Posts

Showing posts with the label பார்க்கிங்

பார்க்கிங் லாட்டுகள் ஆகும் சென்னை தெருக்கள்

சென்னையில் இரு சக்கர வண்டிகளின் பெருக்கம் ஆரம்பித்த காலத்தில் திருவல்லிக்கேணி போன்ற மேன்ஷன் ஏரியாக்களில் இரவு நேரங்களில் பெரிய வண்டிகளோ, கார்களோ செல்ல முடியாது. ஏனென்றால் அங்கே தங்கியிருக்கும் பேச்சுலர்களின் இரு சக்கர வண்டிகள் தெருவெங்கும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இம்மாதிரியான ப்ரச்சனைகள் ஏதோ அங்கொன்று  இங்கொன்றுமாய்த்தான் இருந்தது. பின்பு சென்னையில் குடியேறியவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க, இருக்கும் இடமெல்லாம் ரூமாய் கட்டி வாடகைக்கு விட்டதால் அம்மாதிரி வீடுகளில் குடியிருப்பவர்கள் எல்லோரும் இரவு நேரங்களில் தங்கள் வாகனங்களை தெருவில்தான் வைக்க வேண்டியிருக்க, இன்னும் இரவு நேர தெரு ஆக்கிரமிப்பு அதிகரித்தது.

நோ - பார்க்கிங்

வண்டிய பார்க் பண்ணிட்டு பேங்குக்கு போயிட்டு வெளிய வந்து பார்த்தா உங்க வண்டிய காணோமா..? பதட்டபடாதீங்க.. உடனடியா அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு போய் பாருங்க அங்க உங்க வண்டியிருக்கும், அவ்வளவு சீக்கிரமா உங்க வண்டிய அவங்க கண்டு பிடிச்சிடுறாங்களான்னு நீங்க கேட்டா. நீங்க ரொம்பவே நல்லவருங்க..?.. ஆமா.. வண்டிய எடுத்துட்டு போனவனுக்குதானே.. அதை பத்தி தெரியும். ஆம் பூட்டின வண்டியை, ஆள் வைத்து தூக்கி போவது, நம் காவல் துறைதான். என்ன கொடுமை சார் இது. நகரின் முக்கியமான பகுதிகளில், அதுவும், பிரபலமான தெருக்களில் வணிக வளாகம், அல்லது அரசு அலுவலகமோ, இன்சூரன்ஸ் கம்பெனிகளோ.. யாருடய இடத்திலும் நம்முடய வண்டியை பார்க் செய்ய வசதியிருப்பதில்லை. அதிலும் முக்கியமாய் யாராவது மவுண்ட் ரோடு சிட்டி பேங்க் பார்க்கிங் நிலைமையை பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். காவல் துறை பார்க்கிங் ஏரியா என்று அறிவித்திருக்கிற இடங்களை விட நோ பார்க்கிங் அறிவித்திருக்கும் இடம் தான் அதிகம். அவசரத்தில் அதுவும் ஆபீஸ் போகும் நேரத்தில் பேங்க் வேலையாய் வருபவர்கள், பாங்கின் வாசலில் வண்டியை விட்டுவிட்டு போய் வந்து பார்த்தால்.. வண்டியை காணாமல்...