Thottal Thodarum

Oct 23, 2010

சாப்பாட்டுக்கடை

சாப்பாட்டுக்கடை எழுதி ரொம்ப நாளாச்சுன்னு நிறைய பேர் கேட்டுக்கிட்டேயிருந்தாங்க.. கடந்த மூணு மாச காலமா ஷூட்டிங் சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருப்பதால் வெளியில் சாப்பிடுவதற்கான வாய்ப்பேயில்லாமல் போய்விட்டது. ஷூட்டிங் சாப்பாடு வெளியிலிருந்து பார்பவர்களுக்கு கன ஜோராய் பெரிய ஆச்சர்யமாய் இருக்கும் தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டால். நாம் சாப்பிடும் அளவு குறைந்து ஒரு மந்த நிலையை உருவாக்கிவிடும். சரி அதை விடுங்கள் அதை பற்றி ஒரு தனி பதிவே எழுதலாம் அவ்வளவு விஷயம் இருக்கிறது.
br br1
br3 br4
சென்னையில் நார்த் உஸ்மான்ரோடில் ஜீதமிழ் டிவிக்கு எதிரே உள்ள சோமசுந்தரம் பார்க் அருகில் பார்பக்யூ நேஷன் என்ற ஒரு உணவகம் உள்ளது. பெயர் மட்டுமல்ல உள்ளே அவர்களது சர்வீஸும் வித்யாசமாய் இருந்த்து. நமது டேபிளின் நடுவே ஒரு பெரிய ஓட்டை இருக்கும் நீங்கள் உட்கார்ந்தவுடன் அதில் ஒரு கரி அடுப்பு க்ரில்லோடு நமது டேபிளின் நடுவே உட்கார, அதில் இரும்பு கம்பியில் சொருகப்பட்ட, சிக்கன், மட்டன், மற்றும் வெஜ் அயிட்டஙக்ள் எல்லாவற்றையும் , குமுட்டி அடுப்பின் மேல் தனலில் வைக்க, அதன் மேல் ஊற்றுவதற்காகான சாஸேஜுகள் எல்லாம் நாமே அதன் மேல் தடவி மேலும் அதற்கு சுவைகூட்ட, ஒரு பதத்தில் எடுத்து வாயில் வைத்தால், ம் ஹா…. அருமை. இது வெறும் ஸ்டார்டர்கள் மட்டுமே.. இதை முழுசாய் சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும்.

இது தவிர புல் பஃபே வேறு. சகல விதமான அயிட்டங்களோடு. இத்துடன் வெல்கம் ட்ரிங்காய் குட்டி பீர் முதல் எல்லாவிதமான் ட்ரிங்களும் தரப்படுகிறது. ஒரு முறை. வார நாட்களில் பகலில் லஞ்சுக்கு இரண்டு பேகேஜுகளில் உணவு கிடைக்கிறது, 300 ரூபாய்க்கு ஒரு பேக்கேஜும், 450 ரூபாய்க்கு ஒரு பேக்கேஜும். சார்ஜ் செய்கிறார்கள். ஆனால் இரவு உணவிலும், வார இறுதி நாட்களிலும் எந்த விதமான் பேக்கேஜ்கள் கிடையாது. 575 ஆகும். நிச்சயம் அவர்களின் பர்பக்க்யூ சுவை உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இவர்கள் கெஸ்ட் டேபிளில் ஒரு சின்ன கொடி ஒன்றை வைத்திருக்கிறார்கள். அந்த கொடியை ஏற்றி வைத்திருந்தால் அவர்கள் நீங்கள் கேட்காமலேயே ஸ்டார்டர்களை சர்வ் செய்து கொண்டிருப்பார்கள். எப்போது நீங்கள் அந்த கொடியை மடக்கி வைக்கிறீர்களோ.. அப்போது உங்களுக்கான ஸ்டாட்ட்ர்கள் சர்வீஸ் முடிந்துவிடும்.
  • Shri Devi Park Hotel, Near Soma Sunder Ground, 1, Hanumantha Street, T.Nagar, Chennai
  • Landmark: Behind Prashant Real Gold Tower
  • Phone: 42694481, 42694482

கேபிள் சங்கர்

Post a Comment

25 comments:

Giri Ramasubramanian said...

சூப்பர்....

Anonymous said...

//சரி அதை விடுங்கள் அதை பற்றி ஒரு தனி பதிவே எழுதலாம் அவ்வளவு விஷயம் இருக்கிறது.
//
சினிமா வியாபாரம் அடுத்த பதிப்பு நூலில் இந்த விஷயங்களையும் சேர்த்து அப்கிரேட் செய்யப்படுமா?

இன்னுமொரு முறை விளம்பரத்துக்கு ஏற்பாடு செஞ்சாச்சு....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

shhh

R. Gopi said...

நான் எழுதலாம்னு இருந்தேன். பெங்களூரிலும் பார்பிக்யு நேஷன் உண்டு.

முரளிகண்ணன் said...

கொடி மேட்டர் நல்ல ஐடியா

சசிகுமார் said...

thanks

VISA said...

இந்த வாரம் அங்கு சென்றிருந்தோம். உணவும் சர்வீசும் அருமை

ARAN said...

