Grown ups (2010)
சிறு வயதிலிருந்து ஒன்றாய் பாஸ்கெட் பால் விளையாடிய ஐந்து நண்பர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய் இருந்தாலும் இவர்களை ஒன்றுபடுத்தி வழிநடத்தி வெற்றி பெற வைத்த கோச்சின் மேல் பெரிய மரியாதை உண்டு. 30 வருடங்களுக்கு பிறகு கோச் இறந்துவிட, நண்பர்கள் அனைவரும் ஆளுக்கொரு திசையாய் பிரிந்திருந்தாலும் கோச்சின் இறுதி சடங்குக்காக ஒன்று சேர, ப்ளான் செய்கிறார்கள். அவர்கள் ஒரு லேக் ஹவுஸை வாடகைக்கு எடுத்து தங்க முடிவெடுக்கிறார்கள். ஆடம் சாண்ட்லருக்கு, பாஷன் டிசைனிங் மனைவி சல்மா ஹயக். அவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு க்யூட் மகள். இன்னொரு கருப்பின நண்பனுக்கு கலப்பின மனைவி, மனைவி சம்பாதித்துக் கொண்டிருக்க, வீட்டோடு கணவனாய் குழந்தைகளை பார்த்துக் கொண்டு இருப்பவன்,மனைவி மூன்றாவது கர்ப்பம். அவனுடய தாயும் அவனுடனேயே இருந்து அவனை கரித்து கொண்டிருக்கிறாள். மூன்றாவமன் தான் ஒரு பெரிய பிஸினெஸ் செய்வதாய் சொல்லி தன் மனைவி குழந்தைகளுடன் வந்து சேர்கிறான். நான்காமவன் ஏற்கனவே மூன்று முறை விவாகரத்தாகி தன்னை விட 30 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறான். ஐந்தாமவன் திருமணமே செய்து கொள்ளாமல் ஸ்த்ரிலோலனாய் அ...