கொத்து பரோட்டா - 18/03/13
எங்கு பார்த்தாலும் உண்ணாவிரதம், போராட்டம், மாணவர்களின் ஈடுபாடு என்று இலங்கை தமிழர்களுக்காக நேரடியாய் தமிழக மக்களே தங்கள் அரசியல் தலைவர்கள் மீதான நம்பிக்கை அற்றதன் காரணமாய் இறங்க, என்ன தான் டெசோ, நடை பயணம், அது இது என்று எல்லோரும் தங்கள் தங்கள் லெவலுக்கு மக்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப எத்தனித்துக் கொண்டிருக்க, யாராலும் இப்போராட்டம் எங்களால் என்று மார் தட்டிக் கொள்ள முடியவில்லை.திமுகவுக்கு தற்போதைக்கு கூட்டணியிலிருந்து விலகல் என்பதைத் தவிர பெரிய அஸ்திரம் வேறேதுமில்லை என்பதால் அதை உபயோகித்திருக்கிறது என்று கூறுகிறார்கள். சமீபத்தில் யாழ்பாணத்திலிருந்து அகதியாய் லண்டனுக்கு போய்விட்ட ஒர் நண்பர் சென்னை வந்திருந்த போது சொன்னார். தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளின் பேரிலும் நாங்கள் நம்பிக்கை இழந்து வருடங்களாகிறது. இனி மக்களே பொங்கி எழுந்தால்தான் ஆகும் என்றார். அது தான் நடந்து கொண்டிருக்கிறது.
காலை நடைபயிற்சியின் போது எப்போதும் நான் சீரியசாய் கவனிக்கும் விஷயங்கள் போஸ்டர்கள். முதல் நாள் சினிமா போஸ்டர் ஒட்டிய இடத்தின் மேல் ஏதாவது அரசியல் போஸ்டர் இருக்கும். அப்படி அரசியல் போஸ்டர் அதுவும் ஆளும் கட்சி போஸ்டராய் இருந்தால் பல சமயங்களில் அதன் மேல் அடுத்த வார சினிமா போஸ்டர் தான் மூடும். எதிர்கட்சி போஸ்டராய் இருந்தால் அதன் மேல் ஆளுங்கட்சி போஸ்டர் உடனடியாய் மூடும். யார் எந்த போஸ்டராய் இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் ஒட்டப்படும் போஸ்டர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள்தான். சமீபத்தில் ஒரே நாளில் கிட்டத்தட்ட ஒரு கீலோ மீட்டர் தூரத்திற்கு ஒர் ஓவியர் மறைவுக்கு ஒட்டப்பட்ட போஸ்டர் என்னை வசீகரித்தது. ஏதாவது ஒரு ஊரின் பேரைப் போட்டு புகழ் என்று போட்டு பார்த்திருக்கிறேன். அவரின் போஸ்டரில் சைதை புகழ் என்று போட்டிருந்தார்கள். சைதையிலேயே கிட்டத்தட்ட பிறந்து வளர்ந்து கொண்டிருக்கிறவன் தான் இந்த போஸ்டரின் மூலமாய் தான் அவர் பெயர் தெரிந்தது. அப்படி கவர்ந்த இன்னொரு போஸ்டர் எங்கள் ஏரியாவில் இன்னும் பஞ்சாயத்தார் என்று ஒருவர் இருக்கிறார் என்பதுதான். ஜோதியம்மாள் நகர் பஞ்சாயத்தார் கங்கபட்லா சின்னய்யா. எங்களை அகாலமாய் விட்டுச் சென்ற மின்னல் (எ) மினுக்கி. நான்காம் ஆண்டு என்கிற இடத்தின் மீது மட்டும் சின்னதாய் ஐந்தாம் என்று மேல் ஸ்டிக்கர் வைத்த போஸ்டர்.