"எந்திரன் வியாபாரம் விரைவில்"
ஷங்கர்ஜி
இதுதான் விரைவில் அர்த்தமா எப்போ சொல்வீங்க எந்திரன் வியாபாரம் உங்களிடம் எதிர் நோக்கியுள்ளேன்.

துளசி கோபால் said...

நாங்களும் ஒருமுறை போனோம். கொடியைப் பார்த்த நினைவு இல்லையே!

Pradeep said...

Enthiranukkum enthirikum enbathae endhiranin kathai..

Unknown said...

Agree with you Cable...I have been to their Bangalore branch...the ambience and food was really awesome...

Praveenkumar said...

அசத்துங்க.. பாஸ்..!!

RaveePandian said...

U missed the unlimited beer. Its free.

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

பசிக்கும் போது தெரியாமல் படித்து விட்டேன். அருமை !

Prasanna Rajan said...

இது ஏற்கனவே எழுதுனது தானே? ரீசைக்ளிங்கா??!! நடக்கட்டும்...

Philosophy Prabhakaran said...

வித்தியாசமாகவே இருந்தது... ஆனால் பர்ஸ் பல்லைக் காட்டிவிடும் போல இருக்கே...

Athiban said...

நல்ல பதிவு.

http://senthilathiban.blogspot.com
http://tn-tourguide.blogspot.com

Unknown said...

சொல்லாம போய்ட்டீங்களே பாஸ்?

நானும் ரொம்ப நாளா போகனும்னு நெனச்சுகிட்டே இருக்கேன்...

நாம எண்ணையில் பொறிச்சு சாப்பிடுறத விட, இது இதயத்துக்கு இதமானது! என்ன ஒன்னு, சரியா வேக வச்சு கருக்கிப்புடாம சாப்புடணும்.

இதே மாதிரி, சிங்கப்பூர்ல. நம்ம டேபிள் நடுவுல ஒரு ஓட்டை, அதில் ஒரு பாத்திரத்தில் நீர் கொதிச்சுகிட்டு இருக்கும். (கீழே ஒரு மினி காஸ் சிலிண்டர்). எல்லா உயிரனங்கள், நூடுல்ஸ், காய்கறிகள் 'ராவா' குடுத்துடுவாங்க. நம்ம விருப்பத்துக்குத் தக்க வேக வச்சு சாப்பிடலாம். தொட்டுக்க, நெறையா குடுப்பாங்க! அருமையா இருக்கும்... இதுக்கு பேரு 'ஸ்டீம் போட்' :)

நந்தாகுமாரன் said...

In bangalore you also get a music band who perform great songs for you live and you get a free drink too :) Barbeque Nation offers really great food and service ...

MANO நாஞ்சில் மனோ said...

பஹ்ரைன்ல அதை திக்கா என்று அழைப்போம், இது ஒரு அரேபியன் சாப்பாடு.

Cable சங்கர் said...

@ஸஸரிரி கிரி
நன்றி

@தமிழினியன்
சேர்த்துட்டா போச்சு

@ரமேஷ்
என்ன?

@கோபி ராமமூர்த்தி
அஹா வடை போச்சா

@முரளிகண்ணன்
:)

@விசா
யோவ்.. கூப்பிட்டியா நீ?

@ஆரன்
விரைவில்

@துளசி கோபால்
இதுக்கெல்லாம் என்னை போல விஷயம் தெரிஞ்சவஙக்ளை கூப்பிட்டிருக்கணும். அட நீங்க வேற நான் ஏதோ ஷோவுக்காக வச்சிருக்கானுங்கன்னு ஏத்தி இறக்கிட்டு இருந்தேன் அப்போ.. பக்கத்து டேபிள் ஆள் சொன்னதுக்குஅப்புறம்தான் தெரிஞ்சிச்சு

Cable சங்கர் said...

@செந்தில்
எதுக்கு?

@பிரதீப்
ஏன் இந்த கொலை வெறி பிரதீப். அதுவும் இந்த பதிவுல?

@ராஜா
நன்றி

@பிரவீன் குமார்
ம்..
@ரவீ பாண்டியன்
அன்லிமிட்டட் இல்லை ஒரு குட்டி பீர் மட்டும்தான்.

Cable சங்கர் said...

@கனாக்காதலன்
அப்புற்ம் என்ன போய் ஒரு வெட்டு வெட்டுங்க

@பிரசன்ன ராஜன்
அட.. உடனே கண்டுபிடிச்சிர்ராங்கப்பா..?

2பிலாசபி பிரபாகரன்
சில நல்ல விஷயங்களுக்கு பர்ஸ் பல் இளிக்கத்தான் செய்யும்

@தமிழ்மகன்
ஓக்கே.. பப்ளிக்குட்டி

@தஞ்சாவூரான்
நான் அந்த விஷயத்தை அப்புறம் சொல்றேன். யாராச்சும் கூட்டிட்டு போய் தான் சாப்புடணும்.. பர்ஸ் தாங்காது தனியா போனா..:))

@நந்தா
ஒரு வாட்டி பெங்களூர்லச்சே பெண்களூர்ல போய் பார்த்துடுவோம்

2நாஞ்சில் மனோ
அங்க எப்ப என்னை கூட்டிட்டு போவீங்க?:))

Thamira said...

ஒரு நாள் சொல்லுங்க கேபிள். கூட்டமாப் போயி கொடியேத்திடுவோம்.

இளையராஜா said...

next time attach google maps to find the location.....