Thottal Thodarum

Mar 17, 2013

வத்திக்குச்சி


எங்கேயும் எப்போதும் படத்திற்கு அடுத்து ஃபாக்ஸ் ஸ்டாரும், முருகதாஸ் புரடக்‌ஷனும் இணைந்து தயாரித்து அளித்துள்ள படம். முதல் படத்தைப் போலவே இப்படத்தின் மூலமாக தன்னுடய உதவியாளரான கின்ஸ்லியையும், தன் தம்பியை கதாநாயகனாய் அறிமுகப்படுத்தியிருக்கிறார் முருகதாஸ். ஆனால் முதல் படம் கொடுத்த நற்பெயரை தக்க வைத்துக் கொண்டாரா என்று கேட்டீர்களானால் இல்லை என்று வருத்தத்துடன் சொல்ல வேண்டியதாய் இருக்கிறது.


ஷேர் ஆட்டோ டிரைவரான ஹீரோவை ஒர் தாதா, ஒர் மார்வாடி தொழிலதிபர், பக்கத்துவீட்டில் குடியிருக்கும் இன்சூரன்ஸ் இளைஞன் ஆகியோர் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். ஏன்? எதற்கு? எப்படி அதிலிருந்து அவன் தப்பித்தான் என்பதை நான் லீனியர் முறையில் கதை சொல்லியிருக்கிறார்கள்.

புதுமுகம் திலீபனுக்கு நடிக்க கிடைத்த வாய்ப்பை விட ஓட, துரத்த, அடிக்க கிடைத்த வாய்ப்பே அதிகம் என்பதால் அதை ஒழுங்காகவே செய்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும். சண்டைக்காட்சிகளில் நல்ல வேகம். ஆனால் நடிப்பில் ரொம்பவும் சுமார். சண்டைக்காட்சிகளில் அவரால் அடிபடுகிறவர்கள் குறைந்த பட்சம் அந்தரத்தில் மூன்று சுத்தாவது சுத்தித்தான் கீழே விழுகிறார்கள். விழுந்து ஒரு அடி எகிறிவிட்டுத்தான் சாய்கிறார்கள். ஜுனியர் என்.டி.ஆர். ரேஞ்சுக்கு இருக்கிறது முடியலை. ஆட்டோ ட்ரைவர் கேரக்டருக்கு ஓகே ஆனால்.. அஞ்சலிக்கு ஜோடி என்று நினைக்கும் போது.. ம்ம்ம்ம்ம்
ஒர் புதுமுக ஹீரோவுக்கு அஞ்சலி ஜோடி. படத்தின் ஹூயூமருக்கு இவர் வரும் காட்சிகள் தான். காலேஜுக்கு போகிறேன் என்று  வீடா இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸில் படிக்கும் அஞ்சலி பேசும் அரை குறை ஆங்கிலமும், தன்னை திலீபன் லவ் செய்வதாய் சொன்னதும் சரி என சொல்லிவிட்டு, பின்பு திலீபன் வந்து வா வண்டலூர் ஜூவுக்கு போகலாம் என்று கூப்பிட்டதும் “நான் எதுக்கு உன் கூட வரணும்” என்று கேட்க, நாம லவ்வர்ஸ் இல்லை அதான். எனும் தீலீபனிடம், “அலோ.. ரோட்டுக்கு நாலு பேர் என்னை லவ் பண்றேன்னு சொல்றாங்க.. அதுக்காக எல்லாரையும் நான் லவ் பண்ண முடியுமா? நீ வேணா என்னை லவ் பண்ணிக்க,  ஆனா நான் பண்ணலை என்று சொல்லுமிடம் க்யூட். அதே போல தன்னை ஏன் கொல்ல துரத்துகிறார்கள் என்று திலீபன் சொல்லும் ப்ளாஷ்பேக்கை சுவாரஸ்யமாய் கேட்டுவிட்டு “உனக்கு பொய் சொல்லவே வரலைடா” என்று கிண்டலடித்துவிட்டு, தான் எப்படி பொய் சொன்னேன் என்று கூறுமிடம் செம க்யூட். அஞ்சலி தான் படத்தின் பெரிய ரிலீப். சரண்யா பொண்வண்ணனுக்கு இதே மாதிரி அம்மா கேரக்டரில் பார்த்து போரடிக்கிறது. யானை பசிக்கு சோளப் பொறி கொடுக்காதீங்கப்பா.. சம்பத், ரவிமரியா, ஜெயபிரகாஷ், நண்டு ஜெகன் ஆகியோரின் கேரக்டர்கள் பெரிதாய் மனதில் நிற்கவேயில்லை. காரணம் அவர்களது நடிப்பினால் இல்லை அவர்களின் பாத்திரப்படைப்பினால்.

ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு சிறப்பு. ஆக்‌ஷன் காட்சிகளில் ஸ்லோமோஷனில் நிறைய இடங்களில் ஸ்லோ மோஷனின் ஸ்டண்ட் ஆட்கள் அந்தரத்தில் சுற்றும் போது சும்மானாச்சும் கையை வைத்து கொண்டு பாவ்லா காட்டுவது நன்றாக தெரிவதை தவிர்த்திருக்கலாம். கிப்ரானின் இசையில் ஒன்றிரண்டு பாடல்கள் நன்றாக இருக்கிறது. பாடல்களை விட பின்னணியிசையில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
எழுதி இயக்கியவர் கின்ஸ்லின். ஒர் சாதாரண ஷேர் ஆட்டோ இளைஞனுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி தோன்ற ஆரம்பித்ததுமே சூடு பிடிக்க ஆரம்பித்த கதை அதற்கான முதல் காரணம் தெரிய ஆரம்பித்ததுமே எல்.ஐ.சி அளவிற்கு ஏறிய எதிர்பார்பிலிருந்து தொபுக்கடீர் என்று கீழே விழ ஆரம்பித்தது, இடைவேளைக்கு பிறகு தரையில் மோதி ரத்தகளறியாகி செத்தேவிட்டது. அப்பாவியான ஒர் இளைஞன் கேரக்டருக்கு பின் இவ்வளவு பெரிய துரத்தல் எனும் போது புது முகத்தை தேர்வு செய்தது ஓகே தான் ஆனால் அவரை ஒர் மாஸ் ஹீரோ ரேஞ்சுக்கு பில்டப் செய்து வளையவிட்டதுதான் முதல் தவறு. அடுத்து தன்னிடம் கத்தி முனையில் திருடிய பணத்தை திரும்ப் வாங்க ரவுடியின் வீட்டிற்கு போய் நிற்பதும், அவனிடம் அடிவாங்கிவிட்டு வந்து மீண்டும் சண்டையெல்லாம் கத்துக் கொண்டு அவனையும் அடியாட்களையும் அடித்துவிட்டு பணத்தை வாங்கி செல்வதும் செம காமெடி. ரவுடி சம்பத்தும் அவனது ஆட்களும் அவரது வீட்டில் தனியேத்தான் அடிவாங்குகிறார்கள். அப்படியிருக்க, திலீபன் அடித்ததினால் அவருக்கு மார்கெட்டில் பெயர் போய் யாரும் அடிதடி வேலைகள் தராமல் நொந்து போனதால் திலீபனை கொல்ல அலைகிறார் எனபதை பற்றி என்ன சொல்ல. அதே போல சாதாரண எல்.ஐ.சி ஏஜெண்டாக இருக்கும் நண்டு ஜெகனுக்கு ஏன் ஒர் பணக்காரனின் குழந்தையை கடத்த ஆசை வர வேண்டும்?. அப்படியே வந்தாலும் அதற்கு ஏன் நான்கு நண்பர்கள் ஒத்துழைக்க தயாராக இருக்க வேண்டும்?. அந்த குழந்தையின் ஆட்டோ ஓட்டுனராய் ஹீரோ வந்ததாலும், அவர் சும்மாவே ஊருக்கு நல்லது பண்ணுவான். இப்போ இந்த பையனுடன் அவன் இருப்பதால் நம்மால் கடத்த முடியாது எனவே முதலில் அவனைக் கொன்றுவிட்டு, பையனை கடத்த முயற்சி செய்யலாம் என்று திலீபனை கொல்ல முயற்சிப்பது மகா அபத்தம்.

ஒர் சுவாரஸ்யமான லைனை எடுத்துக் கொண்டு, அசுவாரஸ்யமான திரைக்கதையில், தேவையில்லாத ஹீரோயிசத்தை ஏற்றிவிட்டதினால் ஆங்காங்கே ஒரு சில நல்ல காட்சிகள் இருந்தும் படம் முழுக்க நெளிய வைத்துவிட்டார். முக்கியமாய் க்ளைமாக்ஸ் காட்சி.. அப்பப்பா.. ம்ம்ம்ம் முடியலை.. ஒரு வேளை வேற ஒருத்தர் காசுதானே சும்மா எடுத்துப் பார்ப்போம்னு தம்பிக்காக முருகதாஸ் எடுத்துட்டாரோ..?
கேபிள் சங்கர்

Post a Comment

3 comments:

kanavuthirutan said...

mika sariyana vimarchanam... Thanks cabel sir...

Shan said...

Cable,
This film is very good. I don't think it is average. It's better than you have written about it. I just saw it today and felt bad to not have watched it long before. Mainly it's because of your review I didn't show interest. Now I should look for someone who is genuinely into movie reviewing.

Shan

Bharani said...

I do agree with Shan. I did not watch it earlier based on your review.
Even though, the hero had a fight with benny and team in his house - all of benny's guys left him just because of that. Director said that and showed it in couple of places. I agree, with climax - may be its too much. But its better than some of our leading heroes. If someone put a knife on me in the middle of the road - I would probably try to find a way to beat them up.
Overall the movie is not that bad like you say. I was kind of surprised this was the first movie for the hero.
Have not you seen the first movie of other current leading heroes?

I read your blog all the time, I still like it very much. But I am starting to see that your writing/reviews changed recently and very biased.