Posts

Showing posts with the label Wakeup Sid

Wakeup Sid - Hindi Film Review

Image
இலக்கில்லாது வாழும் ஒரு பணக்கார இளைஞனுக்கும், ஒர் இலக்கோடு மும்பை வரும் பெண்ணொருத்திக்கும் இடையே நடக்கும் ஃபீல் குட் ரொமாண்டிக் கதை. மிக இயல்பாய் ஆரம்பிக்கிறது கதை. பெரிய பிஸினெஸ் சாம்ராஜ்யத்தை ஆளூம் அனுபமுக்கு ஒரே மகன் சித்தார்த எனும் ரண்பீர். அவனுக்கு என்று ஒரு குறிக்கோளோ, ஆசையோ, காதலோ என்று எதுவுமே இல்லாமல் வாழும் ரண்பீருக்கு ஒர் நாள் இரவில் ஆயிஷா எனும் கொங்கனாவிற்கும் நட்பு வர, இருவரும் ஒருவருக்கொருவர் இ-மெயிலில் தொடர்பு கொண்டிருக்க, வேறு வழியில்லாமல் அப்பாவின் கம்பெனியில் ட்ரெயினியா இருந்து வரும் ரண்பீர் அவரிடமிருந்து தப்பிக்க, கொங்கனாவுக்கு வீடு பார்த்து கொடுக்க அலைய, ஒரு வீட்டை பிடித்து போய் அவருக்கு பிக்ஸ் செய்து கொடுத்து கூடவே இருந்து உதவுகிறார். ஒரு கட்டத்தில் அவரின் பரிட்சை ரிசல்டில் பெயிலாகிவிட, அதை கேட்கும் அம்மாவிடம் அவர் ஷ்ட் அப் என்று சொன்னதற்காக அனுபம் மன்னிப்பு கேட்க சொல்ல, இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியேற சொல்ல, கோபித்து கொண்டு தனக்கு இருக்கும் ஒரே நண்பியான கொங்கனாவின் வீட்டிற்கு செல்கிறான். ரண்பீர். அதன் பிறகு ரண்பீருக்கும் கொங்கணாவிற்கும் இடையே காதல் மலர்ந்ததா.?...