கந்தசாமி - திரைவிமர்சனம்
ரொம்பவும் மோசமான நிலையில் உள்ள தமிழ் சினிமா உலகம் மிகவும் எதிர்பார்த்த ஆக்ஸிஜன் படம். பெரிய பட்ஜெட், பெரிய ஆர்டிஸ்ட், கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் இழைத்து, இழைத்து செய்யப்பட்ட படம்.. மிக பெரிய ஓப்பனிங் எதிர்பார்க்கப்பட்ட படம். கந்தசாமி. படம் ஆரம்பித்ததும், கதை என்னவென தெரிந்துவிடுகிறது. அந்நியன், ரமணா, ஜெண்டில்மேனில் செய்ததை மறுபடியும் வேறு நிலைப்பாட்டில் செய்திருக்கிறார்கள். அதில் ஸ்பிலிட் பர்சனாலிட்டி, இதில் தெரிந்தே.. ஜெண்டில்மேனில் சரண்ராஜ் என்றால் இதில் பிரபு, என்ன அதில் எல்லாம் நல்ல திரைக்கதை என்று ஒன்று இருந்தது. இதில் அது இல்லை. ஆரம்ப காட்சி அதிரடியாய் ஆரம்பித்தாலும், ஏற்கனவே பார்த்த பீலீங் வந்துவிட்டதாலும், தெரிந்த கதையாகி போனதினாலும் பெப் இருக்கவே இல்லை. ஸ்ரேயாவின் பழிவாங்கு நடவடிக்கை, காதல், மோதல் என்று ஆரம்பித்ததும் சூடேறும் காட்சி, மீண்டும் வேறு எங்கே, எங்கேயோ பயணித்து, கலைத்து போட்ட சீட்டு கட்டாய் ஆகிவிடுகிறது. கந்தசாமி சேவல் கோழியின் கெட்டப்பில் ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுத்தியவர்கள் அதை சஸ்பென்ஸாய் வைத்திருக்காமல் நம்ப முடியாத ஒர...