நாலணாவை மறந்து போனவர்கள் கூட சரவண பவன் போனால் அந்த நாணயத்தை பார்க்கலாம்.

எதற்க்கெல்லாமோ மேலை நாடுகளை ஒப்பிடும் நம் மக்கள் இது போன்ற விஷயங்களில் அவர்களின் ஒழுக்கத்தை கொஞ்சமாவது கற்றுக்கொள்ளலாம். இப்படி சொல்வது ஒரு கிளிஷே-வாக இருந்தாலும் தவிர்க்க முடியவில்லை.
சில்லறை இல்லாமலிருப்பது பெருங்குற்றம் இல்லை தான். ஆனால், சரியான சில்லறை தர இயலாமல் போனதை தெரிவிக்கும் நாகரிகமாவது இருக்க வேண்டும். எல்லோரும் நிர்வாணமாக திரியும் ஊரில் ஆடை உடுத்தியவன் பகடி செய்யப்படுவது போல இங்குள்ள சில பின்னூட்டங்களை காண முடிகிறது.

ஏமாற்றுபவனிடம் தாராள பிரபுவாக இருக்கும் பழக்கம் நம் ஊரில் மட்டும் தான் போற்றப்படுகிறது.

Unknown said...

புனைவு மாதிரி இருக்கு .. நீங்க இப்படி நடத்திருக்க மாட்டீங்கன்னு தோணுது .வீட்டில வந்து பில்லை பார்த்துட்டுட்டு தானே எழுதுனீங்க ?

Unknown said...

Shankar.. Well done..
U r my kind of man..
ithu pola ovarathura ninaikkanum.

My simple question who is cholavarman?

Please leave him . Avaru oru patharu.
Tamil nalla therinjavangalukku ithu puriyum

Mr Cholavarman, Ungalaukku pudikkala appuram enn inge varrenge.
Poyi panam sambarichi, mootaiya katti vachi vachi neenga mattum panathe thingunee.
Neela manasuna,,,

Ithukappuram eluthina nee nariduve.

I dont want come down from my level.
Ithukku nee enna vennalam reply pannu. nee oru patharu.
Shankar do keep the good work.

goma said...

இதே போல் வெவ்வேறு இடங்களில் நடக்கும் சின்னச் சின்ன மோசடிகளைநியாய உணர்வுடன் தட்டிக் கேட்கும் தைரியம் இல்லாததால்தான் லட்சக்கணக்கில் ஏமாந்து நிற்கிறோம்......

Elangovan said...
This comment has been removed by the author.
Elangovan said...

//நீங்க என்னடான்னா அஞ்சுக்கும் பத்துக்கும் கணக்கு பாத்துகிட்டு ...//
நாங்க உழைச்சு சம்பாதிச்ச காசு அது... எங்க காச நாங்கதான் கணக்கு பார்க்கணும்... சிலபேர் மாதிரி அது பலபேர் வயித்தில அடிச்சு வாங்கின லஞ்ச பணமும் இல்ல.. அதே மாதிரி அது கருப்பு பணமும் இல்ல...

சுரேகா.. said...

எது எதுக்கோ பதிவர்கள் ஒண்ணு சேருகிறோம். இந்த ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக்கிட்டு .... உள்ளப்பூர்வமா ஒரு உறுதி எடுத்துக்கிட்டு.. இனிமேல் பதிவர்கள் யாரும் மீதிச்சில்லறையையோ, இதுபோல் சுரண்டல்களையோ விடுவதில்லைன்னு செயல்பட ஆரம்பிச்சாலே..ஒரு நல்ல தொடக்கம் இருக்கும்..! இதுபோல் இன்னும் நிறைய இருக்கு!

R.Gopi said...

