Thottal Thodarum

Oct 14, 2010

எந்திரனும் சில போஸ்மார்டம் ரிப்போர்ட்டுகளூம்…

vikram - kamal_PPK எந்திரன் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தாலும் பல ரஜினி ரசிகர்களுக்கு திருப்தியின்மை இருக்கிறது. வழக்கமான ரஜினியின் பஞ்ச் டயலாக், டாஷிங் ஓப்பனிங், லாஜிக் மீறின சண்டை காட்சிகள், என்று ஒரு ரஜினி ஓப்பனிங் சீன் கூட இல்லாமல் ரஜினி படம் செரிக்காமல் இருக்கிறது தீவிர ரஜினி ரசிகர்களுக்கு என்று ஒரு பக்கம் கருத்துக்கள் எழத்தான் செய்கிறது. ஆனால் என்னை போன்ற ஒரு சினிமா ரசிகர்களுக்கும், குழந்தைகளுக்கும்  இந்த ரஜினி பிடித்திருப்பது நிஜம்.

என் இரண்டாவது பையன் எந்திரன் படம் பார்த்துவிட்டு சிட்டியோடு ஒன்ற ஆரம்பித்துவிட்டான். கிராபிக்ஸையெல்லாம் சந்தோஷமாய் கண்டு களித்தவன். கடைசியில் மூட் அவுட். சிட்டி தன்னை டிஸ்மேண்டல் செய்யும் காட்சியில் கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்துவிட்டான். இப்படத்தை பற்றி பலர் ஜெட்டிக்ஸ் சேனலில் வரும் கதை, கார்டூன் படம், என்றெல்லாம் கூட சொல்கிறார்கள். ஆனால் நிஜமாகவே அவர்களை கவரும் வகையில் படமெடுப்பது மிகவும் கஷ்டம்.

அடுத்த குற்றச்சாட்டு, படம் சயின்ஸ்பிக்‌ஷனாகவும் இல்லாமல், மசாலாத்தனமாய் இருக்கிறதென்று. நம்ம ஆளூங்களுக்கு ஒரு பார்ஷியாலிட்டி உண்டு. அது என்னவென்றால், வெள்ளைக்காரன் சூப்பர், நாம் செய்தால் அது மொக்கை. ஜேம்ஸ்பாண்ட் தன்னுடய படங்களில் இடுப்பு பெல்டிலிருந்து ஒரு டிரிக்கரை அழுத்தினால் எதிரி குண்டடித்து செத்துப்போவான் என்றால் நம்புவார்கள். மச்சான் ஜேம்ஸ்பாண்ட் இடுப்பு பெல்ட்டுல ஒரு துப்பாக்கி வச்சிருக்காண்டா.. என்பவர்கள், கமல் விக்ரமில் ஒரு லாக்கரை திறப்பதற்கு ஒரு சின்ன கைகடிகாரத்தை மினி பாம் எக்ஸ்போடராக மாற்றி வெடிக்க வைத்து திறப்பார். அதை “த..பாருடா.. இவரு கைல வாச்சுலேர்ந்து ஒரு ஆண்டனா இழுப்பாராம்.. அதை வச்சு வெடிக்க வைப்பாராம். நல்லா உடறாண்டா ரீலு “ என்பார்கள். இம்மாதிரியான உரையாடல்களுக்கு இது ஒரு உதாரணமே.. இது போல பல விஷயஙக்ள் இருக்கிறது.
 enthiran` அது போலத்தான் எந்திரனும், வெளிநாட்டு படங்களில் ஒரு ஜெனர் படங்கள் என்றால் கதை அதற்குள்ளேயே சுற்றி வரும் நம் தமிழ் படங்களை போல தலை வாழை இலை போட்டு, காதல், பாட்டு, செண்டிமெண்ட், காமெடி, செக்ஸ் என்று எல்லாவற்றையும் கலந்து கொடுக்க வேண்டிய கட்டாயமில்லை.  அந்த வகையில் பார்த்தால் எந்திரன் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நிகழ்வுதான். ஏனென்றால் தமிழ்ல் எம்.ஜி.ஆர். பிட்டு கேரக்டரில் நடித்த ஒரு பழம் பெரும் தமிழ் திரைப்படத்தில் வெளிகிரகத்திலிருந்து ப்றக்கும் தட்டிலிருந்து இறங்கும் மனிதர்களை பற்றி ஒரு படம் எடுத்தாக கேள்விபட்டதுண்டு.  பின்ன்அரும் ஆங்காங்கே ஒரு சில படங்கள் அங்கேயும் இல்லாமல், இங்கேயும் இல்லாமல் சில படங்கள் வந்திருந்தாலும், முழுவதும் சயின்ஸ்பிக்‌ஷனாக ஒரு தமிழ் படம் உலக அளவில் ஹாலிவுட் தரத்திற்கு ஒரு குவாலிட்டியான அனிமேஷன், சிஜியுடன் வந்திருப்பது பாராட்டுக்குரியது.
ரஜினிக்கும் அவருடய திரையுலக வாழ்க்கையில் இப்படம்  மைல்கல் என்றே சொல்ல வேண்டும். ரஜினி என்கிற கரிஷ்மாவை மீறி ரஜினி என்கிற நடிகனை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது இப்படம்.

