Thottal Thodarum

Mar 4, 2013

கொத்து பரோட்டா- 04/03/13

சனியன்று இரவு  சன் செய்திகள் விவாத மேடையில்  32 நாட்களாய் பூரண மது விலக்கை அமல் படுத்தக் கோரி உண்ணாவிரதம் இருக்கும் பெரியவர் சசி பெருமாளின் போராட்டத்தை முன் வைத்து பூரண மதுவிலக்கு வருமா? அமல் படுத்த முடியுமா? என்று விவாதித்தார்கள். அதில் எழுத்தாளர் சாரு நிவேதிதா, மற்றும் பமக சார்பில் ஒர் வக்கில், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், கள் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் எல்லோரும் பேசினார்கள். அதில் தல சாரு மட்டும்தான் நிஜத்தில் டாஸமாக்கில் நல்ல சரக்கு கொடுப்பதில்லை என்றும், நல்ல சரக்கை கொடுங்கள் என்றும் சொன்னார். நிச்சயம் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வாய்ப்பேயில்லை என்று ஆணித்தரமாய் சொன்னார். தமிழ்நாட்டில்தான் இப்படி கேடுகெட்ட தரமற்ற சரக்கை தருகிறார்கள் என்று புலம்பினார். பல சமயங்களில் அவர் எடுத்து வைத்த வாதம் சரியாகவேயிருந்தது. என்ன எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருக்கும் வேலையில் தமிழ்நாட்டைத்தவிர, இந்தியாவைத் தவிர வேறெந்த நாட்டிலும் குடித்துவிட்டு வண்டி ஓட்ட முடியாது Arrest செய்துவிடுவார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்க,  அடுத்த ஸ்டேட்மெண்டில் ப்ரான்சில் ஜானிவாக்கர் குடித்துவிட்டு வண்டியை தாறுமாறாக ஓட்டுபவன் நம் தமிழன் தான் என்று அங்குள்ள போலீஸ்காரர்கள் வண்டியோட்டும் அழகைப் பார்த்து கிண்டலடிப்பார்கள் என்று சொன்னதும் அவ்வளவு நேரம் சொல்லிக் கொண்டிருந்த சீரியஸ்த்தனம் குறைந்தும் வழக்கம் போல தல ஆரம்பிச்சிருச்சுடா என்று புலம்பத் தோன்றியது. ஊரில் உள்ள அத்துனை பேரும் மதுவிலக்கிற்காக காத்துக் கொண்டிருப்பது போல மக்கள் பேட்டி எடுத்தது எல்லாம் உச்சப் பட்ச காமெடி. பார்களின் வாசலில் போய் பேட்டி எடுத்திருக்க வேண்டும். பண்ண மாட்டார்கள் என்று தெரிந்து ஆட்சிக்கு இக்கட்டை கொடுக்க வேண்டி செய்த நிகழ்ச்சியாகவே தெரிந்தது. எது எப்படியோ இந்நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த நண்பர்கள் சிலர் திடீரென ஏதோ ஞாபகம் வந்தது போல கிளம்பி..” மச்சான் பாத்துட்டு இரு.. பத்து மணிக்கு கடை மூடிருவான். போய் சரக்க வாங்கிட்டு வந்திடுறேன்” என்று கிளம்ப