@@@@@@@@@@@@@@@@@@@@
பெண்களின் சம்மதத்துடன் உடலுறவுக்கான வயதை 18லிருந்து 16 ஆக்க மசோதாவின் மீது எனக்கு ஆட்சேபணை இருக்கிறது. இவ்வயதில் ஆண் பெண் இருவருக்கும் செக்ஸுவலாய் நிறைய ஈர்ப்புகள் ஏற்பட்டு தவறு செய்ய வாய்ப்பிருக்கிறது. அத்தவறுகள் நடந்து கொண்டும் இருக்கிறது. இப்படி சட்டம் போட்டுவிட்டால் சம்மதத்துடன் என்று சொல்லி நடக்கும் உடலுறவினால் ஏற்படும் ப்ரச்சனைகளை சமாளிக்க அப்பெண்ணுக்கு வயதோ, அல்லது மன ரீதியான பலமோ இல்லை. ஆனால் பெரும்பாலான சட்டங்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களிலிருந்து அவர்களை காப்பாற்ற என்று போடப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் அச்சட்டங்களை பெண்களும், அவர்கள் குடும்பத்தாரும் அதை ஆண்களை பழிவாங்க உபயோகிக்கும் சட்டமாகவே பார்க்கிறார்கள் செயல் படுத்துகிறார்கள் என்பது பெரிய வருத்தம்.
############################################
அரசியல் ரீதியாய் நமது எதிர்ப்பை, ராஜபக்ஷே அரசின் மீது காட்ட உரிமையிருக்கிறது. அதற்காக அந்த இன மக்கள் எல்லார் மீதும் துவேஷம் காட்டுவது சரியான செயலாய் தெரியவில்லை. அதுவும் ஆராய்ச்சிக்காக வநத இலங்கை குழுவை, அவர்களுடய குழு தலைவராய் வந்த சிங்கள புத்த பிட்சுவை அடித்து உதைத்து துரத்தியது மனிதாபிமானம் அற்ற செயல். நம் கோபத்தை மீறி நாம் அவர்களிடம் காட்ட வேண்டியது அன்பை மட்டுமே. பகைமையை, வன்மத்தை காட்டினால் அதை அவர்கள் அங்கே மீதமிருக்கும் நம் தமிழர்கள் மீதுதான் பிரயோகிப்பார்கள். மீண்டும் இரு நாட்டினரிடம் காழ்புணர்ச்சிதான் ஏற்படுமே தவிர நல்லது நடக்காது. இத்தனைக்கும் பிட்சுவைத் தவிர உடன் வந்த மாணவர்கள் தமிழர்கள் என்று பின்புதான் தெரிந்திருக்கிறது.

யுடான்ஸ் கார்னர்
யுடான்ஸ் திரட்டியில் மால்வேர் காரணமாய் பலரது தளங்களில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து யுடான்ஸ் திரட்டி டெக்னிக்கல் டீம் அந்த மால்வேரை கண்டு பிடித்து ப்ரச்சனையை சரி செய்துவிட்டது. வாசகர்கள் இணைய தள நண்பர்கள் மீண்டும் யுடான்ஸ் திரட்டியின் லோகோ, மற்றும் ஓட்டுப் பட்டையை நிறுவிக் கொள்ளலாம். இம்மாதிரியான சிறு தொந்தரவுகளுக்கான காரணம் நம் யுடான்ஸின் வளர்ச்சிதான் என்பதையும் அவ்வளர்ச்சிக்கு நீங்கள் காட்டும் தொடர் ஆதரவு தான் காரணம் என்பதை உணர்ந்து மேலும் உங்கள் ஆதரவினை தொடர்ந்து அளிக்க வேண்டுகிறோம். நன்றி
@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
வெகு நேர சண்டைக்கு பிறகு தனியாய் யோசிக்கும் போது இன்னும் சில விஷயங்கள் கேட்காமல் போய்விட்டோமே என்று ஞாபகம் வருகிறது.
