Posts

Showing posts with the label உலக சினிமா

பேஸ்புக் சினிமாக்கள்

  Facebook சினிமாக்கள் அதென்ன பேஸ்புக் சினிமாக்கள் . சினிமா எல்லாருக்குமானதுதானே ? என்று கேட்பீர்கள் . ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை . சோஷியல் மீடியாவுக்கென தனி சினிமா இருக்கிறது . அங்கு பாராட்டு பெற்றாலே அது வெற்றிப் படம் என்று இறுமாந்து மார் தட்டிக் கொள்ளும் கூட்டம் உருவாக ஆரம்பித்துவிட்டது . பேஸ்புக் சினிமாக்கள் ஷோஷியல் மீடியாவில் மட்டுமே பாராட்டு பெறும் . வெகு ஜனங்களிடையே பெயர் தெரியாமல் போகக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமுள்ள திரைப்படங்களின் வரிசையில் இந்த பேஸ்புக் படங்கள் தான் முன்னிலை வகிக்கும் . ஜாதி   சமுதாயத்தில் ஊடுருவியிருக்கும் ஒரு விஷம் என்று கருத்து சொல்கிற , ஒடுக்கப்பட்டவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிற கூட்டத்தினர் கூட அவர் சாதி ஆட்களீன் படங்களை அது எப்படி இருந்தாலும் கொண்டாடும் மனோவியாதியை பேஸ்புக் படங்கள் கொண்டிருக்கும் . சமீபத்தில் ஒரு பிரபல எழுத்தாளுர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது “ வர வர ஸ்பெஷல் எழுத்தாளர் ஷோன்னா ஜன்னி வர ஆரம்பிசிருது . வெளிய வந்...

Outrage 2010

Image
தகேஷி கிட்டேனோ என்கிற பெயரை எல்லாம் தமிழ் கூறும் நல்லுலகம் வாய் சுளுக்கிக்கொள்ளாமல் சொல்ல பழகியதற்கு காரணம் கிகிஜிரோவும் நந்தலாலாவும் தான் புண்ணியம் கட்டி போனது. அவரின் சமீபத்திய படம் இது. தாதா படங்கள் எடுப்பதற்கு எல்லா இயக்குனர்களுக்கு ஒரு காதல் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்கிறது போலும். அது கிட்டோனோவையும் விடவில்லை. ஆனால் ஒவ்வொரு இயக்குனர்குள்ளேயும் உள்ள ஒரு விஷன் ஒவ்வொரு விதமாய் இருக்கிறது. மார்லன் ப்ராண்டோவின் “காட்பாதர்” பல தாதா படங்களுக்கு தாதா என்பது உலகறிந்த உண்மை. சரி கதைக்கு வருவோம். ஒரு ஊரில் ஒரு பெரிய தாதா இருக்கிறார். அவரின் கீழ் அவ்வூரின் அத்தனை தாதாக்களும் அடக்கம். ஒரு கார்பரேட் கம்பெனியின் அல்லக்கைகளை போல பெரிய தாதாவுக்கு கப்பம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியிருக்கும் சமயத்தில் கார்பரேட்டின் கீழ் இருக்கும் இரண்டு க்ரூப்புக்குள் ப்ரச்சனை வந்து ஒருத்தரை ஒருத்தரை போட்டுத்தாக்கி கொள்ள, விஷயம்  பெரியதாதாவின் காதுக்கு வருகிறது. ரொம்ப நாளாகவே குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் இரண்டு க்ரூப்பையும் தனித்தனியாய் அவரவர் எதிரிகளை வைத்து காய் நகர்த்தி, ஆட்டத்த...

Wasabi – 2002

Image
தமிழ் திரையுலகில் சமீப காலமாய் பரபரப்பாய் பேசப்பட்டுவரும் வரும் படம் வசாபி. ரொம்ப சிம்பிளான நிச்சயம் தமிழிலிலோ, அல்லது இந்திய மொழிகளில் எந்த மொழியிலும் எடுத்தாளக்கூடிய கதைகளம். பிரான்ஸில்  அரக்கத்தனமாய் வேலை பார்க்கும் கமிஷனர் ரீனோ. ஒரு முக்கிய வழக்கின் குற்றவாளியை கண்டுபிடிக்க, போகும் இடத்தில் ஒரு பெண்ணை நேருக்கு நேராய் முக்கில் குத்தி கைது செய்து வரும் வேளையில் அவனின் மேலதிகாரியின் மகனையும் யார் என்று தெரியாமல் ஒரு குத்து குத்திவிட்டு வர,  இம்மாதிரியான அரகண்டான வழியில் அவன் நடந்து வருவதை, கண்டித்து வேறு வழியில்லாமல் இரண்டு மாதம் சம்பளத்துடன் சஸ்பென்ஷன் செய்யப்படுகிறான். தனிக்கட்டையான அவனை விரும்பும் பெண்ணிடம் கூட 19 வருடங்களுக்கு முன் தன்னை விட்டு பிரிந்து போன காதலியை நினைவுகூற்கிறான். அவளை மறந்துவிட்டு வா.. அப்போது மீண்டும் சந்திப்போம் என்று பிரியும் அவளை பற்றி பெரிதாய் கவலைபடாதவனுக்கு ஒரு செய்தி வருகிறது. அவனது காதலி இறந்து விட்டாள் என்றும், அவன் பெயரில் ஒரு உயில் எழுதி வைத்திருக்கிருப்பதாகவும் தெரிய வர, ஜப்பானுக்கு கிளம்புகிறான். அங்கே போனால் அவனுக்கும் அவன் காதலிக...

