Thottal Thodarum

Mar 24, 2013

கண் பேசும் வார்த்தைகள்


ஊரில் வெட்டிக்கு சுற்றிக் கொண்டிருக்கும் செந்தில் உருப்படுவதற்காக வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறார். சிங்கப்பூரில் வேலைக்கு செல்லும் அவர் எப்படியாவது அந்த ஊர் சிட்டிசன் ஆக வேண்டும் என்று விரும்புகிறார். ஈஸியாய் சிட்டிசன் ஆக வேண்டும் என்றால் சிட்டிசனான பெண்ணை திருமணம் செய்தால் முடியும் என்பதால் சிட்டிசன் என்று பொய் சொல்லிய இனியாவை தொடர்கிறார். காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் உண்மை தெரிகிறது. இன்னொரு பக்கம் இனியாவின் மாமா அவளை இரண்டாவது திருமணம் செய்யச் சொல்லி செய்யும் பயமுறுத்தல்கள். அதுவும் ஊரிலிருந்து. பின்பு என்ன ஆனது எனபது கதை.


செந்திலுக்கு நடிப்பதற்கு வாய்பிருந்தும் உபயோகப்படுத்திக் கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும். துறு துறு இளைஞன். ஸ்மார்டாய் தன்னை ஒர் பெண்ணிடம் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில்  உள்ளவன் இப்படி அசமந்தத்தனமாய் காட்சியளிப்பது ஏன் என்றே தெரியவில்லை. டிவி சீரியலில் எப்படி நடிக்கிறாரோ அப்படியே வசனமாய் மாடுலேஷன் ஏதுமின்றி பேசுகிறார்.  உடன் வரும் வேல் முருகன் காமெடியாய் பேசுகிறேன் என்று சதா பேசி கொண்டேயிருக்கிறார். இனியாவும் அவரது தோழியாய் ஜாங்கிரி பெண். இனியாவை விட ஜாங்கிரி ஹீரோயின் ரேஞ்சுக்கு நடித்து தள்ளுகிறார். இனியாவின் மேலுதட்டில் மீசை போய கருமை பூத்திருப்பதை மறைக்க, பகுடர் அதிகம் போட்டிருக்கிறார்கள். பல காட்சிகள் தூங்கி எழுந்த வரும் க்ளோசப் காட்சியிலும் ரோஸ் கலரில் இருக்கிறார். சிங்கப்பூரில் செந்திலுக்கு உதவும் சூப்பர்வைசராய் நடித்தவரும், ஒரே ஒரு காட்சியில் வரும் ஓவர் ஸ்டேவினால் போலீஸில் மாட்டும் துரைராஜ் அவர்களின் நடிப்பு கச்சிதம்.
ஆரம்பத்திலும், முடிவிலும் சில காட்சிகளைத் தவிர முழுக்க, முழுக்க சிங்கப்பூரிலேயே எடுத்திருக்கிறார்கள். சிங்கப்பூரை இரவு நேரத்தில் காட்டினால் லைட் செலவாகுமென யோசித்து பட்ட பகலிலேயே பல நேரங்களில் காட்டியிருக்கிறார்கள். அதிலும் திரும்பத் திரும்ப செராங்கூன் ரோட், லிட்டில் இந்தியாவை சுற்றியே ஜல்லியடித்துவிட்டு சிங்கப்பூரில் ஷூட் செய்ததாய் சொல்லி என்ன பிரயோஜனம். எனக்கே ஒரு நாற்பது லொக்கேஷன் தெரியுமங்கே. ஷமந்தின் இசை வெரி ஆர்டினரி. ஒளிப்பதிவும் மிகச்சுமார். கிடைத்த லொக்கேஷன்களை பயன் படுத்தாமல் விட்டிருக்கிறார். 

வசனம் என்று ஒருவர் பெயரை போட்டார்கள். பாவம் எல்லா காட்சிகளிலும் மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். கதை திரைக்கதை எழுதி இயக்கியவர் பாலாஜி. வெளிநாட்டில் எடுக்கப்படும் ஹிந்தி ரோம்காம் போல  ஃபீல் குட் படமாய் வந்திருக்க  வேண்டிய கதைகளம். ஆனால் அதை மிகவும் நாடகத்தனமாய் திரைக்கதையமைத்து வீணடித்திருக்கிறார். ஹீரோவுக்கு ஒர் ஸ்பெஷல் திறமையாய் பேட்மிட்டன் நன்றாக விளையாடுவார் என்று வைத்திருக்கிறார். அதை வைத்து க்ளைமாக்ஸ் வரை கொண்டு போயிருப்பது சுவாரஸ்யம். ஆனால் அதே சுவாரஸ்யத்தோடு படம் நெடுக உழைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பெரிய திரையில் சீரியல் பார்த்த எஃபெக்ட்.
கேபிள் சங்கர்

Post a Comment

5 comments:

ஓஜஸ் said...

இப்படி படத்தை எல்லாம் பார்க்குறதுக்கு ஒரு பெரிய மனசு வேணும்னே . அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)

Unknown said...

ஐயா, தாங்கள் குறிக்கோள் என்று ஒன்றை வைத்து அதை நோக்கி வெறியுடன் முன்னேறுவது கண்கூடாக தெரிகிறது. உங்கள் சொல் செயல் மூச்சு என சகலதும் அதுவாகவே இருப்பது போல் தோன்றுகிறது. உதாரணத்துக்கு "வசனம் என்று ஒருவர் பெயரை போட்டார்கள்." என்றும் இதே போல பில்லா 2 விமர்சனத்தின் போது "வசனம் இரா.முருகன் மற்றும் இன்னொருவரின் பெயரைப் போட்டார்கள்" என்றும் எழுதியிருந்தீர்கள். நாமே பிரபல வசன கர்த்தா ஆக முயற்சி செய்யும் போது இன்னொரு புது வசனகர்த்தாவின் பெயரை போட்டு அவர்களுக்கு விளம்பரம் கொடுப்பது எவ்வளவு முட்டாள்தனம் எனும் தங்கள் வியாபர நுணக்கம் என் போன்றோருக்கு அறிவுக் கண்களை திறந்து விடுகிறது. மிக்க நன்றி.

Cable சங்கர் said...

நிஷா.. எனக்கொன்றும் வேண்டுமென்றே அவர் பெயரை போட வேண்டாம் என்றுஎழுதாமல் இல்லை. மறந்துவிட்டது. அம்புட்டுத்தேன். ஒரு விதத்தில் நான் அவருக்கு நல்லதே செய்திருக்கிறேன். அவர் பெயரைப் போட்டு எதிர்காலத்தில் அவருக்கு கிடைக்க இருந்த வாய்ப்பை தடுக்க வில்லை..

'பரிவை' சே.குமார் said...

படம் நல்லாயில்லையா?
அப்ப பார்க்க வேண்டாமா?

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

நல்ல வேளை இன்னிக்கி மார்னிங் கட்டிங்க போடலாம்னு இருந்தேன் கிரேட் எஸ்கேப்