என் கருத்தை சொல்லச் சொல்லி வற்புறுத்தாதே உண்மையை சொல்ல வேண்டியிருக்கும்
சினிமாவில் உபயோகிக்கும் டம்மி கட்டையில், குச்சியில் யாராச்சும் அடி வாங்கியிருக்கீங்களா?
பிடிக்காதை மாற்றிவிடு. அப்படி முடியவில்லையென்றால் நீ மாறி விடு, அதுவும் முடியவில்லை என்றால் நீ குறை சொல்லாதே..
ஒன்பதுல குரு வந்தா பொண்டாட்டிய விட்டு ஓடுவானாம். அதுவே படமா வந்தா நாம தியேட்டர விட்டு ஓடுவோம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அடல்ட் கார்னர்
சுப்புவுக்கு தன் லுல்லாவின் சைசினால் பெரும் மன உளைச்சல். 25 இன்ச். சாதாரண நிலையில். ஒரு டாக்டரைப் பார்த்து “டாக்டர் இதனால் எனக்கு பெரும் கஷ்டமாய் இருக்கிறது. ஏதாவது பண்ணுங்களேன்.என்று கேட்டான். “அவனவன் பெருசாகாதான்னு ஏங்குறான் நீ வேணாங்குறே.இருந்தாலும் உன் கஷ்டம் எனக்கு புரியுது. என்னால் ஒண்ணும் செய்ய முடியாது எனக்கு தெரிந்த மந்திரவாதி ஒருத்தன் இருககான் அவன் கிட்ட வேணும்னா போய் பாரு ஏதாச்சும் செய்வான். என்று அவன் அட்ரசை கொடுத்தார். மந்திரவாதியும் அவனின் லுல்லா சைசை பார்த்து ஆச்சர்யப்பட்டும்,பரிதாபபப்ட்டும் “சரி.. என்னால் ஏதுவும் செய்ய முடியாது.நம்ம ஊர் வடக்கு கோடியில ஒரு காடு இருக்குல்ல. அதுல ஒரு குளம் இருக்கு. அங்க இருக்கிற தங்க கலர் தவளைகிட்ட “என்னை நீ கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேளு. அது முடியாதுன்னு சொல்லிருச்சுன்னா உனக்கு சைஸ் குறையும். ஆனா ஏதோ யோசனையில சரின்னு சொல்லிருச்சுன்னா.. வளர்ந்திரும் என்று சொல்ல, எதற்கு ரிஸ்க் எடுத்து பார்த்துவிடுவோம் என்று காட்டை அடைந்தான் சுப்பு. தங்க கலர் தவளை அங்கேயிருக்க, அதை பார்த்து “என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? என்று கேட்க, தவளை முகத்தை திருப்பிக் கொண்டு “முடியாது என்றவுடன் அவனுடய லுல்லா ஐந்து இன்ச் குறைந்தது. இருந்தாலும் 20 இன்ச் கஷ்டம் என்பதால். அவன் மீண்டும் தவளையிடம் அதே கேள்வியை கேட்டான். அது மீண்டும் முடியாது என்று கூற மீண்டும் ஐந்து இன்ச் குறைந்தது. 15ம் அதிகம் என்று தோன்றியதால் சுப்பு மீண்டும் அதே கேள்வியை கேட்டான். தவளை அவனை உற்றுப் பார்த்தது. சிறிது நேரம் யோசித்து “உனக்கு எத்தனை வாட்டி சொல்றது. மனுஷன் உன்னை நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது. முடியாது. முடியாதுன்னு என்றது.
கேபிள் சங்கர்
Comments
இங்கு நடக்கும் எந்த போராட்டத்திற்கும் மக்களுக்கும் சம்பதமே இல்லை. உண்மையில் இது அரசியல். மாணவர்களும் அதையே செய்கிறார்கள். ஏனனில் இன்றைய நிலையில் இந்திய அரசு இலங்கையை எதிர்த்து பலமாக எதையும் செய்யும் நிலையில் இல்லை என்பதே நிதர்சனம். இந்த போராட்டங்களினால் மக்களின் கவனத்தை தங்கள் மீது ஈர்கவும் வேறு வேலையில்லாமையாலும் அரசியல் கட்சிகள் இந்த போராடங்களை நடத்திகொண்டிருக்கிறார்கள்.