எந்திரன் ஒரு Half Baked மசாலா சயின்ஸ்பிக்‌ஷன் என்பவர்களுக்கெல்லாம் ஒரு விஷயம் சொல்லிக் கொள்கிறேன். ஹாலிவுட் சயின்ஸ்பிக்‌ஷன் மசாலாக்களுக்கு இது ஒன்றும் குறைவில்லை. நிச்சயம் இப்படத்தை ஒரு முகம் தெரியாத அவ்வளவாக பிரபலமில்லாத ஒரு ஹீரோவை வைத்து ஹாலிவுட்டில் படமெடுத்து ஹிட்டடித்திருப்பார்கள். ஆனால் அதே விஷயத்தை இங்கே மக்களுக்கு கொண்டு செல்ல ஒரு கமலோ, ரஜினியோ தேவை. இது ஒரு ஆரம்பம் தான். நிச்சயம் இப்படத்தின் வெற்றி மேலும் சிறந்த சயின்ஸ் பிக்‌ஷன் படங்களை தமிழ் திரையுலகுக்கும் கொடுக்குமென்ற நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது.
எந்திரன் வியாபாரம் விரைவில்


கேபிள் சங்கர்

Post a Comment

51 comments:

எல் கே said...

shankarji, nan ninachatha appadiye solli irukeenga. kurippa antha hollywood goliwood comparison

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super article

ஜானகிராமன் said...

எல்லாம் சரிதான்ணே... ஆனா, சிட்டி ரோபோவின் தவறாக கையாளக்கூடிய வாய்ப்புள்ள, யாருக்கும் தெரியாத அதிமுக்கிய நியூரல் நெட்வொர்க்கை கூட டிஸ்மேண்டில் செய்யாமல் அப்படியே குப்பையில் கடாசும் அளவுக்கு கேணையாக வசீகரன் கேரக்டரை காட்டியிருப்பது லாஜிக்கிலும் பெரிய பொத்தல், ரஜினியின் கேரக்டரைசேஷனிலும் பெரிய பொத்தல். ஹாலிவுட்ல தப்பு பண்றாங்கன்னா, இங்கேயும் பண்ணணுமா?

சிவகுமார் said...

Super Hit.
ஒரு கமலோ, ரஜினியோ தேவை.

ரமி said...

Your point and concern is valid.

ARAN said...

நெத்தியடி பதிவு . இந்த மக்களுக்கு வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் அப்படிங்கற மனோபாவமே இன்னமும் இருக்கு.

பருப்பு (a) Phantom Mohan said...

வேறொன்னுமில்லீங்கோ

"WHITE IS RIGHT, ALWAYS RIGHT"

பருப்பு (a) Phantom Mohan said...

