Posts

Showing posts with the label Naan Kadavul

நான் கடவுள் - திரைவிமர்சனம்.

Image
தற்போதைய வியாபார தமிழ் சினிமாவில், விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்கையை இவ்வளவு தத்ரூபமாய் படமெடுக்கும் தைரியம் பாலாவுக்கு தவிர வேறு யாருக்காவது வருமா என்பது சந்தேகமே.. உடல் ஊனமுற்ற, மனநிலை பிழன்ற, வயதான, பிச்சைகாரர்களின் வாழ்கையில் உள்ள ஆழ் சோகத்தையும், வேறு வழியில்லாமல் தங்களுடய கதி இது தான் என்று ஏற்றுக் கொண்டு, அதற்குள் சந்தோஷமா இருக்க முயற்சிப்பதும், என்று அவர்க்ளின் வாழ்கையை நம் கண்முன்னே அவர்களை அறிமுகப்படுத்தும் முதல் காட்சியிலேயே நம்மை கதிகலங்க வைத்துவிட்டார் பாலா. சிறு வயதில் ஜோசியர்களின் பேச்சை கேட்டு காசியில் விட்டுவிட்டு வரப்பட்ட ருத்ரனை தேடி அவனின் அப்பாவும், தங்கையும், காசியில் அலைவதில் ஆரம்பிக்கிறது கதை. ருத்ரன் பிணங்களுடன் வாழும் ஒரு அகோரனாய் மாறியிருக்க, தன்னையே கடவுள் என்று சொல்லி கொள்ளும், எதிரில் வருபவர்கள் நல்லவனா, கெட்டவனா என்று அறியும் ஆற்றல் பெற்றவனாய் ஆங்காரமாய், ஓங்காரத்தோடு நிற்கிறான் ருத்ரன். அவனை தன்னுடன் அழைக்க, ருத்ரனின் குரு போய் எல்லா பந்தங்களையும் அறுத்து வா.. நீ வர வேண்டிய நேரத்தில் உன்னை அழைக்கிறேன் என்று கூறி அனுப்பி வைக்கிறார். கண் தெரியாத நன்றாக பா...