வைத்ததுதான் நிகழ்ச்சியின் வெற்றி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@தன்னுடய படத்திற்கு ஏ சர்டிபிகேட் தந்தது அநியாயம் என்றும், ஒவ்வொரு சர்டிபிகேட்டுக்கும் ஏற்றார் போல காசு வாங்குகிறார்கள் என்று அமீர் புலம்பியிருப்பது படத்தைப் பார்த்துவிட்டு புலம்பும் ரசிகர்கள் நிலையை விட மோசம். சரி.. என் மீது வழக்கு தொடுத்தாலும் பரவாயில்லை நான் சந்திக்கதயார். ஆனால் படத்தை விளம்பரப்படுத்த தடை செய்கிறார்கள் என்று சொல்லி பரபரப்பை கிளப்பப் பார்க்கிறார். பகவானின் போஸ்டரை பார்த்தே மிரண்டு போயிருக்கும் ரசிகர்கள் இந்த பரபர சலசலப்புக்கெல்லாம் அசர மாட்டார்கள்  என்றே தோன்றுகிறது. யாருக்கு இந்தப் படத்திற்கு தடை கோரி போராடி ஓட வைக்கும் கொடும்மனமிருக்கிறது?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன்னும், இடைவேளைக்குப் பின் ஆரம்பிப்பதற்கு முன்னும் சிகரட் புகைப்பதால் வாய் புற்றுநோய், நுரையீரல் புற்று ஆகியவை வரும் என்று எச்சரிக்க ஒர் விளம்பரப் படம் போடுகிறார்கள். வாய்ப்புற்றில் சீழோடு இருக்கும் ஆட்களின் புகைப்படங்களையும், வாய்ப் புற்றினால் பாதிக்கப்பட்ட ஒர் இளைஞனின் பேட்டியும் இடம் பெறுகிறது. அடுத்ததாய் “நுரையீரல் பஞ்சு போன்றது. என்று கர்ண கடூரமான ஒர் குரலில் புகைப்பிடிப்பதால் டார் எவ்வளவு சேருகிறது என்பதை சொல்லாமல் இவ்வளவு அபாயம் என்று படு கேவலமான ட்ரான்ஸ்லேஷன் வேறு. மக்களை குடி, மற்றும் சிகரட் பழக்கத்திலிருந்து விடுபட, விழிப்புணர்ச்சி செய்திகளை கொடுப்பது சரிதான் ஆனால் அதையே திரும்பத் திரும்ப ஒவ்வொரு பட ஆரம்பத்திலும், நடுவிலும் காட்டுவதை விட, புகை, குடிக்கெதிரான கருத்துக்களைச் சொல்லும் ஒரு நிமிட குறும்படங்கள் எவ்வளவோ இருக்கிறது அதை ஒவ்வொரு மாதமும் வரும் படங்களில் சேர்க்கலாமே.?. அப்படியான ஒர் முயற்சி செய்தால் குறும்படங்களுக்கு அரசு ஆதரவு தெரிவித்தது போலவும் ஆகும். புதிய திறமைகளை ஊக்குவித்தது போலாகவும் அமையும். குடி, சிகரெட் பழக்கமில்லாதவர்கள் கோரமான காட்சியை பார்காமல் கிரியேட்டிவான குறும்படத்தை பார்த்த திருப்தியும் இருக்கும். சில நண்பர்கள் தம்மடிக்க வேண்டாம்னு நினைச்சாலும் அதைப் பத்தி சொல்லி ஞாபகப்படுத்துறாய்ங்கப்பா.. என்கிறார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
ஹிந்தி தெரியாததால் அல்லது புரியாததால் ஆர்.ஜி.வி படத்துக்கு தடை கேட்கவில்லையோ? :))

