Posts

Showing posts with the label மலை.. மலை.. thiraivimarsanam

மலை.. மலை –திரைவிமர்சனம்

Image
கிராமத்திலிருந்து ஒரு இளைஞன் சென்னைக்கு வருகிறான். வந்த இடத்தில் ஒரு பெரிய ரவுடியை சந்திக்கிறான். அவன் யார் என்று தெரியாமலே அவனை அடித்துவிட, அவனை அழிக்க வில்லன் அலைகிறான். கேட்டு, கேட்டு புளித்து போன கதையாய் தெரிந்தால் அதுக்கு ஒண்ணும் செய்யமுடியாது இதுதான் மலை..மலை திரைப்படத்தின் கதை.   பழனியில் அருண் விஜயும், பிரபுவும் இணைபிரியா சகோதரர்கள், எங்கே தனக்கு கல்யாணம் ஆனால் வருகிறவள் தன் தம்பியை பிரித்துவிடுவாளோ என்று எண்ணி திருமணமே முடிக்காமல் இருக்கும் பாசக்குழம்பு பிரபு. இரண்டு பேரும் பெரும் சண்டியர்கள், பிரபுவுக்கு பழைய சப்பி போட்ட மாங்கொட்டை கஸ்தூரி ஜோடி, கோயிலுக்கு வரும் வேதிகா வழ்க்கம்போல் ரவுடி ஹீரோவுக்கு ஜோடி, பார்த்த நாலாவ்து சீனில் காதல் செய்கிறார்கள், அவளை தேடி பழனியில் வேலையிழந்த அருண்விஜய், சென்னை வர, வ்ந்த இடத்தில் சென்னையின் நெ.1 தாதா பிரகாஷ்ராஜை சந்திக்க, வழக்கம் போல் முதல் சீனில் சண்டை போடாமல் பத்து சீன் தள்ளி, அதுவும் ஆளுக்கட்சி இடைதேர்தலுக்காக தன் பலத்தை காட்டும் ஊர்வலத்தில் அவர் என்று தெரியாம அருண்விஜய் அடித்துவிட, அவனை கொல்ல துடிக்கிறார் பிரகாஷ். கதை...