"WHITE IS RIGHT" மெம்பர்களுக்கு:

என்ன ஒரு பெரிய காமெடின்னா ஆண்டவன் உங்களுக்கெல்லாம் நல்லா ஆப்படிச்சு இந்தியனா உக்கார வச்சிருக்கான். நாம வெள்ளைக்காரனா பொறக்காம போயிட்டோமேன்னு வாழ்க்கை பூராம் புலம்பி, இந்த மாதிரி நொட்டையும் நொள்ளையும் சொல்லிக்கிட்டே திரிய வேண்டியது தான்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் ஜென்மம்.

thiyaa said...

நான் என்றும் கமல் ரசிகன்
ஆனால்
வில்லன் காட்சியில் ரோபோ
ரஜனி சூப்பர்

சி.பி.செந்தில்குமார் said...

ரஜினி பற்றிய பதிவில் கமல் மேட்டரை புகுத்திய விதம் டாப்.உங்கள் எந்திரன் பட விமர்சனம் கலக்கல் எனில் இது கலக்கலோ கலக்கல்

Ashok D said...

அந்த MGR படத்துல வரும் பறக்கும் தட்டு நல்லாயிருக்கும்..சின்ன வயசுல என்னை கவர்ந்த படம்... அந்த படத்தல MGR படம் ஃபுல்லாதான் வருவாரு...


எந்திரன் சிட்டி சூப்பர்... nice writing ji

BADRINATH said...

Though there are some flaws in the film, it is really a good film to see. Pandits unnecessarily creating huge hue and cry about this film which is unwarranted.

குரங்குபெடல் said...

நீங்கள் குறிப்பிடுவது எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடித்த
தமிழரசி திரைப்படம் . . . .

ரஜினி - ஐஸ்வர்யாராய் . . கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்
என கலா மாஸ்டர் சொன்னால்
எந்திரன் ஒரு சயின்ஸ் பிக்ஷன் படமே

kavi said...

நீங்க எழுதினதுலயே எனக்குப் பிடிச்சது இதுதான்....உண்மையை உண்மையா எழுதியிருக்கீங்க....

பிழைதிருத்தி said...

Ganesh.n Theatre Times (weekly)

Excellent Judgment Shankar'ji...

Even the movie didn't saturate the expectations of all segment, may lead to new fantasy trend.
Keep Comment.

Unknown said...

எம். ஜி. ஆர் நடித்த அந்த படத்தின் பெயர் 'கலையரசி' . காலச் சூழ்நிலையை கணக்கிடும்போது அப்படம் நன்றாகவே இருக்கும். உண்மையைச் சொன்னால் எம். ஜி. ஆர் , திருலோகச்சந்தர் போன்றவர்களிடம் 'இந்திரன்' போன்ற தொழில்நுட்ப வசதிகள் கிடைத்திருந்தால் அவர்கள் இன்னும் பிரமாதப்படுதியிருப்பார்கள் என்பது என் எண்ணம்.

pichaikaaran said...

சூப்பர் .. தெளிவான பார்வை...

கவிதை என்ற பெயரில் பொன்மொழி எழுதியிருப்பதை பார்த்து என் நண்பர்கள் சிரித்தார்கள்..இனிமேல் கவிதையை விட்டு விட்டு, உங்களுக்கு கைவந்த கலையான சினிமாவை பற்றி மட்டும் எழுதவும் ( .கவிதை கற்பது எப்படி , அப்படீங்கற தலைப்புல , உங்க நண்பர் பாணியில சூடான பதிலடி கொடுதுராதிங்க )

ravikumar said...

Your post is always Good & Neutral Keep it up

Unknown said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

VJR said...

நல்லதொரு நடுத்தரமானப் பார்வை. சினிமாவில உங்களுக்கு நிச்சயமான எதிர்காலம் காத்து இருக்கிறது.

சந்தேகமில்லை.

கூடியவிரைவில் மிக உன்னதமான இடத்தையடைய என்னால் முடிந்த என் பிரார்த்தனைகள்.