இது அண்டை நாடு.நாம என்ன தான் கூப்பாடு போட்டாலும் அவன் செய்றத தான் செய்வான்?குறைந்த பட்சம் வடகிழக்கு மாகாந இணைப்பு என்று சொல்லுகிறார்கள்.இதை தான் ராஜீவ் சொன்னார்/செய்தார்.சிங்களவனும் தமிழனும் அண்ணன் தம்பி;இடையில் இந்தியா யார் என்று பிரேமதாசாவுடன் சேர்ந்து குரல் கொடுத்தது யார்?
இந்தியா சொல்லுவதால் மட்டுமே இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடைபெற போவதில்லை.இலங்கை தனக்கு அமைவாக உள்ள ஜியோபோலிடிகல் நிலையை நன்றாகவே உபயோகப்படுத்துகிறது.என்ன செய்வது,அவர்கள் தலைவர்கள் பூமிக்கு அடியில் இருந்து கொண்டு இரவில் மட்டும் நடமாடுவதில்லை.
அப்புறம் மலை வாழ் தமிழர்க்கும் ஈழத்தமிழற்க்கும் ஏன் ஒற்றுமமை இல்லை?யாராச்சும் விளக்கமா சொன்னா தேவலை
இலங்கைத் தமிழர்களான நாம், சிங்கள பிரதேசமான தென்னிலங்கையில் சிங்கள மக்களால் எந்தவொரு காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல், சரிசமமாக நடத்தப்படுகின்றோம். விடுதலைப்புலிகள் மீதான கோபம் / வெறுப்பு இருந்தாலும், அவர்கள் வேறு நாங்கள் வேறு எனும் பகுத்தறிவு சிங்கள மக்களிடம் இருக்கும் அளவுக்கு இலங்கை (யாழ்பாண) தமிழர்களிடமும் தமிழ்நாட்டு தமிழர்களிடமும் கொஞ்சமும் இல்லை. இந்நிலையில் இப்படியான வெட்கப்படவைக்கும் சம்பவம்.
இதற்குப் பிறகும் எனது சிங்கள நண்பர்கள் என் தோள்மீது கைபோட்டு நட்போடு அணைத்துக்கொள்ள தயங்கமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், இனிமேல் அவர்களின் அணைப்பை நான் ஏற்றுக்கொள்ளும் வேளைகளில் குற்றவுணர்ச்சியில் குறுக வைக்கும்படியாக இந்த அவலம் நடந்துள்ளது.
- Shared in G+
Repeat.. 1000+
உண்மையில் இங்கு சிங்கள பொதுமக்களிடையே (இன்னும்) நம்மீது இனத்துவேஷம் வரவில்லை. வட இந்தியாவில் தமிழனின் நிலையை விட, நாங்கள் இங்கு எவ்வளோ நன்றாக இருக்கிறோம். சமூகத்தில் நாங்கள் சரிசமமாக நடத்தப்படுகிறோம். அரசியல் சூதாட்டங்களைப் பற்றியும், அரசாங்கம் என்ன நினைக்கின்றது என்பது பற்றியும் எனக்குக் கவலையில்லை. போரில் குற்றங்கள் நடந்துள்ளன. போர்க்குற்றம் இல்லாத ஒரு போரை உங்களால் காட்ட முடியுமா? அடிப்படையில் போர் என்பதே குற்றம்தான். எல்லாவற்றுக்கும் மேலாக சமூகத்தில் நாங்கள் சகோதரர்களே. தயவுச்செய்து குட்டையைக் குழப்பி விடாதீர்கள்..