Posts

Showing posts with the label சூப்பர் சிங்கர் ஜூனியர்

சூப்பர் சிங்கர் ஜுனியர்2 V/S சன் டி.ஆர்.பி

Image
சூப்பர் சிங்கர் ஜுனியர் 2வின் பைனல்ஸ் Y.M.C.A க்ரவுண்டில் லைவ்வாக நடைபெற இருக்கிறது. தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆரவாரத்தை, ஆர்வத்தை, எழுப்பியிருப்பது நிஜம். நிகழ்ச்சியை பற்றி ஆயிரம் விமர்சனங்கள் ஆதரித்தும், எதிர்த்தும் இருந்தாலும், பெரு வாரியான மக்களால் பார்க்கப் படுகிற நிகழ்ச்சியாக இருக்கிறது என்பது உண்மை. ஆரம்பித்த போது மிகவும் ஆவரேஜாக ஆரம்பித்த நிகழ்ச்சி, கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடித்து, எலிமினேஷன் ரவுண்ட், வைல்ட் கார்டு ரவுண்ட், குவாட்டர் பைனல் என்று  வர ஆரம்பித்தவுடன், போட்டியாளர்களீடையே, மிக கடுமையான போட்டியும், ரசிகர்களிடையே அந்த பெண், நன்றாக பாடினாள், ஸ்ரீகாந்த நல்லா பாடினான் என்று ப்ரியங்கா நல்லாத்தான் பாடினாள் என்று தங்கள் வீட்டு பிள்ளைகளை போல நினைத்து உரிமையுடன் பேச ஆரம்பித்தார்கள். வழக்கமாய் விஜய் டிவியின் விளம்பர இம்சை தாங்காமல் பார்ப்பதை தவிர்ப்பவன் நான். அதையும் மீறி சில சமயம் டிவியிலும், இணையத்தில் யூடூபிலும் தொடர்ந்து எல்லா நிகழ்ச்சியையும் பார்த்து வருகிறேன். நிறைய வீடுகளில் மாலை நேரத்தில் கடந்த ஒண்ணரை மாதமாய் விளம்பர இடைவேளையில்தான் மத்த நிகழ்ச்சிகளை ப...