Posts

Showing posts with the label வேங்கை

வேங்கை

Image
சிங்கத்தின் ஹிட்டைப் பார்த்து இருக்கிற பெரிய ஹீரோக்கள் எல்லாம் ஹரியுடன் அருவாள் சகிதம் ஒரு ரவுண்ட் வந்தால் அடுத்த நாலு படத்தை தேத்தி விடலாம் என்ற கனவுடன் இருந்த நேரத்தில் தனுஷுக்கு அந்த சான்ஸ் அடித்தது. ஆனால் சிங்கம் போல இதுவும் மிரட்டுமா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். சன் பிக்சர்ஸ் வாங்கி, பின்பு சில பல பிரச்சனைகளாலே மீண்டும் தயாரிப்பாளர்களிடமே கொடுத்துவிட்டதாக சொன்னாலும் பின்னணியில் ஜெமினி தான் ரிலீஸ் செய்திருப்பதாய் சொல்கிறார்கள். சரி படத்துக்கு வருவோம்.

வேங்கையிலிருந்து சன் விலகியதா?

வருகிற ஏழாம் தேதி தனுஷ் நடித்து, ஹரி இயக்கத்தில் வெளிவர இருந்த வேங்கை திரைப்பட வெளியீட்டு உரிமையை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்க, வெளியிடப்படப் போவதாய் விளம்பரம் வந்தது. ஆனால் கடந்த ரெண்டு நாட்களாய் சன் பிக்சர்ஸ் அப்படத்திலிருந்து விலகிவிட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்றார் போல பதினைந்து நாளுக்கு முன்பே தொடர் விளம்பரங்களை ஆரம்பித்துவிடும் சன் டிவி. இன்னும் விளம்பரங்களை ஆரம்பிக்காத போது செய்தி உண்மையோ என்றும் தோன்றுகிறது. எஸ்.கே