காதல்ங்கிறது வெறும் கால்ல ஓட்டிட்ட சாணி போல கழுவினப்புறமும் போகாத மாதிரி இருந்திட்டே இருக்கும்

கொஞ்சம் மீடியாவுல தெரிய ஆரம்பிச்ச எழுத்தாளர்னா சுஜாதாவை இலக்கியவாதியில்லைன்னு சொல்றது ஃபேஷனாப் போச்சுப்பா.. அட கிரகமே

ஆளுக்கு ஒரு பக்கமாய் பார்த்துக் கொண்டு பேசினாலும் உள்ளுக்குள் ஏதோ இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும்.# வாக்கிங் அவதானிப்பூ
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நேற்றைய விவாத மேடையில் குடித்துவிட்டு வண்டியோட்டுகிறார்கள். விபத்தில் குடிக்காதவர்கள் மரணமடைகிறார்கள். சமூக விரோத செயல்களை செய்யும் முன்பு நன்றாக குடித்துவிட்டு அச்செயல்களைப் புரிகிறார்கள் அதனால் தடை செய்ய வேண்டும் என்று தமிழருவி மணியனும், பமக வழக்கறிஞ்சரும் பேசினார்கள். குடித்துவிட்டு வண்டியோட்டினால் நிச்சய அபராதம் என்பதை விட, பதினோரு மணி வரை டாஸ்மாக்கை திறந்து வைத்துவிட்டு,  ரோட்டு திருப்பத்தில் பிடிக்க நிற்பதை விட, ஒவ்வொரு கடையின் வாசலில் இருக்கு பைக்கை எடுக்க வரும் ஆட்களிடம் குடித்திருந்தால் வண்டியை எடுக்கக்கூடாது மீறி எடுத்தால் அபராதம் என்று சொல்லிப் பாருங்களேன். நிச்சயம் குறையும். அடுத்து சிறுவர்கள் குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்ற புலம்பல். 18 வயதுக்கு குறைவானர்களுக்கு சிகரெட், மற்றும் மது பானங்களை தர கூடாது என்று அரசு சட்டம் இயற்றியிருக்கிறது. அதை மீறி ஒர் கடைக்காரர் விற்பது சட்ட விரோதம். சட்டத்தை நடைமுறைப்படுத்தாதது அரசின் தவறு. அதற்காக போராடுங்கள். குஜராத்தில் மதுவிலக்கு இல்லையா? என்று கேட்ட மாத்திரத்தில் கலந்து கொண்ட ஒருவர் யார் சொன்னது எந்த ஓட்டல்ல போய் ரூம் போட்டதும் முதல்ல கேட்குறது ஆஃப்பா? புல்லான்னுதான்” என்கிறார். முப்பது ஆண்டுகள் மது இல்லாமல் இருந்த நாடுதானே இப்போது முடியாது என்று ஏன் நினைக்கிறீர்கள்? என்றால் முப்பது ஆண்டுகளுக்கு முன் மது விலக்கு இருந்த போது கொலை, கொள்ளை, கற்பழிப்பு ஆகியவை நடக்கவேயில்லையா?  என்னைப் பொருத்த வரை அரசே டாஸ்மாக் மூலம் மது விற்பனை செய்வதுதான் முதலில் தடுக்கப் பட வேண்டிய விஷயம். அப்படி அரசு மது விற்பனையை நிறுத்தும் பட்சத்தில் தனியார் வசமிருக்கும் போது சட்டம் ஒழுங்கை கெடுபிடியாக்க முடியும். அதன் மூலம் வரும் வருமானத்தை இழப்பது பற்றிய கவலையில்லாமல் செயல் பட முடியும். இப்படி பல ”யும்”களை அமல் படுத்த முடியும்.முதலில் கொடுக்கும் சரக்கை நல்ல சரக்காக கொடுங்க என்ற போராட்டத்தை ஆரம்பிக்க சொல்லணும். ஆந்திராவில எல்லாம் என்னாமா இருக்கு. .
@@@@@@@@@@@@@@@@@@@
