சா…பூ… த்ரீ…- திரை விமர்சனம்
காதல் திருமணம் செய்து, இருவருக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டு அதனால் வெறுமையின் உச்சத்தில் இருக்கும் தம்பதிகள், ஒரு பெண்ணை காதலிப்பதுதான் முக்கிய விஷயமாய் நினைத்து அலைந்து, தனக்கு எது வேண்டும், அல்லது வேண்டாம் என்று முடிவெடுக்க முடியாத ஒரு இளைஞன், பிகர்களைவிட ஆண்டிகளிடம் மனதை பறிகொடுக்கும், காலேஜ் பையன் பால் இப்படி ஒரே காலனியில் வேறு வேறு ப்ளாட்டுகளில் வசிக்கும் மூவரை பற்றிய படம். படத்தில் இண்ட்ரஸ்டாய் சொல்ல முயற்சி செய்து வெற்றி பெற்ற கேரக்டர், பால் எனும் பழனியப்பன் என்கிற ஆண்டிகளை சைட் அடிக்கும் கேரக்டர். நல்லா ரீச் ஆகியிருக்கு. மிக இயல்பான நடித்திருக்கிறார். ரியாக்ஷன்களை உடனக்குடன் கொடுத்து சிரிப்பை வரவழைக்கிறார். அதே போல் பிரஜன் ஜோடிக்கான பிரச்சனை. இருவ்ருக்குமிடையே ஆன வெறுமையை இன்னும் நன்றாக சொல்லியிருக்கலாம். ரொம்பவும் ஆங்கில பட தாக்கத்தினால் பட்டும் படாமல் காட்சியமைத்திருந்ததால் பெரிதாய் பாதிப்பு ஏற்படுத்த தவறிவிட்டார். இயக்குனர். பிண்ண்னி பாடகி உஜ்ஜெயினி பால் காதலிக்கும் ஆண்டியாய் வருகிறார். நல்லா…… இருக்கிறார். படத்தின் முக்கிய கதையான கதாநாயகனின் காதல் கதை ரொம்ப குழப...