சென்னை மால்கள்
ஒரு பக்கத்தில் சிங்களில் ஸ்கிரீன் தியேட்டர்கள் எல்லாம் பெரிய படங்களின் ஓப்பனிங் வரை தாக்கு பிடித்துவிட்டு காற்றாடிக் கொண்டிருக்க, மால்களில் அமைக்கப்பட்டிருக்கும் உயர்தர சொகுசு மல்ட்டிப்ளெக்ஸ்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டேயிருக்கிறது. சென்னையில் மட்டுமில்லாமல் தமிழகம் எங்கும் நிறைய காம்ப்ளெக்ஸ் தியேட்ட்ர்கள் மல்ட்டி ப்ளெக்ஸாக மாற்றப்பட்டு வருகிறது. சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள் எல்லாம் இரண்டு தியேட்டர் மாறி வருகிறது. இப்படி மாற்றம் ஏற்படுத்தாத தியேட்டர்கள் சீக்கிரமே பிட்டு பட தியேட்டராகும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடுகிற நிலையில். சென்னையின் சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டரான ஐடிரீம்ஸ் கிட்டத்தட்ட சத்யமின் பாதி அளவு வசதியுள்ள அரங்காக இருக்கிறது என்று சொல்கிறார்கள். நான் இன்னும் பார்க்கவில்லை. நிலைமை இப்படியிருக்க ,சென்னையில் விரைவில் வரப்போகும் திறக்கப்பட்டிருக்கும், படப்போகும் மல்ட்டிப்ளெக்ஸுகளும், மால்களும் 1.எக்ஸ்ப்ரஸ் அவுன்யூ சவுத் இந்தியாவிலேயே மிகப்பெரிய மால் இது. எக்ஸ்பிரஸ் அவின்யூ. சமீபத்தில் தான் திறந்திருக்கிறார்கள். பெரிய புகழ்பெற்ற பிராண்டட் கடைகள் இங்கே நிரம்பியிருக்கிறது. உ...