ஒஸ்தி
குருவி, தெலுங்கு பங்காரத்துக்கு முன் வரை அடித்து தூள் பரத்திக் கொண்டிருந்த இயக்குனர் தரணி. விண்ணைத்தாண்டி வருவாயாவுக்கு பிறகு இவரை பிடிக்காதவர்களுக்கும் பிடித்துப் போன நடிகரான சிம்பு. ஏற்கனவே இந்தியாவெங்கும் சூப்பர் ஹிட்டான “தபாங்”கின் ரீமேக் என்பது போன்ற விஷயங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்க, படத்தின் டெபிஸிட் காரணமாய் நேற்று காலை வெளியாகாமல் மதியத்திற்கு மேல் ஒரு வழியாய் வெளியாகியது.