ஒரு பக்கம் சின்னப் படங்கள் எல்லாம் பெரிய நிறுவனங்கள் விலைக்கு வாங்கி வெளியிடுவது போல தெரிந்தாலும், பெரும்பாலான நேரங்களில் சின்னப் படங்களை இலவசமாய் வெளியீடு செய்யும் வேலையை  மட்டுமே பெரிய நிறுவனங்கள் செய்து கொண்டிருக்கிறது. அதுவும் பல சின்ன படங்களின் சாட்டிலைட் உரிமைகளை தங்கள் கை வசம் வைத்துக் கொண்டு,  படத்தின் விளம்பரத்திற்கு அவர்கள் செலவு செய்த தொகை வசூலாகி வரவில்லையென்றால் சாட்டிலைட்டை தங்கள் தொடர்பில் இருக்கும் சேனலுக்கு விற்றுவிட்டு, தங்கள் காசை எடுத்துக் கொள்கிறார்கள். படமெடுத்த சிறு முதலீட்டு தயாரிப்பாளருக்கு பைசா பிரயோசனமில்லாமல் நானும் படமெடுத்தேன் என்ற பெருமை மட்டுமே மிஞ்சுகிறது. அவர்களைச் சொல்லி பிரயோஜனமில்லை. படம் தயாரிக்க வரும் தயாரிப்பாளர்கள். படம் தயாரிக்கும் முறைகளைப் பற்றி தெரிந்து கொள்வதில்லை.  சினிமாவின் வியாபார முறைகளைப் பற்றி தெரிவதில்லை. இம்மாதிரியான விநியோகஸ்தர்கள் இவர்களிடம் தியேட்டரிலிருந்து பணம் வாங்குவது கஷ்டம். ஏதோ நாங்களா இருக்கிறதுனால வாங்க முடியுது என்பது போன்ற பில்டப்புகளை பார்த்து பயந்து போய் மொத்த படத்தையும் அவர்களிடம் ஒப்படைத்த தயாரிப்பாளர் கதையெல்லாம் இருக்கு. யாரோ ஒரு இயக்குனர் கதையுடன் சமீபத்தில் வெளியான சின்ன பட்ஜெட் ப்ட வெற்றியை மட்டுமே சொல்லி ஒரு தயாரிப்பாளரை கன்வின்ஸ் செய்துவிடுகிறார். அவரும் சின்ன பட்ஜெட்டில் எடுத்தால் படம் விற்றுவிடும் என்ற நினைப்பில் தயாரித்து விடுகிறார். ஆனால் படத்தை விலைக்கு வாங்க விநியோகஸ்தர்கள் தயாராய் இல்லையென்றால் அதை வெளியிட தனியாய் செலவு செய்ய வேண்டும் என்று தெரிவதில்லை. வேறு வழியில்லாமல் இருப்பதையெல்லாம் செலவு செய்துவிட்டு ஒரு வாரத்துக்கு விளம்பரம் கொடுக்கக் கூட வழியில்லாமல் வந்த சுவடே இல்லாமல் படம் தோல்வியடைந்துவிடுகிறது. பல சமயங்களில் சாட்டிலைட் சேனலுக்கு விற்பனை செய்யகூட தெரியாமல். படம் வெளியாகி தோல்வியடைந்ததால் அடி மாட்டு விலைக்கு விற்கப்பட்டோ, அல்லது கடைசி வரை விற்கப்படாமலோ போய்விடும் நிலையும் அதிகரித்து வருகிறது. எனவே சினிமா தயாரிக்க வேண்டும் என்று வரும் புதிய தயாரிப்பாளர்கள் அதை வெளியிட செலவாகும் பட்ஜெட்டுக்கும் தயாராகி வந்தால் தான் வெற்றி பெற முடியும். கடந்த ஆண்டு வெளியான படங்களில் சுமார் என்பது சதவிகித படங்களின் சாட்டிலைட் உரிமைதான் விலை போயிருக்கிறது என்பது வார்னிங்.
@@@@@@@@@@@@@@@@@@@
நேற்று நீயா  நானாவில் காதலை சொல்வது எப்படி? என்ற தலைப்பில் இளம் பெண்கள், இளைஞர்களை வைத்து ஷோ நடத்திக் கொண்டிருந்தார். எப்படி காதலைச் சொன்னால் பிடிக்கும் என்று பெண்களிடம் கேட்டதில் ஆளாளுக்கு ஒன்றைச் சொன்னார்கள். தனக்கான அங்கீகாரம், மற்றும் கவனமீர்த்தலைத் தவிர அதில் வேறேதுமில்லை. வயதுக்கே உரியதுதான். பசங்க தான் பாவம். இம்மாதிரி நிகழ்ச்சிகளில் வெகு சுமாராக இருக்கும் பெண்கள் காதலைப் பற்றி, வாழ்கையைப் பற்றி தீவிரமாய் பேசுவார்கள். இப்படி பேசும் பெண்ணை பசங்க அவ்வளவு சீக்கிரம் லவ்வுவாங்களான்னு சந்தேகமே. காதலில் சொதப்புவது எப்படி பாலாஜியும், நீ.எ.பொ.வசந்தம் ஜெனியும் சிறப்பு விருந்தினராய் வந்து ஆளுக்கொரு கருத்தை சொல்லிவிட்டு ஏனோ போய்விட்டார்கள். அடுத்ததாய் இரண்டு ஆர்.ஜேக்களை கூட்டி வந்து அவர்களுக்குள் காதலை சொல்லச் சொல்லி நடிக்க சொன்னார்கள். அபத்தக் களஞ்சியமாய் இருந்தது. பொதுவாக அந்நிகழ்ச்சி முழுவதும் ஒர் தயக்கத்துடன் தான் இருந்தது. புதுசா காதல் பண்றவங்க ஏதாச்சும் புது ஐடியா வச்சிருப்பாங்கன்னு நினைச்சு பார்த்தா.. காதலும் மாறலை காதலிங்களும் மாறலை.. நானே பெட்டர்.