உலக சினிமா – Lust & Caution (2007)

Image
crouching tigers, Brokeback Mountain போன்ற புகழ் பெற்ற படங்களின் இயக்குனர் Ang Lee இயக்கிய படம். ஒரு அருமையான திரில்லரும், காமமும், காதலும் கலந்த கதை. 1942ல் ஒரு காபி ஷாபிலிருந்து சங்கேதமாய் ஒரு போன் செய்துவிட்டு,  உட்காரும் ஒரு பெண்  தன் வாழ்கையை பின்னோக்கி பார்க்கிறாள். அமைதியான அப்பாவியான இளம் பெண் Wong chai chai ஆனவள். எப்படி மிஸஸ். மேக் ஆகி ஜப்பானிய அரசியம் முக்கியஸ்தரான Mr.Yee ஐ மயக்கி, பழகி, அவனை கொல்ல முயற்சிக்கிறாள் நம்ம சிவாஜி, சரோஜாதேவி நடித்த புதிய பறவை படத்தில் சிவாஜியை லவ் செய்வது போல் பழகி உண்மையை கண்டுபிடிக்க சரோஜாதேவி போவாங்க இல்ல அதுமாதிரி. என்ன அதுல கொலைகாரனை பிடிக்க போவாங்க. இதுல கொல்ல போறாங்க.. Mr.Yee ஏன் கொல்ல முயற்சிக்கிறாங்கன்னா.. அவர் இரண்டாம் உலக போரில் ஜாப்பான் ஆக்கிரமிச்சிருக்கிற சைனாவில் ஒரு முக்கிய அரசியல் பிரமுகர். அவர் எடுத்த பல முடிவுகளால் பல பேர் பல உறவுகளை, இழந்து இருப்பதால் அவரை பழிவாங்க அவருக்கு எதிரா ஒரு தீவிரவாத குழு அமையுது. அவங்க இரண்டு மூன்று முறை அவரை மயக்க பெண்களை பயன் ப்டுத்தியும் அவங்க மாட்டிகிட்டாங்க. அதன...

உலக சினிமா – Death Proof

Image
அர்லின், ஷானா, ஜங்கிள் ஜூலியா மூவரும் ஜங்கிள் ஜூலியாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக டெக்ஸாஸை நோக்கி செல்கிறார்கள். இவர்களை பாலோ செய்யும் ஸ்டண்ட்மேன் மைக் தன்னுடய டெத்புரூப் காரில பயணிக்கிறான். அவன் ஒருவிதமான சைக்கோ.. இந்த மூன்று பெண்களை பற்றிய விஷயங்களை முன்பே அறிந்திருக்கிறான். மைக் பாலோ செய்வதை முன்பே கவனித்திருந்த ஜங்கிள் ஜூலியானா. அவள் ஒரு ரேடியோ ஆர்.ஜே. பெண்கள் மூவரும் ஒரு பாரில் அமர்ந்திருக்க, அங்கே மைக் வர, அவனின் கட்டுமஸ்தான உடலையும், அவனுடய ஆண்மையையின் காரணமாய் அவன் தொடர்ந்து வந்த விஷயம் தெரிந்தாலும், அவனுடன் பழகுகிறாள். அப்போது ஜூலியானாவின் தோழி பாம் பார்ட்டி முடிந்ததும், அவளை தான் ட்ராப் செய்வதாய் கூறி தன்னுடய டெத்புருப் காரில் அழைத்து சென்று அவளை காரை படு வேகமாய் ஓட்டி சென்று, திடீரென ப்ரேக் போட்டே கொன்று விடுகிறான். ஜூலியானாவையும் அவள் தோழிகளையும் தனியே துரத்தி, அவனுடய காரை நேருக்கு நேராய் மோதி அவர்கள் மூவரையும் கொல்கிறான். அந்த விபத்தில் சிறிய காயமடையும் அவன் மீண்டும் பதினான்கு மாதம் கழித்து வேறு ஒரு செட் ஆப் பெண்களை பாலோ செய்கிறான். லி, ரோஸ், மற்றும் மேத்திஸ் இவர்கள...