Posts

Showing posts with the label டோல்

கொத்து பரோட்டா -15/04/13

Image
சென்னையில் புறநகர் எனறு இன்று அறியப்படும் இடங்கள் எல்லாம் சில வருடங்களுக்கு முன் வயல்வெளிகளாய் இருந்தது. பின்பு அவற்றை ப்ளாட் போட்டார்கள். இதோ நேற்று அப்பக்கமாய் போகும் போது கான்க்ரீட் ராட்சஷன்கள் விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  கொஞ்சம் கொஞ்சமாய் விவசாயம் அருகிக்  கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் எல்லா இடத்தில் கட்டங்கள் கட்டி சாப்பாட்டிற்கு என்ன செய்ய போகிறோம் என்ற பயம் வரும் நேரத்தில் சிங்கப்பூர் நண்பர் ராமை சென்னையில் சந்தித்தேன். அவர் சிங்கப்பூரை விட்டு மொத்தமாய் வந்துவிட்டதாகவும், இங்கே சென்னையில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டே ஒரு நண்பருடன் சேர்த்து சில ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்ய ஆரம்பித்திருக்கிறேன் என்று சொன்னார். சமீபகாலமாய் கொஞ்சம் நன்றாக சம்பாதித்து செட்டிலானவர்களின் எதிர்கால குறிக்கோள் கிராமத்தில் விவசாயம் செய்வது என்றுதான் சொல்கிறார்கள். கார்பரேட் கம்பெனிகளில் வேலை பார்த்தவர்களுக்கு விவசாயம் ஃபேஷனாய் இல்லாவிட்டாலும் நல்ல வியாபாரமாகவாவது படுவது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது. @@@@@@@@@@@@@@@@@@@@@