Posts

Showing posts with the label Enthiran

எந்திரனும் சில போஸ்மார்டம் ரிப்போர்ட்டுகளூம்…

Image
எந்திரன் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தாலும் பல ரஜினி ரசிகர்களுக்கு திருப்தியின்மை இருக்கிறது. வழக்கமான ரஜினியின் பஞ்ச் டயலாக், டாஷிங் ஓப்பனிங், லாஜிக் மீறின சண்டை காட்சிகள், என்று ஒரு ரஜினி ஓப்பனிங் சீன் கூட இல்லாமல் ரஜினி படம் செரிக்காமல் இருக்கிறது தீவிர ரஜினி ரசிகர்களுக்கு என்று ஒரு பக்கம் கருத்துக்கள் எழத்தான் செய்கிறது. ஆனால் என்னை போன்ற ஒரு சினிமா ரசிகர்களுக்கும், குழந்தைகளுக்கும்  இந்த ரஜினி பிடித்திருப்பது நிஜம். என் இரண்டாவது பையன் எந்திரன் படம் பார்த்துவிட்டு சிட்டியோடு ஒன்ற ஆரம்பித்துவிட்டான். கிராபிக்ஸையெல்லாம் சந்தோஷமாய் கண்டு களித்தவன். கடைசியில் மூட் அவுட். சிட்டி தன்னை டிஸ்மேண்டல் செய்யும் காட்சியில் கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்துவிட்டான். இப்படத்தை பற்றி பலர் ஜெட்டிக்ஸ் சேனலில் வரும் கதை, கார்டூன் படம், என்றெல்லாம் கூட சொல்கிறார்கள். ஆனால் நிஜமாகவே அவர்களை கவரும் வகையில் படமெடுப்பது மிகவும் கஷ்டம். அடுத்த குற்றச்சாட்டு, படம் சயின்ஸ்பிக்‌ஷனாகவும் இல்லாமல், மசாலாத்தனமாய் இருக்கிறதென்று. நம்ம ஆளூங்களுக்கு ஒரு பார்ஷியாலிட்டி உண்டு. அது என்னவென்றால், வெள்ள...

எந்திரன் ஃபீவர்

Image
தமிழ்நாடெங்கும்.. அல்ல.. உலகமெங்கும் எந்திரன் ஜுரம் ஆரம்பித்துவிட்டது. சாதரணமாகவே ரஜினியின் படங்களுக்கு வெளிவருவதற்கு முன் ஏகப்பட்ட ஹைப் இருக்கும் அதை விட ஏகப்பட்ட ஹைப்பை சன் டிவியின் தயாரிப்பு என்பதால் மேலும் எகிறிக் கொண்டிருக்கிறது. எந்திரன் போஸ்டர் ஒட்டினால் கூட அதற்கு ஒரு நிகழ்ச்சி தயாரித்து விளம்பரப்படுத்துகிறது. இதெல்லாம் இப்படியிருக்க, சென்னை மற்றும் அதன் சப்பர்ப்ஸ் எனப்படும் செங்கல்பட்டு மாவட்ட ஏரியாக்களில் மட்டும் சுமார் என்பதுக்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. (அது என்ன செங்கல்பட்டு ஏரியா என்று கேட்பவர்களுக்கு உடனே சினிமா வியாபாரம் புத்தகம் வாங்கி படியுங்கள்.. சும்மா ஒரு விளம்பரம்தான்.. ஹி..ஹி..) சுற்றிச் சுற்றிப் பார்த்தால் ஒரு வாரத்தில் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் எல்லோரும் படம் பார்த்துவிடுவார்கள். சுமார் இருநூறு கோடியளவில் இந்தியாவிலேயே அதிக செலவு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டிருக்கும் படம் என்பதால் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மட்டுமல்ல, உலகமெங்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சன் டிவி தன் கோட்டையான தெற்கில் முக்கியமாய் ...

எந்திரன்

எந்திரன் பாடல்கள் வெளியாகிவிட்டது. எலக்ட்ரானிக் டவுன்லோட் காலத்தில் சொற்ப பணத்துக்கு ஆடியோ ரைட்ஸ் விலைக்கு போகும் நேரத்தில், சமீப காலத்தில் ஆடியோ உலகில் பெரிய விலை போன படம் இதுவாகத்தான் இருக்கும். மிக பிரம்மாண்டமாய் மலேசியாவில் வெளியிட்டார்கள். முதல் முறையாய் கலாநிதி மாறன் தன் சினிமா கம்பெனி சார்பில் கலந்து கொண்ட படம். அபீஷியலாய் பார்த்தால் இதுதான் அவர் தயாரிக்கும் முதல் படம். மற்ற படமெல்லாம் மற்றவர்கள் தயாரித்து, அதை விநியோகிக்க, மொத்தமாய் வாங்கிய படம் தான். ஆனால் முதல் படமே மிக பிரம்மாண்டமான படமாய் அமைந்திருப்பது கலாநிதியின் தைரியத்தையும், தொழில் மேல் உள்ள வெறியையும் காட்டுகிறது. பாடல்கள் கொஞ்சம், கொஞ்சமாய் சுருதி ஏற ஆரம்பித்திருக்கிறது. நிச்சயமாய் தியேட்டரில வெளியாகும் போது மூன்று பாட்டுகள் சூப்பர் ஹிட் நிலையில் இருக்கும். ரிலீசான நாளில் அரிமா,,அரிமா மட்டும் பிடித்த எனக்கு இப்போது விஜய்பிரகாஷின் குரலில் வரும் காதல் அணுக்கள் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. ஸோ.. ஆஸ் யூஷ்வல் ரஹ்மான் டாமினேட்ஸ். பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியின் விடியோவை பார்த்த போது.. அதில் ரஜினியின் பேச்சில் செம உற்சாகம். ...