@@@@@@@@@@@@@@@@@@@@
வழக்கமாய மழைக் காலங்களில் தான் தண்ணீர் தேங்கியிருக்கும், அதனால் கொசு அதிகமாய் இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இப்போதெல்லாம்  வெய்யிலில் பகலிலேயே பின்னி பெடலெடுக்கிறது. எத்தனை விதமான லோஷன்கள், நெட்லான், க்ரீம்கள், கொசுவர்த்தி சுருள்கள், ஹை பவர் மிஷின்கள் எல்லாம் வைத்தாலும் அதை தாண்டி கொசு சர்வைவ் செய்கிறது. இப்போதெல்லாம் நான்காவது மாடிக்கு கொசு வர ஆரம்பித்துவிட்டது. காரணங்கள் பல இருந்தாலும் முக்கியமானது நம் மாநகராட்சி அமைத்திருக்கும் ப்ளூகலர் குட்டி குட்டி குப்பை கொடவுன்கள். இந்த குடோன்களில் குப்பை அதிகமாய் சேர்ந்துவிட்டால் அதனுள் தள்ளி வைத்து பூட்டி விடுக்கிறார்கள். இல்லையென்றால் அந்த இடத்தை பூட்டி வைத்துவிட்டு, வெளியே குப்பை போட்டு அதை திறக்க விடாமல் செய்து வருகிறார்கள். உடனுக்கு உடன் குப்பையை எடுத்தாலே கொசுவும், மற்ற வியாதிகளும் பரவும். இதில் குப்பையை ஊரின் நடுவிலேயே சேர்த்து வைக்க கொசு அதிகமாகி, டெங்குவில் போய் விடும், பெரும்பாலான இடங்களில் இந்த மறைவிடங்களில் சமூக விரோத செயல்கள் செய்ய பயன்பட ஆரம்பித்திருக்கிறது. இந்த ஐடியாவிற்கு பின் ஏதோ ஒரு பெரிய காண்ட்ரேக்ட் இருக்கிறது என்று தோன்றுகிறது. இல்லையென்றால் தேவையே இல்லாமல் நான்கு மறைப்பு, அதற்கு ஒர் கதவு. பூட்டு என்று எதற்கிந்த வேண்டாத செலவு. இதற்கு செலவு செய்வதற்கு பதில் இன்னும் நாலு குப்பை தொட்டிகளை வைக்கலாமே?. உடனுக்குடன் அதை எடுக்கும் வழிவகைகளை செய்யலாமே? நம்ம மக்களுக்கும் ஒரு விஷயம் சொல்லணும். நம்ம வீட்டு குப்பையைத்தான்  தெருவுக்கு கொண்டு போறோம். அதை குப்பைத் தொட்டியினுள் கொண்டு போய் போட என்ன அசூயை, சோம்பேறித்தனம்?. வீட்டு வாசலில் நின்றபடி குப்பைத் தொட்டியைப் பார்த்து தூக்கியெறிவது தொட்டியில் விழாமல் அதனைச் சுற்றி விழுந்து நம் வீட்டு வாசலை, தெருவைத்தான் அசிங்கபடுத்துகிறது என்று புரிந்து கொள்வதில்லை. குப்பையை தொட்டியில் கொண்டு போய் போடுங்கள் ப்ளீஸ்.
@@@@@@@@@@@@@@@@@
வர வர பூஜை போடும் போதே பவர் ஸ்டாரின் கால்ஷீட்டை வாங்கி வைத்துக் கொண்டு தான் படமெடுக்க வேண்டும் போல. எல்லா படங்களிலும் ஏதோ சில்க் சிமிதா டான்ஸ் போல பவர் ஸ்டார் வர ஆரம்பித்துவிட்டார்.  ஒரு பாட்டு, ஒரு சீன் எல்லாம் நடிக்க, சமீபத்தில் வெளியாகியிருக்கும் பவர் ஸ்டாரின் லவ் ஆந்தம் கொலைவெறி. ஆர்வமிருக்கிறவர்கள், தைரியமிருக்கிறவர்கள் யூ ட்யூபில் தேடி கண்டுபிடித்து பாருங்க பார்ப்போம்.
#######################################
அடல்ட் கார்னர்
Couplez were havng a borry sex nd afta hvn t. A gal asked why u ddnt say dat u hv a small guitar? Nd a man rply i waz not aware of dat i waz 2perfom in a hall.
கேபிள் சங்கர்

