சாப்பாட்டுக்கடை- Madras Paya House- Annanagar East - Lunch Spl Post
இந்தக் கடையைப் பற்றி முன்னமே எழுதியிருக்கிறேன். மிக சகாயமான விலையில் தரமான சுவையோடு மைலாப்பூர் மற்றும் கிண்டியில் சின்ன கடையாய் ஆரம்பித்திருந்தார்கள். இப்போது இவர்கள் அண்ணாநகரில் ரெஸ்டாரெண்டாக தங்களுடய முதல் கிளையை திறந்திருக்கிறார்கள். ஏற்கனவே இவர்களது பேமஸ் அயிட்டமான பெப்பர் பாயா, இட்லி, தோசை, மட்டன், சிக்கன் வகைகள் மட்டுமில்லாமல் வெஜிட்டேரியனில் இவர்களது வெஜ் ஸ்டூ வேற லெவலில் இருக்கும் மதிய சாப்பாடு மட்டும் இவர்களிடம் பெரும் பாலும் நான் பார்சல் வாங்கித்தான் சாப்பிட்டிருந்தேன். எனக்கு எப்போது சாப்பாடு பரிமாறப்பட்டு சாப்பிட்டாலே ஒழிய அத்தனை திருப்தி இருக்காது. அதனால் இவர்களின் சாப்பாடு பற்றி எழுதாமலேயே இருந்தேன். இப்போது நல்ல ஏசி ரெஸ்டாரண்ட் ஆகிவிட்டபடியால் தலைவாழை இலை போட்டு சாப்பாடு போட்டார்கள். சரி சாப்பிட்ட அயிட்டங்களுக்கு வருவோம்.
சாப்பாடுக்கு வருவோம். தலைவாழை இலையில் மட்டன், நாட்டுக்கோழி, மீன் மீல்ஸ் ஆர்டர் செய்தோம். மட்டன் சுக்காவோடு சுடச்சுட சாதம், பருப்புப் பொடி, ஒரு கிண்ணம் நெய், நல்ல கீரை, பொரியலுடன் ஆரம்பித்தது. மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, ரசம், மோருடன். மட்டன் சுக்காவின் சுவை அடேடே ரகம் தரம் தான். நன்கு வெந்த மட்டனுடன் மசாலா நன்கு கலந்திருக்க, காரத்துக்கு பெப்பர் தூக்கலான மட்டன் சுக்காவை பருப்புப்பொடி நெய் சாதத்துடன் கலந்து சாப்பிட்டுப் பாருங்கள். செம்ம. அதே போல அவர்களின் மட்டன் குழம்பை நெய்யூற்றி சுடுசாதத்தில் கலந்து சாப்பிட்டால் திவ்யம் தான். மீன் சாப்பாட்டில் ஒரு நல்ல குழம்பு மீன் பீஸுடன் தருகிறார்கள். அளவான காரம் புளிப்புடன் அடிபொலி மீன் குழம்பு என்பதை சொல்லிக் கொள்கிறேன. மட்டன் சுக்காவாகட்டும், சிக்கன் சுக்காவாகட்டும், ஈரலாகட்டும் நன்கு மசாலாவோடு கலந்திருப்பதாலும், நன்கு சமைக்கப்பட்டிருப்பதாலும் சுவை அருமையாய் இருந்தது. தொட்டுக் கொள்ள வாங்கிய கோலா உருண்டை செம்ம கிரிஸ்பி பட் உள்ளே கொஞ்சம் தளதளவென்று இருந்தது. சுவையில் குறையில்லை. மட்டன் சாப்பாடு 220/ரூ, நாட்டுக் கோழி சாப்பாடு ரூ. 180, மீன் சாப்பாடு ரூ.200 மட்டுமே.
குறிப்பாய் இவர்களது வெஜ் மீல்ஸை சாப்பிட ஆர்டர் செய்தால் இவர்களது வத்தக்குழம்பு, அல்லது காரக்குழம்பை தவறவிடாதீர்கள். நாக்கை சப்புக் கொட்ட வைக்கும் சுவையுடன் இருக்கும். குறிப்பாய் பருப்புப் பொடி சாதத்துடன் கலந்து சாபிட்டால் டிவைன் என்றால் என்னவென்று உங்களுக்கு விளங்கும். நான் வெஜ் உணவகத்தில் இத்தனை சிறப்பான வெஜ் உணவை நீங்கள் நிச்சயம் சாப்பிட்டிருக்க மாட்டீர்கள். அத்தனை சுவையான கதம்ப சாம்பார். கூடவே ரசம், அப்பளம், நல்ல பொரியல் கூட்டு, கீரையோடு தருகிறார்கள். நீங்கள் வெஜ் சாப்பாட்டுடன் நான் வெஜ் சைட் டிஷ்கள் ஆர்டர் செய்து சாப்பிடலாம். விலை எல்லாமே மிக நியாயமான விலையில் கொடுக்கிறார்கள்.
இவர்களின் காலை டிபன், டிபன் காம்போ மாலை டிபன் குறிப்பாய் ரவா தோசையைப் பற்றி தனியாய் எழுதுகிறேன். இது மதிய லஞ்சு கட்டுரை. ஏற்கனவே நான் சாப்பிட்டு பார்த்த உணவகம் தான் என்றாலும் ரெஸ்டாரண்டாய் இலை போட்டு சாப்பிடும் திருப்தியே அலாதி தான். அதை நல்ல என்விராமெண்ட்டுடன், தரமான உணவு, பர்சை பதம் பார்க்காத விலையில் என்றால் கேட்க வேண்டுமா? நிச்சயம் ஒரு முறை விசிட் செய்து பாருங்கள். உங்களுக்கு பிடிக்கும் அதற்கு நான் கேரண்டி.
மெட்ராஸ் பாயா அவுஸ்
199-F, Block 1 st street
Annanagar East
ph: 7338883693
கேபிள் சங்கர்.
Comments