Thottal Thodarum

Mar 31, 2013

கேடி பில்லா கில்லாடி ரங்கா

 சிவகார்திகேயனும், விமலும் தமிழ் சினிமா வழக்கம் போல வீட்டுக்கு பாரமாய் வெட்டியாய் திரிபவர்கள். எப்படியாவது அரசியல்வாதியாகி, கவுன்சிலராவதுதான் லட்சியமாய் சுற்றிக் கொண்டிருப்பவர்கள்.இம்மாதிரியான மொக்கை இளைஞர்களுக்கு கிடைக்கும் லட்டு பிகர்களாய் பிந்து மாதவியும், ரெஜினாவும். இவர்களுக்கு ஒத்தாய் வீட்டு மாப்பிள்ளையாய் செட்டிலாகி மாமனாரிடம் செலவுக்கு வாங்கிக் கொண்டு பொழுதை ஓட்டும் சூரி. இவர்களின் மாபெரும் லட்சியம் நிறைவேறியதா இலலியா? என்பதுதான் லைன். இம்மாதிரியான காமெடி படத்திற்கு இவ்வளவு கதையே அதிகம்.


சிவகார்த்திகேயன் படம் முழுக்க, பட்டை அடித்து கொண்டு முகத்தை அப்பாவியாய்  வைத்துக் கொண்டு எதற்கெடுத்தாலும் பேசுகிறார். சிலது நன்றாகவே இருக்கிறது. பலது முடியலை. இவரும் ரெஜினாவும் பேசும் சில வசனங்கள், சிவகார்த்திகேயனும், விமலும் பேசும் சில வ்சனங்கள் டபுள் மீனிங். யு சர்டிபிகேட்டுக்கு அழகல்ல. ரெஜினா அழகாய் இருக்கிறார்.  விமலுக்கு வழக்கம் போல செகண்ட் பிடில் வேலை. க்ளைமாக்ஸ் காட்சியில் மட்டும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். இவர் பேசும் வசனங்கள் எல்லாமே ஒரே விதமான மாடுலேஷனில் இருக்கிறது. அவ்வப்போது நடிக்க முயற்சிக்கலாம். இவரது ஜோடியாய் பிந்து மாதவி. வழக்கமாய் ஹீரோயின்களை ஹீரோக்கள் அடிப்பார்கள். இதில் பிந்து மாதவி இவரை பறந்து பறந்து அடிக்கிறார். வித்யாசமாய் காமெடி செய்திருக்கிறார்கள். இவர் அடிப்பதை விட இவரது மாமனார் தன் மனைவியிடமும், மாமியாரிடமும் அடிவாங்கியதை போதையில் பெருமையாய் சொல்லுமிடம் சூப்பர். சூரி வழக்கம் போல் நிறைய இடத்தில் பேசி கொண்டேயிருக்கிறார். சில இடங்களில் இவரது குறுகிய பேச்சுகள் சிரிப்பை வரவழைக்கிறது. பெண்டாட்டிகிட்ட பாகெட் மணி வாங்கிட்டு போறியே உனக்கு வெக்கமாயில்லை? என்று அவரது பெண்டாட்டி கேட்க, நீ கூடத்தான் ப்ர்ஸ்ட் நைட்டுல வெக்கப்பட்ட.. இப்ப படறதில்லை இல்லை அது போலத்தான் எனக்கும் என்று சொல்லுமிடம் அட்டகாசம்.
டெக்னிக்கலாய் ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாம் ஓகே. இசை யுவனாம். என்னாச்சு யுவன்? படம் நெடுக மொக்கையான பாடல்களையும், பின்னணியிசையும் கொடுத்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. 

