விருதகிரி
கடைசியாய் நானும் பார்த்துவிட்டேன். மணிஜி பார்த்துவிட்டு நல்லாத்தான் இருக்கு கேபிள் என்று ரெகமண்ட் வேறு செய்துவிட்டார். அதனால் நானும் பார்த்துவிட்டேன். விஜயகாந்த முதல் முதலாய் இயக்கும் படம். அதற்காக அவரது இரண்டு கைகளையும் அகல விரித்து வைத்து போஸ் கூட கொடுத்திருப்பதினால் அதை நம்பித்தான் ஆகவேண்டும். இணையத்தில் உள்ளவர்களுக்கு வேண்டுமானால் இது அதிலிருந்து எடுத்தது, இதிலிருந்து எடுத்தது என்று சொல்லி டேக்கன் படத்தை சொல்லலாம். ஆனால் விஜயகாந்த் படம் பார்க்க வருபவர்களுக்கு அதெல்லாம் முக்கியமில்லை என்பது அண்ணா தியேட்டரில் கூடியிருந்த ஆல்மோஸ்ட் ஹவுஸ்புல் கூட்டத்தை பார்த்தால் தெரிந்தது. வழக்கமான விஜயகாந்த படமாகத்தான் ஆரம்பிக்கிறது. கூடுதலாக ரெண்டு லைனுக்கு ஒரு முறை பஞ்ச் டயலாக் பேசி, ஆளும் கட்சியை விமர்சித்து, டைட் க்ளோசப்பில் சிவந்த கண்களுடன் பேசுகிறார். அதையெல்லாம் மீறி வில்லன்கள் கூட சண்டை போடுவதற்கு முன் ஒரு அரை மணி நேரம் நிறுத்தி நிதானமாக விஜயகாந்த்தின் அரசியல் பார்வையை பற்றியும், அவரது கொள்கைகளை பற்றி அவரை பேச வைத்துவிட்டுத்தான் சாகிறார்கள் என்பது போன்ற ஒரு சில இடர்பாடுகளை தவிர, இண்ட்...