Posts

Showing posts with the label ஒம்பதுல குரு

கொத்து பரோட்டா - 18/03/13

எங்கு பார்த்தாலும் உண்ணாவிரதம், போராட்டம், மாணவர்களின் ஈடுபாடு என்று இலங்கை தமிழர்களுக்காக நேரடியாய் தமிழக மக்களே தங்கள் அரசியல் தலைவர்கள் மீதான நம்பிக்கை அற்றதன் காரணமாய் இறங்க, என்ன தான் டெசோ, நடை பயணம், அது இது என்று எல்லோரும் தங்கள் தங்கள் லெவலுக்கு மக்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப எத்தனித்துக் கொண்டிருக்க, யாராலும் இப்போராட்டம் எங்களால் என்று மார் தட்டிக் கொள்ள முடியவில்லை.திமுகவுக்கு தற்போதைக்கு கூட்டணியிலிருந்து விலகல் என்பதைத் தவிர பெரிய அஸ்திரம் வேறேதுமில்லை என்பதால் அதை உபயோகித்திருக்கிறது என்று கூறுகிறார்கள். சமீபத்தில் யாழ்பாணத்திலிருந்து அகதியாய் லண்டனுக்கு போய்விட்ட ஒர் நண்பர் சென்னை வந்திருந்த போது சொன்னார். தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளின் பேரிலும் நாங்கள் நம்பிக்கை இழந்து வருடங்களாகிறது. இனி மக்களே பொங்கி எழுந்தால்தான் ஆகும் என்றார். அது தான் நடந்து கொண்டிருக்கிறது. @@@@@@@@@@@@@@@@@@@