Posts

Showing posts with the label food

சாப்பாட்டுக்கடை- Madras Paya House- Annanagar East - Lunch Spl Post

Image
 இந்தக் கடையைப் பற்றி முன்னமே எழுதியிருக்கிறேன். மிக சகாயமான விலையில் தரமான சுவையோடு மைலாப்பூர் மற்றும் கிண்டியில் சின்ன கடையாய் ஆரம்பித்திருந்தார்கள்.  இப்போது இவர்கள் அண்ணாநகரில் ரெஸ்டாரெண்டாக தங்களுடய முதல் கிளையை திறந்திருக்கிறார்கள். ஏற்கனவே இவர்களது பேமஸ் அயிட்டமான பெப்பர் பாயா, இட்லி, தோசை, மட்டன், சிக்கன் வகைகள் மட்டுமில்லாமல் வெஜிட்டேரியனில் இவர்களது வெஜ் ஸ்டூ வேற லெவலில் இருக்கும் மதிய சாப்பாடு மட்டும் இவர்களிடம் பெரும் பாலும் நான் பார்சல் வாங்கித்தான் சாப்பிட்டிருந்தேன். எனக்கு எப்போது சாப்பாடு பரிமாறப்பட்டு சாப்பிட்டாலே ஒழிய அத்தனை திருப்தி இருக்காது. அதனால் இவர்களின் சாப்பாடு பற்றி எழுதாமலேயே இருந்தேன். இப்போது நல்ல ஏசி ரெஸ்டாரண்ட் ஆகிவிட்டபடியால் தலைவாழை இலை போட்டு சாப்பாடு போட்டார்கள். சரி சாப்பிட்ட அயிட்டங்களுக்கு வருவோம். ரெண்டு மூன்று நண்பர்களாய் போனதால் எல்லா அயிட்டங்களையும் ஒரு கை பார்க்க தயாராக இருந்தோம். கலந்த சாதத்தில் எலுமிச்சை சாதமும், உடன் தொட்டுக் கொள்ள உருளை காரக் கறி கொடுத்திருந்தார்கள். எலுமிச்சை சாதத்தில் நன்கு தாளிக்கப்பட்டு, வேர்கடலையெல்லாம் போ...

பிச்சம்மை மெஸ்- நுங்கம்பாக்கம்.

 வழக்கமாய் காதர் நவாஸ் கான் ரோட்டில் இந்த பெயரில் எல்லாம் கடை திறக்கவே மாட்டார்கள். ஏகப்பட்ட குண்டு குழி ரோட்டாகிப் போனதாலோ என்னவோ இப்படியான ஒரு கடைக்கு வழி விட்டிருக்கிறார்கள் போல. 599 ரூபாய்க்கு அன்லிமிடெட் நான் வெஜ் சாப்பாடு என்று கேள்விப் பட்டதிலிருந்து ரொம்ப நாளாக போக ஆசை. கடை திறந்தே ஒரு மாதம் தான் ஆகியிருக்கிறது என்பது வேறு விஷயம்.  சரி.. கடை முதல் மாடியில் இருந்தது. உள்ளே நுழைந்த மாத்திரத்தில் மசாலாவின் மணம் நாசியில் ஏறி பசியை தூண்டியது.  வெஜ்ஜா நான் வெஜ்ஜா சார் என்றார்கள். யாரைப் பார்த்து என்ன கேக்குறே? என்று அவர்களை ஒரு பார்வை பார்த்தேன். சாருக்கு ஒரு நான் வெஜ் என்று இலை போட ஆரம்பித்தார்கள். நல்ல தலை வாழை இலையில் ஒரு கப்பில் இளநீர் பாயசத்துடன் ஆரம்பித்தார்கள். அடுத்தது மட்டன் சுக்கா. நன்கு வெந்த மட்டன் துண்டுகளோடு கெட்டிக் குழம்போடு இருந்தது சுக்கா. வாயில் வைத்தால் அத்தனை இலகுவாய் ஒரு மட்டன் உள்ளே சென்றது. காரம் மணம், சுவை எல்லாமே செம்ம. அடுத்ததாய் பெப்பர் சிக்கனை வைத்தார்கள். பெப்பரின் காரத்தோடு மட்டும் இல்லாமல் டிரையாவும் இருந்தது. நல்ல சதைப்பற்றுள்ள கோழி போல....

சாப்பாட்டுக்கடை - பக்ரா பிரியாணி

Image
பிரியாணிக்கடை என்றதும் ஒரு விதமான சலிப்பு கூட ஏற்படும் அளவுக்கு சென்னையெங்கும் பிரியாணி கடைகள். ஹைதராபாத் பிரியாணி, சீரக சம்பா பிரியாணி, ஆற்காடு பிரியாணி, என வகை வகையாய் பிரியாணி கடைகள். மக்களின் பாஸ்ட் புட்டாக மாறிவிட்டது பிரியாணி கடைகள். இத்தனை பிரியாணிக்களில் வெகு சில பிரியாணிக்களே பிரபலம். அதற்கு காரணம் அதன் தனிச்சுவையும் சர்வீஸும் என்றே சொல்ல வேண்டும். இப்படியான பிரியாணிப் போட்டிக் காலத்தில் புதிய பிரியாணிக்கடை பக்ரா பிரியாணி. வடபழனியிலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் ஏறாமல், இடது பக்கம் சர்வீஸ் லேனில் நுழைந்தால் சின்னதாய் இருக்கிறது இந்த பிரியாணிக்கடை. ப்ளாக் அண்ட் வொயிட் காம்பினேஷனில் வித்யாசமான லுக்கில் ஒர் பிரியாணிக்கடை. டேக்கவே மட்டுமே அங்கு இருக்கிறது. அதனால் சூடான மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, கோலா, என கலந்து கட்டி வாங்கி வந்தோம். அலுவலகத்துக்கு வந்து முதலில் சாப்பிட ஆரம்பித்தது மட்டன் பிரியாணியை. நன்கு வெந்த மட்டன் பீஸ்கள். நெஞ்சைக் கரிக்காத மசாலா என ஜமாய்த்தது. உடன் தொட்டுக் கொண்டு சாப்பிடக் கொடுத்த கத்திரிக்காய் அட்டகாசம். அதன் சுவை பிரியாணியை இன்னும் ...