Prathap Kumar S. said...

//இங்கே மக்களுக்கு கொண்டு செல்ல ஒரு கமலோ, ரஜினியோ தேவை.//

இதை வழிமொழிகிறேன்.
அதற்காக ரஜீனியை ஒரு கார்ட்டுன் ரேன்சுக்கு காட்டியிருப்பது,
கிராபிக்ஸை வைத்து ஏதாவது பண்ணனும்ங்றதக்காக கொசுவை வைத்து முதல்பாதியை இழுத்தடிப்பது எல்லாம் பெரிய காமெடி.
அப்ருவல் கிடைக்காத ரோபாவை வச்சு ஊர் ஊராக சுற்றுவது, வண்டி ஓட்டவைப்பது
இதெல்லாம் தப்புன்னு ஒரு விஞ்ஞானிக்கு தெரியாதா?

குழந்தைகளுக்குத்தான் இந்த லாஜீக் தெரியாது...அப்ப இது குழந்தைகள் படம்தானே...

KANA VARO said...

good Post..

'பரிவை' சே.குமார் said...

கலக்கலோ கலக்கல்

http://rkguru.blogspot.com/ said...

பதிவில் உருபடாத தகவல்தான் அதிகம் இருக்கிறது....அதில் ரஜினியும் ஒன்று....இப்பதிவை எழுத தூண்டிய உங்கள் எண்ணங்களும் ஒன்று....

ரொம்ப வருமையில் வாழுகின்ற நடிகர் படம் 'எந்திரன்' இப்படம் நல்லா ஓடவேண்டும் என்று இவர் ரசிகர்கள் கோவில் 1000 படிக்கட்டு மேலே முட்டிபோட்டே நடந்தார்கலாம்....தந்தை பெரியார் கண்ட, காணும் தமிழ் நாடு எங்கே போகிறது. கோவில் படிக்கட்டு மேலேயா...?

சினிமா, இது ஒரு பொழுதுபோக்கு எனபது போய் பலபேருடையா வாழும் கனவாகவே மாறிவிட்டது....ஒரு 80 வருஷம் முன்னே ஊர் , ஊர்ராய் திரிந்து நாடகம் நடத்தி ஏதோ சொற்ப வருமானத்தில் வாழ்ந்த கூத்தாடிகள். இன்று இருந்த இடத்தில் ஆடி பார்பவர்களை கூத்தாடியாக்குகிறான், பின் முட்டாலாக்குகிறான். நாட்டின் ஆட்சி, அதிகாரம் எல்லாம் மறைமுகமாக கூத்தாடி கைகளுக்கே போய்விட்டது.

கொள்ளை அடித்து கோடி கோடியாய் சம்பாதித்த கொள்ளை கூட்டம் நம்மை வரிசையாய் படுககவைத்து நம்மீதே ஏறி நம்மேலேயே காரி உமிழ்கிறது ....உமிழ்ந்த எச்சிலை நக்கி பார்த்து உங்களுக்கு இதுபோல பதிவு எழுத தூண்டியது போல....

நீங்க எழுதிய பதிவுலையே இதுதான் மகா மட்டமான பதிவு.......

Unknown said...

முதலில் ரஜனியை கொஞ்சம் தாழ்த்திப் பேசி, பின்னர் அப்படியே மெல்ல மெல்ல டாப்பிற்குகொண்டுபோய் உள்ளார், இக் கட்டுரையின் எழுத்தாளர். ஆங்கிலப் படங்களை நாம் பார்க்கிறோம் நம்புகிறோம் ஏன் தெரியுமா அது தத்துரூபமாக எடுக்கப்படுவதால், மசாலா கலவை இல்லாததால், ஆனால் தமிழ் படங்களில் அப்படி இல்லையே. விஞ்ஞானபூர்வமாக எடுத்தாலும் அதிலும் மசாலாவைக் கலந்து சுதப்பி விடுகிறார்களே என்ன செய்வது. ஒரு கட்டத்தில் தன்னை உருவாக்கிய கடவுள் என்று கூறும் சிட்டி, பின்னர் அவரை கத்தியால் குத்தவும் பார்கிறது அதுவும் வேறு ஒருவரின் கட்டளையக் கேட்டு, இதுபோல இப் படத்தில் பல பிழைகள் இருக்கு. தத்துரூபமாக இல்லை, ஒரு நேர்த்தி இல்லை. ஆனால் ஆங்கிலப்படத்தில் அப்படியில்லை.