Post a Comment

13 comments:

குரங்குபெடல் said...

"படம் தயாரிக்க வரும் தயாரிப்பாளர்கள். படம் தயாரிக்கும் முறைகளைப் பற்றி தெரிந்து கொள்வதில்லை. சினிமாவின் வியாபார முறைகளைப் பற்றி தெரிவதில்லை "


விடுபட்ட வரி

" சினிமா வியாபாரம்

புக் படிச்சும் தெரிஞ்சுக்க


முயல்வதில்லை "
kumudini said...

கே: உங்க எழுத்துல மேட்டர் பத்தி நிறைய வருது, சாருவோட எழுத்த தடை பண்ணணும்னு போராடுராங்களே அத பத்தி என்ன நினைக்றீங்க?

இது எனக்கு புரிஞ்சிக்கவே முடியல... இந்த முதல நண்பர் சொன்னது எழுத்தாளர்ன்ற வார்த்தையே எனக்கு ரொம்ப ... என்ன personala attack பண்ற மாதிரி இருக்கு. எழுதுரவன்லாம் எழுத்தாளன் இல்ல, எழுத்துக்கு addict ஆகாரவன்தான் எழுத்தாளன் . diary எழுதுரவரும் .. எனக்கு diary எழுதுவதும் புத்தகம் எழுதுவதும் ரெண்டும் ஒண்ணு தான் ரெண்டும் ஒரு பழக்கம் அவளோதான். இது வந்து இதுக்கு எதிரா போராடுறதுன்றது சமீபத்துலதான் வந்து இருக்கு. உலகம் பூரா எழுதுறவன் எழுதிக்ட்டு தான் இருக்காங்க..... இது இதுல என்ன நியாயம் இருக்குனு எனக்கு சுத்தமா புரியல என் தனி பட்ட சுதந்திரத்துல தலையிடுவதா ஆகுது.
இன்னொன்னு நான் சொல்றது என்னனா தொடர்ந்து வலியுறுத்துறது.. நல்லா எழுதுங்கன்றது தான். இது வந்து நாம் இந்த விவாதத்துல விரிவா செய்வோம், ஏன்னா வெளிநாட்டுல எழுதுறாங்க அப்பறம் மேட்டர் பத்தி எழுதலாம் இதுல ஒரு லாஜிக்கே இல்லாம இருக்கு பாருங்க status, twitlonger,blog,நாவல் புதினம் கவித இதெல்லாம் எழுதலாம்னும் பொழுது மஞ்சா புக்க மட்டும் ஏன் தடை பண்ணி வைச்சிருக்காங்க மேட்டர் பத்தி எழுதுவோம்,, அதாவது நான் எழுதுவோம்னு சொன்னா தொடர்ந்து பேசுரதால நான் எதோ அதுக்கு பெரிய சப்போர்ட் ன்ற மாதிரிலாம் அப்படி ஒரு இமேஜ் வருது அது இல்ல இது ஏன் இன்னொருத்தாரோட விஷயத்துல குறுக்கிட்டுறிங்க உண்ணா விரதம் பத்தி கூட சொல்றீங்க, சுருக்கமா சொல்லிடுறேன்.
நாளைக்கு வந்து யாரும் பதிவு எழுத கூடாதுணு சொல்லிட்டு நான் போயி காந்தி செல பக்கத்துல உட்காந்துக்ட்டு 40 நாள் உண்ணாவிரதம் இருந்து சாகுறேன்னு வைச்சிக்கோங்க எவளோ ஒரு absurd ஆனா விஷயம்

கே: ஆனா எழுத்துன்றது பொதுமேடைல வார விஷயம் அது இப்படி இருக்க கூடாது ஒரு கட்டுபாடு வரணும்னு சொல்றாங்களே...