//sriram said...
இதுக்கு ரெண்டு/ மூணு தீர்வு இருக்கு கேபிள்..
ஒண்ணு க்ரெடிட் கார்ட்ல பணம் செலுத்துவது. பர்ஸில் வெயிட் அதிகமாவது எனக்குப் பிடிக்காது (காயின்கள் அதிகம் வைத்துக் கொள்வது) அதனாலேயே எல்லாத்துக்கும் கார்ட்ல பே பண்ணுவேன். இதுல இன்னும் ரெண்டு உபயோகம் இருக்கு - மாசக் கடைசியில எவ்வளவு செலவு பண்ணியிருக்கோமுன்னு தெரியும் ரெண்டாவது 1 முதல் 1.5 % வரை Cash Back கிடைக்கும்.
ரெண்டாவது தீர்வு - அரசாங்கம் வரியை 5 % அல்லது 10% என்று முழுமையான நம்பரில் வைக்கணும். 6.25%ன்னு வச்சா இப்படித்தான் இருக்கும் (இந்தத் தீர்வு முழுமையானது அல்ல, பிரச்சனையை வெகுவாகக் குறைக்கும்).
மூணாவது - Rounding off to Nearest Rupee -50 பைசாவுக்குக் கீழே இருந்தால் (Ex.303.40Rs) சில்லறையை தள்ளுபடி செய்தும் 50 பைசாவுக்கு மேலே இருந்தால் சில காசுகள் அதிகமாகவும் (Rs 304) கடைக்காரர்கள் வாங்கலாம்.
Law of Average படி இது work ஆகும்.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

******

ஸ்ரீராம் சொன்ன நிறைய விஷயங்கள் நல்லா இருக்கு.. இதில் நான் உடன்படுகிறேன்..

மங்களூர் சிவா said...

well done.

ஷாஜி said...

//sriram said...
இதுக்கு ரெண்டு/ மூணு தீர்வு இருக்கு கேபிள்..
ஒண்ணு க்ரெடிட் கார்ட்ல பணம் செலுத்துவது. பர்ஸில் வெயிட் அதிகமாவது எனக்குப் பிடிக்காது (காயின்கள் அதிகம் வைத்துக் கொள்வது) அதனாலேயே எல்லாத்துக்கும் கார்ட்ல பே பண்ணுவேன். இதுல இன்னும் ரெண்டு உபயோகம் இருக்கு - மாசக் கடைசியில எவ்வளவு செலவு பண்ணியிருக்கோமுன்னு தெரியும் ரெண்டாவது 1 முதல் 1.5 % வரை Cash Back கிடைக்கும்.
ரெண்டாவது தீர்வு - அரசாங்கம் வரியை 5 % அல்லது 10% என்று முழுமையான நம்பரில் வைக்கணும். 6.25%ன்னு வச்சா இப்படித்தான் இருக்கும் (இந்தத் தீர்வு முழுமையானது அல்ல, பிரச்சனையை வெகுவாகக் குறைக்கும்).
மூணாவது - Rounding off to Nearest Rupee -50 பைசாவுக்குக் கீழே இருந்தால் (Ex.303.40Rs) சில்லறையை தள்ளுபடி செய்தும் 50 பைசாவுக்கு மேலே இருந்தால் சில காசுகள் அதிகமாகவும் (Rs 304) கடைக்காரர்கள் வாங்கலாம்.
Law of Average படி இது work ஆகும்.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

me also agree with sriram.

Its need not be credit card; you can use your Debit card and most of the banks gives loyalty points for debit card. make use of it.

I usually pay by credit card if the merchant has credit card facility and my transaction is more than 200. this helps me to get some cash back and also its easy to track monthly expenses.

Me too have fighted with many shop keepers and conductors for 50 paise/ 1 rupee. They will counter argue with me saying that its my duty to tender exact cash.

Can someone explain is it true that the consumer has to tender the exact cash?

Me also agree with sriram.

//ஷாஜி said...
Can someone explain is it true that the consumer has to tender the exact cash? //
அன்பின் ஷாஜி.. அந்த மாதிரி வழக்கமோ அரசு ஆணையோ எங்கேயும் கிடையாது. It is the responsibility of the seller to arrange for the balance (The difference between amount paid and the bill amount)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ராகின் said...

நாலணாவுக்கு இது கொஞ்சம் ஓவரா தெரிஞ்சாலும்..பதிவின் அடிநாதம் ஏற்றுக் கொள்ள கூடியது...நான்,நாம், சமூகம்.. அந்த அடிப்படையில், ஏற்றுகொள்ள தக்க அணுகுமுறை..