எனக்கு நினைவு இருக்கிறது. கமலின் படமான நாயகன், ஆஸ்கார் விருத்துக்காக அனுப்பப்பட்டது அப்போது, அதற்கு ஓஸ்கார் விருது கிடைத்திருக்கும் !ஆனால் படத்தில் சிறிய தவறு, நாயகன் இறந்த காட்சியில் வரும் ஒரு பொலிஸ் அதிகாரி, இறந்த நபருக்கு முன்னர் தனது தொப்பியக் களட்டவேனும் என்ற அடிப்படை, நிகழ்வு இல்லாமல் படம் எடுத்திருக்கிறார் என்று சொல்லி ஆஸ்கார் விருதை கொடுக்கவில்லை

ஸ்ரீஹரி said...

கேபிள் சங்கர் அண்ணா , அருமையான பதிவு ...

திரு நாஞ்சில் பிரதாப் அவர்களுக்கு ,

நீங்க என்ன படம் பார்க்க வந்தீங்களா ? ( தியட்டரில் பார்த்து இருக்க மாட்ட !!!! ) இல்ல ரோபோவை ஆராய்ச்சி பண்ண போறீங்களா? beta version பத்தி உங்களுக்கு தெரியுமா? ரோபோவை லேப் ல வச்சி ஒரு மூணு மணி நேரம் படம் பண்ண, உங்க ஆள் ( யாருன்னு உங்களுக்கு புரிஞ்சா சரி !) மட்டும் முடியும்.

உங்களுக்கு படம் புடிச்சா flop தான். ( உதாரணம் பல.. சொல்லவா? )

குழந்தைகளுக்கு படம் புடிச்சா சூப்பர் ஹிட் (robot collection தெரியுமா? )

Radhakrishnan said...

பிற்பகுதி சொதப்பல் தான் கேபிள்ஜி. அப்படி இப்படி என சாக்கு போக்கு சொன்னாலும் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என எண்ணம் வருகிறது.

ஆங்கில படங்கள் பற்றி பேச வேண்டாம். தமிழ் படம் பற்றி சொல்லுங்கள். யார் அறிவியல் கதை படைப்புகளை கொண்டு வர வேண்டாம் என சொன்னது.

குறைந்த செலவில் நிறைய அறிவியல் விசயங்களை படத்தில் சொல்லலாம். தமிழ் மக்கள் இப்படித்தான் என ஒரு வட்டத்துக்குள் சிக்கி கொண்ட தமிழ் திரை உலகத்தை கண்டிப்பது யார்?

பார்க்கலாம் எத்தனை அறிவியல் சார்ந்த கதைகள் வருகிறது என!

ம.தி.சுதா said...

என்னைப் பொறுத்த வரை எந்திரன் தமிழ் நாட்டு சுப்பர் ஸ்டார் படமில்லை... இவன் இந்தியாவுக்கே ரஜனியை சுப்பர்ஸ்ரார் ஆக்கியவன் முடிந்தால் யாராவது அதில் சொல்லப்பட்ட மருத்தவம். சட்டம் போன்ற விடயங்களில் தவறு காட்டுங்கள் பார்ப்போம்...

Anand said...

Superp Article. Very Eagerly waiting for the another article for the "Endhiran" collection

Prathap Kumar S. said...

//(robot collection தெரியுமா? ) //

வரிசைலப்போய் நில்லுங்க கலாநிதிமாறன் கலெக்ஷன்ல பாதியை எழுதி தருவாரு

Prathap Kumar S. said...