attitude.. அதுக்கு என் கிட்ட பதிலே கிடையாது ஏன்னா அது ஒவ்வொருத்தரோடஆட்டிட்யூட். கேரளாலையும் தான் எழுதுறான். . எழுதிட்டு பொண்டாட்டிய படிக்க சொல்றான்னா பொண்டாட்டி திருப்பிதான் அடிக்கணும் வேற வழி என்ன. எல்லாரையும் படிக்க வைக்கணும், நல்ல புக்கா கொடுக்கணுன்ம்ங்க மொதல basic .. தமினோ சொமிலிகா சொல்லிதான் இது எனக்கு தெரியும், இன்னொரு விவாதத்துல சொன்னாரு, நானே ரொம்ப குழம்பிக்ட்டு இருந்தேன், அது என்ன இந்த சரோஜா தேவி படிச்சா மட்டும் முதுகுல வலிக்கிது உயிர் போற மாதிரி என்னா அங்கெல்லாம் வாழ வழவழ பேப்பர்ல தயாரிக்கிறான். இது அந்த.. (கை உதறுது தலைவருக்கு) மெஷின்ல தயாரிக்கிறான் சைனா பூரா இண்டர்நெட்ல விக்றான். இங்க வந்து மிக மிக கழிவான கரும்பு கழிவுல பிரிண்ட் பண்றான். அப்ப இது வந்து உடம்புக்கு இதுதான் கெடுதி ..

உங்க புத்தகம் படிச்சு நாலு பேர் தற்கொலை பண்ணிக்ட்டாங்கணு சொல்றாங்களே...இப்பவாவது தடை பண்ணலாமா?

அவர் கூட விவாதமே சாத்தியமில்லனு நினைக்றேன், நான் என்ன சொல்ல வரேன்னே புரிஞ்சிக்காம இந்த பிரேக் இல்லாத வண்டி தாறுமாறா போற மாதிரி,சொன்னதாலதான் நான் பதறி துடிச்சிபோய் சொன்னேன், என் தனிப்பட்ட உரிமைனா கண்டதையும் கிறுக்கிட்டு அத எல்லார் கிட்டயும் கொண்டு காமிச்சா , அது தனிப்பட்ட உரிமையானு கேட்டா நான் என்னத்த பதில் சொல்றது .. தண்ணி அடிச்சிட்டு சொந்த கதையா நாவலா எழுதுனா அது அயோக்கியதனம் உலகத்துல எந்த நாட்டுலையும் அப்படி எழுதுறது இல்ல, தமிழ் நாட்டுல மட்டும் தான் இந்தியால மட்டும்தான் எழுதிக்ட்டு இருக்காங்க தமிழ் நாட்டுல அதிகம் (சாரு ஆன்லைன்..) .. நான் சொல்றேன் இன்னிக்கு boys hostel போய் பாருங்க, தேகம் 100 காப்பி இருக்கு, அவன்லாம் புக் படிச்சிதானே கெட்டு போறாங்க, அவனெல்லாம் அரெஸ்ட் பண்ணுங்க , பல உயிர காப்பாத்தலாம். கொஞ்சம் ஒழுங்கு படுத்துங்க.. ஒரேடியா எழுதாதனா சாத்தியமில்ல.. சாத்த்யமில்ல , தொடங்கியாச்சு இனிமே நிறுத்த சாத்தியமில்ல

(நடுவுல,நான் france அடிக்கடி போவேன்..!)

இன்னும் நாலு இடத்துல உலகத்துல இப்படி நடக்ற ஒரே நாடு தமிழ் நாடுதான்..

Siraju said...

இதுதான் இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் நேர்மையின் லட்சணம் :

இயக்குனர் ராம் கோபால் வர்மா மும்பை தாக்குதலை மையமாக வைத்து தி அட்டாக்ஸ் ஆஃப் 26/11 என்ற படத்தை அத்வானிக்கு போட்டுக் காட்டியுள்ளார். படத்தைப் பார்த்த அத்வானி அழுதேவிட்டாராம். (தட்ஸ்தமிழ் )மும்பையில் கடந்த வாரம் ஒரு திரைப்படத்தின் முன்னேட்ட காட்சிகளாக ஒரு நிகழ்வு நடைபெற்றது. படத்தின் இயக்குநர் ராம் கோபால் வர்மா, படத்தின் பெயர் 'The attacks of 26/11'.

