பொறுப்பு
முன் பக்க பைக் டயர் அப்படியே பூமியில் அழுந்தியிருந்தது. பஞ்சர். நேத்து ராத்திரி வண்டியை வைக்கும் போது கூட நல்லாத்தானே இருந்திச்சு என்று யோசிக்கும் போது, நல்ல வேளை நடு வழியில நிக்காம காப்பாத்திச்சே என்றும் தோன்றியது. பொங்கல் தினமாதலால் சுத்துபட்டுப் மெக்கானிக்குகள் விடுமுறையிலிருக்க, மெயின் ரோடுக்குச் சென்றால் யாராவது இருப்பார்கள் என்று மெல்ல நடையை கட்டினேன். எதிர்பார்த்தபடியே மெயின் ரோட்டிலிருக்கும் ”பா”யின் பஞ்சர் கடை திறந்திருந்தது. என் கூடவே ஒரு சின்னப் பையனை அனுப்பி வைத்தார் பாய். மொத்தமே மூன்று அடியில் ஒரு அழுக்கு டி சர்ட்டையும், டைட்டான டவுசரையும் போட்டுக் கொண்டு, கையில் டூல்ஸுடன் சர சரவென வேகமாய் எனக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தான். அவ்வப்போது நான் பின்னால் வருகிறேனா? என்று திரும்பி, திரும்பி பார்த்து கொண்டான். மேலும் படிக்க.. சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்