சாப்பாட்டுக்கடை - வளையம்பட்டியார் மெஸ்
இந்தக் கட்டுரை வீடியோ போடுவதற்காகப் போய் ஷூட் செய்துவிட்டு, வேற லெவல், சூப்பர் என்று எழுதப்பட்டது அல்ல. மெஸ்கள் புகழ் பெற ஆரம்பித்தவுடன் யார் உணவகம் ஆரம்பித்தாலும் கூடவே மெஸ் என்று போட்டுக் கொள்ளும் பழக்கம் உருவாக ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. மெஸ் என்பது சுவையில் தனித்தன்மையுடன், பெரிய லக்ஷரியாய் இல்லாமல், மிக நியாயமான விலையில் இருப்பது. அனால் மெஸ் என்று வைத்துக் கொண்டு 5 ஸ்டார் ஓட்டல் ரேட்டை வைத்துக் கொண்டு கல்லா கட்டிக் கொண்ட்டிருக்கும் காலத்தில் புதியதாய் வளையம்பட்டியான் மெஸ். அதுவும் மெஸ்களின் தலைமயிடமான திருவல்லிக்கேணியில் நண்பர் ஆசிப் ஆரம்பிக்கப் போவதாய் சொன்னவுடன் ஆச்சர்யமாய்த்தான் இருந்தது. முதல் நாள் போன போது ஏகப்பட்ட கூட்டம் விருந்தினர்கள் பல பேர் வந்திருந்தார்கள். நிறைய அயிட்டங்களை வரிசைப்படுத்தி வைத்திருந்தார்கள். ஆனால் அத்தனை கூட்டத்திலும் எனக்கு மிகவும் பிடித்தது தலைக்கறியும், அதன் குழம்பும், கூடவே குடல் குழம்பை அத்தனை சுவையாய் கொடுத்திருந்தார்கள். செஃப் ஹரி நாமக்கல்காரர். ஆரம்பித்து சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மதிய சாப்பாட்ட...