Kurbaan – Hindi Film Review
முழுக்க, முழுக்க ஹாலிவுட் பாணி பாதிப்பில் எடுத்திருகிறார்கள். நடிகர்கள் மட்டும் ஹிந்தியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சாயிப் ஒரு பி.எச்டி. லெக்சரர், அவரும் கரீனாவும் ஒரே காலேஜில் ப்ரொபஸராய் வேலையில் இருக்க, காதல் வசப்படுகிறார்கள். வீட்டில் சொல்லி திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த சமயத்தில் கரினாவுக்கு நியூயார்க்கின் ஒரு யூனிவர்சிட்டியில் வேலை வாய்ப்பு வர, அவருக்காக தன் வேலையை துறந்து கரினாவுடன் அமெரிக்காவுக்கு போகிறார் சாயிப். வேலைக்கு போய் சேர்ந்ததும், அங்கேயே இந்தியர்கள் வசிக்கும் ஏரியாவில் போய் ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு செட்டில் ஆக, பக்கத்திலிருக்கும் ஓம்பூரியின் குடும்பத்திலிருந்து, கரினாவுக்கு பிரச்சனை ஆரம்பிக்கிறது. ஓம்பூரியின் வீட்டில் இருக்கும் மருமகள் ஒருத்தி தன்னை காப்பாற்றும் படி சொல்ல, அவளின் கணவன் அடிப்பதை பார்த்த கரீனா அவள் கொடுத்த ஒரு இந்திய முஸ்லீம் இளைஞன் வேலை செய்யும் நியூஸ் சேனலுக்கு போகிறாள். அடுத்த நாளிலிருந்து அவளை காணாமல் இருக்க, அவளை தேடி வீட்டிற்குள் திருட்டுத்தனமாய் நுழைய, அங்கே அவள் காணும் காட்சி, அதிர்ச்சியின் உச்சம், அவளின் கணவன...