எழுதி இயக்கியவர் பாண்டியராஜ். முதல் படம் தேசியவிருது. இரண்டாவது படம் கதை சொன்னார் பெரிதாய் உதவவில்லை. மூன்றாவது படம் அங்கேயும் இல்லாமல் இங்கேயும் இல்லாமல் அரைகுறையாய் பட்ஜெட் படம். பட்ஜெட்டினால் அங்கே இங்கே தப்பிக்க. அதே ஹீரோவின் கால்ஷீட்டை வைத்து உங்களுக்கெல்லாம் இது போதும் என்ற எண்ணத்தோடு கேட்டு, பார்த்து, ரசித்து புளித்துப் போன காட்சிகளைக் கொண்டு இப்படத்தை அளித்துள்ளார். எங்கே ரொம்பவும் நம் ஸ்டலிலிருந்து விலகிப் போய்விடுவோமோ என்ற பயத்தில் க்ளைமாக்சி மட்டும் அப்பா பையன் உறவு, தான் செத்து பையனுக்கு வேலை கொடுப்பது, போன்ற நெஞ்சை நக்கும் காட்சிகளை தொகுத்து கொஞ்சம் நாங்களும் ஃபீல் பண்ணுவோமில்லை என்று கருத்து சொல்லியிருக்கிறார்.
பாஸ் என்கிற பாஸ்கரன், ஓகே ஓகே, கண்ணா லட்டு தின்ன ஆசையா?என்று வரிசைக் கட்டி காமெடி படங்கள் மட்டுமே முப்பது நாற்பது கோடிகள் என கல்லா கட்டுவதால் தமிழ் சினிமாவின் அத்துனை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் அனைவரும் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் காமெடி படம். முன்பெல்லாம் காமெடி செய்ய கொஞ்சம் கதை தேவைப் பட்டது. ஆனால் தற்போதைய சூழலில் கதை என்கிற வஸ்து இருந்தால் அப்படம் நிச்சயம் ஓடுவதில்லை என்பதால் கதை என்பதை தவிர்த்து, ஒருத்தரை ஒருத்தர் கலாய்த்துக் கொண்டு, கிட்டத்தட்ட சினிமா என்பது விஷுவல் மீடியம் என்பதைத் சுத்தமாய் மறந்துவிட்டு, ஸ்டாண்டப் காமெடியாய் மாய்ந்து, மாய்ந்து பேசிக் கொண்டிருப்பது தான் தற்போதைய ஸ்டைல். ரெண்டு முகம் தெரிந்த ஹீரோக்கள், ஆளுக்கு ரெண்டு பாட்டு பாட ஹீரோயின்கள், நாலைந்து காமெடி வில்லன்கள் என கலந்து கட்டி அடித்தால் ஏற்கனவே படித்த, பார்வேட் செய்த எஸ்.எம்.எஸுகளையே வசனமாய் வைத்தாலும் கைதட்டி ரசிக்க ஒரு கூட்டம் இருக்கவே இருக்கிறது. ஆனால் ஒன்பதில் குருவிற்கு நேர்ந்தது கொஞ்சம் கொஞ்சமாய் அனைத்து காமெடி படங்களுக்கும் வர வாய்ப்பிருக்கிறது.
கேபிள் சங்கர்

Post a Comment

9 comments:

CS. Mohan Kumar said...

உண்மையை சொல்லணும்னா, கலகலப்பை விட இப்படம் பல மடங்கு பெட்டர். கலகலப்பு டிராமா மாதிரி இருந்தது. ஆனால் இதில் நிறையவே சிரிக்க முடிந்தது.

கலகலப்புடன் ஒப்பிட காரணம் இரண்டும் டபிள் ஹீரோ சப்ஜெக்ட்- காமெடி ஜெனோர் ....

Anonymous said...

கடைசி வரி...யதார்த்தம். இன்னும் எத்தனை காலம்தான்...!!

Velakkamaaru said...

Aadhibhagavan..Onbathulu Guru..ponra mokkai padangalukku ithu evvalavo better...By the way, in Kalakalappu also most of the one liners are taken from SMS.Before blaming others you should ensure you haven't done that...if not, better don't critize that part as you are loosing the quality... Siva is keep on speaking, agree. If you get some relief with that speech, if you are entertained with that dialogues, there is nothing wrong...The more you know about cinema the less you are loosing common mans mentality... As a critic, you should watch movies from common cine goer mentality but not from cine person's view..

குரங்குபெடல் said...

"இசை யுவனாம். என்னாச்சு யுவன்? படம் நெடுக மொக்கையான பாடல்களையும், பின்னணியிசையும் கொடுத்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. "

எதற்கு ஆச்சர்யம் . .இவரு பிரகாசு எல்லாம் ரொம்ப நாளா இப்டிதான்ஓட்டிகிட்டு இருக்காங்க . . .

வாஷிருகு said...

Really it was a great movie with nice comedy and a must watch entertainment.. Oru porambokku and konjum kili r the nice tracks from yuvan.. I don't knew y u didn like the movie..

Philosophy Prabhakaran said...

கடைசி வரியில் கேபிள் சங்கர் என்று எழுதியிருக்கிறார்... அதையா எதார்த்தம்'ன்னு சொல்றீங்க சிவா...

Unknown said...

படம் நிச்சயம் ஹிட் அடிக்கும்....

சரவணன் said...

"ஆனால் ஒன்பதில் குருவிற்கு நேர்ந்தது கொஞ்சம் கொஞ்சமாய் அனைத்து காமெடி படங்களுக்கும் வர வாய்ப்பிருக்கிறது."

This situation has already come to you Cable. Realize and Close your shop soon.

SHIVA H THIEF said...

no sir my point of view kalakalapu petter than kbkr