//Shankar Fucked Rajini..//

:)))

செந்தில்ஜீ நீங்க 'ஷ'ங்கரை பத்திதானே பேசறீங்க...:))

Anonymous said...

First you have to think, is this worthy film or not? Most of the people not like at end of film who sequentially watching english films.

Actually in tamil viewers are watching tamil dubbed movies more.. so you cant say this movie likes but can say HIT this movie based on SUN GROUP marketing.


And one more to say dont compare Vikram Vs Robot.

Vitalacharya's movies better than ROBOT. He did some logics.......

Anonymous said...

here dont know the actual production cost and selling cost for the film?
Then how did say this film collect more than expected.

It's not only ROBOT it entire tamil, telugu films......

access said...

thaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaank uuuuuuuuuuuuuuuuuuuu
கருட புராணம் மற்றும் ரோபோ ராமாயணம் இதிகாச மோசடி இப்போ சுஜாதா இல்லை அடுத்த படம் சங்கர் எப்படி செய்வார்,பார்க்கலாம் ,இறக்கம் இல்ல மனிதன் அரக்கன் ,அந்த அரக்கனை உருvவாகிய வசிகீரனும் அரக்கன் தான் மனிதன் இல்லை ,வசீகரன் தன காதலியை எந்திரனுக்கு விட்டு கொடுத்து இருக்கலாம் அல்லது இரும்பில் இதையம் முளைத்த எந்திரன் தன்னை படைத்த கடவுளுக்காக விட்டு கொடுத்து இருக்கலாம்

வசீகரன் இரக்கம் இல்லாதவன் என்பதற்கு சாட்சி

கிளைமேக்ஸ் கோர்ட் சீன் - ஒரு 1000 போலீசாரைக் கொன்ற இயந்திரன், தான் ஒரு இயந்திரம் அதனால் தன்னை தண்டிக்க முடியாது என்று வாதாடும் போது, சயின்டிஸ்ட் ரஜினி புன்முறுவல் செய்கிறார். சமூக நலன் மிகுந்த ஒரு சயின்டிஸ்ட் 1000 மக்களைக் கொன்ற வருத்தம் இல்லாமல் எப்படி அந்தமாதிரி ஒரு ரியாக்‌ஷன் தரமுடியும் ?. எடிட்டர் எப்படி விட்டார் ?.

எல்லா கலைகளும் தெரிந்தவன் எல்லா பாஷைகளும் தெரிந்தவன்
இந்த எந்திரன் என்ற வெறும் ஆணவம் மட்டும் மிஞ்சியது
ஒரு தியாகம் இல்லை விட்டு கொடுத்தல் இல்லை இரக்கம் இல்லை
இதயம் முளைத்ததாக கட்டு கதை சிந்திக்க தெரிந்ததாக கட்டு கதை

மனிதனாக அடிபடையில் தேவை இரக்கம் அது கூட வசீகரன் சொல்லி தரவில்லை தெரிந்தால் தானே சொல்லி தருவார் , இயந்திர அரக்கனை பார்க்க எல்லா மனித அரக்கர்களும் படை எடுப்பு வெள்ளி திரை நோக்கி வேறு என்னத்தை சொல்ல
வசீகரன் ஆராய்ச்சியே மூழ்கி இருபதால் எந்திரன் கள்ள காதல் வைத்து
இருக்கலாம் சனா கூட ,இந்த மெகா சீரியல் உலகத்தில் மேலும் பல லட்சம் கோடிகள்
சம்பாரித்து கொடுத்து இருப்பான் இந்த எந்திரன்
அன்பே சிவம் rocks

எந்திரன் sucks

sorry compassion is dead
passion rocks
all passionate arrakargal endorse enthiran in big way

யாருமே கமலை நெருங்க முடியாது அன்பே சிவம் என்று சொன்னதை சுஜாதா ஆகட்டும் சங்கர் ஆகட்டும் ரஜினி ஆகட்டும்
வெறும் மசாலா மாமனார்கள்
அரக்கனை காட்டி கல்லா கட்டுபவர்கள்

ஒரு நல்ல மனிதன் மற்றும் எந்திர உறவை சித்தரிக்காமல் வெறும் அரக்க குணத்தை
மட்டும் காட்டி மக்களை முட்டாளாக்கி பல கோடிகள் சம்பாரித்து தான் மிச்சம்

Unknown said...

