ராஜாதிராஜா – ஒரு பின்நவீனத்துவ திரைவிமர்சனம்
டைட்டிலிலேயே லோகிளாஸ் கிங் என்று சொல்லிவிட்டதால் அதையும் மீறி படத்தில் அது நொட்டை இது நொட்டை என்று சொல்வது சாமி குத்தமாகையால் நொட்டை சொல்லாமல் படத்தை பற்றி பார்ப்போம். ராஜா தன் தந்தையின் ஆசைபடி.. தன்னுடய அண்ணன்களை டாக்டர், வக்கீல், போலீஸ் என்று படிக்க வைத்து பெரிய ஆளாக்குகிறார். ஆனால் அவர்கள் பெரிய ஆள் ஆகி சைதை சைலஜாவின் அல்லக்கைகலாய் இருந்து வ்ருவது தெரிந்து கொதித்தெழுந்து அவர்களை அழித்து எப்படி வெற்றி கொள்கிறான் என்பதே கதை..???. இப்படி தமிழ் சினிமாவின் பின் நவீனத்துவ படமாய்தான் எனக்கு படுக்கிறது.. ஏனென்றால் நிறைய இடங்களில் சமகால தமிழ் சினிமாவை கட்டுடைத்திருக்கிறார். வழக்கமாய் அண்ணன் தான் தன் தம்பிகளுக்காக, தான் படிக்காமல் தன் தம்பிகளை படிக்க வைத்து ஏமாறுவார். ஆனால் இந்த படத்தில் தம்பி அண்ணன்களை படிக்க வைக்கிறார். இப்படி ஆரம்பித்த கட்டுடைத்தல்கள், பல இடங்களில் உடைஅவிழ்த்தல் என்று பின்னி பெடலெடுக்கிறார்கள். குத்தாலத்தில் கும்மாங்குத்து பெண்ணாய் நம்ம அடக்க ஒடுக்க மீனாட்சி.. முழுசாய் காட்டவில்லை அவ்வளவு தான். ம்ஹூம்.. ம்ஹூம்.. சூப்பர். இப்படியே காம்னா, கத்...