கொத்து பரோட்டா -05/09/11
யூத்துகளின் சந்திப்பு நேற்று மாலை டிஸ்கவரியில் நடந்த யூத் பதிவர் சந்திப்பு கிண்டலும், கேலியுமாய் யூத்புல்லாய் நடைபெற்றது. ம.போ.சியின் பேத்தியும் வந்திருந்தார். புதிதாய் எழுத வந்திருக்கும் அத்துனை இளைஞர்களையும் ஒரு சேர சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி. நிகழ்ச்சியில் பேசிய யுவகிருஷ்ணா, உருப்படாத நரேன், ஜாக்கி, ராஜ் சுந்தர்ராஜன், மெட்ராஸ் பவன் சிவகுமார், ஆகியோரின் பேச்சு சீரியஸாகவும் போயிற்று. கணிணியில் தமிழில் எழுத முடியும் என்று தெரியாமல் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் ஏதாவது செய்ய முடியுமா? என்று கேட்டார்கள். நிச்சயம் முடியும். ஏன் நாம் ஒரு குழுவாய் இணைந்து, இதற்கான ஒரு பயிற்சி பட்டறையை செய்யக்கூடாது?. மற்றபடி வாசலில் இருந்து வரவேற்ற சிவகுமார், பிலாசபி பிரபாகரன் அவர்களின் சேவை பாராட்டுக்குரியது.:) ####################################################