//செந்தில்ஜீ நீங்க 'ஷ'ங்கரை பத்திதானே பேசறீங்க...:))//


ஆமாம் நாஞ்சில் சார் ...

raja said...

நாயகன்ல ஒரு வசனம் .. எவ்வளவு வாங்கீனிங்க..? என்று கமல் விஜயனிடம் கேட்பார் எனக்கு அப்படித்தான் கேட்கத்தோன்றுகிறது, உங்களிடம் கலாநிதி மாறனிடம் எவ்வளவு வாங்கினீங்க.. ?இப்படி முட்டுக்கொடுத்து எழுத.. ஏங்க களவாணி படத்துல உங்களுக்கு ஆயிரம் சொட்டை தெரியுது..(விமர்சனம்)எந்திரன் படத்துல வாழ்க்கைய பாத்தூட்டிங்க.. நல்ல இருக்கு ஸார் உங்க நியாயம். குட்பை.

ஸ்ரீஹரி said...

//(robot collection தெரியுமா? ) //

//வரிசைலப்போய் நில்லுங்க கலாநிதிமாறன் கலெக்ஷன்ல பாதியை எழுதி தருவாரு//

நீங்கள் சொன்னால் சரி தான் ..இங்க வரிசைல நிக்கணும் .... ஆனால் அங்கே எங்க நிக்கணும் கோயில் வாசலிலா??? (PRODUCERS ex: Kali Puli)... உலக நாயகனே !!!!!!

Thi said...

எந்திரன் - சில கவனச்சிதறல்கள்...

ஷங்கர்ஜி..Yesterday night i got a chance to watch Enthiran(4th time in theater) with my roommate mathew.. this time i watched the film very closely.. by that time i noticed some small mistakes/carelessness/editing.. அவற்றுள் சில:
1. Metro train stunt: சிட்டிக்கு battery low வந்து, அப்புறம் திரும்ப recharge பண்ணி, ஓடி வருவாரு.. அப்போ opposite -ல ஒரு train வரும்.. அது மேலையும் ஏறி round அடிச்சு ஓடுவாரு..அப்போ பார்தீங்கனா, aish இருக்கும் metro ஒரே ஒரு shot -ல மட்டும் Rose கலர்-ல வரும்..
2. Chitti chasing: நம்ம சிட்டி சனாவ கடத்தி கார்-ல(TN09 BB 11) கூட்டிகிட்டு போகும் போது, chasing -ஓட starting -ல ஒரு accident(அட ரெண்டு காரும் dishum-dishum) ஆகும்.. அப்போ காரோட நம்பர் plate ரெண்டா உடஞ்சி பாதி மட்டும் இருக்கும்.. next shot -ல இருந்து நம்பர் plate, as usual fresh-a இருக்கும்..
3. Chitti song: பூம் பூம் ரோபோ song -ல, வளைகாப்பு function -ல நம்ம சிட்டி சமையல் பண்ணி முடிச்சதும் ஒரு Red கலர் குடைமிளகாய்-a போட்டு finish பண்ணுவாரு..next shot -ல அது kitchen -ல, எங்கையுமே இருக்காது..

பின்/முன் குறிப்பு: இந்த கருத்துக்கள் யாவும் என்னுடைய பார்வையில் மட்டுமே..

இராயர் said...

ஹலோ
இங்க ஏங்க எங்க தலைவர இழுக்கிறிங்க
அது பிளாக் அண்ட் ஒய்ட் படமா இருந்தாலும் நல்ல தான் இருக்கும்

அதூஉ

உமர் | Umar said...