இந்த நிகழ்வுக்கு ஹேமந்த கர்கரேயின் துனைவியார் கவிதா கர்கரே, மற்றும் விஜய் சலஸ்கரின் துனைவியார் ஸ்மிதா தங்களது குடும்பத்தாருடன் சென்று இருந்தனர். இந்த படத்தில் நாயகராக சித்தரிக்கபட்டிருப்பவர் ராகேஷ் மாரியா என்கிற காவல்துறையின் குற்றப்பிரிவு அதிகாரி.

ராகேஷ் மாரியா மும்பை தாக்குதல்களில் போது களத்திற்கு வராமல் அலுவலகத்திலேயே இருந்தவர். இந்த வேடத்தில் நடித்திருப்பவர் நானா பாடேகர். படத்தை பார்த்த ஹேமந்த கர்கரே, விஜய் சலஸ்கர் குடும்பத்தார் இந்த படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் இந்த திரையிடல் முடிந்ததும் ஊடகங்களின் கண்களில் படாமல் அங்கிருந்து உடன் வெளியேறினர். மும்பை தாக்குதல்கள் நடந்து முடிந்து தாஜ் ஹோட்டலுக்கு சென்ற முதல் குழுவில் ராம் கோபால் வர்மா இடம்பெற்றிருந்தவர் ராம் கோபால் வர்மா என்பது குறுப்பிடதக்கது.

இதனை கூட காசாக்க துடிக்கும் சினிமா துறையின் முனைப்பு தான்
இது.

இருப்பினும் நிழல் நாயகர்களுக்கு இந்த நாட்டில் கொடுக்கபடும் முக்கியத்துவம், நிஜ நாயகர்களுக்கும் தேச பக்தர்களுக்கும் கொடுக்கபடுவதில்லை. (முத்துகிருஷ்னன் வலைப்பூ)


விஸ்வரூபத்திற்கு பிறகு திரு. கேபிள் சங்கர் நாராயணன் அவர்களுக்கு, "ஏன் இந்த படத்தை தடை செய்யவில்லை" அம்னீசியா பிடித்திருப்பதாகவே தோன்றுகிறது.

Unknown said...

நல்ல யோசனை சொல்லி இருக்கீங்க கேபிள் குறும் படம் போட்டா வர வேற்பு இருக்கும் புகை பிடிகதவங்களுக்கும் எரிச்சல் வராம இருக்கும் ஆனா இவங்க செய்ய மாட்டாங்க

rajamelaiyur said...

//கொஞ்சம் மீடியாவுல தெரிய ஆரம்பிச்ச எழுத்தாளர்னா சுஜாதாவை இலக்கியவாதியில்லைன்னு சொல்றது ஃபேஷனாப் போச்சுப்பா.
//

உண்மைதான் ...

rajamelaiyur said...

இதுக்கும் எதோ ஒரு புண்ணியவான் மைனஸ் ஒட்டு போட்டுருக்கார் . உங்க மேல என்ன கோவம் பாஸ் ?

rajamelaiyur said...

இன்று

இலவசமாக 7 மென்பொருள்கள் (FREE SOFTWARES )

Unknown said...

http://www.youtube.com/watch?v=koY-S-t8Rwc

மாலை நேரத்து மயக்கம் said...

friends i have started my new blog need ur help and encouragement for me to improve
i had my first post in my blog
give ur advise and tips
this is my first post
http://aadhibhagavanoo7.blogspot.in/2013/03/53.html

மாலை நேரத்து மயக்கம் said...

also tell your ideas how to develop my blog

Unknown said...

Dear Mr.Cable shankar, Please do not say "Charu" as "Thala" and dont spoil your image....We all respect your writings...Charu is a virus in Tamilnadu...He always compare foreign people with our poor people..useless chaaru..Ask him to to to foreign and live...why the hell is he here?

kanavuthirutan said...

சினிமா தெரியாதவங்க சினிமாபடம் எடுக்க வர்றதால ஏற்படுற விளைவு இது...

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

நெறைய எழுதி இருக்கிங்க படிக்க படிக்க முதல் ஒவ்வொரு பாராவும் மறந்துகொண்டே வருகிறது