//எந்திரன் ஒரு Half Baked மசாலா சயின்ஸ்பிக்‌ஷன் என்பவர்களுக்கெல்லாம் ஒரு விஷயம் சொல்லிக் கொள்கிறேன்//

ரோபோக்களை வைத்து எடுக்கப்படும் அல்லது புனையப்படும் Sci-Fi களுக்கென்று சில விதிகளும் இருக்கின்றன என்று சொல்லிக் கொள்கின்றேன். எந்திரன் கதை அந்த விதிகளுக்கு உட்பட்டதா என்று ஆராயுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

சுரேகா.. said...

ஜி! இன்னுமா.... எந்திரன்...??? வுட்ருங்க!! பஞ்சாயத்து பெரிசாகுது!! :))

கதிர்கா said...

தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்

Unknown said...

End of the day

it breaks all the record.

it makes Khans and batchans re-shoot their new movies, it shakes the bollywood.

it is the only movie received well all over india in recent time.

be proud for it being a tamil movie.

if anyone still finding fault rather than enjoying - u looser

தமிழ் திரு said...

படம் மீதான எதிர்ப்புக்கு பணம் சென்று சேருமிடம்தான்(ரஜினி , சன் ) காரணமாக சொல்கிறார்கள் ... !!!
மற்றபடி உங்கள் பார்வை படி வரவேற்க வேண்டிய படம்தான் .

Unknown said...

enthiran sucks - quite funny team made funny movie ...not that interesting

sasibanuu said...

Attagasam... simple and Clean post!

Unknown said...

In 70s,80s the comments against club dance. But the producers(financiars)used to say the picture has to cover the people all stages(platforms).the comments above are all talking about city citizens.But the fact is any movie has to cover the entire society of the people.That has been done here.Picture is ok.your comments are VERY TRUE.There is nothing against the society.It is not harm to anybody.forget about the arrows.that is all ba(u)seless.

MANO நாஞ்சில் மனோ said...

கேபிள் சங்கர், நீங்க படம் நல்லாயிருக்குன்னு சொல்றீங்களா? இல்லைன்னு சொல்றீங்களா?

திரு ஸ்ரீஹரி அவர்களுக்கு,
உங்க கமெண்ட்சுக்கு நாஞ்சில் பிரதாப்பின் பதில் சூ......ப்.......ப........ர்

Unknown said...

ஹாஹஹா இந்த பதிவுக்கு தான் அதிக ஓட்டுகள் மொத்தம் 46 ஓட்டுகள்.. கொத்து பரோட்டா விட அதிகம்
Enthiran Rocks in BlogSpot also!!

ரஜினியை வசைபாடி புகழ் தேடும் உலகில் இந்த பதிவு உலகமும் ஒன்று..

புருனோ Bruno said...

//ரஜினிக்கும் அவருடய திரையுலக வாழ்க்கையில் இப்படம் மைல்கல் என்றே சொல்ல வேண்டும். ரஜினி என்கிற கரிஷ்மாவை மீறி ரஜினி என்கிற நடிகனை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது இப்படம்.//

உண்மை சார்

நான் நினைத்ததும் இது தான்


நடிகர் ரஜினிக்கு சுமார் இருபது வருடம் கழித்து நடிக்க வாய்ப்பு கிடைத்த படம்

வசீகரன்
சிட்டி
உணர்வுகளுடன் சிட்டி
வில்லன் சிட்டி

என்று நான்கு வித கதாபாத்திரங்களையும் வெகு எளிதாக கையாண்டிருப்பார்

ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வேறு நடை, வேறு முகபாவம், வேறு வசன உச்சரிப்பு !!

கவனித்து பார்த்தால், புரியும் !!

jbarani said...

1. When a Robo can be destroyed using an axe why so much trouble in eliminating the robo?
2. When a scientist is very much reluctant to reveal the neural secrets to his professor how come he throw away the robo just like that in a dust bin.
3. How come the scientist escapes the scanner?